பியூலா அதி காதல் தெரிந்ததும்தான் பியூலாவின் மேல் வசீகரனுக்கு சாஃப்ட் கார்னர். பியூலாவின் நிகழ்ச்சிக்கு இவள் வந்தாள் அதி பியூலா காதலை பற்றி இவள் அறிந்து வருந்துவாள் என இவள் வரவை மறுத்திருக்கிறான்.
எப்படிப்பட்ட காதலிது?
வெளியில் சென்றிருந்த வசீகரன் வீட்டிற்குள் வரும் சத்தம் கேட்கிறது. வீட்டில் நுழைந்தவுடன் ஒரு ஐங்கர வடிவ ஹால் இருக்கும். அதில் கோணத்திற்கொன்றாய் மரத்தூண்களும் அவை தாங்கும் காங்க்ரீட் கூரையும் மொசைக் தரையும் இருந்தாலும் பக்கவாட்டு சுவர்கள் வெறும் இரு அடி உயர சுவர்களே.
அங்கு அமர்ந்து எதிரிலிருக்கும் பெரும் மாமரங்களையும் அதில் விளையாடும் உயிரினங்களையும் பார்த்த வண்ணம் வசீகரனுடன் கதையடிப்பது முன்பு இவளது வழக்கம். இப்பொழுதும் அங்குதான் அவன் இருக்கிறான் என தெரிகிறது. எழுந்து அவனிடம் ஓடினாள்.
“வசீ…..”
வேக வேகமாய் ஓடி வரும் இவளைப் பார்த்தவுடன் பதறிப் போய் பாய்ந்து வந்தான் அவன்.
“என்ன மலர்? என்னமா? மெதுவா….”
“ஐ லவ் யூன்னு சொன்னா நம்புவீங்களா வசீ…..” அவனை இறுக்கி அணைத்தாள். ஏனெனில் அதற்கும் முன்பாக தன்னுள் புதைத்திருந்தான் தன்னவளை அவன்.
“ஐ லவ் யூ வசீ….” இவள் கழுத்தில் விழுந்தது அவன் முதல் முத்தம்.
“நான் ஒரு நாளும் அதிய விரும்புனது இல்ல வசி….அது ஒரு கன்ஃப்யூஷன்…..”
“தெரியும்டா…..”
“என்னைய தப்பா….மோசமா…ஒழுக்கம் இல்லாத பொண்ணுன்னு…..”
அவள் வாயை தன் கரத்தினால் அதற்கு மேல் பேச முடியாதபடி மூடி இருந்தான் அவன்.
“அறஞ்சேன்னா பல்லு உடையப் போகுது….”
“அப்றம் மலர்விழி பாட்டியத்தான் நீங்க லவ் பண்ண வேண்டி இருக்கும்” அவன் கரத்தை தன் வாயிலிருந்து நீக்கிவிட்டு சொல்லி சிரித்தாள்.
“பாட்டி என்ன பூட்டி ஆன பிறகும் உன்னைய மட்டும் தான் லவ் பண்றதா இருக்கேன்….” கொத்து மலராய் தன் கையில் அள்ளி இருந்தான் மலரவளை.
“இப்போதைக்கு தெருவுக்கே ஃப்ரீ ஷோ போடுறத நிறுத்திட்டு கொஞ்சம் உள்ள போவோம்….”
அவன் அவளை சுமந்து செல்ல அவன் முகத்தையே பார்த்திருந்தாள் அவள்.
“நான் சூசைட் அட்டெம்ட் எதுவும் நிஜமாவே செய்யலை வசி….”
அவளை கூர்ந்து பார்த்தான். அப்படியா ? என்ற குழப்ப பார்வை.
“ஆக்சிடெண்ட் ஆகி வீட்டுக்கு வந்த நைட் அன்டைம்ல நீ உன் டைரில இருந்து அதி போட்டோவ எடுத்துப் பார்க்கிறதப் பார்த்தேன்…..அதோட நீ அடுத்து அதி வீட்டுக்குப் போய் இப்டின்னதும் நான் கூட….”
“நம்புங்க வசிப்பா நிஜமா அப்டில்லாம் எதுவும் இல்லை…..” தன் மனமாற்றம், நடந்த நிகழ்வுகள் மற்றும் வசீகரன் பற்றி அவள் புரிந்து கொண்டவிதம் பற்றி மலர் சொல்லி முடிக்கும் போது அவன் தன் அணைப்பிற்குள் அவளை வைத்தபடி கதை கேட்டுக் கொண்டிருந்தான் தங்கள் படுக்கையில் அமர்ந்தவண்ணம்.
“என்னாச்சுப்பா….?” அவன் முகத்தில் சிந்தனை பாவம் கண்டு கேட்டாள்.
நீ சொல்றத முழுசா நம்புறேன்மா…” ஆனா உனக்கு பாய்சன் குடுத்தது யாரு?”
“அது….தப்பா நினைக்கக் கூடாது…”
“இல்லமா….”
“அதி வீட்ல குடிச்ச தண்ணி கொஞ்சம் வித்யாசமா ஃபீல் ஆச்சுது….அநேகமா அவருக்கு யாரும் பாய்சன் வச்சிருப்பாங்கன்னு எனக்கு ஒரு ஃபீல்……பட் நான் யார்ட்ட சொல்ல முடியும்?”
புரியாமல் பார்த்தான் வசீகரன்.
“இதை அதிட்டயும் பியூலாட்டயுமாவது நீ சொன்னியா….? அவங்களயாவது அலர்ட் செய்யனுமில்லையா?...”
“அவங்க நான் சூசைட் அட்டெம்ட் செய்யலைன்றதேயே நம்பலை….இதுல இதெல்லாம் சொன்ன என்ன நினைப்பாங்க…?”
“உன் புது ஃப்ரெண்ட் ராஜிட்டயாவது சொன்னியா..? அவங்க பியூலா அக்கா தானே….அவங்க வீட்டுப் பக்கம் எதுவும் வித்யாசமா நடந்தா கவனிப்பாங்கல்ல…அதோட எப்டியும் அதியையும் பியூலாவையும் அலர்ட் செய்வாங்கல்ல?”
‘சரிப்பா சொல்லி வைக்றேன்….நான் அதி மேல கன்சர்ன் காமிச்சா அது….”
“அது எனக்கு ஒன்னும் வித்யாசமா தோணாது…ஏன்னா மனசுல ஒன்னு வச்சு வெளில ஒன்னு பேச என் மலருக்கு வராது….”
‘தேங்க்ஸ் வசிப்பா…” அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் வைத்து எடுத்தவன் “ அதிவிஷயம் என்னமோ எனக்கு கொஞ்சம் வித்யாசமா இருக்குது….எதோ நெருடுது….போய் என்னால எதாவது செய்யமுடியுதான்னு பார்துட்டு வாரேன்….நீ ரொம்பவே ஸேஃபா இருந்துக்கோடா…” என்றபடி வசிகரன் கிளம்பிச் செல்லும் போது ஒருவித படபடப்பு வந்திருந்தது மலர்விழிக்கு.
அவன் சில மணி நேரம் கழித்து திரும்பி வரும்போது அவனைப் பார்த்தவுடனயே விஷயம் படு விபரீதம் என புரிந்து போயிற்று. ஏனெனில் அவன் உடை கலைந்து உயிர் திரிந்து பேசுகின்ற பிணமாய் காரைவிட்டு இறங்கி வந்தான். எதிர்பட்ட இவளுடன் படு பத்திரமாய் உள்ளறைக்குள் ஓடி வந்து கதவை உள்ளே பூட்டிய பின்னும் பேச்சு வராமல் முதலில் திக்கியவன் இறுதியில் “ஏமாந்துட்டோம் மலர் நாம ஏமாந்துட்டோம்…..நம்மள வச்சு விளையாடிட்டானே….ப்ளான் பண்ணி….ப்ளான் பண்ணி அதியக் கொன்னு…. எல்லாம் என் சொத்துக்காக…..” வெடித்தான் வசீகரன்.
“எல்லாம் செய்தது…. செய்தது என் அத்தான் டேவிட்…..”
தொடரும்
{kunena_discuss:876}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.