Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 13 - 26 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
Pin It
Author: Anna Sweety

10. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

வனது வார்த்தைகள் காதில் விழ அதிர்ந்து போய் ஆதிக்கைப் பார்த்தாள் ரேயா. ஆனால் ஆதிக்கின் கண்களோ தன் தங்கை சிமியின் மீது இருந்தன.

 ‘தப்பா எதுவும் சொல்லி பெருசா ப்ரச்சனையை கொண்டுவந்துட்டனோ?’ சிமியின் கண்களில் இருந்த கேள்வி இதுதான். முகம் முழுவதும் குற்றமனப்பான்மை, பதற்றம்.

தங்கையின் பதற்றத்தைப் பார்த்தவன் முகத்தில் உடனடியாக ஒரு ஆறுதல் சொல்லும் பாவமும் கனிவும், அதே நேரம் உணர்ந்தவனாக இவளை ஒரு நொடி கவனித்தான். இவள் வலி அவனுக்கு புரியாமலா இருந்திருக்கும்?

Eppadi solven vennilave“அவ உன்னைவிட எவ்ளவு சின்ன பொண்ணு….இன்னும் +2 எக்ஸாம் எழுதவே மூனு மாசம் இருக்குது….அவளைப் போய் அண்ணினு சொல்லிகிட்டு….சும்மா பேர் சொல்லியே கூப்டு…” தன் தங்கையின் கண்களைப் பார்த்தபடி சொன்னான்.

சிமிக்கு மட்டுமல்ல ரேயாவுக்குமே புரிந்துவிட்டது விஷயம். எக்‌ஸாம் டைம்ல கனவு காண கூடாதுன்னு சொல்றான். அப்படி என்ன கனவு கண்டுறப் போறேன்..? இதுவரைக்கும் அவன் ஞாபகம் வந்தாலே அதிலிருந்து தப்பிச்சு ஓடுறதுதான் வேலையே…..அப்பா என்ன சொல்வாங்களோ…இவனே என்ன நினைக்றானோன்னு தெளிவா தெரியாம…கற்பனை கோட்டை கட்ட பயம்… சட்டென புரிகிறது. சிமியின் வார்த்தை வெளிப்படுத்திய விஷயத்தில் உடைந்து விழுந்தது அந்த பய தடைச் சுவர் தானே. அதனால் தான் அவனது கோபம்போலும். சிமியின் செய்தி மீண்டுமாய் மன அறைகளில் எதிரொலிக்க எவ்வளவுதான் கட்டுப்படுத்த நினைத்தாலும் முகமெங்கும் இன்ப அலை வெட்க வெப்பம் பரவுவதை தடுக்க முடியவில்லை.

அவனை நேரடியாகப் பார்க்கவும் ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் இவள் வெட்கம் இவள் மனதை காட்டிக் கொடுக்காதாமா? அதற்காகவாவது இயல்பாய் அவனைப் பார்த்தாக வேண்டுமே. அரை குறையாய் நிமிர்ந்து பார்த்தாள்.

“யூஜி எங்க யுனிவர்சிட்டி வந்துடனும் என்ன…?” அவன் தான் கேட்டான்.

மெல்ல தலையை சம்மதமாக ஆட்டி வைத்தாள். ‘நீ சென்னைக்கு போனா என்னவாம்? இல்ல தென் கோட்டைல இருந்தாதான் என்னவாம், அவன் போய் இருக்கப் போறது லாஸேஞ்சல்ஸ்ல……….’ மனசாட்சி கடித்து வைத்தது.

“நான் நெக்ஃஸ்ட் இயர் சென்னை வந்துடுவேன்….அப்பாக்கு இப்டி அப்ராட்ல போய் படிக்றதுல அவ்ளவு இஷ்டம் இல்லை…”

 இதுக்காகவாவது நான் நல்ல மார்க்‌ஸ் வாங்கியே ஆகனும்…

“ஹா ஹா இப்ப இவனை அப்ராட் அனுப்றதுக்கே நம்ம காந்தி தாத்தாட்ட வீட்ல ப்ராமிஸ் வாங்கிட்டு அனுப்ன மாதிரி இவன்ட்டயும் சில டேர்ம்ஸ்லாம் பேசிட்டுதான் அனுப்பியிருக்காங்க தெரியுமா…….” சிமியின் வார்த்தையில் இவள் நடப்புலகிற்கு வந்தாள்.

“அதை இவன் அச்சு பிசகாம ஏன் ரொம்ப அட்வான்ஸ்டா ஃபாலோ பண்றதைப் பார்த்தா…”

“ஏய்…..கே பி….கொஞ்சம் வாயை மூடிட்டு இரேன்…” அவன் முகத்தில் மகிழ்ச்சிக்குள் இடையோடுவது என்ன வெட்கமா? ஆணிற்கு கூட வெட்கம் வருமா? அதில் இத்தனை அழகிருக்குமா?

அப்படி என்ன கன்டிஷனா இருக்கும்?????

ஆனால் யாரும் இது குறித்து அதன்பின் பேசவில்லை.

“அவ எப்டி இருக்கா பாரு….அவள கொஞ்சம் பார்த்துக்கோ….” தன் தங்கையிடம் சொன்னவன் இவளிடம் கண்களால் விடை பெற்றான். அடுத்த அறைக்குத்தான் செல்கிறான் என்றாலும் மனதிற்குள் ஒரு சிணுக்கம்.

 “ட்ரெஸ் சேஞ்ச் செய்துட்டு வெளிய வா….ஒரு சின்ன விஷயம் இருக்குது…” அவள் மனதை உணர்ந்தான் போலும்.

அவனை அறிய அறிய பிரிவென்பது பெரும் வேதனையாக தோன்றும் என்பது மெல்ல புரிய ஆரம்பிக்கிறது அவளுக்கு.

தன் ரத்த உடை களைந்து அன்று ஷாப்பிங் செய்திருந்த உடைகளில் ஒன்றை அவசரமாக மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள் ரேயா. கையில் காயம் என்பதால் அவளுக்கு உதவ முன்வந்த சிமியிடம் “நானே மேனேஜ் செய்துப்பேன்” ந்னு சொல்லி அனுப்பி வைத்திருந்தாள். அதனால் இப்பொழுது அவளைத் தேடினாள். ஹூம் அவனைத் தேடிப் போய் பேசவா முடியும்?

அறைகளை கடந்து ஹாலை நோக்கி சென்றவளின் காதில் அருகிலிருந்த அறையிலிருந்து அவர்கள் பேசியது கேட்டது.

“பொண்ணு செலெக்க்ஷன்லாம் அம்மாவும் அப்பாவும் செய்ததெல்லாம் ஓகேதான்….ப்ரபோஃஸ் செய்றதாவது நானா இருக்கனும்ல…..அந்த ஆசை எனக்கு இருக்கும்தானே…....இப்டி போட்டு கொடுத்தா எப்டியாம்…?”  அவன்தான்!!!! சிமியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

விண்கலம் போல் புவி ஈர்ப்பு விசை தாண்டி வெடித்து கிளம்பியது ஏதோ ஒன்று இவளுள். அவன் காதல் சொல்லும் காட்சி மன கண்ணில் விரிய பெண் கால்களில் முதன் முறையாக தன் பார உணரல். அருகிலிருந்த அந்த அலங்கார ரெட்டைத் தூண்களில் சாய்ந்து கொண்டாள். வெளியே வந்தவன் பார்வைபட்டுதான் தான் நிற்கும் நிலை அறிந்தாள். அழுந்த கடித்துக் கொண்டிருந்தாள் தன் விரல் நகத்தினை.

“என்னை ப்ரிகேஜி டீச்சராக்காம விடுறதா இல்ல போல…” சொல்லியபடி அவன் கடந்து செல்ல அவசரமாக வாயிலிருந்து கையை எடுத்துக் கொண்டாள்.

இதற்குள் ஹாலுக்குள் சென்றிருந்தவன் திரும்பிப் பார்த்து “ஏன் அங்கயே நின்னுட்ட, இங்க வா நீ” என்று அழைத்தான். அவனை நோக்கிச் சென்றாள். அவன் அமர்ந்திருந்த சோஃபாவிற்கு எதிர் சோஃபாவை காண்பிக்க அமர்ந்தாள்.

முன்பு அணிந்திருந்த டாப்ஃஸின் ஃஸ்லீவை விட இது குட்டையாக இருந்ததால் அதில் வெளி  தெரியாத காயகட்டு இதில் தெரிகின்றது. அதை ஒரு பார்வை பார்த்தான்….

”இப்ப எப்டி இருக்குது….? பெய்ன் இல்லதான…”

“ம்…இல்லை…பெய்ன் கில்லர் கொடுத்றுக்காங்க…”

“ம்..கவனிச்சேன்….இப்போ எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே….உன்னால முடிஞ்சா மட்டும்….”

“சொல்லுங்க…எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை…”

“எனக்கு ரொம்ப முக்கியமான ஆளுக்கு நாளைக்கு பெர்த்டே…”

மொத்த அளவிற்கும்  கண்களை விரித்துப் பார்த்தாள் ரேயா. ரொம்ப முக்கியமானா ஆளா!!!! வெயிட் செய்தா வேற யாரும் போட்டு கொடுத்துடுவாங்கன்னு இப்பவே ப்ரொபோஃஸ் செய்ய போறானா? நாளைக்கு இவளுக்குத்தானே பெர்த் டே….ஷாலு பெர்த் டே கொண்டாடுறது இல்லைங்றதால இவளோடதையுமே செலிப்ரேட் செய்றது இல்லை…..அது ஞாபகம் வரதே ரேர்…இவனுக்கு எப்டி தெரிஞ்சிதாம்? இப்ப என்ன சொல்லபோறான்? எத ஹெல்ப்னு சொல்றான்? எச்சில் விழுங்கினாள் ரேயா.

கற்பனையில் சுகமாய் இருந்தாலும் சில விஷயங்கள் நேரில் நடக்கும் போது வேறு விதமாய் தோன்றும் போலும். அவன் காதலைச் சொன்னாள் இவள் என்ன செய்ய வேண்டும்? பதற்றத்தில்….. படபடப்பில்…..

 “ஹேய்…இது என்ன லுக்….? எதையாவது கன்னாபின்னானு நினைச்சு வச்சிடாதம்மா தாயே…அந்த முக்கியமான ஆள் நான் தான்….எனக்கு நான் முக்கியமான ஆள்தானே….”

“ஹான்….உங்களுக்குமா? “ அவளையும் மீறி சொல்லிவிட்டாள். அவள் வல கை வாய் மீது சென்று அமர்ந்திருந்தது.

“அப்டின்னா…?” ஆச்சர்ய கூவலாய் கேட்டபடி சிமி வந்தாள் அங்கு.

“ உங்களுக்கும் பெர்த்டேவா ரேயா…..ஹையோ…அண்ணா….எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை….நீ ரேயாவுக்கு ஃஸ்பெஷலா….ம் எதாவது….நைட் டின்னர்க்கு வெளிய கூட்டிட்டு போயேன்…” சிமி துள்ளி குதிக்காத குறைதான்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Anna Sweety

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிmeera moorthy 2015-07-27 20:41
Super epi sweety.... Last week Adhik kudutha shock indha epi la seri pannitenge......
Malar oda confession oru vazhiya therndiduchu..... Andha water la enna irunduchu adha yaru senjange......
Will malar survive...... Vasi ku idhu therinja enna panna poraru.... :Q:....
Nd sry for late comments... :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-27 20:57
Thanks Meera :thnkx: :thnkx: Aadik shock.thirumbavum adikum ;-) :P Malar...Vasi enna aakap poraanga :Q: water la irunthathu poison...seythathu yaarunnu seekiram solren :yes: sorry :no: :lol: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிKeerthana Selvadurai 2015-07-27 15:47
Excellent update Sweety :clap:

Aadhik ithai than solvar nu engalukkum theriyumakkum ;-)

Iruvar piranthanaalum ore naalila :clap: :D Rendu perume ore naalaiye niraiya selavu pannanume :grin: Sari eppadiyo ore selava mudincha sari :lol:

Illai aadhik sir summa duppu vidrara avalukku gift vangi kodukka veliya koottitu poganum nu 8) :P

Malar ku enna aachu :Q: ava health la enna issue :Q: Vasi-ku therincha thanguvara :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-27 19:18
Thanks keerthu :thnkx: :thnkx: unga expectation ai aadik fulfill pannalainaa epdiyaam ;-) :D unmai gift budget chinnathaakidum.... :-? :D :grin: aadik thaan vaangi koduka koodaathu....mathavanga kodukalaame ;-) :D Malar is poisoned....Vasi enna seyvaaro :eek: :Q:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிKalaivani R 2015-07-25 19:56
Sweety superb (y) (y) Aadik's reply s an expected one :yes Reyu s so cute :yes: neraiya dialogues ila aana expressionsle score panra :yes: pakumpothu expression feel panrathu vera aana padikumpothu feel panrathu ngrathu oru Writer oda talent than :yes: :P and seekirame 90's story reveal panaporinga thane :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-27 10:27
Thanks Kalai :thnkx: :thnkx: Aadik :grin: Reyu expression....thanks for such a sweet cmnt. :thnkx: s 90 s story on the way :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிSandiya 2015-07-25 19:50
Super epi mam (y) aadhik -reyu erundu perkum ore nalla birthday va suprrrreee :P malar eppo tha oru namma formuku vanthu erukae ;-) athukullae malarku eppdi aiduchae :no: next vasikaren enna panna poraru :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-27 10:22
Thanks Sandiya :thnkx: :thnkx: ore naalla birthday :lol: :lol: malar vasi vishayam epdi pokuthunnu solren pa :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிSriJayanthi 2015-07-25 19:21
Nice update Anna. Adapaavi avalai anninnu koopida vendaamnnu sonnathu vayasu prachanai naalayaa. Oru vaaram manda kaaya vachutta. Orey naal birthday. Nalla vishayamthan, orey selavaa mudinchudum :lol:

Malar Vasee thaan thanakku yellaam appadinnu clear aagi, Beaula mela iruntha sandhegamum poyaachu. What next???
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-27 10:21
Thanks Jay :thnkx: :thnkx: anninu koopda koodaathunnathu Reyu tta propose seyra velai thanake venumnu aadik ninaikirathaala... :lol: ore selavu :D :D therinjavanga veetla ipdi thaan...but ore maasa budjet la varuthennu paiyan pulami ketturuken... :D Malar Vasi wht next nu solren Jay :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிBindu Vinod 2015-07-25 15:46
As always pakka update Anna (y)

Kathaiyin oode azhaga suspense / thrilling feel kondu varuvathil ungaluku nigar neengale thaan :)

Pavam malar naduvila vanthu matikkitanga. But ithuvum kooda Vaseegaran kooda avangaloda relationship sariyaga uthavumnu ninaikiren. Just a hunch :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-27 10:17
:thnkx: a lot Vino mam. :thnkx: :thnkx: unga cmnt paarthathum padu santhoshama irukuthu... :dance: :dance: :thnkx: :thnkx: Malar vashi relationship enna aakapokuthunnu solren Vino mam :D :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிSharon 2015-07-25 11:36
Achacho, Malar paavam.. :sad: ..
Appada Aadik paiyan thirumbavum nallavar aitaaru ;-) , aanalum last week romba bayampudutheteenga sir neenga 8) ..
Same day birthday.. Sooper :P ..
Paavam Shailu, Saran indha week thirumbalaiyae :D
Malar clear aitaa, but ipdi aaidichae :-| ..
Nice episode :) Waiting to read more :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-27 10:14
:thnkx: Sharon :thnkx: :thnkx: Aadhik eppavum nallavare thaan ;-) avar propose seyra chancekku appu vacha paavam avar enna seyvaar....athoda avarai vachu naan story ah move pannanume.. :o athukku vera enna seyrathaam 8) :P same day birth day.. :lol: epi elutha naan late ah start seythathaala saran varalai....next epi vanthuduvaanga :yes: Malar ai kaapithuduvom...... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிchitra 2015-07-25 08:13
wow nalla epi, renndu perukum ore birthday,ada vada poche, thanni kudiche aganum enra pothe theriyum neenga athai vacchu thanni katta poringa enru ,what now, vasikaran summave ketka vendam, ippo theivame.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-27 10:08
Thanks Chithu :thnkx: :thnkx: thannaiya konjam thaniya kaattalainaa...Adhi ya villanaa ninachuda chance iruku illaiyaa...athaan ;-) ippo vasi avar range la ithai handle seyvaar :D :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிJansi 2015-07-25 00:14
Ennachu Malarku?


Malar confusion teernthu telivaagiyaachu. But, anta photo anupinatu yaarunu innamum sollaliye
:-? Eppa teriya varum.

Reyu Aadik storyla....oru velai Aadik fly Shaaluva ninachu sonnatai Reyunnu ninaichu pazagaraano? Misunderstandingaa?

Andrew story eppadi turn aagum....

Niraya kelvikalukaagaana patilgalukaaga next epikaaga waiting.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-25 00:28
Thnks Jansi :thnkx: :thnkx: Phto seekiram solren Jansi :yes: aadik reyu kulappam vara enna misunderstanding nu solren :lol: Andrew story next epila :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிManoRamesh 2015-07-24 23:59
water scene kulla varum pothe doubt agiten.
So aadi murder panna GRP ah than namma sp aadik kandu pidikanum.
Rendu perukum ore birthdayc nice.
Aduthu enna.
next week varanume
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-25 00:24
Thanks Mano :thnkx: :thnkx: s andrew murder ai aadik solve seyyanum :yes: b'day' :D :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிThenmozhi 2015-07-24 23:51
super update Anna.

Malarvizhi kudicha antha thaniyila ethavathu mix agi iruntatho??? Hope she will be fine.

Athik ena plan seirar jewel shop-la :Q: :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 10 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-25 00:22
:thnkx: Thens :thnkx: :thnkx: s...water thaan issue :yes: Addik...next epila solren Thens :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top