(Reading time: 34 - 67 minutes)

" கள்கள் கேட்டு , அதை முடியாது என்று சொல்லாத வாழ்கையை வாழத்தான் தந்தைகள் ஆசைப்படுகிறார்கள் !" .

அதுபோலத்தான் இவளும் ! மித்ராவை பொறுத்தமட்டிலும் அவன் கேட்டு அவள் இல்லை என்று கூறிவிட கூடாது என்று ஆசை பட்டாள்! (ஆனால் இது எப்பவும் நிலைத்திருக்குமா ? ஷக்தியை  தான் வருகாலத்தில் கேட்கணும் .. ஹா ஹா )

" மித்ரா இப்போ உன் டர்ன் ..ஏதாச்சும் பாட்டு பாடு " என்ற அன்பெழிலனின்  குரல் அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது. ஷக்தியின்  நினைவுகளோடு அந்த பாடல் வரிகளை பாடினாள்  அவள்...

எனது சொந்தம் நீ , எனது பகையும் நீ

காதல் மலரும் நீ , கருவில் முள்ளும் நீ

செல்ல மழையும் நீ , சின்ன இடியும் நீ

பிறந்த உடலும் நீ , பிரியும் உயிரும் நீ

மரணம் மீண்ட ஜனனம் நீ 

இங்கு தலைவி பாடலை உருகி பாட அங்கு ஷக்தியும்  அதே பாடலை தான் கேட்டு கொண்டிருந்தான் .. அவனது அகக்கண்ணில் மித்ராவும் அவளது சாயலில் சிறு மகளும் அவன் கழுத்தை கட்டி கொண்டு செல்லம் கொஞ்சுவது போல கற்பனை செய்து கொண்டிருந்தான் அவன் ..

எனது செல்வம் நீ, எனது வறுமை நீ

இழைத்த கவிதை நீ , எழுத்து பிழையும் நீ

இரவல் வெளிச்சம் நீ , இரவின் கண்ணீர் நீ

எனது வானம் நீ , இழந்த சிறகும் நீ

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ ..

ஒரு தெய்வம் தந்த பூவே

சிறு ஊடல் என்ன தாயே ...

" ஊடல் என்ன தாயே " என்றவுடன் மித்ராவின் பிடிவாத முகம் கண்முன்னே வந்தது .. அவளது குட்டி குட்டி  ஊடல்களை  நினைத்து ரசித்து கொண்டிருந்தான் அவன் ..

அடுத்த நாள் திட்டங்களை ஆலோசித்து கொண்டிருந்தாள்  மித்ரா .. மதியழகன் தான் அவளது யோசனைகனை கேட்டு அறிவுரை கூறிக்கொண்டு இருந்தான் ...

" அப்போ நாளைக்கு நாம கடையை பார்க்க போகலாம் அண்ணா " என்று அவள் கூறவும் அவனும் ஆமோதித்தான் .. இங்கு மனைவி ஒரு திட்டத்தில் இருக்க , அங்கு கணவன் வேறொரு திட்டம் தீட்டி கொண்டிருந்தான் .. இதற்கிடையில் தேன்நிலா  சிங்கபூர் செல்வதற்கான திட்டத்தை பற்றி ஆலோசித்து கொண்டிருந்தாள் .. யாருடைய திட்டம் முதலில் நிறைவேறும் ? அடுத்த எபிசொட்ல சொல்றேன் ..

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.