(Reading time: 34 - 67 minutes)

" ப்படி சொல்லுங்க காவியா ... இனிமே என் அண்ணியை வம்பு பண்ணின்னா நானும் தட்டி கேட்பேன் " என்று இணைந்து கொண்டாள்  முகில்மதி கண்களில் ரகசியமாய் காதலை ஏந்தி ..

 அவர்களை தூரத்தில் இருந்து கைகட்டி நின்று கொண்டே கவனித்தான் கதிர். " என்ன கதிர் நீ மட்டும் அமைதியா இருக்க? உன் சார்புக்கு நீயும் உன் அண்ணிக்கு  சப்போர்ட் பண்ணலையா ??" என்று அவன் கேட்கவும்

" அண்ணியா ?" என்று கதிரும் மித்ராவும் ஒரே நேரத்தில் அலறினர்...

" ஐயோ கதிர் மாம்ஸ் , இனி நீங்க என்னை அண்ணின்னு தான் கூப்பிடனுமா ?"

" ஹே இதெல்லாம் அநியாயம் .. என்னைவிட சின்ன பொண்ணு நீ ..நான் உன்னை அப்படி கூப்பிட மாட்டேன் "

" ஐயோ அந்த தப்பை மட்டும் செய்திடாதிங்க .. மதி சின்ன பொண்ணு , சோ அண்ணின்னு கூப்பிடும்போது வித்தியாசம் தெரியல .. நீங்க வயசில் சீனியர் .. சோ இப்படி அண்ணின்னு கூப்பிட்டு என்னை கிழவி ஆக்கிடாதிங்க " என்று கண்களை உருட்டினாள்  மித்ரா .

" ஹ்ம்ம் இன்னும் 10 வருஷத்தில் 60தாம் கல்யாணமே நடத்தி வைக்கிற அளவுக்கு வயசாகிடுச்சு .. இன்னமும் இவளுக்கு பச்சை குழந்தைன்னு நினைப்பு " என்று வாரினான் அன்பெழிலன் ..

“டேய் குரங்கு , ஓவரா பேசின , கூட்டணி அமைச்சு உன்னை காலி பண்ணிடுவேன் .. நான் தனி ஆளு இல்ல .. எனக்கு பின்னாடி அன்பினால் தானாய் சேர்ந்த கூட்டமே இருக்கு !"என்று சிரித்து மிரட்டினாள்  அவள் .

" ஆமா ஆமா , அதுவும் காவியா மாதிரி வானர கூட்டம் எல்லாம் இருக்கும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அன்பு நீ " என்றான் கதிர் குறும்பாய் ..

" அதுதானே மதி பார்த்தேன் , என்னடா உன் அண்ணா இன்னும் என்னிடம் வம்பு பண்ணாமல் இருக்கிறாரேன்னு " என்று அவனை செல்லமாய் முறைத்தபடி முகில்மதியை  பேச்சில் இழுத்தாள்  காவியா ..அதற்குள் அங்கு வந்தார் லக்ஷ்மி..

மித்ரா , காவியா இருவருமே அவரது காலில் விழுந்து ஆசி பெற , " மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை சந்தோஷமா வாழுங்கம்மா " என்று ஆசிர்வதித்தார் அவர் .. காவியாவிற்குதான் அவரை பிரிய மனமே இல்லை .. அவள் பார்வை இருந்த ஏக்கம் லக்ஷ்மியை உலுக்க, அவளை அன்புடன் அணைத்து  கொண்டார் ..

" இது உன் வீடு காவியா .. எப்போ வேணும்னாலும் நீ இங்க வரலாம் " என்றாள் .. முகிலோ

" ஆமா காவியா , எங்கண்ணா வரலன்னா கூட பரவாயில்லை .. நீங்க மட்டும் வந்தா போதும் " என்று கூற அவளை அடிக்க துரத்தினான் கதிரேசன் .. அவர்களின் களேபரத்தில் பெரியவர்கள் உட்பட அனைவருமே அங்கு வந்துவிட்டனர் ..

" நாங்களும் இப்போவே வந்திடுரோமே மித்ராம்மா .. உங்களுக்கும் உதவியா இருக்கும்ல ? " - நாராயணன் ..

" முக்கியமான வேலை எல்லாம் முடியட்டும் மாமா . நானே மதி அண்ணாவோடு வந்து எல்லாரையும் கூட்டிட்டு போறேன் " என்று சிரித்தவள்  அனைவரிடமும் விடைபெற்றாள் .. அனைவருமே தற்பொழுது காவியாவின் வீட்டில் தங்குவதாக முடிவெடுத்து இருந்தனர் .. எப்பொழுதுமே தனியாய் இருக்கும் காவியா , ஒரு வழியாய் அனைவரையும் மூளைசலவை செய்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்திருந்தாள் .. அவர்கள் ஐவரில் அவளுக்குத்தான் பேரானந்தம் .. நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் வீடு புத்துணர்ச்சி பெறபோவது போல உணர்ந்தாள்  அவள் ..

சென்னை...

வசதியான மக்கள் குடியிருக்கும் அந்த அடுக்குமாடி பகுதியில் சீறி பாய்ந்தது அன்பெழிலனின்  கார்.. ஏற்கனவே இங்கு வந்ததினால் கதிருக்கு எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.. ஆனால் சங்கமித்ராவும் முகில்மதியும்  தான் அதிசயமாய் விழிகளை விரித்தனர் .. அதற்கு காரணம் காவியாவின் எளிமைதான் .. இவ்வளவு வசதியான வீட்டில் வாழ்பவள்தான் , கொஞ்சமும் சங்கடபடாமல் அவர்களது கூட்டு குடும்பத்தில் இணைத்து இருந்தாளா ? நினைக்கும்போதே ஆச்சர்யமாய் இருந்தது அவர்களுக்கு .. சரியாய் அவர்களது மௌனத்தை கலைத்தது அன்பெழிலனின்  செல்போனின் சிணுங்கல் ..

" ஹெலோ அண்ணா "

“..”

" எஸ் நாங்க வந்துட்டோம் ... நீங்க எங்க இருக்கீங்க ?"

“..”

" வாவ் நிஜம்மாகவா ? ஓகே ஓகே " என்று சிரித்தப்படி போனை வைத்தான் எழில் ..

" ஹே யாருகிட்ட டா பேசின ? மதி அண்ணாவா ??" என்று உற்சாகமாய் கேட்ட மித்ராவிற்கு அவன் பதில் கூரும்முன்னே நிலா , மதி இருவரும் அவர்களது கார் கதவை திறந்து விட்டு இடைவரை குனிந்து  வரவேற்றனர் ..

" அண்ணா " என்று ஆர்பரித்து கொண்டு மதியழகனின் தோளில்  சாய்ந்து கொண்டாள்  சங்கமித்ரா .. “" உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன் அண்ணா .. இன்னும் கொஞ்ச நாள் எங்களோடு இருந்திருக்கலாம்ல ? எப்படி இருக்கீங்க அண்ணா ?”

மதியழகனிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்த தோழியை முறைத்தாள்  தேன்நிலா .. நேற்று கூட போனில் " தேனு , தேனு " என்று அளவலாவியவள் இன்று மதியழகனை பார்த்ததுமே அவன் பக்கம் தாவி விட்டாள் ..

இடுப்பில் கை வைத்து கொண்டு தோழியை முறைத்தாள்  தேன்நிலா ..

" ஹே சங்கு , நான் எல்லாம் உன் கண்ணில் தெரியுறேனா ?"

" அடடா .. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே ! யார் அண்ணா , இந்த பொண்ணு ? உங்க சொந்தமா ?" என்று கேட்டாள்  மித்ரா ..

" ஆமா தங்கச்சி .. என் சொந்தம் .. எனக்கு மட்டும் " என்று நிலாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் காதலுடன் மொழிந்தான் மதியழகன் .. அப்போதும் நிலா முகத்தை அஷ்டகோணலாய் வைத்து கொள்ள , தோழியை அணைத்து  கொண்டாள்  சங்கமித்ரா ..

" ஹே தேனு , சும்மா உன்னை சீண்டி பார்த்தேன் செல்லம் .. உன்னை போயி நான் மறப்பேனா ? நீதான் என் பட்டு தேனு ஆச்சே " என்று கொஞ்சினாள் .. அவள் கொஞ்சலில் பிடித்து வைத்திருந்த கோபம் மொத்தமும் கரைய

" போதும் போதும் கொஞ்சினது .. இதெல்லாம் உன் மாமாகிட்ட வெச்சுக்க " என்றாள்  நிலா ..

" ஹ்ம்ம் எனக்கும் ஆசை தான் .. என்ன பண்ணுறது , அவன் பறந்து போனானே , என்னை மறந்து போனானே " என்று  பாடி கண்சிமிட்டினாள்  மித்ரா ..

" ஐயோ மித்ரா , சொல்லிட்டு பாட மாட்டியா ? பாரு முகில்மதி காதில் இருந்து ரத்தம் வருது " என்றபடி தனது மனம் கவர்ந்தவளை பேச்சில் இழுத்தான் அன்பெழிலன் ..

" டேய் அன்பு , உன் காதுல இருந்து தான் ரத்தம் வருது .. எதுக்குடா என் தங்கையை கேலி பண்ணுற ?" என்று போர்க்கொடி தூக்கினான்  கதிர் .. மதி மற்றும் நிலா மட்டும் ஆராயும் பார்வையுடன் அன்பெழிலனை பார்த்தனர் ..

" சரி சரி , இப்படி வாசலிலேயே நின்னுகிட்டு இருந்தா எப்படி ? உள்ள வாங்க !" என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு வீட்டினுள்  , மன்னிக்கணும் அந்த மாளிகைக்குள் நுழைந்தாள்  காவியா ..

" ரொம்ப அழகா இருக்கு காவியா உன் வீடு " என்று பாராட்டினாள்  மித்ரா .. இப்போது  ஒருமையில் அழைக்கும் அளவிற்கு அனைவரும் நெருங்கி இருந்தனர் ..  " தேங்க்ஸ் மித்ரா .. அப்பாவுக்கு எப்பவும் வீடு அழகா இருக்கணும் .. இதெல்லாம் நானும் அவரும் சேர்ந்து டெகரெட்  பண்ணினது தான் .,.. "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.