(Reading time: 30 - 59 minutes)

ம்…நானும் இப்டித்தான் அப்பப்ப கேள்வி பட்டுறுக்கேன்…. தாத்தா ரொம்பவே ஆர்தடாக்‌ஸ் டைப்….எங்க அம்மா காலேஜ் போறதப் பத்தி அவங்க எதோ ஒரு தடவை  குறை சொல்லிட்டாங்க போல….தாத்தாவ அடிக்க துரத்துனாங்களாம் அந்த வயசுல சித்தாப்பா…..கேட்டீங்கன்னா தெரியும் இங்க உள்ளூர்ல யாரும் தாத்தா முன்னால உட்கார்ந்து பேச மாட்டாங்க…அப்டி ஒரு மரியாதை தாத்தாக்கு….ஆனா அதி சித்தப்பா அப்டித்தான்….

பாக்கெட் மனினு என்ன கொடுத்தாலும் அதவச்சு ஷாலுவுக்குத்தான் எதாவது வாங்குவாங்களாம்….உனக்குன்னு கொடுத்ததுதான ஷாலுக்கு நாங்க பார்க்க மாட்டோமான்னு சொன்னா கேட்கவே மாட்டாங்களாம்… விளையாட்டுக்கு ஷாலுவை யாராவது எதாவது சொல்லிட்டாங்கன்னா கூட சித்தப்பாவுக்கு பயங்கரமா கோபம் வருமாம்..……ஒரு தடவை எங்கப்பா ஷாலுவை எதோ சொல்லி திட்டிட்டாங்க போல……எங்கப்பாட்ட பயங்கர மரியாதை உண்டு சித்தாப்பாவுக்கு….அதனால அவங்க மேல வந்த கோபத்தை சித்தப்பாவுக்கு காமிக்க முடியலை…..அடுத்து தினமும் அப்பா வீட்டுக்கு வர்றப்பல்லாம் ஷாலுவை வெளிய தூக்கிட்டுப் போய்டுவாங்களாம் சித்தப்பா…மூனு நாளா அப்பா கண்ணுல ஷாலுவ படவே விடலை….அப்பா ஷாலுவை ரொம்ப மிஸ் செய்தும் குழந்தைய கைலயே தர மாட்டேன்டாங்களாம். கடைசியா அப்பா கண்ணுல தண்ணிய பார்த்தப்பிறகுதான் இறங்கி வந்தாங்களாம் சித்தப்பா….”

”இதெல்லாம் உனக்கு யார் ரேயு சொன்னாங்க…? உங்கப்பாவோ உன் மாமா வீட்லயோ இதை யாரும் உன்ட்ட சொல்லிருக்க மாட்டாங்களே…”

“ம்…ஆமா எங்க வீட்ல வேலை செய்த பானுக்காவ ஞாபகம் இருக்குதா…? அவங்க தான் சொன்னாங்க…அவங்க டாட்டர் ஸ்கூல்ல சித்தப்பா க்ளாஸ்மேட்டாம் ….பணகஷ்டம்னு வீட்ல படிப்ப நிப்பாட்ட போறங்கன்னு அந்த பொண்ணு க்ளாஸ்ல வச்சு அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்துட்டு, பானுக்காவையும் அவங்க ஹஸ்பண்டையும் எங்கப்பாட்ட கூட்டிட்டு வந்து வேலை போட்டு கொடுத்து நிறைய சம்பளம் கொடுக்கனும்னு பிடிவாதம் பிடிச்சு வேலைக்கு சேர்த்துவிட்டது சித்தப்பாவாம்….…அம்மா இறக்கவும் அப்பா தென்கோட்டை மாறுனப்ப பானுக்கா பாமிலியும் எங்க கூடவே வந்துட்டாங்கன்னா அதுக்கு முக்கிய காரணம் அவங்களுக்கு சித்தப்பாவும் அப்பாவும் செய்த டைம்லி ஹெல்ப்தான்….”

“ஓ…அந்த பானுக்கா இப்ப எங்க இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா ரேயு?”

“தென்கோட்டைல தான்…எங்க ஃபார்ம் ஐ அவங்கதான் பார்த்துகிடுறாங்க…”

“அப்டியே அவங்கள போய் பார்த்துட்டு போலாமா…?”

“தெரியலையே….நம்ம மேரேஜுக்கு அவங்க சென்னை வந்திருந்தாங்க திரும்பி வந்துடாங்களான்னு தெரியலை….”

“ஓகே தென் அப்றமா தேவைப் பட்டால் பார்க்கலாம்…..பைதவே மெடிக்கல் காம்ப் நடந்துகிட்டு இருக்றப்பவே இன்னொரு டீம் அதிசித்தப்பா க்ரேவ்ல போஸ்ட்மார்ட்டம் செய்ய எல்லாத்தையும் கலெக்ட் செய்துட்டாங்க….”

“வாட்???? அப்ப மெடிக்கல் கேம்ப் அரேஞ்ச் செய்தது நீங்க தானா?” அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் கேட்டாள் அவள்.

“அஃப் கோர்ஸ் இல்லனா எந்த டாக்டர்ஸ் இப்டி திடீர்னு கிளம்பி வர்றாங்க…? அதி சித்தப்பா பாடிய எரிக்கலை, பரி பண்ணதான் செய்திருக்குன்னு நேத்து செல்வின் சித்தப்பா சொல்லி கன்ஃபார்மா தெரிஞ்சதும், எனக்கு தெரிஞ்ச டாக்டர்ட்ட  நைட்டே ஹெல்ப் கேட்டேன்….பக்காவா செய்து கொடுத்தாங்க…ஒரு டீம் பீபுளை அவங்க கூட கேம்ப்ல வச்சுகிட, அடுத்த டீம் இதுக்கு… உங்க சித்தப்பாவுக்கு ஃப்யூனரல் அவசரமா செய்தாலும் முறைப்படி புதைச்சிருக்காங்க… எரிக்கலை…சோ இட் வில் ஹெல்ப்…”

“இவ்ளவு நாளுக்கு பிறகுமா?”

“ஆமா ரேயு…. இவ்ளவு வருஷம் கழிச்சுன்றதால  பாடியோட போன்ஸ், ஹேர், நெய்ல்ஸ்…டீத்னுதான் கிடைக்கும்…பட் வந்தனா மேம் கேள்விபட்ட விஷயம் உண்மையா பொய்யானா தெரிஞ்சுக்க இது போதும்.…உங்க தாத்தா அதி சித்தப்பா பாடியை யார்ட்டயும் காண்பிக்கவே இல்லை…..மத்தவங்க வர்றதுக்குள்ள புதச்சுட்டாங்க….விஷம் குடிச்சு சூசைட் செய்துட்டான்னு எல்லோர்ட்டயும் சொல்லிருக்காங்கன்றது இன்ஃபோ….வந்தனா மேம் அதியை ஷூட் பண்ணி கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க…..

இப்ப கிடச்சுருக்க பாடி பார்ட்ஸ்ல  பாய்ஷன் இருந்தாலே வந்தனா மேல் சொல்றது யாரோ சொன்ன பொய்னு  நாம எடுத்துக்கலாம்…பிகாஸ் வந்தனா மேம் சொன்ன படி பார்த்தா அதியை ஷூட் பண்ணி மர்டர் செய்துறுக்காங்க…. புல்லட் ஷாட்டுக்கு  எவிடன்ஸ் இதுல கிடைக்றது ரொம்ப ரேர்னாலும் சான்ஸே இல்லனும் சொல்ல முடியாது…அப்டி கிடச்சா நாம வந்தனா மேம் சொன்ன ஆங்கிள்ள இன்னும் இன்டென்ஸா தேடலாம்…”

அன்று இரவு அவர்கள் திருச்சியை அடையும் போது எதிர்பார்த்ததை விடவும் மிகவும் தாமதமாகி விட்டது. நடு இரவைத் தாண்டிவிட்டது. வரும் வழியிலேயே அங்கு ஒரு ப்ரபல ஹோட்டலில் அறை புக் செய்திருந்தான் ஆதிக்.

அறைக்குள் நுழையவும் தன் மனைவியை இரு கைகளில் அள்ளினான் அவன். மெல்ல சென்று அங்கிருந்த படுக்கையில் வைத்தான்.

“டூ மினிட்ஸ் ரேயு….குளிச்சுட்டு இப்ப வந்துடுவேன்… ”

அவன் திரும்பி வந்த போது புடவையைக் கூட மாற்றாமல் சுருண்டு  தூங்கிக் கொண்டிருந்தாள் ரேயா.

“அவ்ளவு டயர்டா இருக்கியா குட்டிப் பொண்ணு…இல்ல பயம் இன்னும் முழுசா போகலையா?”

அவள் கன்னத்தில் சின்ன முத்தம் வைத்தவன் அவளருகில் படுத்து தானும் தூங்கிப் போனான்.

றுநாள் காலை தஞ்சாவூர் வந்தடைந்தனர் தம்பதியர். அசதி தீர குளித்து தலை விரி கோலமாய் ரேயா நின்ற பொழுது  ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்த உணவு டோர் டெலிவரி ஆனது.

சமையலுக்கு இனிதான் ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவசர அவசராமாய் கிளம்பிக் கொண்டிருந்தான் ஆதிக்.

“ரேயா  ஒரு காஃபீ ப்ளீஸ்“

ஆதிக் சொல்ல கிட்சனில் நுழைந்தாள் பெண்.

ஸ்டவ்வை பற்ற வைத்து பாலுள்ள பாத்திரத்தை அவள் அதில் வைத்த நேரம்…..பின்னிருந்து இடையோடு அணைந்தது இரண்டு கரங்கள். ஒருநொடி துள்ளியவள் பின்னின்றவன் மீது வாகாக சாய்ந்தாள். இதயம் தடம் தடம் தட் தட்…

தோளில் வடிந்த அவள் முடி மீது நாடி பதித்து குளித்திருந்த அவள் வாசத்தை நாசியில் இழுத்து “மனுஷன இப்டி படுத்றியேடி நீ….” என்றான் கணவன்.

“ப்ளீஸ் ஆதிக் இந்த வீட்ல எங்க கேமிரா இருக்கோ…?”

குளிர்ந்திருந்த அவள் கன்னத்தில் ஓர் இதழ் ஒற்றல் அவன் செயல். “நாம கிழவன் கிழவியாகிற வரைக்கும் இப்டியே சொல்லிகிட்டே இரு…. மேரேஜாகி 4 டேஸ் போய்ட்டு….ஒன்னுக்கும் வழியக் காணோம்…” அவன் குரலில் எரிச்சல். சட்டென்று திரும்பிப் போய்விட்டான்.

செல்பவனை முகம் சுருங்க பார்த்துக் கொண்டு நின்றாள் ரேயா. காஃபி ரெடியாக எடுத்துக் கொண்டு வந்தவள் அவனை தேட அவளிடம் சொல்லாமலே ஸ்டேஷன் கிளம்பிப் போயிருந்தான் அவன்.

அதன் பின் ரேயாவால் இயல்பாய் இருக்க முடியவில்லை. தெய்வமே இது எங்கு போய் முடியப் போகிறது?

அவளால் ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிட  முடியவில்லை.

ஒவ்வொரு அறையாய், மூலை முக்கு என கேமிராவைத் தேட ஆரம்பித்தாள்.

எத்தனை மணி நேரமோ….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.