“இன்னைக்கு ஆக்ட் செய்தேன்ல அது நிஜமாகிடும்…”
“வாட்…? பெல்ட்டால அடிபீங்களாமா…? அடிக்க விட்டுட்டு நான் சும்மா இருப்பேன்னு நினைக்றீங்களோ?” முறுக்கினாள்.
“கேடி அதுக்கு முந்தின சீன நினச்சுப் பாரு…அத சொன்னேன்…”
“………”
“ஹக் பண்ணி சரண்டர் ஆகிட வேண்டியதான்…”
வாய் பொத்தி சிரித்தாள்.
இன்றைய நாடகத்தின் பின்விளைவு என்னதாக இருக்குமோ என்று காலையிலிருந்தே இருந்த படபடப்பு அதுவரை ரேயாவை பந்தாடிக் கொண்டிருந்தாலும், அவனின் அருகாமையில் அது மெல்ல மெல்ல மறைந்து போனது. அவர்களை குறிவைத்தவன் கையில் மாட்டிக் கொள்ளும் வரையுமே அது திரும்ப வரவில்லை.
இரண்டு நாட்களாக ஒரே கண்ணா மூச்சி ரே தான். வீட்டின் மற்ற இடங்களில் கணவனிடம் ம் முகம் தூக்கல், இந்த மூலையில் மட்டும் கொஞ்சல், கெஞ்சல், ரொமான்ஸ் ரொமான்ஸ்…..
அதுவும் லிமிட்டட் டைம் ஆஃபர் மாதிரி அளந்துதான் கொடுத்தான் ஆதிக்.
“எல்லா நேரமும் கேமிரா இல்லாத இடத்துக்கே நாம போய் நின்னாலும் அவங்க அலர்ட் ஆகிடுவாங்கல்ல….” என காரணம் சொன்னான்.
”வெளிய இருந்து அப்சர்வ் செய்தாங்கன்னாலும் நம்ம ட்ராமா ரியலா இருக்கனும்…”
ஆக அவனோடு எங்கும் வெளியே கூட செல்லாமல் வீட்டிற்குள் அடைந்து கிடந்தாள் ரேயா.
பகலில் கூட இருக்க ப்ரபாகரும் சுரபியும் சென்னையில் இருந்து வந்துவிட்டார்கள்.
“நான் ஆஃபீஸ் போகாம வீட்லயே இருந்தாலும் அவங்களுக்கு நாம எதோ ப்ளாட் செய்றோம்னு தோணும்…” தினமும் ஆஃபீஸ் போனான் ஆதிக்.
இரண்டே நாளில் வெறுத்துப் போனது ரேயாவுக்கு.
“என்ன அரெஸ்ட் செய்து ஜெயில்ல வச்ச மாதிரி இருக்குது ஆதிப்பா…பேசக் கூடாது , பார்க்க கூடாது, சிரிக்க கூடாது….வெளிய போக கூடாது… தலை வெடிச்சிடும் போல இருக்குது எனக்கு…”
இரவில் படுக்கையில் தினம் போல் ஓரத்தில் கோப பாவத்துடன் படுத்திருந்தவளின் கோபம் இன்று ரியல்.
எப்பொழுது தூங்கினாள் என்று தெரியவில்லை.
ஏதோ கனவு! எங்கேயோ போவது போல்…..ஒரே புகை…இருட்டு…தொண்டை வறண்டு….பயம் பயமாய்…
“ஆதிக்…..” அலறிக் கொண்டு எழுந்தாள்.
இல்லை எழ நினைத்தாள். ஆனால் முடியவில்லை.
எதனோடோ சேர்த்துக் கட்டப் பட்டிருப்பதை உணர்ந்தவள், இன்னும் பலம் கொண்ட மட்டும் அலற நினைத்த நேரம் சுக தொடுகை. ஆதிக் தான்.
“ரேயுமா…இட்ஸ் ஓகே…”
என்னவாயிற்று? ஏதோ அவள் உலகமே ஆடிக் கொண்டிருப்பது போல் ஒரு அசைவாட்டல். ஸ்விங்கிங் மோஷன்….மெல்ல கண்கள் இருட்டுக்குப் பழக சூழலைப் பார்த்தாள். இவள் ஒரு கட்டிலில் கட்டப் பட்டிருந்தாள். அருகில் அடுத்த கட்டிலில் ஆதிக். ஆனால் அவன் கையை நீட்ட முடிகிறது. இவளால் ஏன் முடியவில்லை?
“ஆதிப்பா…”
“ டென்ஷனாகாதடா….வீ கேன் மேனேஜ் திஸ்….நம்ம ப்ளான் வொர்க் அவ்ட் ஆகுது…. அவங்க நம்மள அவங்க இடத்துக்கு கொண்டு போறாங்க …. ஐ திங் …..நாம இப்ப ஒரு கன்டெய்னர்குள்ள இருக்றோம்…அண்ட் கன்டெய்னர் ஷிப்ல போய்ட்டு இருக்குது….சோ அவங்களால இப்ப வரைக்கும் இண்டியாக்குள்ள வர முடியாத சிச்சுவேஷன் இருக்குன்றது நிஜம்…”
“என் கையையும் சேர்த்து கட்டிருக்காங்க ஆதிப்பா…”
“ஷிப் மூவ்மென்ட்ல நாம கன்டெய்னருக்குள்ள மேனேஜ் செய்ய முடியனுமேன்னு இப்டி செய்துருக்காங்க…எனக்குள்ளத கழற்றிட்டேன்…பட் பேலன்ஸ்காக நான் இப்ப அந்த கயிறை பிடிச்சுக்க வேண்டி இருக்குது…..அதான் உனக்கு நான் கழற்றி விடலை….இப்ப உன் கையை மட்டும் கயிறை விட்டு வெளிய எடுத்து விடட்டுமா…”
அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர்கள் பயண நிலையில் மாற்றம். கன்டெய்னர் மொத்தமாக உயர எழும்புகிறது எனப் புரிகின்றது.
“மூவிங் ஷிப்ல இருந்து நாம இருக்ற கன்டெய்னரை மட்டும் மேல எடுக்றாங்கன்னு நினைக்கிறேன்….மோஸ்ட் ப்ராப்பபளி சாப்பர்ல இருந்து கன்டெய்னரை தூக்குறங்க….அநேகமா இன்டியன் சீ பார்டரை தாண்டி இன்டெர்நேஷனல் வாட்டர்ஸுக்கு வந்திருப்போம்……ஒன்னும் பயப்படாத ரேயுமா…சீக்கிரமா வேற எதுலயாவது கன்டெய்னரை போர்ட் செய்வாங்க…”
ஆதிக் சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்திற்குள் இவர்கள் கன்டெய்னர் ஏதோ ஒரு இடத்தில் மீண்டுமாய் இறக்கப்படுகிறது. இன்னொரு கப்பலாய் இருக்க வேன்டும்…இதற்குள் அவளை கட்டவிழ்த்து திறக்கும் கதவை தான் எதிர் நோக்கி தன் பின் அவளை நிறுத்தி….
கதவு திறக்க, அவர்களை எதிர்க் கொண்டவர்கள் பின் தெரிந்தது கடல்….புரிந்ததைப் போல ஒரு கப்பலின் மேல் தளம் தான் அது.
ரேயாவின் கையைப் பிடித்தபடி கழுகாய் கண்களை சுற்றியபடி ஆதிக்…
கப்பலின் கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றனர் அந்த ஈரோப்பியன்ஸ்
அங்கு அவர்களை ஒரு அறையில் அமரச்செய்தனர். அதன் பின் அங்கு வந்து நின்றது யார் என பார்த்தவுடன் ரேயாவுக்கே தெரிந்து போனது.
இவர்களைப் பார்த்தவுடன் ஒரு நொடி தன் முகத்தை கையால் துடைத்துக் கொண்டான் அவன்.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!
{kunena_discuss:876}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.