(Reading time: 34 - 67 minutes)

" ன்னது குட்டிபையாவா ?" என்று விழிகளை விரித்தான் மதியழகன் .. மதியழகன், பல முக்கியமான நிறுவனங்களின்  தலைவன், பொறுப்பான நிர்வாகி, சமூக சிந்தனையாளன், பலரின் நன்றிகளுக்கு உரிமையானவன், அடிக்கடி கடுமையான முகத்திரையையும் போட்டிருப்பவன் , கேட்பவரையே மதிக்க வைக்கும் திறன் வாய்ந்தவன் இன்று அவளுக்கு குட்டிபையனாம் .. அசந்துதான் போனான் மதியழகன் அவளது கொஞ்சலிலும் அன்பிலும் !

" நீ மட்டும் என்னை குட்டிம்மான்னு கூப்பிடுற, பேபிம்மான்னு கூப்பிடுற , நான் உன்னை குட்டிபையன்னு சொல்ல கூடாதா ?" என்று அழகாய் வினவி கண்ணடித்தாள் அவள் ..

"போதும் பேபிம்மா .. அடிக்கடி கண்ணடிக்கிறது, இந்த கன்னத்து குழியில் என்னை விழ வைக்கிறது  இதெல்லாம் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணலாம்ல ?"

" அதுக்கு நீ என்னை சைட் அடிக்காமல் இருக்கலாம்ல ?"

" அது கஷ்டம் !"

" அப்போ இதுவும் கஷ்டம்தான் மது எனக்கு " என்று சிரித்து அவன் தோளில்  சாய்ந்து அமர்ந்து கொண்டாள்  தேன்நிலா ..

ர்போர்ட் ...

ஷக்தி , மித்ரா குடும்பத்தினருடன் காவியா , ஆதி உட்பட அனைவருமே அவனை வழியனுப்ப வந்திருந்தனர் .. அடிக்கடி அவனது கைகளை பிடித்து கொள்ள வேண்டும் போல இருந்தது மித்ராவிற்கு .. எனினும் தனது ஏக்கத்தை மறைத்து கொண்டாள்  .. அவனும் பார்வையாலேயே அவளுக்கு சமாதானம் கூறி கொண்டிருந்தான் .. அவள்தான் அவனது பார்வையை அவ்வப்போது தவிர்க்க முயன்றாள் .. அவன்முன்னே கண்ணீர் விட மித்ராவிற்கு விருப்பம் இல்லை .. வழக்கம் போல தனது குறும்புத்தனம் ஆயுதத்தை எனும்  பயன்படுத்தி கொண்டாள் ..

" டேய் மாமா "

" என்ன டீ "

" பத்திரமா போயிட்டு வா "

" ஹ்ம்ம் "

" ஒழுங்கா சாப்பிடு "

" ம்ம்ம்ம் "

" கரெக்ட் டைம் ல தூங்கனும் "

" ம்ம்ம் "

" அப்பறம் உன் பேஸ்புக் ரசிகைகள் கிட்ட எல்லாம் சொல்லிடு , உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு " என்று கூறி அவள் சிரிக்க , அவளை சீண்டி பார்க்கவே

" கல்யாணமா ? எனக்கா அது எப்போ ஆச்சு ?" என்று கேட்டு வைத்தான் ஷக்தி ..

" தெரியும் டா .. நீ இப்படித்தான் கள்ளத்தனம் பண்ணுவன்னு .. இரு நீ துபாய்ல  லேண்ட்  ஆகறதுக்கு முன்னாடியே நம்ம கல்யாண போட்டோ எல்லாத்தையும் அப்லோட் பண்ணி வைக்கிறேன் "

" ஹே அத்தை  பொண்ணு , அப்படின்னு பண்ணின , வைப்ன்னு கூட பார்க்காமல் உன்னை ப்ளாக் பண்ணிடுவேன் "

"  ஹே மை டியர் ஷக்தி மாமா , இந்த ஓவர் சீன் எல்லாம் உடம்புக்கு ஆகாது .. நீ யாருன்னு எனக்கு தெரியும் , நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும் .. சோ கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் " என்று விரல் நீட்டி மிரட்டினாள்  அவள் ... பிறகு முகத்தை தீவிரமாய் வைத்து கொண்டு

" இதுக்கு முன்னாடி எல்லாம் நீ , வெறும் ஷக்தியாகத்தான்  வெளில போவ .. இப்போ நீ மித்ராவின் கணவன் .. சோ  இன்னும் பத்திரமா இருக்கனும் .. நீ ஹெல்தியா இருந்தாலே நானும் சந்தோஷமா இருப்பேன் மாமா .. எனக்கு நீ கவலை இல்லாமல் இருக்கணும் ..அதுதான் வேணும் .. நான் கூடவே இருந்தா இப்படி அட்வைஸ் பண்ணாமல் நானே உன்னை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பேன் " என்று அவன் கண்களுக்குள் ஊடுருவியவள் பெருமூச்சு விட்டு

" ஹ்ம்ம் விடு ... சீக்கிரமா உன்னை கிட்னாப் பண்ணிடுறேன் " என்று சிரித்துவிட்டு

" ஐ லவ் யு மாமா " என்றாள்  மிக மெல்லிய குரலில் .. மனதிற்குள் சிலிர்த்தே போனான் ஷக்தி .. ஒரு பெண்ணின் காதலும்தான் எத்தனை மகோன்னதமானது .. அதுவும் சகலமும் நீயே என்று சரணடைவது போல அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் இதயத்தை வருடியது .. இருப்பினும் அதை மறைத்தவன்

" போர் அடிச்சா , இதையெல்லாம் எழுதி எனக்கு இமெயில் பண்ணு மிது .. டைலாக் நல்லா இருக்கு .. நான் சேட்டிங் ல யுஸ்  பண்ணிப்பேன்ல " என்று கூறி அவளிடம் இருந்து தாராளமாகவே அடிகளை வாங்கி கொண்டான் ..

" ஹே போதுமடி , வலிக்கிறது "

" ஹா ஹா அந்த பயம் இருக்கணும் .. "

" அய்யே போ "

" நீ போடா  " என்று மீண்டும் அவனை அடித்தவள் லேசாய் அவனோடு ஒன்றி அணைத்தபடி நின்றாள். ஒருநொடி என்றாலும் கூட அவன் கையணைப்பில் இருந்தவள் , சொர்கத்தையே உணர்ந்தாள் ..

" காதலன் கை சிறை காணும் நேரம்

மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் " என்ற பாடல் வரிகள் நியாபகம் வந்துவிட , இதற்குமேல் இருந்தால் அழுதே விடுவோம் என்பதை உணர்ந்து , புன்னகையை இழுத்துபிடித்து இதழில் நிறுத்தி அவனை வழியனுப்பி வைத்தாள்  சங்கமித்ரா .. இப்படியாய் நம்ம ஹீரோவும் துபாய்க்கு போயாச்சே .. !

றுநாள், காவியா , கதிர், சங்கமித்ரா , முகில்மதி, அன்பெழிலன் மூவரும் ஐவரும் சென்னைக்கு செல்வதாக முடிவெடுத்து இருந்தனர் .. ஷக்தியை  மீண்டும் வரவழைப்பதற்குள் அவன் ஆசைப்படி டிபார்மெண்ட் ஸ்டோர் ஐ தயார் படுத்துவதுதான் அவர்களது திட்டம் .. அதனால்தான், ஷக்தி திரும்பி செல்கிறேன் என்றபோது மித்ரா அவனை தடுக்காமல் இருந்தாள்..

காலையிலேயே எழுந்து விட்டாள்  அவள் .. எழுந்ததும் முதல் வேலையாய்  போனை பார்க்க, வழக்கம் போல அவனிடம் இருந்து இன்னமும் மெசேஜ் வராமல் இருந்தது ..

" ஒருமுறை இல்லை .. இவனை பத்து முறை கல்யாணம் பண்ணிகிட்டாலும் திருந்தவே மாட்டான் .. லூசு மாமா ... நீ போன் பண்ணு கவனிச்சுக்குறேன் " என்று அவனை திட்டி முடித்தவள் , அருகில் இருந்த அவனது தலையணையை பார்த்தாள்  ..  அவன் தலையணையில் லேசாய் முத்தமிட்டு " குட் மோர்னிங் மாமா " என்று மானசீகமாய் கூறி கொண்டாள்  மித்ரா .. ( ஓஹோ இங்க முத்தமிட்டால் அங்கு சேர்ந்திடுமாம் , இதெல்லாம் ஓவர் மிது )

காலையில் எழுந்ததில் இருந்து ஒவ்வொரு செயலிலும் அவனது நியாபகங்கள் திரண்டு வந்து  இதயத்தை தட்டி பார்த்தன..

" போர் அடிச்சா , இதையெல்லாம் எழுதி எனக்கு இமெயில் பண்ணு மிது .. டைலாக் நல்லா இருக்கு .. நான் சேட்டிங் ல யுஸ்  பண்ணிப்பேன்ல " என்று அவன் கூறியது நினைவிற்கு வந்தது ..

" மக்கு மாமா, என்கிட்ட லவ் சொல்லவே உனக்கு நாலு வருஷம் ஆச்சு .. இதில்  நீ சேட்டிங்ல ரொமாண்டிக்  டைலாக் பேச போறியா ? அதெப்படி டா சிரிக்காமல் காமெடி பண்ணுற நீ  ?" என்று மனதிற்குள் சிரித்து கொண்டாள்  மித்ரா .. மேலோட்டமாய் யோசிக்கும்போது அவளது குழந்தைத்தனம் கண்களுக்கு தெரிந்தாலும், மனதளவில் அவள் தனது கணவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத்தான் அவளது வார்த்தைகள்  பறைசாற்றின.. சட்டென அவளுக்கு மனதில் கவிதை தோன்றிட , அதை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதினாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.