(Reading time: 12 - 24 minutes)

ண்பதேன்று உணவை வைத்தால் உன் முகத்தை காட்டுகிறாய்

உறக்கம் என்று படுக்கை போட்டால் ஓடி வந்து எழுப்புகிறாள்

கண்மணியில் ஆடுகிறாய் , புன்னகையில் வாட்டுகிறாய்

“கண்ணிழந்த தந்தை தனையே  என்ன செய்ய எண்ணுகிறாய்?”பாடலோடு சேர்ந்து விமலின் குரலும் கேட்டது அவளுக்கு.. பாடுவது அவளது தந்தை.. அவளது அடையாளத்தின் ஆணி வேர்.. அவளை முதன்முதலில் தாங்கிய ஆண்.. அவளை உயிராய் நினைத்தவர்..தனக்கென இருந்த அடையாளம், கெளரவம்  அனைத்தையும் அவள் புன்னகைக்கு அடிமையாக்கியவர்.. கம்பீரத்தின் உச்சக்கட்டமாய் இருந்தவர் , இன்று  தழுதழுத்த குரலுடன்.. வெறுமை சூழ்ந்த நிலையில் இருந்தார் விமல்..

கவிமதுராவிற்குள் மறைந்திருந்த மகள் உயிர்த்து எழுந்தாள்.. அவளும் இன்றொரு தாய்தான்.. இந்த சில நொடிகள் அதனையும் மறந்து விட்டிருந்தது அவள் உள்ளம்.. பழைய கவிமதுராவாய் மாறியவள் உயிர் ஒழுக ,

“அப்பா , அம்மா “என்று அழைத்து கொண்டு விரைந்தாள். அவளது குரலை கேட்டதுமே பரிதவிப்புடன் ஓடி வந்தார் விமல்..

“கவிம்மா “என்று அழைத்த அவரது குரலில் அத்தனை ஏக்கம் ! எத்தனை நாட்களாய் பிரிந்திருந்தார் தனது ஒரே மகளை? கிட்ட தட்ட ஒரு வருடம் தான் என்றாலும் அந்த பிரிவே அவர்களை பாதியாக்கி இருந்தது..

“வித்யா.... இங்க வாயேன் “என்று குரல் கொடுத்தவர்  எதுவும் சொல்லாமல் மகளது கைகளை பிடித்து கொண்டார்.. கணவரின் குரல் கேட்டு பூஜை அறையில் இருந்து ஓடி வந்தார் வித்யா.. யாருமே பேசவில்லை அங்கு.. கனத்த மௌனம் மட்டுமே வீடெங்கும் பரவி இருந்தது..தாய் தந்தை இருவரின் தோள்களிலும் சாய்ந்து கொண்டாள்  கவிமதுரா.. வானதி அங்கு குழந்தையுடன் வந்ததை கூட கவனிக்காமல் மூவரும் மௌனமாய் கண்ணீர் விட்டனர்..

கண்ணீரின் ஊடே “இனி எங்கயும் போக மாட்ட தானே கவி நீ?”என்றார் அவளது அன்னை..

“மாட்டேன் அம்மா”என்று அவள் விசும்பும்போது அவள் பெற்ற புதல்வனும் பசியில் குரல் எழுப்பினான்.. அப்போதுதான் அனைவரின் பார்வையும் வாசலில் நின்றது.. தன்னை அறிமுகபடுத்தி கொள்ள வேண்டிய தருணம் அது  என்பதை உணர்ந்தவளாய் புன்னகையுடன் அங்கு வந்தாள்  வானதி..

யாரென்று தெரியாவிடினும் மரியாதை நிமித்தமாய்

“வாம்மா “என்றார் வித்யா..

“எப்படி இருக்கீங்க அம்மா?  எவ்வளோ அழகா இருக்கீங்க? இப்போதான் தெரியுது எப்படி அண்ணி இவ்வளவு அழகா இருக்காங்கன்னு “என்றாள்  அவளும் உற்சாகமாய்.. அந்த இறுக்கமான சூழ்நிலையில் அவளது இயல்பான பேச்சு சூழ்நிலையின் இறுக்கத்தை தளர்த்தியது..

“அடடே பார்த்திங்களா உன் பேரனை உங்களுக்கு அறிமுகப்படுத்தலையே  “என்று அவள் சிரிக்க, ஆனந்தகண்ணீருடன் மதுராவை பார்த்தனர் இருவரும்.. “நிஜம்தான?”என்று பார்வையினாலேயே வினவ

“ஆமாம்”என்று தலையசைத்தாள் மதுரா.. விமல் ஓடி சென்று பேரனை வாங்கிக்கொள்ள, வித்யா அவளை அணைத்து  உச்சி நுகர்ந்தார்..

“குழந்தை பேரு என்னம்மா?”ஜீவாவை தூக்கி கொண்டே கேட்டார் விமல்..

“என்னையா கேட்குறிங்க அங்கிள்? “என்று சிமிட்டி விட்டு

“ஜீவவேலன்... ஜீவான்னு  கூப்பிடுறோம்.. நான் வானதி.. அரவிந்த் அண்ணாவின் தங்கை “என்றாள்

“ஆமா , மாப்பிளை எங்க மதுரா? அவர் உன்னோடு வரலையா?”என்று மகளை பார்த்து கேட்டார் வித்யா..

“அது வந்து ! அண்ணா இன்னும் கொஞ்ச நாளில் வந்திருவார் “என்றாள்  வானதி.. விமலும் வித்யாவும் சரியென புன்னகைக்க கவிமதுரா மட்டும் அதிர்ச்சியாய்  வானதியை பார்த்தாள்.. அண்ணா எப்படி வருவார்? பொறுத்திருந்து பாப்போம்

தவம் தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.