(Reading time: 30 - 59 minutes)

தேவகுளம் மிகச் சிறிய கிராமம். முன்பானால் கார் நுழையவும் மக்கள் காரின் பின்னே ஓடி வந்திருப்பார்கள் ஆர்பாட்ட கூச்சலுடன். இபொழுது அங்கேயே காருள்ள வீடுகள் பல. ஆக மக்கள் அந்த புதிய வகை காரை திரும்பிப் பார்த்ததோடு சரி.

ஆனாலும்  ஊரின் முகப்பான பஸ் நிலையத்திலிருந்து 600 மீட்டர் தொலைவிலிருந்த இவளது தாத்தாவின் வீட்டை அடையும் போது வாசலில் கூட்டம் கூடிவிட்டது.

“பெரிய வீட்டுக்கா வந்திருக்காப்ல…? பெரியவர் பேத்தியா? ராஜேன் மகளா? மூத்தவளா ரெண்டாவதா? அக்கா நல்லா இருக்காப்லயா? யார் இது மாப்ளையா? வாங்க தம்பி…”

ஆளாளுக்கு கேள்வியும் அதில் ஓடிய வெள்ளை அன்பும்….

“ஏல பால்பண்ண அங்க பள்ளியடம் பக்கத்துல அந்த கணக்கு வாத்தி நிப்பாரு…அவர்ட்டதாம்ல பெரிய வீட்டு சாவி இருக்குது…ஓடிப் போய் விரசா வாங்கிட்டு வா….பிள்ளய வாசல்ல நிக்குது பாரு…” யாரோ ஒருவர் சொல்ல ஒரு பதினைந்து வயது மதிக்க தக்க ஒருவன் ஓடினான்.

ஆதிக் திரும்பி இவளைப் பார்த்தான். பெயரைப் பார்த்துதான் இந்தப் பார்வை என அவளுக்குப் புரிகிறதுதான்.  மெல்ல அவனிடம் முனங்கினாள்..”இங்க எல்லோருக்கும் பட்டப் பேரு இருக்கும்…”

“பட்டப் பேரா…?”

“ஆமா….எல்லோரும் இந்நாட்டு மன்னர்…சோ வச்ச பேர் தவிர பட்டப் பேர் ஒன்னு கட்டாயம் இருக்கும்…”

“உங்க வீட்ல ஏன் எல்லோருக்கும் ரெண்டு நேம்ன்னு இப்ப புரியுது…”

“உங்களுக்கு மட்டும் என்னவாம்?”

“உன் கைலதான் என்னை ஒப்படைக்க போறாங்கன்னு நான் பிறந்ததுமே எங்க வீட்ல தெரிஞ்சிருக்குது…..”

“என் கைல உங்களையாமா…?”

அவர்கள் முனுமுனு கான்வர்சேஷன் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்தது. கதவு திறக்கப் பட்டதே காரணம்.

“ஏய் கிளியக்கா இது தான் இப்ப கல்யாணம் ஆன பிள்ள…சின்னவா…ராஜேன் அண்ணாச்சிய பார்க்கப் போனேம்ல அன்னைக்குத்தான் இவுக கல்யாணம்…திடீர்னு அமஞ்சுட்டு அதான் ஊர்ல எல்லாரையும் கூப்ட முடியலைனு சொல்லிகிட்டு இருந்தாவ அண்ணாச்சி….பொண்ணு மாப்ள முதல் தடவ வந்திருக்காக….. முறையா பால் பழம் கொடுக்க சொல்லு…”

வீடு உள்ளே சுத்தமாக இருந்தது. “உங்க பள்ளியடத்தப் பெருக்ற வெள்ளையம்மா இங்கயும் வாரம் ரெண்டு தடவ பெருக்கி தொடச்சுருவா…”

கேட்காமலே விளக்கம் வந்தது. பெரிய ஹாலும் அதிலிருந்து மேலேரும் தேக்கு மர படிகளும், உத்திரம் பாய்ச்சிய அந்த கால ரூஃபும்….அதைத்தாங்கும் பெரும் மரத்தூண்களும் முந்தைய காலத்தின் மிச்ச நினைவுகள்.

ஒருபக்க சுவரில் வரிசையாய் மாட்டப் பட்டிருந்த பல ஃபோட்டாக்கள்.

“வாங்க மாப்ள…உட்காருங்க….நீயும் அவர் பக்கத்துல உட்காருமா….” அங்கிருந்த மர சோஃபாவில் இவர்கள் அமர அதற்குள் வந்திருந்த பாலையும் பழத்தையும் ஒருவர்க்கு ஒருவர் ஊட்டச் சொன்னார்கள்.

ஒவ்வொருவராய் பேசி முடித்து மொத்த கூட்டமும் கலையும் முன் ராஜபாளயத்திலிருந்து செல்வின் சித்தப்பா வந்துவிட்டார்.

“வாங்க மாப்ள, நல்லா இருக்கீங்களா….? ப்ரயாணம் சுகமா இருந்துச்சா? வாம்மா அன்றில் பொண்ணு நல்லா இருக்கியாமா?…… வரேன்னு ஒரு வார்த்தை சித்தப்பாட்ட சொல்லிருக்கலாம்ல….. நல்லா ஒரு விருந்து ஏற்பாடு செய்திருப்பேம்ல….இப்ப அந்த கணக்கு வாத்தி சொல்லவும் கிளம்பி ஓடி வாரேன்….சித்தியும் பிள்ளைங்க ரெண்டு பேரையும் ஸ்கூல்ல போய் கூட்டிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா…”

ஏதோ இவர்களை பார்க்க வெறும் கையோடு வந்துவிட்டது போல் அவர் ஆதங்கமாக பேசிக் கொண்டு வந்தாலும் அடுத்த இரு மணி நேரத்தில் ஒரு வேனில் வந்து இறங்கியது அண்டா அண்டாவாக பிரியாணி.

சிறிய ஊர், அனைவரும் தாயாதிக்காரர்கள். (ஒரே தாய் தகப்பன் வழி வந்தவர்கள்.) அனைவருக்கும் இவர்கள் வீட்டில் விருந்துச் சாப்பாடு.

எல்லாம் முடிந்து “நைட் தங்க நம்ம வீட்டுக்கு வாங்க…இங்க பெருசா வசதி கிடையாது… என பிடிவாதமாக நின்ற சித்தப்பாவை ஒருவாறு கெஞ்சி சம்மதிக்க வைத்து அனுப்பிவிட்டு

மாடியில் ஒரு அறையில் ஆதிக்குடன் தனியாய் வந்து நின்ற போது தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது ரேயாவுக்கு. அவ்வளவு லேட், அவ்வளவு டயர்ட்….

“ஆதிப்பா இங்க தனியா ஸ்னீஸ் பண்ண கூட முடியாது…..அதுக்கும் என்னாச்சுன்னு கேட்டு நாலு பேர் வந்து நிப்பாங்க…எப்டிப்பா சீக்ரெட்டா இன்வெஸ்டிகேட் செய்ய போறீங்க…?”

“அத நாளைக்குப் பார்ப்போம்…இப்ப உள்ள விஷயம் இப்ப…..” அவன் என்ன சொல்ல வருகிறான் எனக் கூட யோசிக்க முடியவில்லை ரேயாவால்.

புடவையைக் கூட மாற்றாமல் மெத்தையில் போய் விழுந்தாள். “தூக்கமா வருது…”

அடுத்து அவன் எதுவும் பேசினானா எனக் கூட அவளுக்குத் தெரியாது. தூங்கிப் போயிருந்தாள் அவள்.

றுநாள் காலையில் அவள் ஆதிக்குடன் உறவினர் சிலர் சூழ, அவர்களில் ஒருவர் காலை சிற்றுண்டியாக கொண்டு வந்திருந்த இட்லி, குடல் கறியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இரண்டு மருத்துவ வேன்கள் வந்து நின்றது இவர்கள் வீட்டு முன்.

ஜெனரல் பிசிசியன், கைனகாலஜிஸ்ட், இவர்களுடன் கிராமத்திற்கு எளிதில் அமையாத ஆப்தமாலஜிஸ்ட், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட், டென்டிஸ்ட் என மருத்துவ குழு வந்திருந்தது.

ரேயா குடும்பத்திற்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் வைத்து இலவச மருத்துவ கேம்ப் நடத்த திட்டமாம். “சார் நீங்க போய் கூப்டா ஊர் காரங்கல்லாம் வருவாங்க…” மருத்துவ குழு  இவர்களிடம் கேட்க,

ரேயாவும் ஆதிக்கும் இவர்கள் பள்ளி தலைமை ஆசிரியருடன் ஒவ்வொரு வீடாக சென்று அனைவரையும் வந்து கலந்து கொள்ளுமாறு அழைத்தனர். ஊர் கூடியது அங்கு.

அன்று மாலை வரை படு பிஸியாக நடந்த கேம்ப் முடிந்து மருத்துவ குழு கிளம்பிச் செல்ல அடுத்து அவர்களை தொடர்ந்து ஆதிக்கும் ரேயாவும் கிளம்பிவிட்டனர்.

“என்னப்பா இது வந்த வேலை ஒன்னுமே நடக்கலை…?”

“ம்….ஹனிமூன் கதை நடக்கலைனு எனக்கும் வருத்தமாதான் இருக்குது கேடி, ஆனா உனக்கு அவ்ளவு தூக்கம் வர்றப்ப வேற என்ன செய்ய முடியும்?....” பெருமூச்சு விட்டான் அவன்.

“போங்கப்பா…” சிணுங்கினாள் அவள். நான் என்ன பேசுறேன் நீங்க என்ன சொல்றீங்க…?”

“நான் கரெக்டாதான் சொல்றேன் ரேயுப் பொண்னு….மத்த வேலை முடிஞ்சுட்டு…”

“வாட்…?”

“ஆமா….அங்க வீட்ல இருந்த ஃபோட்டோஸைப் பத்தி கேட்கிறப்ப உங்க செல்வின் சித்தப்பா அதி சித்தப்பாவைப் பத்தி நிறையவே சொன்னாங்க….புரிஞ்ச வரைக்கும் அதி சித்தப்பா ரொம்பவும் ஹெல்ப்பிங் டென்டன்சி உள்ளவங்க…..அதோட அவங்கள சுத்தி நடக்ற எந்த ப்ரச்சனைனாலும் இறங்கி தீர்த்துவைக்ற டைப்…நியாயத்துக்காக சண்டை போடவும் தயங்குறது இல்லை போல…பேசிக்கலி போல்ட் அன்ட் கேரிங்….உங்கப்பாவும் இதே பாய்ண்டை முன்னால சொன்ன மாதிரி ஞாபகம்….அதி சித்தப்பா பியூலாவை விரும்புன விஷயம் அப்பவே உங்க தாத்தாவுக்கு தெரிஞ்சிருக்கும் போல…யார்ட்டயும் அதை மறைச்சு வைக்க அதிசித்தப்பா ட்ரை பண்ண மாதிரியே இல்லை…அந்த லவ் மேட்டர் உங்க தாத்தாவுக்குப் பிடிக்கலைபோல….காதல் கல்யாணம்னா உங்க தாத்தவைப் பொறுத்த வரை மகா மோசமான விஷயம் போல. உங்க சம்மதத்தைலாம் நான் கேட்கலை…சம்மதிக்க வேண்டியதெல்லாம் அண்ணாவும் தயா அம்மாவும் தான்னு வேற சொல்லிட்டுப் போயிருக்காங்க அதி சித்தப்பா….அவங்களப் பொறுத்தவரைக்கும் ஃபேமிலின்னா உங்க வீடுதான் ஃபர்ஸ்ட் போல… ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.