(Reading time: 34 - 67 minutes)

" நீ இங்க ஏற்கனவே வந்திருக்கியா அண்ணா ?" என்றாள்  முகில்மதி.. அவன் பதில் சொல்வதற்குள் .

" யாரு உங்க அண்ணா தானே ? அப்படியே வந்துட்டாலும் .. நிறைய தடவை கூப்பிட்டேன்  மதி .. ஆனா இன்னைக்கு தான் சார்க்கு உள்ள வரணும்னு மனசு வந்திருக்கு .. இல்லனா , எப்பவும் வாசலிலேயே விட்டுட்டு போயிருவாங்க "

" எனகிந்த வீடு பார்க்கும்போது காக்க காக்க படத்துல நம்ம ஜோ இருக்குற வீடு மாதிரி இருக்கு ... "

" ம்ம்ம் நானும் அந்த ஜோ மாதிரி தனியா தானே இருக்கேன் நிலா " என்று கூறி துயரமாய் சிரித்தாள் காவியதர்ஷினி ..அவர்களின் பேச்சில் இணையாமல் பார்வையால் சுழற்றவிட்ட மதியழகனின் விழிகளை விரிய வைத்தது அந்த கிட்டார் ..

மதியழகனுக்கும் நிலாவுக்கும் இடையில் இருக்கும் காதலை போலதான் , அவனுக்கும் இசைக்கும் இருந்த பிணைப்பு .. (கொஞ்சம் ஓவரா இருக்கோ ? நிலா என்னை மன்னிச்சிரும்மா ,... என்ன பனிஷ்மெண்ட் ஆ இருந்தாலும் எனக்காக நம்ம மதி அண்ணா  ஏத்துப்பார் )

காவியா அவள் தந்தையுடன் கிட்டார் வாசித்து கொண்டிருந்த படங்கள் எல்லாம் சுவரில் அழகாய் மாட்டபட்டு இருந்தது ..

" நீ கிட்டரிஸ்ட்  ஆ காவியா ?" என்று கேட்டப்படி அதை கையில் எடுத்தான் மதியழகன் ..

" ம்ம்ம் ஒரு காலத்துல " என்றாள்  அவள் விரக்தியாய் .. தூசு படிந்திருந்த அந்த இசைக்கருவியே அந்த " ஒரு காலத்துல " என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறியது .. அதற்குள் எழில் இடைபுகுந்தான் ..

" நம்ம மித்ரா , காவியா ரெண்டு பேருமே நல்லா பாடுவாங்க அண்ணா .. பட் காவியா கிட்டார்  வாசிக்கவும் கத்துகிட்டா .. அங்கிள் தவறிய பிறகு அதை தொடவே இல்லை .. அப்படியே விட்டுட்டா ...நானும் அடிக்கடி வற்புறுத்துவேன் கேட்கமாட்டா  "  என்று போட்டு கொடுத்தான் ..

" டேய் ஹிட்லர் " என்று பற்களை கடித்தவள் மெல்லிய குரலில், " இசை வற்புறுத்தி வர்ற விஷயம் இல்லையே ! அது மனசில் இருந்து இயல்பாய் கிளறனும் " என்றாள்..

 ஏதோ யோசனையில் இருந்த மதி அதே வேகத்தில்

" சோ , உன்னை முடக்கி வெச்ச பெருமை உன் அப்பாவை தான் சேரும் ! அப்படித்தானே !" என்று வெடுக்கென கேட்டுவிட்டான் .. அதிர்ச்சியும் கோபமும் கொப்பளிக்க , காவியா மதியழகனை முறைத்தாள்  .. அனைவருமே அவனை கேள்வியாய்  பார்க்க , நிலா தான் மெல்லிய குரலில்

" என்ன மது இது ? அவ முகமே சரி இல்லை .. என்ன பேச்சு பேசிட்ட நீ ?" என்றாள்.

" நான் எதுவும் தப்பா சொல்லல " என்று நில்லாவிடம் கூறியவன்

" எதுவும் சமைக்க வேணாம் , நான் சாப்பாடு வாங்கிட்டு வரேன் " என்று அங்கிருந்து அகன்றான் .. அங்கு நிலவிய மௌனத்தை கலைத்து  சூழ்நிலையை சகஜமாக்க மற்ற நால்வரும் பார்வையாலேயே திட்டமிட்டு ஏதேதோ கதை பேசி நேரத்தை  கழித்தனர் .. காவியா மட்டும் அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாலும் மனதில் மதியழகனின் வார்த்தைகளை  பற்றி சிந்தித்து கொண்டே இருந்தாள்  ..

னைவரும் சிறிது நேரம் இளைப்பாற தனியாய் நின்று கொண்டிருந்த காவியாவிடம் வந்து பேசினான் கதிர் ..

" தர்ஷினி " 

" ம்ம்ம்ம் ?" நீண்ட நாட்களுக்கு பிறகு அவளை தர்ஷினி என்று அழைத்தான் கதிர் .. அதிலேயே அவள் மனம் லேசாய் குளிர்ந்துவிட்டது ..

" சொல்லுங்க கதிர் ?"

" இல்ல , நான் ஹாஸ்டலுக்கு போகலாம்னு யோசிக்கிறேன் ?"

" என்ன பிரச்சனை கதிர் ? எல்லாரும் இங்க இருக்கும்போது நீங்க மட்டும் ஏன் போகணும் ?"

" அப்படி இல்ல, ரிஷி இப்போதான் கால் பண்ணான் .. அதான் பார்த்துட்டு வரலாம் நினைச்சேன் "

ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் கொஞ்சம் அழுத்தமான குரலில்

" இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்குறது கஷ்டமா உங்களுக்கு?" என்றாள் ..

அவளது கோபத்தில் மலர்ந்து சிரித்தான் கதிர் ..

" ஹா ஹா நீ கோபபட்டா செம்ம கியூட்டா இருக்கு தர்ஷினி அதான் சும்மா விளையாடினேன் " என்று கண் சிமிட்டினான் அவன்..

" எதுக்குடா உனக்கிந்த வேலை? " என்பது போல பார்த்து வைத்தாள்  அவள் ..

" ஹா ஹா கூல்  மை ப்ரண்ட் ... எனக்கு இப்போ ரொம்ப பசிக்கிது .. சாப்பாடு வருமா ? வராதா ?" என்று பாவமாய் கேட்டான் அவன் ..

" வந்தாச்சு வந்தாச்சு " என்றபடி அங்கு வந்தான் மதி .. அனைவரும்  பசியுடன் அமர , அவனும் நிலாவும் அனைவருக்கும் பரிமாறினர் .. பிறகு , நிலாவையும் அங்கு அமர வற்புறுத்தி அவளுக்கு உணவு பரிமாறினான் சில காதல் பார்வை பரிமாற்றங்களுடன் !

" காவியா எங்க ?" - மதி

" மாடியில் இருக்கா அண்ணா ... நான் கூப்பிட்டேன் வரலைன்னு சொல்லிட்டா " - மித்ரா ..

" சரி எல்லாரும் சாப்பிடுட்டு இருங்க நான் வரேன் " என்று மாடிப்படிகளில் ஏறினான்  மதியழகன் ..

" காவியா !!"

கண்ணீர் ஏந்திய விழிகளுடன் திரும்பி பார்த்தாள்  அவள்.. மொட்டைமாடியில் , பால்நிலவின் அழகை ரசிப்பதற்காகவே அமைத்திருந்த அந்த மரபெஞ்சில் அமர்ந்து வானத்தை வெறித்து கொண்டிருந்தாள் போலும் .. மதியழகனை பார்த்ததும் அவள் எழுந்து நிற்க

" உட்கார் ... " என்றபடி அவள் அருகில் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தான் மதியழகன் .. தன் விரல்களுக்குள் புதையலை தேடி கொண்டிருந்தாள் காவியா .. மதியழகனோ  வானில் நிலவை தேடி கொண்டிருந்தான் .. ( நம்ம மதி அண்ணாவுக்கு எப்பவும் நிலா மேலதான் கண்ணு )

மெல்ல தொண்டையை செருமிக்கொண்டே

" சாப்பிடலையா நீ ?" என்று வினவினான் அவன் ..

" ம்ம்ம்ம்ம் பசிக்கல .. அப்பறம் சாப்பிடுறேன் "

" அன்னத்தை காத்திருக்க வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க காவியா .. உன் மனநிலை எனக்கு புரியுது .. ஆனால்  முடிஞ்ச அளவு இனி எந்த காரணத்துக்காகவும் சாப்பிடாமல் இருக்காதே .. பசி நம்மளை  சரியாய் சிந்திக்க விடாமல் தடுக்கும் " என்றான்

" ம்ம்ம்ம்ம் சரி " என்று தலையசைத்தாள் அவள் ...

" என்மேல ரொம்ப கோவத்தில் இருக்கன்னு நினைக்கிறேன் "

" இல்லைன்னு சொல்ல மாட்டேன் "

" ஆனா, நான் சொன்னதில் தவறு இருக்குறதா எனக்கும் தோணலை " என்று அவன் கூறவும் நிமிர்ந்து பார்த்தாள்  காவியதர்ஷினி .. அவன் என்ன சொல்ல போகிறான் ? என கேள்வியுடன் பார்த்தாள்  அவள் ...

அதை வாய்மொழியாகவும் கேட்டாள்  காவியதர்ஷினி ..

" ஏன் இப்படி சொல்லுரிங்க அண்ணா ?"

" அண்ணா .... ! இதை மனசில் இருந்து நீ கூப்பிடுறது தானே கவி ?"

" கண்டிப்பா அண்ணா "

" அப்போ நான் நம்ம அப்பாவுக்காகத்தான் அப்படி பேசினேன் "  என்றான் மதி தெளிவாய்.

" புரியல "

" வந்ததுல இருந்து நான் உன்னை கவனிச்சுகிட்டு தான் இருந்தேன் காவியா .. நீ முழுமனதோடு சந்தோஷமா இருக்கிறதா எனக்கு தெரியல .. உன் உதடுகளில் இருக்கும் சிரிப்பு உன் கண்களை வந்து சேரல .. அப்பபோ மனம் விட்டு சிரிக்கிற அப்பபோ ஒரு கூட்டுக்குள்ள ஒளிஞ்சுகிற "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.