(Reading time: 30 - 59 minutes)

ருவமாய் கரைந்தது பெண்ணவள் மனது, அசையாமல் உறைந்தது அவனது பிடியில் உயிர் உறை உடல் .

எத்தனை நேரமோ….அப்படியே அமர்ந்திருக்க உடல் ஓரளவு நேரத்திற்குப் பின் ஒத்துழைக்காததால்  மெல்ல விலகினாள்.

“ரேயு….”

“ம்…”

“இன்னும் பயமா இருக்குதா…?”

அவள் காதருகில் சுருண்டிருந்த முடியை ஒற்றை விரலால் மெல்ல காதுக்குப் பின் தள்ளினான்.

“ம்ஹூம்..”

“அப்ப ஓகேவா…?”

வெளிப்புறம் நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆனாலும் அவள் முகச் சிவப்பு அவன் கண்ணில் படத்தான் செய்கிறது.  வேறு பதில் எதுவும் வரவில்லை அவளிடமிருந்து. அவனுக்கும் அதன் தேவை எதுவுமில்லை…

மீண்டுமாய் காரை செலுத்த தொடங்கினான்.  அவன் வாய் அதுவாக எதையோ விசில் செய்தது.

வெட்க தயக்கம் வடிந்த பின் மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தாள் ரேயா. டோல் கட்டுவதற்காக அவன் புற கார் கண்ணாடியை இறக்கிவிட்டு பணம் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன். வெளிக் காற்றில் சன்னமாய் அசைந்து கொண்டிருந்தது அவன் அடர் கேசம். அவன் முகத்தில் உள்ளாய் பூத்திருந்தது சம்பூரண ஆனந்தம். இதற்காக தினம் இப்படி அலைந்தால் தான் உண்டோ?

வின்டோவை ஏற்றியதும் கேட்டாள்.

“எத்தனை நாள் இப்டி அன் ப்ளான்டா அலைய முடியும்?”

“ஹேய் ரேஸ்…இது ஹனிமூன் ட்ரிப்னு நினச்சுட்டியா…? அது சைட் பை சைட் நடக்கும்….மெயின் ட்ராக் இன்வஸ்டிகேஷன் தான்…..சீக்ரமா எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டனும்…”

“ஒன்னு சொன்னா சரியா புரிஞ்சுபீங்களா..?”

“சொல்லுமா…”

“வந்தானா ஆன்டி வந்து எதையோ உளறிட்டுப் போய்டாங்கன்னு நாம ஏன்பா இவ்ளவு எஃபர்ட் எடுக்கனும்…எப்டியும் போன யாரையும் இந்த இன்வெஸ்டிகேஷனால திருப்பி கொண்டு வர முடியாது….உங்கப்பா மேலயும் நம்ம யாருக்கும் எந்த சந்தேகமும் இல்ல…எந்த காரணமும் இல்லாம நாம ஏன் இதை இழுக்குறோம்…நாம இதுல எதுவும் ட்ரைப் பண்ணலன்னு ஆப்பனன்ட்ஸுக்கு தெரிஞ்சா அவங்களும் அடுத்து நம்மள கண்டுக்காம விட்டுடப் போறாங்க…”

“நாம இதுல எதையும் ட்ரை பண்ணலன்னு ஆப்பனன்ட்ஸுக்கு எப்டி தெரிய வைக்றதாம்…? நாம எதுவும் செய்ய முன்னாலயே என்னை ட்ரான்ஸ்ஃபர் செய்து வெளிய அனுப்பிட்டாங்க… ஆக அவங்க நம்மள த்ரெட்டா நினைக்கிறாங்கன்றது நிஜம்…சோ அவங்க பயம் போற வரைக்கும் நம்ம நிம்மதியா விட மாட்டாங்க… ”

“அதான் நம்ம மானிடர் செய்றாங்கல்ல, நாம சும்மா இருக்றதும் அது வழியா அவங்களுக்கு தெரிஞ்சுடுமே….”

“ரேயு ஜீனியஸ்….” அவள் கையை இழுத்து அதில் அழுந்த முத்தமிட்டான் ஆதிக். அதில் இருந்தது காதலா????

“ வலைய விரிச்சு அதுல நீயா தேடி வந்து உன்ன விழ வைக்றேன்டா துரோகி……”

கழுத்து  நரம்பு புடைத்து எழ, பல்லைக் கடித்தபடி, கன்ன தசையும், கண்கள் இரண்டும், முழு முகமும், தோளும் தொடையும் மொத்த உடலும் இறுக  சிறு குரலில்தான் என்றாலும் ஆதிக் சூளுரைக்க முதல் முறையாக தன் கணவனின் போலீஸ் முகத்தைப் பார்த்தாள் ரேயா. அதன்பின் அக் கேஸை ட்ராப் செய்ய சொல்லும் எண்ணம் அவளுக்கு எழவே இல்லை.

“இப்ப தேவகுளத்துக்கு எதுக்குப்பா போறோம்…?” அவன் கவனத்தை இலகுவாக்க கேட்டாள்.

“அப்பாட்ட வசி மாமா விஷயம் பத்தி கொஞ்சம் பேசினேன் ரேயு….கொஞ்சம் இன்ஃபோவும் நிறைய கொஸ்டியன்ஸும் கிடச்சுது….அது மாதிரி இங்கயும் எதாவது கிடைக்குதான்னு பார்க்கனும்….” ரேயா எதிர் பார்த்த மாதிரியே அவன் குரல் இறுக்கம் குறைந்து வந்தது.

“மாமா என்ன சொன்னாங்க ஆதிப்பா…?”

“வசி மாமாவும் அத்தையும் ஆக்சிடெண்ட்ல இறந்த நியூஸ் வந்து, அப்பா அவங்க ரெண்டு பேரோட பாடியை ரிசீவ் செய்து பரியல் செய்த பிறகு, அப்பாக்கு வசி மாமாவோட வில்லை வசி’ஸ் கம்பெனி லாயர் கொண்டு வந்து கொடுத்ருக்காங்க…..அதுல கம்பெனி அப்பா பேருக்கு மாற தேவையான எல்லாத்தையும் மாமா செய்து வச்சிருந்திருக்காங்க….அதாவது வசி மாமாவும் அத்தையும் இறந்துட்டா கம்பெனி அப்பாவுக்குனு டாகுமென்ட் செய்திருக்காங்க மாமா. அதோட அதே டைம்ல அப்பாவுக்கு ஒரு லெட்டர் வந்திருக்குது. அது வசி மாமா ஆகிசிடெண்ட்டுக்கு முன்னால எழுதி இருக்காங்க….கடன் தொல்லை காரணமா என்னோட எல்லாத்தையும் வித்துட்டு ஓட வேண்டிய நிலமை எனக்கு….அவமானம் தாங்க முடியலை…அதனால நானும் மலரும் இந்த உலகத்தைவிட்டு போறோம்….நீங்க என் கம்பெனிய வித்து நான் கொடுத்றுக்க லிஸ்ட்ல உள்ளவங்களுக்கு எல்லாம் சொன்ன படி பணத்தை பிரிச்சு கொடுத்துறுங்கன்னு எழுதி இருந்திருக்காங்க…..

அதே மாதிரி அந்த பர்டிகுலர் பீபிளும் கடன் கொடுத்ததுக்கான எவிடன்ஸ் டாக்குமென்டை அப்பாட்ட காமிச்சிருக்காங்க….அப்பாவும் வசிஸை வாங்க நல்ல பையர் கிடச்சதும் வித்து அந்த ஆட்கள் கடனை அடச்சிருக்காங்க….அவ்ளவுதான் அப்பாவுக்கு தெரியுது…”

“நம்ம கார்ல எதுவும் மைக்ரோ ஃபோன் இருக்குமாபா…நாம இந்த கேஸை பத்தி பேசுறது ஓகேவா?” கல்ப்ரிட்டின் அறிவின் ஆழம் புரிய அவசரமாக கேட்கிறாள் ரேயா.

“கார் ஜஸ்ட் மார்னிங் தான்டா தஞ்சாவூர் ரீச் ஆச்சுது…இந்த காரை தான் நமக்கு அனுப்ப சொல்லிருக்கேன்னு ஆப்பனன்ட்ஸுக்கு தெரிய சான்ஸ் கம்மி….ஸ்டில் முழுக்க செக் செய்துட்டேன் எதுவும் இருக்ற மாதிரி இல்லை…அதோட நாம பேசுற இந்த இன்ஃபோ எல்லாம் நமக்கு தெரிஞ்ச விஷயம்னு அவங்களுக்கும் தெரியுமே…சோ பேசலாம்தான்…”

“கல்ப்ரிட் பயங்கர ப்ரெய்னி என்னப்பா…என்னமா ப்ளான் செய்து அதை எப்டி எக்‌ஸிகியூட் செய்திருக்கான் இல்ல…..பைதவே அந்த கடன் வசூல் செய்தவங்கள பத்தி எதாவது தெரிஞ்சுதாப்பா….அவங்களும் கண்டிப்பா அவன் ஆளத்தான் இருப்பாங்க…..அதாவது வந்தனா ஆன்டி சொல்ற மாதிரி இது அந்த கம்பெனிய திருட நடந்த சதியா  இருந்தா.. ”

“ம்….மேலோட்டமா விசாரிச்சுட்டேன்….எல்லோருமே சொசைட்டில நல்ல நிலமைல இருக்காங்க…..ஃப்ரெம் குட் பேக்ரவ்ண்ட்…ரொம்ப ரெஸ்பான்ஸிபிளான சிட்டிசன்ஸ்னு சொல்லலாம்…டீடெய்ல்லா இன்வெஸ்டிகேட் செய்ய அரேஞ்ச் பண்ணிருக்கேன்…

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா இப்டி ஏமாத்தி கம்பெனியை தான் பேருக்கு வாங்கின கல்ப்ரிட் கொஞ்ச மாசத்துல ஹெவி லாஸ் ட்யூ டு வொர்கர்ஸ் இஷ்யூனு கம்பெனியை நடத்த முடியாம க்ளோஸ் செய்துட்டுப் போயிருக்கான்…”

“ம்….ஏமாத்தி சொத்து சேர்த்தா அது எங்க தங்கும்….அதான் அது அவனுக்கும் இல்லாம போய்ட்டு…”

“ப்ச்…இப்ப என்ன ப்ரச்சனைனா அவனைப் பத்தி இன்வெஸ்டிகேட் செய்ய வழியே இல்லை…இல்லாம போன கம்பெனி ஓனரை எப்டி தேட?”

“ஆமா அது ரொம்ப கஷ்டம் தான்.”

வழியில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து ரேயா புடவை மாற்றிக் கொண்டதில் சிறிது நேரம் தாமதமானது. அதோடு கார் என் எச் இல் பறந்தாலும் விருது நகரில் என் எச்சை விட்டுப் பிரிந்து சிறு நகரங்களும் கிராமங்களும் வழியாக வரும்போது வேகத்தை மிக குறைக்க வேண்டியதாகி விட்டதால் தேவகுளத்தை அடைய மாலையாகிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.