(Reading time: 35 - 69 minutes)

11. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

காரிலிருந்த இறங்கி இருந்த ஆதிக் இவள் புறமாக வந்து கதவைத் திறந்துவிடும் வரையுமே இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்? இங்க ஷாப்பிங் செய்ய சொன்னா என்ன செய்றது? என்ற ஆராய்ச்சியில்தான் இருந்தாள் ரேயா. அவன் கதவை திறந்து இவள் இறங்க காத்து நிற்பதை உணர்ந்த பின்பும் அதே புரியாத பார்வையுடன் தயங்கி தயங்கி இறங்கினாள். சில்லிட்டது பெங்களூரு குளிர். அப்பொழுதுதான் கவனித்தாள் ஷோ ரூமின் முகப்பின் கண்ணாடி கதவின் கைப்பிடியில் தொங்கியது அந்த போர்ட் ‘க்லோஸ்ட்’.

நேரம் என்ன இருக்கும்? வாட்சை சிமி வீட்டின் வாஷ் பேசின் பக்கம் கழற்றி வைத்தது ஞாபகம் வந்தது. சுற்று முற்றும் பார்வையை ஓட்டினாள். எப்படியும் ரொம்பவே லேட்…..இப்போ இங்க என்ன செய்ய போறோம்?

அவள் அருகில் நின்றவன் “ரேயு” என்றான். விழிகளை மாத்திரம் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். இவள் கண்களை அரை நொடி அதிகமாகப் பார்த்தவன் எதையோ வேண்டாம் என்பது போல் தனக்குத் தானே மறுப்பாக தலையசைத்துக் கொண்டு கடை வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

Eppadi solven vennilave

எதை சொல்ல வந்துவிட்டு சொல்லாமல் போகிறான்? எண்ணியபடி அவனைப் பின்பற்ற தொடங்கினாள். ஓர் எட்டு அவளுக்கு முன்பு ஆரம்பித்திருந்தவன் சற்று நின்று அவளுக்கு இணையாக வந்தான்.

“எதோ சொல்ல வந்தீங்க….?”

“இல்ல இப்போ அதைப் பத்தி பேச வேண்டாம்…..” உரிமையும் மென்மையும் தன்னுள்ளே கொண்ட குறும்புக் குரல். அன்னத்தூவி வருடலும் அணுஆயுத பெரு வெடிப்பும் அவளுள்ளே.

இரண்டு பேருக்கும் பெர்த்டே. மணி 12  ஆகப் போகுது. அவனும் அவளும் மட்டுமாக….. அவன் ப்ரபோஸ் செய்யப் போறான்….. அறிவின் ஆன்டெனா அறிவித்தது. அந்த நினைவையே எதிர்கொள்ள முடியவில்லை ரேயாவால். சில்லிப்புடன் நடுங்கத் தொடங்குகிறது அவள் செந்தேகம். அவன் சொல்லும் நேரம் இவள் என்ன செய்ய வேண்டும்? எப்படி பதில் சொல்ல வேண்டும்? அடுத்து அவனை எப்படி நிமிர்ந்து பார்ப்பதாம்? படபடவென அடித்துக் கொள்கிறது இதயம்.

ஷோரூம் கண்ணாடி கதவு அருகில் சென்றதும் அங்குள்ள ஊழியர் ஒருவர் பரபரப்புடன் வந்து கதவைத் திறந்து விடுகிறார். அவனும் இவளும் ஒன்று போல் கால் வைத்து உள்ளே நுழைவது எதிரிலிருந்த அலங்கார கண்ணாடியில் தெரிகின்றது. இவள் சிவப்பில் க்ரீம் வர்ண பிரிண்டட் செய்யப் பட்ட ஃபுல் ஸ்கர்ட்டும், க்ரீம் நிற டாப்ஸும் அணிந்திருக்கிறாள் என்றால் அவனோ ப்ளாக் பேண்ட்ஸும் வெள்ளையில் கறுப்பு நிறம் வரும்படியான காஷீவல் ஷர்ட்டும் அணிந்திருந்தான்.

இருந்தாலும் இருவரையும் சேர்ந்து பார்க்க அப்படி ஒரு பொருத்தமாக…… அவளுக்குப் பார்வையை அதை காட்டிக் கொடுக்கும் கண்ணாடியை விட்டு எடுக்க விருப்பமே இல்லை. ஆனாலும் அவனும் அவளைப் போல அதே கண்ணாடியில் தங்களைப் பார்ப்பதை உணர்ந்தவுடன் தானாக திக்குகிறது கண்கள். அவன் கண்களையே கண்ணாடியில் சந்திக்க முடியவில்லையே….இதில் இவன் காதல் சொல்வதை இவள் எப்படி கேட்பதாம்…..? அதன் பின்பு நாளை முழுவதும் இவனோடு வேறு…………

“இங்க வா ரேயு….” அவன் சுட்டிய திசையில் ஓரத்தில் இருந்த கண்ணாடி கேபினைப் பார்த்து போகிறாள். கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை எனினும் சீருடை அணிந்த ஊழியர்கள் சிலர் எதோ எண்ணுவதும் அடுக்குவதுமாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வேலை பார்ப்பது போல் ஒரு பாவனைதான். எல்லோர் பார்வையும் கவனமும் தங்கள் மீதே இருப்பது புரிகின்றது. சின்ன சிரிப்புடன் ஓரிருவர் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்கின்றனர். நிச்சயமாக இவர்களைப் பற்றித்தான். எச்சில் விழுங்கினாள் ரேயா.

‘ஐயோ எல்லோரும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க…? இத்தனை மணிக்கு ஒரு பையனோட இப்டி சுத்திகிட்டு இருக்காளேன்னு…’

‘இதுல இவன் ப்ரொபோஃஸ் வேற செய்யவா?....’ அழுகையே வந்துவிடும் போலிருக்கிறது அவளுக்கு.

‘கல்யாணம் வரைக்குமே இவன் கூடதான்னாலும், எப்ப யார் பார்த்தாலும் தப்பு தப்பாதான நினைப்பாங்க…?’

‘கடவுளே கல்யாணம் வரைக்கும் இவன் என்ட்ட ப்ரொபோஃஸ் செய்யகூடாது….இப்டில்லாம் வெளிய வரச் சொல்லகூடாது….’மனதிற்குள் அவசர அவசரமாக ஆண்டவருக்கு ஒரு அப்ளிகேஷன்.  

இதற்குள் ஒரு ஊழியர் ஓடி வந்து ‘வாங்க சார்….வாங்க மேம்’ என்றவர் இவர்களுக்கு முன்பாக மிக மரியாதை பாவனையுடன் கேபினை நோக்கி சென்று கதவை திறக்கிறார். மேஜைக்கு எதிரில் இருந்த விருந்தினர் நாற்காலி ஒன்றை இவளுக்கு கை காண்பித்துவிட்டு இவளருகில் அடுத்த நாற்காலியில் அவன் அமர்ந்து கொண்டான்.

“கொண்டு வரட்டுமா சார்…?”

“வாங்க…”

அவர் வெளியேறும் வரை தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தவள் அவசர அவசரமாக

“என்னால இங்கல்லாம் எதுவும் வாங்க முடியாது…” என்றாள்.

“இதுக்கா இவ்ளவு நேரம் இவ்ளவு டென்ஷனா இருந்த? நான் கூட வேற என்னமோன்னு நினைச்சேன்….அப்டில்லாம் உன்னை வாங்க சொல்வனா?...அதுவும் ட்ரிப்ல இருக்கிறப்ப…..இது வேற….உன்ட்ட ஒரு ஹெல்ப் வேணும்னு சொன்னனே…..”

“ம்….” அவனிடம் பேசப் பேச கொஞ்சம் படபடப்பு குறைந்தது போல் ஒரு உணர்வு.சூழ்நிலை மறக்கிறதே…

“மேரேஜ் மாதிரி ஒரு இம்பார்டன்ட் அக்கேஷனுக்கு கிஃப்ட் பண்ற மாதிரி ஒரு ஜுவல் செட் வேணும்….செலக்க்ஷன்ல நீ ஹெல்ப் செய்தா நல்லா இருக்கும்…”

“ஓ….சிமி செலக்க்ஷனே நல்லா இருக்குமே….அவங்க வீடயே எவ்ளவு அழகா வச்சுருக்காங்க…” ‘இதுக்குப் போய் என்னய இத்தன மணிக்கு இங்க கூட்டிட்டு வந்து இவ்ளவு டென்ஷனாக்கனுமா’ என்கிறது மனது.

“நான் கொடுக்கப் போற அந்த ஃபாமிலிக்கு உன் டேஸ்ட்டுதான் கரெக்டா இருக்கும்னு பட்டுது…”

“ஏன்….அப்படி?” நிஜமாகவே புரியவில்லை.

அவளை ஒரு பார்வை பார்த்தான். பரிபூரணம் அதில். “கண்டிப்பா இப்பவே சொல்லனுமா?”

அதே அன்னத்தூவியும், அணு உலை வெடிப்பும் அவளுள். சட்டென புரிந்துவிட்டது அவன் இவளுக்குத்தான் வாங்கப் போகிறான்…

‘அட அறிவே….நீயே இழுத்து பிடிச்சு சொல்ல சொல்லுவ போலவே’ தன்னைத்தானே திட்டியவள் அவசர அவசரமாக அவனை நோக்கி இட வலமாக தலையாட்டினாள்.

அதற்குள் வரவேற்ற ஊழியரும் இன்னுமொருவரும் கையில் சில ட்ரேகளுடன் உள்ளே வருகின்றனர்.

“இது சிமிர்னா மேடம் சொன்ன கலெக்க்ஷன்ஸ்…இது லாஸ்ட் வீக் வந்தது…” இவள் முன் பரப்பப்பட்ட நகைகளில் அவன் கேட்ட படி அந்த நெக்லஃஸ் செட் தேர்வு செய்யும் வரை படபடப்பாக உணர்ந்தவள்,

 “சிமி ஒரு ப்ரேஃஸ்லெட் வாங்க சொன்னா…..”

“சிமி பேபி பிறக்றப்ப நான் இங்க இருக்க மாட்டேன்…அதனால இப்பவே ஒரு பேபி செய்ன் கொடுக்கப் போறேன்….”

இப்படி ஒவ்வொன்றிற்கும் இவள் மனம் கொடுத்த போது கொஞ்சம் இயல்பிற்கு வந்திருந்தாள்.

கிளம்பி வெளியே வரும் போது கேட்டாள் “ உங்களுக்கு தெரிஞ்சவங்க கடையா?”

“ஆமா….என் அப்பா எனக்கு தெரிஞ்சவங்க தானே…?”

“ஆங்….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.