(Reading time: 35 - 69 minutes)

து….இத எப்டி சொல்றது..? ம்…ஃபார் எக்‌ஃஸாம்பிள் நான் உங்கப்பாட்ட பேசுறேன்னு வை அவங்கட்ட நான் என் பேரண்ட்ஸ்ட்ட எப்படி பேசுவனோ அப்டி பேசுவேன்….அதே மாதிரி உன்ட்ட நான் பேசுறப்ப நம்ம ஏஜ் க்ரூப் பீபுள்ட்ட அதாவது சிமிட்ட புனிட்ட பேசுற மாதிரிதானே பேச வரும்….?”

“ம்”

“அதான் அப்படி பேசிட்டேன்….”

தலையை ஆட்டி வைத்தாள் ரேயா.

“அவங்கல்லாம் எப்பவும் கூட இருக்றதால இப்டி பேசுறது அவங்களுக்கு கஷ்டமா இல்ல போல….உன்னை எப்பவாவது தான பார்க்றேன்….அதான் ஹர்ட் ஆகுது போல…இனிமே கேர்ஃபுல்லா இருப்பேன்…”

நிச்சயமாய் ஒரு குழந்தைக்கு சமாதானம் சொல்லுவது போல்……. அதுவரை ரேயாவுக்கு அழுகை என்பது தடுக்க கேட்க யாருமற்ற தனிமையில் நடைபெறும் அனுபவம். இப்படி அடுத்தவரிடம் அழுததும் இல்லை, ஆறுதல் கேட்டதும் இல்லை. அதனாலோ என்னவோ அதன்பின்பு இன்னும் அதிகமாக மனதளவில் அவனிடம் நெருக்கமாக உணர்ந்தாள்.

முன்பைவிட கூட இயல்பாக அவனிடம் பேச முடிந்தது. இவள் அழுததால் அவன் கிண்டல் கேலியை விட்டுவிடவில்லை. ஆனால் இவளை விலக்கி நிறுத்துவது போன்ற வார்த்தைகள் அதில் வராது பார்த்துக் கொண்டான் அவ்வளவே….

வர்கள் கோவா சென்றடைந்தது மாலை நேரம். கோவாவில் டிரைவர் இல்லாமல் காரை மட்டுமாக வாடகைக்கு எடுத்துக் கொண்டாராகள்.  அவள் கேட்டுக்கொண்டதால் சிறு ஷாப்பிங். வாங்கியதெல்லாம் அவள்தான். அதன் முடிவில் இரவு சாப்பாடுக்கென ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போனான்.

ஷாப்பிங்கின் போது அவனுக்கென வாங்கிய ஒரு  பெர்த்டே காட்டை அங்கு வைத்துதான் கொடுத்தாள். அதுதான் அவள் அவனுக்கென கொடுத்த ஒரே பிறந்தநாள் பரிசு. அவன் அப்படி கூட எதுவும் தரவில்லை. ஏனென்று தெரியவில்லை.. அதன்பின்பு அவன் மிகவும் மௌனமாகிப் போனது போல் உணர்வு.

அடுத்து இரவு இவள் பள்ளி மாணவியர் தங்க ஏற்பாடு செய்திருந்த அந்த விடுதிக்கு சற்று முன்னால் காரில் வந்து காத்திருந்தனர் இருவரும். சிமி வீடு, தன் பெற்றோர், இவளது அப்பா என அனைவருடனும் அலை பேசியில் பேசியவன் ஏனோ இவளுடன் மட்டும் பேசவே இல்லை.

இன்னும் அரை மணி நேரத்தில் இவள் குழு வந்து சேர்ந்துவிடும். அதற்குள் இவள்  இவளுக்கான அறைக்குள் சென்றாக வேண்டும். அவன் விடை பெற்றாக வேண்டும். அவன் முகம் இயல்பாகவே இல்லை.

“என்னாச்சு ஆதிக்?”

“என்னமோ எதையோ இழக்கப் போற மாதிரி இருக்குது ரேயு…..” அவனது அப்போதைய பார்வை இன்றும் ஞாபகம் இருக்கிறது. வலுத்த இயலாமை கலந்த ஒருவித பலத்த தவிப்பை அவனிடம் பார்த்தாள். இவளுக்குள் சர்வமும் நடுங்கிப் போனது. அன்று அது இவளைப் பிரியப் போவதற்கான அவனது உணர்வு என்றுதான் நினைத்தாள். பின்னாளில் அதன் பொருள் விளங்காமல் போனது வேறு விஷயம்.

“யேசப்பா திறந்த கதவை யாரும் மூட முடியாதாம்….அவரே மூடிட்ட கதவை யாரும் திறக்க முடியாதாம்…..கடவுள் தரதை யார் தடுக்க….அவர் தராததை யார் எடுக்க….? டு நாட் பீ ஆன்ஷியஸ் அபவ்ட் எனிதிங்க்னு இருக்குது….” எதைக் குறித்து தவிப்பு வரும் போதும் இவள் தனக்குத்தானே  நினைத்துக் கொள்ளும் வார்த்தையை இவளுக்கும் அவனுக்குமாக சொன்னவள் கிளம்பி தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றாள்.

அதன்பின்னால் அங்கிருந்தால் அவன் காதலை வெளிப்படையாக சொல்வானோ என்ற பயம் ஒருபுறம், அதைவிடவே இவளை அழுகையில் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிடுவாளோ என்ற பயம் மறுபுறம். காதலர்கள் என்ற நிலையை அடைய அவளுக்குள் அத்தனை பயம் வந்திருந்தது. அப்பாவுக்கு தெரியாமல் எதை செய்யவும் தைரியமற்றவள் ரேயா. இதில் அவருக்கு கடும் வெறுப்பான காதல் உறவை மனதில் சுமந்து, மறைத்து உறவாடி, ஊர் வாயில் விழுந்து, நொடி நொடியாய் பயந்து, ஒவ்வொருவர் பார்வையிலும் குற்ற மனப்பான்மையில் உழன்று தேவையே இல்லை. காதலை வாய்விட்டு பகிர்ந்து கொள்ளாமல் இப்பொழுது இருக்கும் இந்த உறவு நிலை மிக பாதுகாப்பாக படுகிறது.

இப்படி காதலை சொல்லிவிடுவானோ என வந்தாள் இவள் பயத்தில். அவனோ தான் இவளை காதலிக்கவே இல்லை என்றான் அடுத்து வந்த வருடத்தில்.

ற்கனவே சரித்ரனுக்காய் தவித்துக் கொண்டிருந்த ஷாலுவின் மனதிற்கு சித்தியின் இந்தபதில் இன்னுமாய் வேதனை கூட்டியது. இவளால் எத்தனயாய் மனவேதனைப் பட்டிருந்தால் அவன் அப்படி அங்கேயே போய் இருந்து கொள்வான்? இவளை மொத்தமாய் வெறுத்தே விட்டானோ, இனி இவளுக்கில்லையோ அவன்? அழுகை அடைத்துக் கொண்டு வருகிறது.

ஆனால் சித்தியிடம் இவ்வளவாய் அவனைப் பற்றி கேட்டதே அதிகம். இதில் அவரிடம் அழுது வேறு வைத்தால் அது சரனை நான் காதலிக்கிறேன் என இவள் தந்தையிடம் இவளே சொல்வதற்கு சமம்.

இவள் தலையை குனிந்து வந்த அழுகையை அடக்கியபடி தான் வழக்கமாக தங்கும் அறையை நோக்கி திரும்பினாள். “இப்போ எதுக்காக அவனை தேடுற?”  சித்தியின் கார கேள்வியில் அப்படியே நின்று போனாள் அவள்.

சரித்ரனைப் பற்றி இவள் சித்தியிடம் விசாரித்தாளானால் இந்த கேள்வி வரும் என இவள் அறிவுக்குத் தெரியும் தான் ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்தும் நிலையில் மனது இல்லை கேள்வி கேட்கும் முன். இப்பொழுது என்ன சொல்வதாம்?

“அவன் தான் உன்னை குப்பையை கொட்டிட்டு போற மாதிரி போட்டுட்டுப் போனானே…..இப்ப எதுக்கு அவன்? அவனுக்கு கேர்ள்ஸை  எப்டி நடத்தனும்னு தெரியல….சரியான திமிர் பிடிச்சவன்… நீயால்லாம் ஒன்னும் அவன்ட்ட பேச வேண்டாம்….போனதும் இல்லாம ஃபோன வேற ஆஃப் செய்து வச்சுகிட்டு இருக்கான்…இருக்குது அவனுக்கு…”

“ஐயோ இல்ல சித்தி…. நான் அவங்கட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன்…..அதான் அவங்க இப்டி ரியாட் பண்றாங்க…மத்தபடி அவங்க எவ்வளவு கேரிங்க் அண்ட் ஃப்ரெண்ட்லி பெர்சன்னு உங்களுக்கே தெரியும்….டவுன் டு எர்த்…” சித்தியே என்றாலும் அவர் விமர்சிப்பது சரனை அல்லவா? கடகடவென மனதில் உள்ளதை கொட்டினாள் பெரியவர்கள் முன் நின்று இயல்பாக பேச தயங்கும் ஷாலு

சித்தி இப்பொழுது சிரிக்க ஆரம்பித்திருந்தார்.

“சரனுக்கு இப்டி ஒரு பெர்சனல் லாயர் இருக்காங்கன்னு எனக்கு இவ்ளவு நாள் தெரியாம போச்சே…”

தான் எங்கு பேசி இருக்கிறோம் என அவளுக்கு மெல்ல இப்பொழுதுதான் உறைக்கிறது. அதே நேரம் சித்தியின் சிரிப்பில் இவளுக்குமே ஒரு இலகுவான உணர்வு.

“அது…” சொல்ல ஆரம்பித்தவள் அடுத்து என்ன சொல்லவென தெரியாமல் மௌனமானாள்.

இவள் அருகில் வந்த சித்தி ரூபியோ அவள் இருகைகளைப்  பற்றி அருகில் இருந்த சோஃபாவில் உட்கார வைத்து தானும் உட்கார்ந்து கொண்டார்.

“அண்ணா வீட்ல இருந்து உங்க அப்பாட்ட பொண்ணு கேட்டு வர சொல்லட்டுமா ?” அன்பும் மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது சித்தியின் குரலில்.

தலை குனிந்திருந்த ஷாலு நிமிரவே இல்லை.

“ஷாலுமா….உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லாம வெறும் அஷெம்ஷன்ல்லாம் நான் எதுவும் செய்ய கூடாதுமா….”

“அப்பா ஒத்துப்பாங்களான்னு தெரியலையே சித்தி…. அதவிட அவங்கதான் என்மேல கோபமா இருக்காங்களே…..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.