(Reading time: 15 - 30 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 15 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ப்போ கடைசியாய் நீங்க என்னத்தான் சொல்ல வர்றிங்க  சார் ?" என்று கைகளை கட்டி கொண்டு காட்டமாய் கேட்டாள்  கவிமதுரா .. அவள் பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் எடிட்டரின் அறையில் இருந்தாள்  அவள். கோபத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தாள் கவி .. காரணம் , அவள் இத்தனை நாட்களாய் ஆராய்ந்து திரட்டிய செய்திகளை நாளிதழில் அச்சிட முடியாது என்று அவர் கூறியதுதான் ..

" உன் கோபம் எனக்கு புரியுது கவிதா .. ஆனா நீயும் நிலைமையை புரிஞ்சுக்கணும் ..இது ரொம்ப ரிஸ்க் .. எல்லா விதத்திலும் இதனால் ஆபத்து உண்டு .. "

" ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேன்னு சொல்ல வர்ரிங்களா சார் ? கிட்ட தட்ட மூணு மாசமா நான் இதுக்காக கஷ்டபட்டு இருக்கேன் .. அதுவும் நான் உங்ககிட்ட சொல்லாமல் இதை செய்ய ஆரம்பிக்கலையே .. ஒரு பெரும் பதவியில் உள்ளவரை பற்றிய தகவல் இதுன்னு தெரிஞ்சும் என்னை ஊக்கப்படுத்தியதே நீங்கதானே சார் ?"

Enna thavam seithu vitten

" அப்போ இருந்த சூழ்நிலை வேற , இப்போ இருக்குற சூழ்நிலை வேற கவிமதுரா .. உன் பிடிவாதத்துக்கு ஏற்ற மாதிரி நான் என் வேலையை செய்ய முடியாது " என்றுவிட்டார் எடிட்டர் கோபமாய் .. பாவம் அவளுக்கு தெரியவில்லை  அவரை அப்படி பேச வைத்ததே , பல மிரட்டல் அழைப்புகள் தான் ..

" ஓகே சார் , எனக்கொரு அஞ்சு நிமிஷம் டைம் கொடுங்க ..இதோ வந்திடுறேன் " என்றவள் சரியாய் ஐந்து நிமிடத்தில் தனது  ராஜினாமா கடிதத்தை நீட்டினாள் .. அவள் மிகவும் விருப்பபட்டு  சேர்ந்த வேலை அது ..எனினும் நினைத்ததை  சாதிக்க முடியவில்லை என்ற கோபம் ,அவளை அங்கு இருக்க விடாமல் தடுத்தது .. உடன் பணி புரிபவர்களின் பேச்சிற்கும் அவள் மசியவில்லை ..

" சாரி ப்ரண்ட்ஸ் , நான் ஒன்னு வேணாம்னு முடிவு பண்ணிட்டா , எனக்கது வேண்டவே வேண்டாம் " என்று கெத்தாய்  கூறி விட்டு வந்தவள் அருகில் இருந்த கோவிலுக்கு சென்று விட்டாள்  .. ஏனோ அவளுக்கு கண்கள் கரித்து  கொண்டு வந்தது .. இத்தனை பெரிய உலகத்தில்  , எத்தனை வேலைகள் ? அத்தனை வேலைகளையும் அனைவரும் விரும்பி தான் செய்கின்றார்களா  ? இல்லைதான் ! பெரும்பாலோர் கிடைத்த வேலையை தக்க வைத்து கொள்ளவே , பெரும்பாடு படுகின்றனர் .. அப்படி இருக்கையில் , இவள் விரும்பி செய்த வேலையை துறந்தது அவளுக்கு மிகப்பெரிய வலியாய்  இருந்தது .. மீண்டும் அதே மிரட்டல் அழைப்பு வந்தது ..

" ஹெலோ "

" அழறியா ? உன்னை மாதிரி திமிர் பிடிச்சவ அழும்போது எவ்வளவு சந்தோஷாமா இருக்கு தெரியுமா ?"

" ஏய் !" என்றவள் சட்டென கண்களை துடைத்துவிட்டு பார்வையை சுழற்றினாள்..

" நீ ஒன்னும் என்ன தேட வேணாம் .. எனக்கு வேண்டியது நடந்துருச்சு .. போயும் போயும் பொண்ணு நீ , உன் முன்னாடி நான்  சண்டைக்கு நிற்கிறது எனக்கு தான் அவமானம் .,. இனிமேலாச்சும் கல்யாணம் பண்ணி வீட்டில் அடங்கி இருக்க பார் " என்று கர்வமாய் சிரித்தான் அவன் ..

" ஒரு பொண்ணு கிட்ட , உன் அடையாளத்தை காட்ட முடியாத அளவிற்கு கோழையாய் இருந்துகிட்டு நீயெல்லாம் என்னை மிரட்டுறியா ?  ஏன்டா இப்படி அடுத்தவங்க பணத்தில் வாழுறிங்க  அது உனக்கு வெட்கமாய் இல்லையா ?" என்றாள்  கவிமதுரா காட்டமாய் .. அவனை பேச விடாமல் இருந்த கோபத்தை எல்லாம் மொத்தமாய் இறக்கி வைத்துவிட்டு போனை வைத்தாள்  அவள் .. பாரதியின் கவிதை வரிகள் தான் அவளுக்கு நினைவு வந்தது ..

 நல்லதோர் வீணைசெய்தே

அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

நல்லதோர் வீணைசெய்தே

அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.

சொல்லடி சிவசக்தி!

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.

கோவிலின் கருவறையில் கம்பீரமாய் வீற்றிருந்த  அம்பாளின் முகத்தை பார்த்தாள்  கவிமதுரா .. கருணையின் வடிவாய் இருந்தாள்  ஷக்தி ! ஆதியும் அவளே அந்தமும் அவளே ..! அகிலத்தை காத்திடும் ஷக்தியும்  பெண் வடிவமானவள் தானே ? இறைவியை பலம் நிறைந்தவளாய் கருதும் சமுதாயம் , பெண்ணை மட்டும் அடிக்கடி மட்டம் தட்டி விடுகிறதே ..

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ

இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

வல்லமை தாராயோ

இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி!

நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

விழிகளில் சுரந்த அவளது கண்ணீர் துளியை தாங்கியது அந்த இரும்பு கரம் .. மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்  கவிமதுரா .. அங்கே அன்பின் உருவாய் நின்றிருந்தான் கிரிதரன் .. எப்போது வந்தான் ? எப்படி வந்தான் என்று கேட்க கூட தோன்றாமல் அவனை அணைத்து  விட்டிருந்தாள்  கவிமதுரா .. சுற்றும் முற்றும் பார்த்தான் கிரிதரன் .. அங்கு யாரும் இல்லை என்பதை கவனித்தவன் அவளை ஆறுதலாய் அணைத்தவாறே அங்கிருந்து வெளியேறினான் .. காரில் அவளை அமர வைத்தவன் அவளுக்கு தண்ணீரை புகட்டி , அவள் கலங்கிய விழிகளை அழுந்த துடைத்து கொடுத்தான் .. சிறுப்பிள்ளையை கையாளுவதை போல , அதிகம் பேசாமல் அதே நேரம் மிக மிருதுவாய் அவளை அரவணைத்து கொண்டான் அவன் .. சிறிது நேரம் மௌனமாய் நேரம் கடத்தியவன் ,

" என்ன ஆச்சு மதுரா ?" என்றான் மிருதுவாய் .. அவனது அணைப்பும் ஆறுதலும் கொடுத்த தெளிவில் , நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்து இருந்தாள்  அவள் ..

" அந்த போன் பத்தி ஏன் என்கிட்ட ஏற்கனவே சொல்லலை நீ ?" என்றான் அவன் ..

" அன்னைக்குதான் நமக்கு என்கேட்ஜ்மெண்ட்  நடந்தபோதுதான் முதல் போன் வந்திச்சு கிரி .. அன்றைய நாளில் எனக்கு இது பெருசா தெரியல " என்றாள்  அவள் அன்றைய நினைவில் அரும்பிய புன்னகையுடன் .. அவளையே ஆழ்ந்து பார்த்தவன் , அவளது கரங்களை சிறைபிடித்து கன்னத்தில் வைத்து கொண்டான்..

அவளை ஆழ்ந்து பார்த்து கொண்டே கேட்டான் ..

" என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே கண்மணி ?"

" இது என்ன கேள்வி தரூ ?"

" இந்த விஷயத்தில் ஒரு நியாயம் கிடைக்கணும் .. அவ்வளது தானே ? அதை நான் செய்தால் நீ திருப்தி பெருவியா ? இல்ல நீதான் களத்தில் இருங்கனுமா ?" என்று கொஞ்சம் கேலியும் கொஞ்சம் அக்கரையுமாய்கேட்டான்  அவன் ..

" என்ன செய்ய போறீங்க தரூ ?" என்றவளின் கண்களில் தீவிரம் படர்ந்தது .. தன்னை  ஆபத்தின் விளிம்பில் வைத்து கற்பனை செய்தபோது கூட எழாத பயம் , அவனை அங்கு வைத்து பார்க்க மறுத்தது ..  இதனால் அவனுக்கு ஆபத்து வருமே ? என்று பயந்தவள்

" வேணாம் , விட்டுடலாம் தரூ " என்றாள்  விரக்தியாய் ..

" அது எப்படி முடியும் ? என் மனைவியின் லட்சியம் , என் லட்சியம் இல்லையா ?" என்று கேட்டா கிரி உரிமையாய் .. கேட்டது மட்டும் அல்லாமல் , அவளை சம்மதிக்கவும் வைத்தான் .. அவன் இருக்கிறான் என்ற தைரியத்தில்  மதுராவும்  தெளிந்துவிட்டாள் ..

" வேலையை விட்டுட்டோம்னு பீல் பண்ணுறியா மதுரா ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.