(Reading time: 35 - 69 minutes)

சிரித்தான்.

“உங்களுக்கு கோயம்புத்தூர்னு நினச்சேன்…”

“ம்…அம்மா அப்பா அங்கதான்….மெயின் பிஸினஸ் ஸ்பின்னிங்தான்….இது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்…..கோயம்புத்தூர்லயும் ப்ரான்ச் உண்டு….எங்க வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் ரொம்ப வருஷமா சரியா கான்டாக்ட் இல்லபோல…அங்கிள் ஒருமாதிரி தன்னை தானே ஐசலேட் செய்துகிட்டாங்கன்னு நினைக்கிறேன்….அதான் ஒருத்தர்க்கு ஒருத்தர் ரொம்ப டீடெய்லா எதுவும் தெரியலை….”

“ம்”

“இனிமே எல்லாத்தையும் சரி செய்துடுவோம்”

“ம்…..”

“என்னாச்சு ரேயு…?”

“இல்ல….. நான் இங்க வர்ற நேரத்துல கோயம்புத்தூர்ல இருந்து நீங்களும் இங்க எப்டி வந்தீங்கன்னு யோசிச்சேன்…?”

“ஹேய்…விட்டா ஸ்கூல் ட்ரிப்ல இருந்து ப்ளான் பண்ணி உன்னை நான்தான் கிட்நாப் பண்ணிட்டு வந்துருக்கேன்னு சொல்லுவ போல…?”

“இல்லையா பின்னே…?” ஏனோ அன்நொடி உணர்வில் சொல்லிவிட்டாளே தவிர பிறகு அவன் வாய்விட்டு சிரிக்கும் போது அவனைப் போலெல்லாம் இயல்பாக சிரிக்க முடியவில்லை. சிறு சிரிப்புடன் உதடை கடித்துக்கொண்டாள் தன்னை அடக்குபவளாக.

“தேங்க்ஸ் ரேயு…”

எதற்காம்? புரியாமல் கேள்வியாய்ப் பார்த்தாள்.

“இல்ல…அப்ப இருந்து நீ சந்தோஷமா இருக்ற மாதிரியே தெரியலை….பெர்த்டே அதுவுமா உன்னை கஷ்ட படுத்றனோன்னு தோணிட்டு….இப்ப நீ சிரிச்சதும்தான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குது….….”

ஐயோ….இவள் மௌனம் அவனை இவ்வளவு பாதிக்கின்றதா?....

அதன்பின் முடிந்தவரை அவனிடம் இயல்பாக பேச முயன்றாள் ரேயா.

“இப்டிலாம் நான் வெளிய வந்தது இல்லையா அதான் கொஞ்சம் டென்ஷன்….மத்தபடி நீங்க என்னை கிட்நாப் பண்ணிட்டு வந்ததுல ரொம்பவே சந்தோஷம் தான்….” இவள் புற கதவை திறந்து கொண்டு காரில் இவள் ஏற அவன் புற கதவை திறந்து ஏற முனைந்தவன் சிரித்துக் கொண்டே ஏறினான்.

“அம்மா தாயே என் பெர்த்டே கிஃப்ட்னு என் அப்பா இந்த காரை பேங்க்ளூரில் புக் செய்துருந்தாங்க….அதான் இங்க வந்தேன்…..வந்த இடத்துல பாவம்னு ஒரு பொண்ணை காப்பாத்தப் போனா…..இப்டி உன்னை என் தலைல கட்டிடாங்க….”

என்னதான் அவன் ஜோக்கிற்காகத்தான் அப்படி சொல்கிறான் என தெரிந்தாலும், அந்த தலைல கட்டிடாங்க அவளுக்கு உறுத்தலாயிருந்தது. கேலியும் கிண்டலுமாய் பேசி வளராததால் தான் இது சுடுகிறது என அவளுக்கே புரிகிறதுதான்.

அன்றும் இப்படித்தான்  இவள் வீட்டில் அவனிருந்த அறைக்குள் இவள் பதற்றத்தில் நுழைந்து மாட்டிக் கொண்டபோது  ‘உன் ரூமுக்கு நான் ஏன் போறனாம்’ என்று கேட்டான். அப்பொழுதும் அவன் சொன்னதன் அர்த்தம் தெளிவாகவே புரிந்தபோதிலும் உள்ளுக்குள் அது நினைவு வரும்போதெல்லாம் வலிக்கிறது.

ஏதோ இவளை அன்னியபடுத்துவது போல்….விலக்கி நிறுத்துவது போல்…..ஒரு உணர்வு.

ஆன்……ஷாலு ரூம்க்கு போறவங்க என் ரூம்க்கு ஏன் போக மாட்டீங்களாம் என அவனை பதில் கேள்வி கேட்டு மடக்கவோ……விளையாட்டுக்கு கூட என்ன தலைல கட்டிட்டாங்கன்னு சொல்லாதீங்க என்னமோ கஷ்டமா இருக்குதுன்னு  விளக்கவோ இப்பொழுது இருக்கும் நிலையில் இவளால் பேச முடியாது…

மனதில்பட்டதெல்லாம் இவனிடம் சொல்ல முடிகின்ற ஒரு காலம் வரும் அதுவரை இப்படி அவ்வப்போது அனுபவிக்க வேண்டி இருக்கும் போலும்….இப்போதைக்கு இதை தவிர்க்க இவனிடம் வாயாடுவதை குறைத்துக்கொள்வது நலம். அன்று இப்படியாக ஒரு முடிவுக்கு வந்த ரேயா அதன் பின் தன் பழைய பாணியையே தொடர்ந்தாள் அவனிடம். இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மௌனமாக நடந்து கொண்டாள் போலும்.

வீட்டை அடைந்ததும் சிமியிடம் நகைகளை கொடுத்த ஆதிக் “அந்த நெக்லஸை அம்மா வர்றப்ப அம்மாட்ட கொடுத்து அனுப்பிரு” என சொன்தும் இன்னுமாய் நிம்மதியாய் இருப்பதாய் உணர்ந்தாள் ரேயா.. ‘ஹப்பா இவன் இப்போதைக்கு ப்ரபோஃஸ் செய்யப் போறது இல்லை….’ என்றிருந்தது.

எது எப்படியோ? அன்று இரவு இவர்கள் இருவரும் சிமியின் ஏற்பாடின்படி இரண்டு கேக்குகளை  வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போதும், இவள் சிமி கேட்டாள் என்பதற்காக தேர்ந்தெடுத்திருந்த பிரேஸ்லெட்டை சிமியும் அவள் கணவரும் வலுக்கட்டாயமாக இவளுக்கே பிறந்த நாள் பரிசாக கொடுத்த போதும், மறு நாள் காலை இவள் கேமிராவில் இருந்த புகைப்படங்களை ஆதிக்கும் சிமியும் சேர்ந்தமர்ந்து கமெண்ட் சொன்னபடியே பார்த்தபோதும்

தன் பின் அவனுடன் கோவா கிளம்பிய போதும், விமான நிலையத்தில் அவனுக்கு மொபைலில் வாழ்த்து சொன்ன அவன் பெற்றோர் இவளுக்கும் வாழ்த்து சொன்ன போதும்….விமானத்தில் அவனருகில் அமர்ந்து பயணம் செய்த ஒவ்வொரு நொடியின் போதும்,

அந்த நாள் இரவுதான் இவள் வகுப்பு மாணவியர் கோவா அடைவர் என்பதால் மாலையிலிருந்து இரவு வரை அவனுடன் காத்திருந்த போதும், அந்நேரம்  சாப்பாடு ஷாப்பிங் என சுற்றிய போதும்….அவள் சுக சந்தோஷத்தின் உச்சத்தில்தான் இருந்தாள். மயிலிறகாய் மலரிதழாய் வருடியதே அவனது ஒவ்வொரு சொல்லும் செயலும் அக்கறையும்.

இவ்வளவு ஏன்? விமானம் கிளம்பிய சற்று நேரத்தில் இவளை வாயாட வைத்து விட்டானே!! விமானத்தில் ஜன்னலோரம் இவளது இருக்கை, அடுத்தபடியாக அவன்.

விமானம் பறக்க தொடங்கிய நேரத்திலிருந்து மலையும் ஆறும் வானத்திலிருந்து பார்க்க எப்படி இருக்கிறது என்பதை மட்டும் தான் கவனித்துக் கொண்டு வந்தாள் ரேயா.

“ரேயு”

அவன் அழைப்பில் திரும்பிப் பார்த்தாள்.

“நீ ரொம்ப கலகல டைப் கிடையாது….மனசுலபட்டதெல்லாம் அவ்ளவு ஈசியா வெளிய பேசிற மாட்டன்னு தெரியும்….ஃஸ்டில் என்னமோ நேத்து நைட்ல இருந்து நீ இன்னும் கொஞ்சம் மூடியா இருக்கிற மாதிரி தெரியுது….நான் எதாவது ஹர்ட் செய்துட்டேனா?”

அடுத்தவர் முன் சிரிக்கவே சற்று யோசிப்பவள் ரேயா….இதில் அழுவதாவது? ஆனால் ஏனோ எதற்கோ இப்பொழுது இவன் கேள்வியில், அதை அவன் கேட்ட விதத்தில் கண்ணிலிருந்து கண்ணீர் அதுவாக வெளி வர அழுகை வருகிறது. இத்தனைக்கும் இதை அவனிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாதிருந்தவள்

“ஹேய்…என்ன ரேயுமா..? நீ அழுற அளவுக்கு நான்….….” அவனில் பதற்றம் வருவது இவளுக்குத் தெரிகிறது.

“நீங்கதான என்னை உங்க தலைல கட்டிடாங்கன்னு சொன்னீங்க….” இந்த நொடி… இத்தனைக்கு பிறகும்….. இந்த நொடி அன்று அவள் இதை சொன்னதை நினைத்தால் சிரிப்பு வருகிறது. எப்படிப் பட்ட தொட்டா சிணுங்கியாக இருந்திருக்கிறாள் இவள்.

ஆனால் அன்று கூட அவன் சிரிக்கவில்லை. அப்படி அவன் சிரித்திருந்தால் நிச்சயம் அதன்பின் அப்பொழுதைக்கு அவனிடம் இயல்பாக அவளால் பேச முடிந்திருக்காது.

ஒரு நொடி அதிர்ந்து பார்த்தவன் அரை நொடி மௌனத்திற்குப் பின்(சிரிப்பை கன்ற்றோல் செய்திருப்பானோன்னு இப்ப டவ்ட் வருது)  “ நான் உன்னை பர்டனா நினைப்பேன்னு உனக்கு தோணுதா ரேயு ?” என்றான். குரலில் அத்தனை கனிவு.

“இல்லனு தெரியுது…ஆனாலும் நீங்க சொல்லி கேட்கிறப்ப கஷ்டமா இருக்குதே…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.