(Reading time: 12 - 24 minutes)

ஹா ஹா... இதென்ன கேள்வி அருள்... தி கிரேட் சித்தார்த்  பத்தி இவ்ளோ தான் தெரியுமா?”என்று சித்தார்த் பெருமையாய் பேசவும் ஹரிணி “அஹெம் அஹெம் “என்று தொண்டையை செருமி கொள்ள

“ஐ மீன் அதிரூப சுந்தரி , அறிவின் சுடரொளி ஹரிணி தேவியாரின் கணவராய்  இருக்குறதுனால தான் இவ்வளவு அறிவுன்னு சொல்றேன் “என்று உடனே கட்சி மாறினான்...

“ஹா ஹா மச்சான் , நிஜம்மாவே நாணல் யாருன்னு இப்போ தெரியுது “என்று சந்தோஷ் கேலி செய்ய சத்யாவும் அருளும் அவனோடு இணைந்தே சிரித்தனர்..

நேரம் போனதே தெரியாமல் அரட்டை அடித்து கொண்டிருந்தனர் ஐவரும்..

“சோ நீ அடுத்து என்ன பண்ண போற சாஹித்யா?”என்றான் சித்தார்த் தீவிரமாய்..

“அடுத்து நைட்டுக்கு அண்ணி ஏதாச்சும் சமைச்சு தந்தாங்கன்னா அதை சாப்பிட்டு தூங்கனும் அண்ணா “என்றாள்  அசால்ட்டாய்.. அவளது பதிலில் நால்வருமே தலையில் அடித்து கொண்டனர்..

“ஹா ஹா சரி சரி.. படிப்பு விஷயமா தானே அண்ணா கேட்கறிங்க? நான் கோர்ஸ் வித்ட்ராவ் பண்ணிட்டு சென்னைல படிக்கலாம்னு இருக்கேன் “என்றாள் 

“ஏன் சத்யா?”

“எனக்கு எல்லாரையும் விட்டுட்டு ரொம்ப நாள் இருக்க முடியாது அண்ணி “என்றாள்  அவள்.

“இதென்ன சின்ன குழந்தை மாதிரி? நீ நம்ம வீட்டில் தானே இருக்க போகுற? அப்பறம் என்ன? அருளும் இங்கதான் படிக்க வரானே? சந்தோஷ்காகவா?”என்றான் சித்தார்த்..

“அப்படி எல்லாம் இல்லை அண்ணா.. என்னவோ எனக்கு இப்போ அபப்டி தோனல “என்றதும் வெடுக்கென எழுந்துவிட்டான் அருள்..

“டேய் அருள் "

“முட்டாளா நீ?”- அருள்

“இப்போ எதுக்கு கத்துற?”- சத்யா

“பின்ன என்ன , எந்த முடிவிலும் ஸ்ட்ராங் ஆ இருக்க மாட்டியா? நினைச்சா வேணும்னு சொல்றது..அப்பறம் வேணாம்னு சொல்றது? உனக்கு எல்லாமே விளையாட்டா சாஹித்யா “என்றான்.. அவன் சாஹித்யா என்று அவள் பெயரை முழுமையாய் அழைத்த விதத்திலேயே அவன் கோபத்தின் வேகத்தை அவளால் உணர முடிந்தது.. அவள் லேசாய் விக்கித்து போய்  நிற்கவும்

“அருள் நீ முதலில் கொஞ்சம் தணிஞ்சு பேசு “என்றான் சித்தார்த் சமாதானமாய்..சாஹித்யாவோ கலங்கிய விழிகளுடன் அறைக்குள் நுழைய சித்தார்த்தும்  அவளோடு சென்றான்..

“சஹி "

“அண்ணா “என்றவள் கண்ணீருடன் அவனது தோளில்  சாய்ந்தாள்.. அவள் கேசத்தை மெல்ல வருடி கொடுத்தான்  சித்தார்த்..

“சொல்லு டா.. என் தங்கச்சி மனசுல என்ன இருக்கு? அண்ணன் மேல நம்பிக்கை இருந்தா சொல்லு “என்றான் அவன்.. கூறினாள்  அவள்.. தனது மனதிற்குள் இருப்பதை கூறினாள் ,..(ஆனா அது என்னனு இப்போ சொல்ல மாட்டேனே )

தே நேரம் சந்தோஷ் முதல் முறையாய் அருளை எதிர்த்து பேச வேண்டிய சூழ்நிலை அங்கு நடந்தேறி கொண்டிருந்தது..

“ரிலாக்ஸ் அருள்...கோபப்படாதே "

“இது அவ ட்ரீம் மச்சி..இப்போ அத வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்? "

“அதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கலாம் இல்லையா?”

“எதுவாய் இருந்தாலும் அவ இங்க தான் படிக்கணும்..! இதான் என் முடிவு “என்றான் அருள்..

“நோ அருள்.. மன்னிச்சுரு.. நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்..சாஹித்யா இங்க படிக்க மாட்டா.. அவ சென்னைல நம்ம கண் பார்வையில் தான் இருக்கணும்..இதுதான் என் முடிவு என் இதில் மாற்றம் இல்லை "... ஒரு ஆழ்ந்த பேரு மூச்சு எடுத்து விட்டு அங்கிருந்து எழுந்தான் அருள்..

“அருள்...???”-சந்தோஷ்

“வேணாம் சந்தோஷ்.. அப்பறமா பேசலாம்.. நான் கோவமா இருக்கேன் "

“எதுவா இருந்தாலும் பொறுமையா பேசலாமே "

“இப்போ நான் பேசினா சரியா இருக்காது சந்தோஷ்.. சாஹித்யா அவ லைப் ல எப்பவுமே சந்தோஷ் பேச்சை கேட்கறதா? இல்ல அருள் பேச்சை கேட்கறதான்னு  திணற கூடாது..! அவளாய்  எந்த முடிவு எடுக்கிறாளோ அதன்படி நடக்கட்டும்.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் “என்றபடி அவன் அறையில் புகுந்து கொண்டான்.. ஹரிணியும் சந்தோஷும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

“நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா அக்கா?"

“தப்பான்னு தெரியல... ஆனா எதோ சரி இல்லைன்னு தோணுது சந்தோஷ்.. அருளை பற்றி கவலை படாதே.. அவன் சாஹித்யா கூட சண்டை போட்டு இன்னமும் ரெண்டு பெரும் மனசு விட்டு மன்னிப்பு கேட்கல இல்லையா? அதான் இப்போ இந்த பேச்சு எடுத்தும் அவனுக்கு மனசுக்குள்ளே மறுபடியும் கோபம் மூளுது.. அவங்க ரெண்டு பேரையும்  கொஞ்ச நேரம் தனியா விட்டு பார்ப்போம் எல்லாம் சரி ஆகிடும் "

“அவ படிப்பு பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க?”

“என்கிட்ட கருத்து கேட்ட நீ , அருள் கிட்டயும் கருத்து கேட்டு இருக்கலாமே? அவ இங்கதான் இருக்கணும்னு ஏன் சொன்ன சந்தோஷ்? "

“அதுக்கு ரெண்டு காரணம் அக்கா , எனக்கு சொந்தமானதை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.. இன்னொன்னு அருள் என்கிட்ட  பேசின விதம்.. அவன் பிடிவாதமாய் சொன்னதுனால நானும் பிடிவாதமாய் பேசிட்டேன் "

“உனக்கு சொந்தமானது தான்.. ஆனா உனக்கு மட்டுமே சொந்தமானதா சந்தோஷ்? ஒருவேளை கோபத்தில் அருள் உன்கிட்ட , இதெல்லாம் முடிவு பண்ண நீ யார்ன்னு கேட்டு  இருந்தா என்ன பண்ணி இருப்ப நீ? “என்று நேரடியாகவே கேட்டாள் ஹரிணி..

“அருள் அப்படி கேட்பவன் இல்லை அக்கா.. அந்த தைரியத்திலும் உரிமையிளும்தான் அப்படி பேசினேன்..இதெல்லாம் பசங்க சைக்காலஜி.. என்னத்தான் கொடூரமா அடிச்சுகிட்டாலும் அடுத்த நிமிஷம் முஸ்தபா முஸ்தபா பாடுறது பசங்களின் குணம் "

“ம்ம்ம்ம் ஏதோ நீயும் சொல்லுற, நானும் தலை ஆட்டுறேன்.. மீதி கடவுளுக்கு தான் வெளிச்சம்.. லூசுங்க ஐஸ் க்ரீமை வேஸ்ட்  பண்ணிடிச்சுங்க.. பாரு கரைஞ்சிடுச்சு “என்றபடி அவள் வாங்கி வைத்திருந்த ஐஸ் க்ரீமை ப்ரிட்ஜில் வைக்க சென்றாள்.. சந்தோஷோ அடுத்தது என்ன? என்று யோசித்தான்..

விழிகளை இமைக்கவும் தோன்றாமல் அந்த வீட்டின் முன் நின்றாள்  கவிமதுரா.. வானதி ஜீவாவை தூக்கி கொள்ள , மதுரா முன்னோக்கி நடந்தாள்.. தூசி படிந்திருந்த பெயர் பலகை அவளது கண்களில் படிந்தது..அதை கண்ணீருடன் தொட்டு பார்த்தாள்  அவள். உள்ளே இருந்து பழைய பாடல் ஒன்று காற்றோடு கலந்து அவளது செவிகளை தீண்டியது..

பார் மகளே பார்.. பார் மகளே பார்..

நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்

உன் நிழல் இல்லாமல் வாடுவதை

பார் மகளே பார் பார் மகளே பார்

உயிர்வரை தீண்டியது அவளை அந்த பாடல் வரிகள்.. பூட்டாமல் இருந்த வாசற்கதவை திறந்து அவள் முன்னே நடக்க , வானதி மௌனமாய் பின் தொடர்ந்தாள்.. ஒரு காலத்தில் அழகாய் பராமரிக்கபட்ட நந்தவனமெல்லாம் இன்று வான்மழையை நம்பித்தான் உயிர் பிழைக்கிறது என்பது பார்க்கும்போதே தெரிந்தது.. துளசி மாடம் உட்பட எந்த  செடிகளுமே களையெடுத்து  பராமரிக்க படவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.