Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 34 - 68 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It
Author: Anna Sweety

14. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

ரனத்தான் அழைத்தது எதற்காக? என்ன விஷயமாக இருக்கும்? மோசமான விஷயமாக இருந்தால் இப்படி புல்டப் கொடுக்கும் குணம் அத்தானுக்கு கிடையாது. விஷயத்தையும் அதனோடே சேர்த்து அடுத்து செய்ய வேண்டியது என்னவென்றும் சேர்த்தே சொல்லி மனதை அடுத்து என்ன என்பதின் பக்கம் திருப்பிவிடுவதுதான் அவங்க ஸ்டைல். அப்டின்னா இது என்னதா இருக்கும்?

மீண்டுமாய் ரேயாவின் கண்கள் ஆதிக்கின் வாகனத்தின் பின்புறத்தில் பதிகின்றன. ஒருவேளை ஆதிக்கைப் பற்றியாக இருக்குமோ? குப் என்கிறது உள்ளுக்குள். இவளது இந்த முடிந்து போன காதல் கதையை  பற்றி தெரிய நேர்ந்தால் சரனத்தான் ரியாக்க்ஷன் என்னதாய் இருக்கும்? சரித்ரனின் காதல் கதையைக் கேட்டு இவள் ரியாக்ட் செய்த விதம் ஞாபகம் வருகிறது.

Eppadi solven vennilaveன்று ஆதிக் குடும்பம் பெண்பார்க்க வந்த நாள் மாலை. ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க அந்த தகவலை அவரது தம்பிகளுக்கு தெரிய படுத்தியது ரேயாவின் தாய் மாமாக்கள் போலும். விஷயம் கேள்விப்பட்டதும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திருந்தார் ஆல்வின் சித்தப்பா, அவரோடு சரித்ரனும்தான். மருத்துவமனை வரும் வரை சித்தப்பாவுக்கும் சரித்ரனுக்கும் இந்த பெண்பார்க்கும் படலம் அதோடு நடந்த ஷாலு பாம் வெடி காண்டம் எதுவும் தெரியாது. ஆனால் அங்கு வந்து சேரவும் தனிமையில் ரேயாவின் மாமா நடந்த விஷயத்தை ஆல்வின் சித்தப்பாவுக்கு சொல்ல, சித்தப்பா சரித்ரனிடம் வந்து பேசினார். அது மருத்துவமனை வளாகம். பேசுவது பிறர் காதில் விழுந்து வைக்க வேண்டாம் என இருவரும் ஹிந்தியில் பேசிக் கொண்டனர்.

“அண்ணா ஏன் வேற மாப்ள பார்த்தார்னு புரியலை….எதுலயும் ஈசியா வாக்கு குடுக்க மாட்டான் அவன், ஆனா குடுத்த வாக்க கண்டிப்பா காப்பாத்துவான்…சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எல்லாத்துலயும் அவன் அப்டித்தான்….அப்டிங்கிறப்ப இத என்னால புரிஞ்ஜுக்க முடியலை…..எதாவது பிடிக்காமபோய் மனச மாத்திருந்தாம்னா கூட நிச்சயமா உன் வீட்டுக்கு சொல்ல சொல்லி என்ட்ட சொல்லிருப்பான்….பட் இது ஏன்னு புரியலை….ஆனா பெரியவ ஒரு சாது, அவ இப்டி பேசனும்னா உங்களுக்குள்ள கண்டிப்பா ஏதோ சரி இல்லைனு தெரியுது….” சித்தப்பா சரித்ரனிடம் விளக்கம் எதிர்பார்க்கிறார்.

அவருக்கு மனசெல்லாம் வலி. அண்ணா மாதிரி கல்யாணம் வரைக்கும் பையனையும் பொண்ணையும் பிரிச்சு வச்சிருந்தா இப்டி சண்டையும் சிக்கலும் இத்தன பெரிய வலியும் வந்திருக்காதுதானே……கல்யாணத்துக்குள்ள இருக்கிற புரிஞ்சுக்கிற சக்தியும், ஒத்துப் போக நினைக்கிற வேகமும் கல்யாணமில்லாத காதலுக்கு நிச்சயமா இல்ல…..இப்போ  இவர் பிள்ளைகள பழக அனுமதிச்சு…..அதுவே கடைசில அண்ணன் உயிருக்கு உலையா போய்ட்டோ? அண்ணனுக்கு எதாவது ஆகிருச்சுன்னா?

விஷயம் புரியவும் சரனுமே ஆடித்தான் போனான். இவனோட ஒரு சின்ன அவசரம்….சிறு வரம்பு மீறல் கடைசியில் எங்கு கொண்டு வந்து விட்டிறுக்கிறது? அதோடு எப்படி ஒரு சூழலை ஷாலு தனியாக எதிர் கொள்ள வேண்டியதாகி இருக்கிறது? சும்மாவே அப்பாட்ட பேச பயப்படுறவ……இவனோடு சுமுக நிலை இருந்திருந்தால் உடனடியாக இவனை தொடர்பு கொண்டிருப்பாள் தானே….அடுத்து எதுவாயினும் இவன் சமாளித்திருப்பானே….. இப்படி இன்னொரு குடும்பம் பெண் கேட்டு வீடு வரை வரவிட்டிருக்க மாட்டானே….பாவம் ஷாலு ஏற்கனவே இவனைப் பத்தி ஒரு மார்க்கமா புரிஞ்சு உடஞ்சுபோய் இருப்பா….அதுல இது வேறயா….அதோட சுத்தி இருக்ற எல்லோரும் அவளத்தான் குறை சொல்வாங்க….எப்டி இருக்காளோ இப்ப….மருத்துவமனையிலும் அவளைக் காணவில்லையே….

ஷாலு தற்கொலை முயற்சி மருத்துவமனை வந்துவிட்ட யாருக்கும் தெரியாதாகையால் அது இன்னும் சரித்ரனை அடைந்திருக்கவில்லை. அதற்குள்ளாகவே அவன் வெந்து போனான்.ஏற்கனவே நொடி நொடியாய் அவளிற்காய் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இது வன்கொடுமை. அவளைத் தேடிச் சென்று இப்பொழுதே பார்க்க வேண்டும் என்று இருக்கிறது….ஆனால் அவள் இன்னுமாய் கொதிப்பாளே அன்றி வேறு ஒரு பலனும் அதனால் இருக்கப்போவதில்லை. அவளிடம் தனிமையில் பேசும் சூழல் கிடைத்தால் அல்லவா எதையும் விளக்க முடியும்? இப்படி அவள் தந்தை உயிருக்குப் போரடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அப்படி அவைகளைப் பற்றி கலந்து பேசி புரிந்து கொள்ளும் மனநிலை அவளுக்கு இருக்குமா? அப்படி இவன்  வார்த்தையால் விளக்கியேவிட்டாலும் அவள் அதை புரிந்து இவனை நம்புவாளா?

அவள் அடி வாங்கி இருப்பது அடிப்படை நம்பிக்கையில் அல்லவா? இருப்பதில் ஒரே ஆறுதல் அவர்கள் காதல் இன்னும் மரித்து விடவில்லை என்பதுதான். ஷாலு வேறு திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையே…முதலில் அவளது நம்பிக்கையை இவன் சம்பாதிக்க வேண்டும்…. அதோடு ஷாலுவின் அப்பா இப்படி ஏமாற்றி வேறு மாப்பிள்ளை பார்த்தது அவனுக்கு ஒரு வகையில் கோபமாக வருகிறது என்றாலும் இப்போதைய முதல் தேவை அவர் குணம் பெற்று எழும்புவதுதான்….

“மாமா ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தான்…ஆனா ஷாலு அத மாத்தி புரிஞ்சுகிட்டா….விளக்கம் சொல்றதுக்கும் எனக்கு டைம்மே குடுக்கலை அவ…” இவனிடம் பதில் எதிர்பார்த்து நிற்கும் தன் மாமாவிடம் சொன்னான். வேறு என்ன சொல்ல முடியும்?

இவனது மாமா இவனை ஒரு பார்வைப் பார்த்தார். நான் பொறுப்புன்னு சொல்லி கூட்டிட்டுப் போய்ட்டு, இப்ப வந்து அவளயே குறை சொல்றியோ என்றது அப்பார்வை. மிகவும் குன்றலாக உணர்ந்தான் சரித்ரன்.

“அவட்ட பேசுனா சரியாயிடும் மாமா…”

‘எது எப்டியோ…எங்க அண்ணா ரொம்ப மான அவமானம் பார்க்றவன்….அதான் இப்டி படுத்துட்டான்….இப்ப அவன் மனசை எப்டி தேத்தன்னு தெரியலை…..”புலம்பினார் ராஜ்குமாரின் தம்பி.

மற்றவர்களுக்கு ஹிந்தி தெரியாதுதான். ஆனால் அங்கிருந்த டேவிட்டிற்கு தெரியுமே….இவர்கள் பேசியது அவர்கள் காதில் விழ மெல்ல இவர்களிடம் வந்தார்.

“உங்க குடும்ப விஷயத்துல தலையிடுறேன்னு நினைக்காதீங்க….” அவரும் ஹிந்தியில் தொடங்க சூழ்நிலையை மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தனர் சரித்ரனும் சித்தப்பாவும்.

“ராஜா அதாவது ராஜ்குமார் என் ஃப்ரெண்டு….எனக்கு தெரிஞ்சவரை அவன் அவமானத்துலலாம் உடஞ்சு போயிருக்க மாட்டான்….ஆனா அவன் பொண்ணு வாழ்க்கைக்காக ரொம்ப பயந்துருப்பான்…காதலுக்கு ஏற்கனவே ரொம்ப பலி கொடுத்துருக்கான்...அந்த பயம் இன்னும் இருக்குது அவன் மனசுல….பிள்ளைங்க வாழ்க்கை என்னாகுமோன்னு தான் இப்பவும் அவனுக்கு கவலை….பயம் எல்லாம்…” இருவரையும் பார்த்து பொதுப்படையாக சொன்னவர்

சரித்ரனைப் பார்த்து “நீங்கதான் ராஜா முதல்ல பார்த்த மாப்ளைனு புரியுது…..உங்களுக்கு இன்னும் இந்த சம்பந்தத்துல விருப்பம் இருக்குன்னும் தெரியுது, பொண்ணுக்கும் விருப்பம் இருக்குது, ராஜா ஏமாத்தி நடிச்சுலாம் எதுவும் செய்துருக்க மாட்டான்…பிடிக்கலைனா பிடிக்கலைனு முகத்துக்கு நேர சொல்றவன் அவன்….அதனால அவன் பக்கம் இது எதோ மிஸண்டர்ஸ்டாண்டிங்ல வந்த குழப்பமாத்தான் இருக்கும்… அதானால அவன்ட்ட நீங்க இந்த கல்யாணத்துல இன்னும் உறுதியா இருக்கீங்கன்னு காமிக்ற மாதிரி நடந்துக்கோங்க……அவன் நிம்மதி ஆகிடுவான்….அவன் மனசுல பிள்ளைங்க எதிர்காலம் பத்தி வந்திருக்கிற பயம் போற மாதிரி குடும்பத்தை நீங்க நின்னு பார்த்துப்பீங்கன்ற மாதிரி நடந்து காமிங்க….தைரியமாகிடுவான்…இப்போ இருக்க நிலைமைல அத்தன மருந்த விட இதுதான் அவன் உயிரை காப்பாத்தும்…..”

சரித்ரன் இந்த கோணத்தில் இதுவரை யோசித்திருக்கவில்லை என்பது நிஜம். அவரை ஆராய்தலாய்ப் பார்த்தான்.

“ரெண்டு பொண்னுங்க தனியா நின்னு எப்டி சமாளிப்பாங்கன்னு அவனுக்கு பயம் இருக்கும்ல…கிவ் ஹிம் ஹோப்…பீ தேர் அஸ் அ சன்…”

“கண்டிப்பா அங்கிள்….கண்டிப்பா செய்றேன்….” சரித்ரன் தான் செய்ய வேண்டியதைப் புரிந்து கொண்டான். இதுவரை ஷாலு மட்டும் தான் அவனைப் பொறுத்தவரை அவன் குடும்பம்….ஆனால் இப்பொழுது அதன் கோணம் மாறிப் போனது நிஜம்.

ஐ சி யூவிலிருந்த  ராஜ்குமாரைப் பார்க்கப் போனான் அவன்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Anna Sweety

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிThenmozhi 2015-08-25 09:21
super epi Anna (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:55
Thanks Thens :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிKeerthana Selvadurai 2015-08-24 11:42
Superb update sweety :clap: (y)

Reyu-Saran conversation summa nachunu irunthuchu (y)

Siblings illainu saran feel panra idam..
Idi minnal mohini name :D
Thirumba pesi Unga time waste aga koodathunu reyu solrathu :lol:
nicea Reyu va shalu kalatti vidrathu :D ena kutty kutty vishayangal romba arumaiya irunthuchu (y)

Aadhik thirumanam seiya aasai pattathu Reyu-vai :yes:

Reyu than muthal magal endru eduthu kondathaal vantha vinai ithanai varuda pirivu avrgalukkul :-?

Aadhik-Reyuvai vaichu saran shalu nadathum naadagama kadaisiyil :Q:

1990 mudichu innum sila vishayangalil avilamale irukkirathu :Q:

Eagerly waiting for next epi...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:53
Than Keerthu :thnkx: :thnkx: saran rey con :D idi minnal mohini :lol: thirumba pesi :grin: shalu kalati vidurathu :P :D :D :dance: s aadhik wanted 2 mry reyu ...s confusion is the reason.. :-) Vandhana is frm 1990....so no drma...bt 1990 mudichu ini avilum :yes: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிSharon 2015-08-23 16:10
Superb episode Anna mam :clap: ..
Reyu oda indhaside semma.. Chumma kizhikizhi nu kizhuchutaa (y) (y) ..
Saran sir villupuram ah?. Idhu nalla irukkae :grin:
Saran-Reyu-Shalu conversation ronba azhaga irundhuchu :)
Oru vazhiya Adhik Reyu serthutaanga :dance: Sharon happy annachi ;-) ..
Enna ma vandhana,yaaruma ne? Unakku enna venum :Q:
Waiting to read more :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:46
Thanks Sharon :thnkx: :thnkx: Reyu :D :thnkx: vilupuram...anything spl :Q: conv :lol: reyu sernthacha???? Vandhana...frm 1990pa... :yes: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிNithya Nathan 2015-08-22 17:43
very nice ep sweety

saran

விட்டுசெல்ல நினைத்தால் ஆயிரம் காரணங்கள் கிடைக்கும். அப்பாவிற்கு பயந்த பெண், நாகரீகத்திற்குள்நுழைய தைரியமில்லாதவள் .. சரன் மீது சாலு கூறிய அனைத்திலும் ஓன்றுபோதும் அவன் அவளை விட்டுச்செல்ல நினைத்திருந்தால். ஆனால் அவன் இவற்றில் ஒன்றைக்கூட சாலுவை தவிர்ப்பதற்காக சொல்லவில்லை. அதேவேளை அவற்றுடன் ஏற்கவும் அவன் தயாராக இல்லை.

சாலுவும் அவனை தவிர்க்க நினைத்திருந்தால் அவளிடம் அவனது சிறுவரம்புமீறல் ஒன்று காரணமாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இருவருமே நடந்த தவறை இருந்த குழப்பங்களை சரிசெய்ய முயற்சிசெய்தார்கள். பிரச்சனையை தீர்க்க நினைத்தால் உதவிகளும் வழிகளும் பல பிறக்கும்.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிNithya Nathan 2015-08-22 17:49
Adhik unakku nan pre-school traning nane edukuran. :D

DGP elalm nallalvangalthane irukanum sweety .. :P inga thapap irukke ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:32
aadhikkum pre school training kettukitte irukaar...onnum nadakathaan maatenguthu... ;-) DGP nallvanga thaan :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிNithya Nathan 2015-08-22 17:49
ஒருவர்மேல் கொண்ட அதிக பாசம் அவர்மீது உரிமைகளை தானாகவே எடுக்க வைக்கும். அதஅனுமதி இன்றி உரிமைகள் செயல்வடிவம் பெறும் சந்தர்பங்கள்தான் பல பிரச்சனைகளுக்கு முதற்புள்ளி.

தன்னவள் என்ற சரன் உரிமை சாலு அனுமதி இன்றியே அவளுக்கான முடிவுகளை அவனை எடுக்கவைத்தது.

அப்படிப்பட்ட செயல்கள் அடுத்தவர் சுதந்திரத்தை பறிப்பதுபோல் அவர்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதுபோல அமைந்துவிடும்.

சுதந்திரதிரம் இல்லாத இடத்தில் அன்புக்கு மதிப்பில்லை.

எது அளவிற்கு மிஞ்சினாலும் நஞ்சுதான்.அன்பும், அக்கறையும் கூட

சாலுவின் அமைதிக்கு அப்பாமீதுபயம் என சரன் பொருள் கொண்டான் ஆதிக்கின் குழப்பதிற்கு காதிலில்லை என ரேயா பொருள் கொண்டாள்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:31
Thanks Nithi :thnkx: :thnkx: suthnhthiram illaa tha idathil anbukku mathippu illai :clap: as usual super analysis :clap: :clap: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:41
Thanks Nithi :thnkx: :thnkx: Hoy vittu sella ninachuruvaara saran....naanga vittutuvomaa... :grin: prachanaikalai theerka ninaithaal... :yes: :yes: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிSriJayanthi 2015-08-22 17:08
Nice update Anna. Special applause for reyu's conversation with saran. 1000 likes for each and every sentence.

First page padikkumbothu enakku intha varithaan nyabagathukku vanthathu. "ennammaa ippadi pandreengalemmaa", ippadi ponnu perai sollamaye ponnai paarthu, reject aagi, kalyanam ninnu, love failure-la thaadi valarkkaravarai poyaachu. Ini saadharana sentence-la kooda rendu vaati per solli koopidunga, illaina yethanai confusion

Reyu kalakkitta. Unnai petrathathukku ungappa nijamaave un pechai kettirunthaa sandhosha pattiruppaar. Semma super

Shalu, saran and Reyu- Aadhik yellaam correctaa sernthaachu. Good
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:24
Thanks Jay :thnkx: :thnkx: Reyu's conversation... :thnkx: :thnkx: felt very happy when u mentioned it :thnkx: name confuson :grin: athukku seekiramaa...explanation solren Jay.. :lol: Thanks :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிDevi 2015-08-22 10:32
Hi sweety,
Super episode :clap:
Reyu .. charan kitta shalu, appa ovda thoughts patti explain panradhu nalla irrukku... (y) :hatsoff:
Aadhik ku eppadi ivloo confusion ... ???? :Q:
Seekiram Reyu .. adhik problem clear aahum nu ninaikiren .. :yes:
waiting to read next episode ... (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:20
Thanks Devi :thnkx: :thnkx: aadhik confusion ai kaali seythuduvom... :now: athukku pathila puthu prachanai koduthudalaam... :grin: Thanks :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிchitra 2015-08-22 09:21
suer ei reyuu semma kaatu katra , ana adhik en avan parents sonna madri vizhayathai appove clear seiyalai, phone not reachable na vittuduvaraa
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:18
Thanks Chithu :thnkx: :thnkx: aadhik POV vai seekiram solren Chithu... :yes: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிSandiya 2015-08-22 06:46
Mam super update :clap:
ennaku 1st romba kastama erunthuchu eppdi akka va love pannitu sister ra thirumbavum live pannuvarunu now i 'm so happy adhi reyu tha love panndraru :dance: saran kitta shalu solla ninachatha reyu sonna view & conversation super mam (y)
pls next updatela vasiyoda story kondu vanga :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:14
Thanks Sandiya :thnkx: :thnkx: akkava love panni thangaiyaiyum love pandra maathiri....apdi plot elutha enakkum kashtampa..athanaala aadhik apdilaam seyyaa maattaar :D :thnkx: :thnkx: vasiyai investigate seythu thaan kandu pidikanum ini... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிManoRamesh 2015-08-22 00:22
Reyu semma po.
Saran la arambichu adhik varai ellaraium clean bold aakkara
Naan first ye sonnen saran pathu vechu iruken nu solra mappila reyu Ku aadhik anu finally avru than mappilaiya maati Vida vendiyatha pochu.
Semma epi la last twist summa mathiri theriyalaye
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:11
Thanks Mano :thnkx: :thnkx: Reyu kku cricket therinjittu pola...clean bold seyraale :grin: saran paartha maapilai 15 epila irukaar ;-) summa illai..nijam thaan :yes: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிJansi 2015-08-22 00:06
Inta vantana madam engiruntu vanraangapaa? Villia ...illaiya ? Semma confusion.

Super epi Sweety
Reyu Saran-idam kumurum idam super dialogues.

Shaalu marriage FB subam subamaa iruntatu ....great.

Niraya pages tantaalum Vasi story ennaachinu mandaiyai
Kudayute?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:09
Thanks Jansi :thnkx: :thnkx: Vantha 1990 la irunthu vaaranga jansi :-) vasi part ai ini investigate seyrathuthaan story line...so aadhik ai athukku seekiramaa thurathuvom... ;-) :D :thnkx:
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிVindhya 2015-08-21 23:44
super epi Anna.

Shreya Sarithran kitta pesuvathu super (y)

Shalu Sarithran polave Aathik and Shreya routelum almost ellam clear aachu.

Vanthana madamku Aathik mela enna ippadi kobam!!!

oru chinna doubt. Aathik yen avar love seira ponnoda thangai kitta munbu pesinar???
Shreyave appo chinna ponnu avanga thangainaa innum chinna ponna thaane irunthiruppaanga?

Weekend enbathal slight thookathoda padichen. Answer epi leya irunthal thirumba poi revise seiganu sollunga ;-) no problems :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 14 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-08-28 23:06
Thanks a lot Vindhya :thnkx: :thnkx: aadhik en kalyanam seyya pora ponnoda thangaitta pesinaarnu seekiram detaila solren Vindhya :yes: so sweet...thoongitte padichaalum super ah cmnt seythurukeenga :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top