(Reading time: 34 - 68 minutes)

ப்பொழுது ஆரம்பத்தில் எல்லாம் இயல்பாக இருப்பது போல் காண்பித்துக் கொள்ள ரேயு மிகவும் சிரமப்பட்டாள். ஆனால் இத்தனை வருடத்தில் ஒரு வகை இயல் நிலைக்கு வந்திருந்தாள். அவ்வப்போது ஆதிக்கின் நினைவு ஒரு முள்ளாக படு ஏக்கமாக அவளைக் குத்தினாலும், அதைக் கையாள கற்றிருந்தாள். இதில் இப்பொழுது இந்த ஆதிக்கின் வருகை…..அதோடு சரனின் அழைப்பு வேறு…. இப்பொழுது முன் சென்று கொண்டிருந்த ஆதிக் தன் வாகனத்தை ஒரு டெக்‌ஸ்டைல் ஷோரூம் முன் நிறுத்துகிறான். அவனைத் தொடந்து அவளும். ஆனால் இங்கு என்ன வேலை?

“ரே….ஃப்யூ மினிட்ஸ்..ப்ளீஸ் இப்போ வந்துடுவேன்…” வார்த்தையையும் தாண்டி ஆதிக்கின் முகம் கெஞ்சிய கோலத்தில் நின்று போயிருந்தது இவள் மனம்.

காரில் காத்திருக்கும் நேரத்தில் அழைத்தாள் சரனை “அத்தான் சொல்லுங்க…என்ன விஷயம்…?இப்போ காரைப் பார்க் செய்துட்டேன்…”

“ரொம்ப சீரியஸான இஷ்யூ எதுவும் இல்ல இடி….ஆனா இது கொஞ்சம் சென்சிடிவான விஷயம்…”

“என்னத்தான் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவ்ளவு பில்டப்…?”

“அதுவா கல்யாணத்துக்கு முன்ன உன்னையப் பிடிக்கலைனு ஒரு பையன் சொன்னா  சோ வாட்னு போய்டுவா உன் அக்கா, ஆனா கல்யாணம் செய்யப் போறவன் ஐ லவ் யூன்னு சொன்னதுக்கு அவ எடுத்த அவதாரம் இருக்கே….அதான் அவ தங்கையாச்சே நீ அதுமாதிரி ஒரு விஷயம் உன்ட்ட பேசனும்…நீ எப்டி ரியாக்ட் செய்வன்னு தெரியலை….அதான்….”

ரேயா முகம் அஷ்ட கோணலாகியது நிஜம்.

“உங்களையே ரெக்கமென்டஷனுக்கு பிடிச்ச அந்த லூசு யாரு?” காய்ந்தாள் பெண்.

“ப்ச் இதென்ன இதுக்கு எடுத்த உடனே டென்ஷனாகுற? ஒரு பையன் இன்ட்ரெஸ்ட் காமிச்சா பிடிச்சா கன்சிடர் செய், இல்லனா இக்னோர் செய்துட்டுப் போ…இதுக்கு எதுக்கு இவ்ளவு கோபம்…? அதோட நான் சொல்ல வந்த விஷயம் அந்த அளவுக்குல்லாம் இல்லை…ஒரு சின்ன இன்ட்யூஷன் அவ்ளவுதான்…”

“……………”

“என்ன இடி பதிலைக் காணோம்…?”

“அதுக்கு இவ்ளவு பெரிய பில்டப்பான்னு பார்க்கேன்…சொல்லுங்க பார்ப்போம் உங்க இன்ட்யூஷனை”

“அந்த வந்தனா டிஜிபி அங்கிள்க்கு கால் செய்தாங்க….அப்ப நானும் அங்கிள் கூட இருந்தேன்…..அதான் விஷயம் எனக்கு தெரிஞ்சிது….”

“ம்…?”

“முன்னால ஆதிக்னு….உனக்கு ஞாபகம் இருக்குல்ல…?”

“ம்…”

“அந்த ஆதிக் இப்போ ….உன்னை ரீச் செய்ய ட்ரை பண்றாராம்….அவன் இன்டென்ஷன் சரியா தெரியலை….ரேயுவ அலெர்ட் செய்து வைங்க….ன்னு கால் செய்தாங்க…”

ரேயா அருகில் நின்ற ஆதிக்கின் வாகனத்தை ஒரு முறைப் பார்த்துக் கொண்டாள்.

“எனக்கு என்னமோ ஒரு ஃபீல் அவர் முன்னமே இன்ட்ரெஸ்ட் காமிச்சது உன் மேலயோன்னு…” சரன் சொல்ல குப் என இவள் இதயம் தாறு மாறாய் எங்கோ ஏறியது.

“சே இல்லத்தான்…..என்ட்ட அவர் தெளிவா சொன்னாரே….” தான் இயல்பாய் இருப்பது போல் காண்பிக்கப் பெரும் பாடு பட்டாள் ரேயா.

“ என்ன சொன்னார்? எப்ப?” துருவினான் சரித்ரன். ஆதிக் பற்றி சரனிடம் யாரும் எப்போதும் எதையும் பேசியதில்லை டியூ டூ த சென்சிடிவிட்டி.

“அன்னைக்கு அவங்க பேரண்ட்ஸ் நம்ம வீட்டுக்கு வந்துருந்தாங்களே…அன்னைக்குதான்….”

“ஓ….தட்ஸ் குட்…என்ன சொன்னார்?”

”அது எனக்கு இந்த கல்யாணத்ல இஷ்டம்னு சொன்னார்…”

“இன்ட்ரெஸ்ஸ்டிங்…அன்னைக்கு கூட அவர் உன்னைத்தான் கூப்டு பேசிருக்கார்……உன்ட்ட தான் தன் சம்மதத்தை சொல்லிருக்கார்…இப்பவும் உன்னைத்தான் ரீச் செய்ய ட்ரைப் பண்றார்…”

“ப்ச்…சும்மா இருங்கத்தான்…ஆதிக்குக்கு நான் முன்னமே பழக்கம் அதான்…”

“எக்‌ஸாக்ட்லி…இது எதுவும் அவர் பொண்ணு கேட்ட பொண்ணு கூட அவருக்கு கிடையவே கிடையாது….பொண்ணுக்கு விருப்பம் இருக்கான்னு கூட பொண்ணுட்ட கேட்காம உன்ட்ட மட்டும் பேசிட்டு…அவ்ளவு கான்ஃபிடென்டா வீட்டுக்கு வந்திருக்காங்க பொண்ணு கேட்டு...”

“அவங்க வீடும் கொஞ்சம் ஆர்தடாக்‌ஸ்தான்…” சொல்லும் போதே நெருடியது ரேயாவுக்கு….இவளிடம் பழகத்தானே செய்தான்.

“சும்மா எதுக்குத்தான் ப்ரயோஜனமில்லாத விஷயத்தை எல்லாம் பேசிகிட்டு…? வந்தாங்க ப்ரச்சனை ஆகிட்டு…கதை முடிஞ்சும் போச்சு…”

“ஓகே அன்றில் சொல்லனும்னு தோணிச்சு…அதான்…” சரன் பேசிக் கொண்டிருக்கும்போதே ஷாலு ஏதோ சொல்வது கேட்கிறது. “இரு ஸ்ரே இந்தா வர்றேன்…” தன் மனைவியிடம் பதில் சொல்கிறான் சரித்ரன்.

சரன் இணைப்பை துண்டிக்கவும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள் ரேயா அவன் சொன்ன கோணத்தில் அன்றில்…ஸ்ரே…. அவளையும் அறியாமல் அவள் நகம் வாயிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தது.

“திரும்பவும் நான் ப்ரிகேஜி டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸ் தேடனும் போல…” ஆதிக் தான் போலீஸ் யூனிஃபார்மிலிருந்து செமி காஷுவல்ஸுக்கு மாறி இருந்தான். இவள் கார் அருகில் வந்திருந்தான் அவன்.

சட்டென எதோ புரிகின்றது. எல்லாம் தெரிந்தேவிட்டது. கார் கதவைத் திறந்து கொண்டு அவன் முன் சென்று நிற்கிறாள். தன் கையால் அவன் தடையைப் பற்றி அவன் கண்களை தன் முகத்தில் நிறுத்தி “நான் யாரு ஆதிக்? என் பேர் என்ன?” கொடும் எதிர்பார்ப்பும் படு ஏக்கமுமாய் இவள்.

கடை முன் போவோர் வருவர் பற்றியெல்லாம் அப்பொழுதைக்கு அவளுக்கு அம்னீஷியா…

“ஹேய்…” என எதையோ சொல்ல ஆரம்பித்த ஆதிக் அடுத்த நொடி “ஷாலுவா உனக்கு அக்கா?” என்றான் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய்.

“ரேயா தான் மூத்த பொண்ணுனு ராஜ்குமார் அங்கிளே சொன்னாங்களேடா…”

அவனை தன் மொத்த பலத்தோடும் இறுக்கி அணைத்து அவன் மார்பில் அழுகையில் வெடித்துக் கொண்டிருந்தாள் ரேயா.

“என்ட்டயே என் அக்காவ மேரேஜ் செய்ய ஆசப்படுறேன்னு சொன்னீங்க….”

“ அப்டி எப்டிடா சொல்வேன்…?”  ஐ நெவர் மென்ட் தட் ரேயுமா…”

“ எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா……? நான் செத்துட்டேன்….”

அவள் காதருகில் குனிந்தான்.” ரேயு உனக்கே தெரியும்….ஐ ஆல்வேஸ் லவ்ட் யூ அன்ட் ஐ நெவர் லவ்ட் எனி ஒன் எல்ஸ்” அவள் உயிர்வரை காய்ந்திருந்த பாலை வனத்தில் பால் மழைப் பருவம்.

அவள் கார் கதவைத் திறந்து அவளை காருக்குள் மெல்ல அமர்த்தினான்.

“உன்னைத் தவிர யாரையும் நான் கல்யாணம் செய்ய நினைச்சதே கிடையாது ரேயுமா….உன் அப்பாட்ட இப்பவே போய் நம்ம வெட்டிங் பத்தி நான் பேசுறேன்….”

குனிந்து நின்று பேசிக் கொண்டிருந்த ஆதிக்கின் காலரைப் பற்றி பலமாக இழுக்கிறது ஒரு கை.

சட்டென திரும்பிப் பார்க்கிறான் ஆதிக். “பப்ளிக்ல பொறுக்கித்தனம் செய்ற நீல்லாம் ஒரு எஸ் பி….” வந்தனா டிஜிபி சிங்க குரலுடன் சிடு மூஞ்சி முகத்துடன்.

அவசரமாக எட்டிப் பார்க்கிறாள் ரேயா  “ஆன்ட்டி அவங்கள விடுங்க ஆன்டி…” துள்ளி இறங்குகிறாள்.

‘மேம் நத்திங் லைக் தட்…” ஆதிக் சூழ்நிலையைப் புரிய வைக்க முயல்கிறான்.

இப்பொழுது இறங்கிய ரேயாவை இரும்புப் பிடியாய் பிடிக்கிறார் வந்தனா.

“உன் நிழல் கூட இவள் மேல விழக் கூடாது….” ரேயாவை தர தரவென இழுத்துக் கொண்டு தன் ஜீப்பை நோக்கி நடக்கத் தொடங்கினார் வந்தனா டிஜிபி.

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:876}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.