(Reading time: 13 - 26 minutes)

………………….”

“ஓகே வா….நான் மாடிலதான் இருக்கேன்…..”

“…………………………..”

கேட்க கேட்க மனதிற்குள் நிம்மதி பெருகி நெஞ்சடைத்த பாறை உருகி கண்ணீராய் வழிந்தது. பியூலாவிற்கும் அதிக்கும் இடையில் இருப்பது காதல். அன்றிருந்த எரிச்சலில் இவள் அதைக் கவனித்திருக்கவில்லை. இப்பொழுது யோசித்தால் தெளிவாக புரிகின்றது. அதிக்கும் பியூலாவுக்கும்தான் காதல். பியூலா வசியிடம் வந்து வந்து பேசினாலும் அவள் கண்களில் காதல் அதியின் மேல்தான் இருக்கிறது. எது எப்படியோ அதி வேறொரு பெண்ணை காதலிக்கிறான் என்பது இவளுக்கு இவ்வளவு நிம்மதியாக தோன்றும் என்று அவனைப் பார்க்கும் வரை அவளால் கற்பனை கூட செய்ய முடியாத விஷயம். இதற்குள் இவள் நிற்பதைப் பார்த்துவிட்டான் அதி.

“வாங்க மலர்விழி மேம்….நீங்க பியூவை தேடினீங்கன்னு காலேஜ்ல சொன்னாங்க…”

“பியூலா பத்தின எல்லா விஷயமும் உங்களுக்கு வந்துடும் போல….”

சின்னதாய் சிரித்தான். “எங்க ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிச்சுட்டாங்க…சோ அவ என் ஃபியான்சின்னு காலேஜ்ல கொஞ்ச பேருக்கு தெரியும்…” 

“ஓ….குட்…எப்ப மேரேஜ்?”

“ கோர்ஃஸ் முடிக்கவும்… பைத வே நீங்க என்ன விஷயமா பியூவைத் தேடினீங்க…”

இப்பொழுது இவள் என்ன காரணம் சொல்வாள்? என் ஹஃஸ்பண்டுக்கு உன் காதலியை பெண் கேட்டு வந்தேன் என்றா?

“அ…து….இல்ல…..பியூலா..ஆன்…ஏத்ஹோ ப்ரோக்ராம்க்கு இனவட் செய்தாங்க….”

“ஓ…அதுவா…அது ஒரு ஆர்ஃபனேஜ்க்கு ஃபண்ட் ரெய்ஸ் செய்றதுக்காக நடக்ற ப்ரோக்ராம்…டிக்கெட்ஸ் கொஞ்சம் காஸ்ட்லி…அதை நிறைய வித்து கொடுக்க ட்ரை செய்துட்டு இருக்கா….வசிஃஸ்ல நிறைய விக்கலாம்னு ப்ளான்…”

இதுக்குத்தானா….? இதையா சந்தேகப்பட்டாள். ஒரு பக்கம் அவமானமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தெளிவாக புரிகின்றது தன் மனம் நாடுவது யாரை என. அதியின் காதல் செய்தி இனிக்கிறது. வசியிடம் யார் நெருங்கினாலும் எரிகின்றது.

“உங்கட்ட ஒன்னு சொல்வேன்….தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஃஸ்…”

அதியின் சத்தத்தில் தான் மீண்டு வந்தாள்

“சொல்லுங்க….”

“ஏனோ உங்களுக்கு பியூ மேல கொஞ்சம் நல்ல ஃபீல் இல்லையோன்னு பட்டுது….அவ ஒரு குழந்தை மாதிரி…யாருக்கு கெடுதல் நினைக்கவும் அவளுக்கு தெரியாது…”

“ சாரி…”

ஒத்துக் கொண்டாள் மலர். “தப்பா புரிஞ்சுகிட்டேன்….இனி அப்டி எதுவும் நடக்காது…பியூலாட்ட நான் சாரி கேட்டேன்னு சொல்லிடுங்க…பை..”

“ஓ…இட்ஸ் ஓகே….வெயிட் செய்தீங்கன்னா அவள பார்த்துட்டே போய்டலாம்…”

“இல்ல…..வீட்டுக்கு போகனும்…”

“ஓகே….பை”

திரும்பி நடந்தவளுக்கு பியூலாவை தேடி அலைந்த இத்தனை நேரம் தண்ணீரே அருந்தாமல் தான் தாகத்தில் இருப்பதே இப்பொழுதுதான் உரைக்கிறது. இவ்வளவு நேரம் அது உரைக்கவில்லை எனினும் நிம்மதி வந்த மனதிற்கு தண்ணீர் அருந்தியே ஆக வேண்டும் என தோன்றுகிறது.

“கொஞ்சம் தண்ணி கிடைக்குமா…?” திரும்பிப் பார்த்தாள். அதற்குள் அலறிய தொலைபேசியை ஏற்றிருந்தான் அவன்.

அருகிலிருந்த மேஜை மீதிருந்த வாட்டர் ஜக் மலர்விழி கண்ணில் பட அவளே சென்று எடுத்து குடிக்கத் தொடங்கிவிட்டாள். குடித்து முடித்து அதை கீழே வைக்கவும் தன் வாயை துடைத்துக் கொண்டு சின்னதாக சிரித்தாள் மலர்.

“சாரி ரொம்ப தாகம்…தேங்க்ஸ்” திரும்பி வந்தவனிடம் சொன்னாள்.

‘யூ ஆர் மோர் தேன் வெல்கம்” இப்பொழுது இவள் படிகள் வழியாக இறங்கும் போது கீழ் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைந்து கொண்டிருந்தாள். பியூலாவின் சாயல். அவள் சகோதரி என்பது நிச்சயம்.

“ நீங்க…?”

அவள் கேட்க அவசரமாக தன்னை அறிமுக படுத்திக் கொண்டாள் மலர்விழி.

“ நான் மலார்விழி வசீகரன்..பியூலாவைப் பார்க்க வந்தேன்….மாடிதான் திறந்திருந்தது”

“ஆமா…அதை வாடகைக்கு குடுத்ருக்கோம்…..கீழ் போர்ஷன் எங்களது, நான் ராஜி பியூலாவோட அக்கா…”

“பார்த்தாலே தெரியுது….நைஃஸ் மீட்டிங் யூ…வீட்டு மருமகனுக்கே வாடகைக்கு கொடுத்துட்டீங்க போல…”

“ஓ விஷயம் தெரியுமா….அதி வாடகை கொடுத்து தான் இருப்பேன்னுட்டார்…அதுதான் சரியும் கூட…அப்பாக்கு அப்பப்ப நைட் டியூட்டி வேற வரும்…..நாங்க அம்மானு லேடீசா தனியா இருக்கனும்…இதுனா சேஃப்….”

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வயிற்றில் தோன்றிய பிரட்டல் கொடும் வலியாய் உறுமாறி சில நொடிகளில் வாயில் நுரைதள்ள தரையில் உருட்டியது மலர்விழியை.

“ஐயோ…என்னங்க…என்னாச்சு….அதீ சார்…கொஞ்சம் இங்க வாங்களேன்…” அலறினாள் பியூலாவின் அக்கா.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:876}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.