(Reading time: 35 - 69 minutes)

ம்ம ஷாலுவ விட 6 வயசு மூத்தவன்ணா…”

“6 வயசா….?” ராஜ்குமாரின் குரலில் சுதி சற்று இறங்கியது.

“ஏன்ணா…? ஆறு வயசு ஒன்னும் பெரிய வித்யாசம் கிடையாதே…..சரியத்தான் இருக்கும்…”

“அதுக்கில்லடா…..நான் பார்த்துருக்க பையன் எனக்கு பெரியவளுக்கு சரியா இருப்பான்னு தோணுது….அவ கொஞ்சம் வெகுளி அவங்க அம்மா மாதிரி சாஃப்ட்….அதை புரிஞ்சு நடந்துக்ற மாதிரி பையன்டா இவன்…உன் மச்சான் மகனுக்கு நம்ம அன்றில பார்க்கலாமான்னு யோசிச்சேன்….பட் வயசு சரியா வராது போலயே….”

தன் அண்ணன் மனம் போகும் போக்கை எப்படி கையாள என தெரியாமல் திகைத்தார் சித்தப்பா. ஆனால் அனைத்தையும் ஸ்பீக்கரில் அறிகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சித்திதான் உதவிக்கு வந்தார்.

“ வணக்கம் அத்தான்….நல்லா இருக்கீங்களா?” என இடையிட்டவர்

“நீங்க சொல்ற பையன் படிச்சுகிட்டு இருக்காங்கன்னுதான சொல்றீங்க….அந்த இடத்தை நம்ம அன்றிலுக்கு பார்க்கலாம்…..ஷாலுவுக்கு சரன பார்க்கலாம்…..என் அண்ணன் பையனா இல்லனா கூட சரன் ஷாலுவுக்கு பொருத்தமான இடம்னுதான் நான் சொல்லுவேன்த்தான்….சின்ன வயசுல இருந்து அவங்க ரெண்டு பெருக்கும் ரொம்பவே ஒத்துப் போகும்….”

சற்று நேரம் மௌனம் ராஜ்குமார் புறமிருந்து.

“ ம்…..சரிம்மா…..நீ சொல்றதும் சரியாத்தான் படுது……பெரியவ படிப்பு முடியவும் கல்யாணத்தை வச்சுகிடலாம்….”

ஒரு புறம் மகளிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன் என சொல்லாத ராஜ்குமாரின் பதிலினால் எரிச்சல் வருகிறது என்றால் மறுபுறம் மதியம் சரனையும் ஷாலுவையும் கண்ட கோலம் மனதில் அழுத்தம் சேர்க்கிறது ஷாலுவின் சித்தி ரூபிக்கு. அடுத்த அறையில் இவர் இருக்கிறார் என தெரிந்தும், நடுஹாலில்……திரும்பி வந்த அவர் நிச்சயமாய் இந்த கோலத்தை  எதிர்பார்க்கவில்லை.

இதுவரையும் சரனும் ஷாலுவும் தனியாக மொட்டை மாடியில் நின்று பேசிய போதும், ஒன்றாய் ஊர் சுற்றிய போதும் ஒரு நாளும் பயம் வந்ததில்லை அவருக்கு. இத்தனைக்கும் சரனின் விருப்பம் அவர் அறியாததில்லை. ஆனால் இன்றைய நிலைக்குப் பின் அவர்களை வெகு காலம் பிரித்து வைப்பது ஒன்றும் நல்லதாய் படவில்லை…..ஒவ்வொரு முறை அவர்கள் சந்திக்கும் போதும் இவருக்கு நெருப்பை கட்டிக் கொண்டு நடமாட நேரிடும்…. உரிமை இல்லாத உறவுக்கு வீட்டனரின் சம்மதம் என்ற அங்கீகாரத்தையும் கொடுத்துவிட்டு பிரித்து வைத்தால்???

“அது அத்தான்…அண்ணன் வீட்ல இப்பவே பெண் கேட்காங்க……கல்யாணத்தை உடனே வச்சுகிடுவோமே…. பையனுக்கும் 28 வயசு ஆகுது….ஒரே பையன் கல்யாணத்தை சீக்கிரம் பார்க்கனும்னு அவங்களுக்கும் ஆசை இருக்குமே….”

“அப்டியாமா? அவங்க பக்கம் நினைக்க்றது கண்டிப்பா சரிதான்மா….ஆனா அது நமக்கு சரியா வராதேமா….கல்யாணத்துக்கு பிறகு படிக்க தயா ரொம்ப கஷ்டப்பட்டா….அதே கஷ்டம் பிள்ளைக்கும் வேண்டாம்….ஜெயராஜ் மச்சான் மகனுக்கு உடனே செய்யனும்னா வேற இடம் பார்க்கலாம்மா….நம்ம பக்கமே நிறைய நல்ல பொண்னுங்க இருக்காங்க….”

ஐயோ இது முதலுக்கே மோசமாகுதே….மனதிற்குள் பதறிய சித்தி “ இல்லத்தான் ஷாலு படிப்பு முடியட்டும்….படிப்பு முடியவுமே கல்யாணம் பேசலாம்” என முடித்துவிட்டார்.

ரித்ரனின் வீட்டைப் பொறுத்தவரை அவனுக்கு திருமணம் சில வருடங்களுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டியது. ஒற்றை மகனாய் நின்று போனவன் அவன். மகன் படிப்பை முடித்து தொழிலில் நுழைந்த நாளிலிருந்து திருமணத்திற்காக அவனை கரையாய் கரைத்துப் பார்க்கிறார்கள்தான் பெற்றோர்….  மகன்தான் அசைந்து கொடுப்பதாய் இல்லை.

அவர்களும் எத்தனையோ பெண் பார்த்தார்கள்தான் ஏனோ மகன் அதில் எந்த பெண்ணின் புகைப்படத்தைக் கூட பார்க்க தயாராய் இருந்தது இல்லை. இவர்கள் நச்சரிப்பு தாங்காமல்தான் மகன் சென்னை பிரிவை கையில் எடுத்துக் கொண்டானோ என்ற எண்ணம் அவர்களுக்கு.

இப்படி இருக்க இப்பொழுது அவனாகவே ஒரு பெண்ணை அதுவும் தன் தாயின் பால்ய தோழியின் மகள், நாத்தனாரின் குடும்பத்துப் பெண்ணையே விரும்புவதாக தெரிவிக்க பூரித்துப் போனது அவர்கள் மனம்.

“நாங்க பார்த்த ஒரு இடம் கூட எங்களுக்கு இவ்ளவு திருப்தியா இருந்தது இல்ல… நம்ம ஷாலுவ எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குது….” தன் நாத்தனாரிடம் சொல்லி மகிழ்ந்த சரனின் அம்மா இவாஞ்சலின்

தன் வருங்கால மருமகளுக்கென  ஆசை ஆசையாய் வாங்கி வந்திருந்த பட்டுப் புடவை நகை எல்லாவற்றையும் ஷாலுவை அணியச் செய்து…..சம்பிருதாயப் படி மாமியார் மருமகளுக்கு முதலில் கொடுப்பது பூவாக இருக்க வேண்டும் என தான் கொண்டு  வந்திருந்த முல்லைச் சரங்களை ஷாலுவின் தலைக்கொள்ளாமல் சூடியும் வைத்தார்.

அதோடு தன் காமிராவை வருங்கால மருமகளின் பிம்பத்தால் நிரப்ப தொடங்கியவர் ஒருகட்டத்தில் மகனையும் மருமகளையும் ஜோடியாக பதிவு செய்து கொண்டார். எல்லாமே கனவு போல் இருந்தது ஷாலுவுக்கு. ஏன் சரித்ரனுக்குமேதான். சில நாட்களாய் அனுபவித்த வேதனைக்கும் பிரிவுக்கும் இது தேன்மா நதி.

ஒரு கட்டத்தில் போய் “ட்ரெஸ் மாத்திட்டு வா ஷாலுமா…எவ்ளவு நேரம்தான் சாரிலயே இருப்ப?” என உடை மாற்ற அனுப்பி வைத்தார் இவாஞ்சலின்.

மாடியில் அவளது உடைமைகள் இருந்த அறையைப் பார்த்து சென்றாள் ஷாலு.

ரை தளத்தின் ப்ரமாண்ட டூப்ளக்‌ஸ் ஹாலின் வழியே படியேறினால் மாடியில் முதலில் ஒரு பெரிய ஹால் அதைக் கடந்ததும் வரிசையாய் இருக்கும்  அறைகள். அதன் வாசல்களை இணைக்கும் லாஞ்ச் . அந்த லாஞ்சில் இவள் நுழைகையில் தனது அறை கதவை திறந்து கொண்டு வெளி வந்தான் சரித்ரன்.

“ஹேய் புதுப் பொண்ணு…..கரெக்டா கெஸ் பண்ணி என்னை தேடி வந்துட்டியே” 

“அதெல்லாம் ஒன்னுமில்ல….” சிணுங்கலாக வந்தது அவள் குரல்.

அவளை நோக்கி வந்தான் சரித்ரன். அவனுக்கு எதிரிலிருந்த சுவரோடு ஒதுங்கி நின்று தன் நகங்களை ஆராய்ந்தாள் பெண். இத்தனை நாள் இருந்தது போல் ஏனோ இயல்பாய் இல்லை அவன் அருகாமை.

“ரொம்ப அழகா இருக்க ஸ்ரே…..”

கண்களை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

“எல்லாரும் உன்ன ஷாலுன்னு கூடுறாங்க….சோ எனக்குன்னு ஷ்பெஷல் நேம்…..ஸ்ரே இல்லனா ஸ்ரீ இதுல எதாவது ஒன்னு….பட் அதெல்லாம் லேட்டர்…இப்போதைக்கு புதுப் பொண்ணுதான்….”

மீண்டும் நகத்தை ஆராய்ந்தாள்.

“ஹேய் என்னாச்சு…? எல்லாத்துக்கும் ஒரே லுக் மட்டும்தான் கிடைக்குது…?”

அவள் இதழ்களில் சிறு சலனம் தோன்றினாலும் பதிலென்று வார்த்தை எதுவும் வரவில்லை.

“ஹூம் எங்கேஜ்மென்ட் ஆனா இன்னும் கம்ஃபர்டபுளா பழகுவன்னு பார்த்தா….இப்டி டிஸ்டண்ஸ்ல அதிகமாயிருக்கு..?”

“அது எங்கேஜ்மென்ட் ஆனாதான் சரன்…அவ அப்பா வீட்ல நடக்கனும் அது….” சித்தி தான் அங்கு வந்து சேர்ந்தார். எதிர்பாரா அவர் வரவில் டக்கென தூக்கிப் போட்டது அவளுக்கு. ஆனால் சரித்ரனோ இயல்பாக தன் அத்தையை எதிர்கொண்டான்.

“என்னாச்சு அத்தை…?”

“ஷாலு நீ ட்ரெஸ் மாத்த தான வந்த…? சீக்கிரம் மாத்திட்டு கீழ போ… ”

ஷாலு அவசரமாக தன் அறைக்குள் போய்விட்டாள். சரித்ரன் தன் அத்தை ரூபியை பார்த்தபடி நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.