வலி மட்டுமல்ல எந்த உணர்வுவையுமே அவளால் உணரமுடியவில்லை….தனக்கு பைத்தியம் பிடிக்கிறதோ என்ற சந்தேகம் கூட வருகிறது ரேயுவுக்கு….அல்லது தான் ஏற்கனவே செத்துவிட்டேனோ….?சர்வமும் மரணத்திருந்தது அவள் உலகில். மரம் அதுதான் அவள் இந்நேரம்.
“மாப்ள எப்டி…? இந்த கல்யாணதுக்கு பிறகு அப்பாவுக்கே எதாவது ஆயுட்டுன்னா கூட நான் பயப்பட மாட்டேன் தெரியுமா….அவ்ளவு நல்ல பையன்…பொறுப்பா உன்னையையும் செட்டில் செய்துடுவான்….” அப்பா உச்ச கட்ட சந்தோஷத்தில் இருக்கிறார், இல்லையெனில் இப்படி பேச அவருக்கு வராது.
“ஆதிக் விரும்பி செய்றாங்களாப்பா…?” கஷ்டபட்டு இதழை இழுத்துப் பிடித்து சிரிப்பு என பெயர் செய்து கேட்டே விட்டாள். நெஞ்சில் வலி அலை அலையாய்….மூச்சுத் திணறல்…..ஓ இன்னும் ஏதோ நம்பிக்கை இது நிஜமல்ல என்று….நம்பிக்கை உணர்வுகளை திருப்பித் தருகிறதோ…
“ஏன்மா பையனுக்கு சம்மதமான்னு கேட்காம இவ்ளவு சொல்வேனா….” என்றவர் “இரு” என்றுவிட்டு தன் மொபைலில் சில எண்களை அழுத்திவிட்டு எதிர் புறம் இணைப்பை ஏற்கவும் “மாப்ள என் சின்ன பொண்ணு உங்கட்ட பேசனுமாம்…..உங்களுக்கு சம்மதமான்னு கேட்கிறா பெரிய மனுஷி…” இவளிடம் நீட்டினார்.
தன் மொத்த உயிரையும் திரட்டி அதை கையில் வாங்கினாள். காதில் கொண்டு போய் வைக்கும் முன் இதயம் வாய் வழியாய் வெளியில் வந்து விழப் போவது போல் உணர்வு…
“ஹாய்…வாலு….ஒருவழியா உன்ட்ட பேச முடிஞ்சுட்டு….எப்டி இருக்க? உன்னப் பார்க்கனும் பார்க்கனும்னு ப்ளான் செய்து கடைசியா என் கல்யாணத்துலதான் பார்க்க முடியும் போல….” ஆதிக் தான். அவன் குரல்தான். எத்தனை நாள் இந்த குரல் காதில் விழாதா என ஏங்கி இருப்பாள். எத்தனை முறை காற்றில் இக் குரலை மட்டும் கேட்டு கரைந்திருப்பாள்.
“ம்”
“எப்டி இருக்கா உன் அக்கா….இப்பவாவது என்ட்ட பேச விடுவாங்களா…? “ மூச்சுவிட முடியாமல் ஒரு திணறல்…. நெஞ்சில் வலி இவளுக்கு.
“அவட்ட பேசனுமே…கூப்டுறியா…?” உதடுகளை இறுக்கி கடித்து தன் உணர்வுகளை கட்டுப் படுத்த முயல்கிறாள். கீழ் உதடில் ரத்தம்.
“அப்பா பக்கத்துல இருக்காங்களா?” ரகசியம் பேசும் குரலில் அவன்.
“ம்…”
“பிரவாயில்ல….உன் பயந்தாங் கொள்ளி அக்காவ நான் கண்டிப்பா பேசச் சொன்னேன்னு சொல்லு….” சிரிப்பு வந்திருந்தது அவன் குரலில்.
இதற்கு மேல் தாங்காது. இணைப்பை துண்டித்து மொபைலை அப்பாவிடம் கொடுத்துவிட்டு தன் அறைக்கு சென்று கதவை உட்தாழிட்டாள் ரேயா. அதிர்ச்சியை உள்வாங்கவே அவளுக்கு தனிமை வேண்டும்…..அதைவிட்டு எப்பொழுது வெளியேறவோ..?? மனம் நடந்தவைகளையும் நடப்பவைகளையும் பொருத்திப் பார்த்து விளக்கம் தேடுகிறது…. இப்பொழுது பேசிய அவன் குரலே காண்பிக்கிறது அவனுக்கு இந்த திருமணத்தில் எத்தனை சம்மதமும் ஆசையும் என. ஆனாலும்…..
“உன் ரூமுக்கு நான் எதுக்கு வரப் போறேன்…..”ஷாலு ரூமுக்குள் நின்று கொண்டு அன்று அவன் கேட்டானே…..
மொபைல் முழுக்க போட்டோஃஸால நிரப்புற பழக்கம் இருக்ற அவன் இவளை ஒரு ஃபோட்டோ கூட எடுத்து வச்சுருக்கலையே….ரூம்ல இவளும் ஷாலுவும் இருக்ற போட்டோவை மட்டும்தானே போட்டோ எடுத்து வச்சிருந்தான்….
“ஷாலு மேரேஜுக்கு நான் பொறுப்பு….” அவன் சொன்னானே
சிமி இவள அண்ணினும் இவ அப்பாவ ஆதிக்கின் மாமனர்னும் சொன்னாளே….அதுக்கு பதிலா . “இவளப் போய் அண்ணினு சொல்லிகிட்டு……” கத்தினானே……“ப்ரபோஸ் செய்றதாவது நானா இருக்கடும்….” அப்டின்னு ஒரு விளக்கமும் சொன்னான்தானே…..
ஷாலுவ ஆதிக் மேரேஜ் செய்தாலும் சிமிக்கு இவ அண்ணி முறைதான வரும்…அதனால சிமி இவள அண்ணின்னு சொல்லி இருக்கனும்…. ஆனா இவட்ட இவ அப்பாதான் ஆதிக்கின் மாமனார்னு சொல்லிவச்சா ஷாலுவுக்கு இவ வழியாவே விஷயம் போயிடும்னு நினைச்சிருப்பான்….அவனுக்கு அவனே ப்ரபோஸ் செய்ய ஆசை… மூத்த பொண்ணுக்குதான முதல்ல மாப்ளை பேசுவாங்க….அதனால இவ ஷாலுவ தான் நினைப்பாள் என அவனுக்கு தோணியிருக்கும். அவன் மனதில் ஷாலு மட்டுமே இருந்திருக்க எல்லாவற்றையும் குழப்பியது இவள்தானோ?
“மருமகனும் மகன் மாதிரிதான்…..” ஷாலு ஹஸ்பண்ட் கூட இப்படி இவ அப்பாவுக்காக சொல்லலாமே…
அவனது என் மாமா அவளுக்கு சித்தப்பா..... ஷாலுவின் ஹஸ்பண்டின் மாமாவும் இவளுக்கு சித்தப்பாவாகத்தானே வரும்… இவ பெர்த் டேக்கு ஒரு கார்ட் கூட தரலை அவன்…… இவ்ளவு நாளா இவட்ட பேசுனதும் கிடையாது…. இவளை ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் செய்தானே ஒவ்வொரு டைமும்..,,தனக்கு வரப்போறவளின் தங்கை என்ற கோணத்தில் அவன் மனம் சுத்தமாகத்தான் இருந்திருக்கிறது…
ஆனால் அன்னைக்கு பெங்களூர்ல காப்பாத்த வந்தப்ப கார் பக்கத்துல வச்சு இவள தன்னோட சேர்த்து பிடித்தானே….அந்த நேரத்துல அவன் கூடவே சேர்ந்து இவ மூவ் ஆகனும்ன்றதுக்காக இருந்திருக்கலாம்….இல்லனா ரெண்டு பேரும் அந்த கும்பல்ட்ட மாட்டி இருப்பாங்களே… இவ செலக்க்ஷன்ல வெட்டிங்க் கிஃப்ட் வாங்கினானே….அந்த ஃபேமிலிக்கு உன் டேஸ்ட்தான் சரின்னு தான சொன்னான்…. ஷாலு டேஸ்ட் இவளுக்கு தெரிஞ்சிருக்கும்னு எதிர்பார்த்திருப்பான்….
இப்பவே சொல்லனுமான்னு எமோஷனலா கேட்டானே….அதுகூட அவன் காதல பத்தி, ஷாலுவ பத்தி மீன் சொன்னதா இருக்கலாம்… எப்டி யோசித்தாலும் எல்லாவற்றிற்கும் இந்த ஷாலு விஷயமும் பொருந்தி தானே போகிறது.? ஆனால்….ஆனால் கோவால வச்சு சொன்னானே “எதையோ இழக்கப் போற மாதிரி இருக்குதுன்னு…” அது இவள பிரியுறதுக்காகன்னு தானே நினைச்சா….அதுக்கு இல்லைனா எதுக்காம்? புரியவில்லை…ஆனால் அதை மட்டும் வைத்து இவள் என்ன நினைக்க வேண்டும்…? மற்றதெல்லாம் இவள் மரமண்டைக்கு முன்பு தவறாக புரிந்தது போல் இப்பொழுது இது புரியவில்லை போலும்….
சுருண்டு போய் விழுந்துவிட்டாள் ரேயா..…..ஆனால் நேரம் செல்ல செல்ல முடிவை ஏற்க மனம் திமிறியதே தவிர ஒத்துக் கொள்ளத்தான் உடன்படுவதாய் இல்லை. எது எப்டியானாலும் அவனிடம் நேரில் அழைத்து பேசிவிட வேண்டும்….உண்டோ இல்லையோ அவன் குரலில் கேட்டால் தான் இந்த மனம் நம்பும்….
இவள் மொபைலில் அவனது எண்ணை அழைத்தாள். இணைப்பை ஏற்றான் அவன்.
“ஹலோ நான்…”
“முயல் குட்டி பேசுறேன்…” அவளை முழுதாக சொல்ல கூட விடவில்லை….அவளைப் போலவே பேசினான். குரலில்தான் எத்தனை குதுகுலம்…
“ஏய் கேடி உன்ன தெரியாதா எனக்கு? “ அவன்தான். அதற்கு மேல் கட்டுப் படுத்த முடியவில்லை அவளால். வெடித்து வந்தது அழுகை. தன் கையால் தன் வாயைப் பொத்தியும் மீறி கசிந்தது அவள் அழுகுரல் மொபைலுக்குள்.
முதலில் சிறிது நேரம் அவன் புறமிருந்து ஒரு பதிலும் இல்லை. பின்பு அழைத்தான். ரேயு… உயிர் வருடும் அதே அழைப்பு….அவ்வளவுதான் இன்னுமாய் கூடிக் கொண்டு போனது இவளது அழுகை.
தெய்வமே இந்த அழைப்பெல்லாம் பொய்யா….பொய்யா போயிருந்தால் கூட பிரவாயில்லையே…இப்டி அக்கா ஹஸ்பண்டா வரப்போறனே….. அண்ணன் ஸ்தானதுக்கு வரப் போறவன் மேல நான் என்ன மாதிரி ஆசைய வளத்து வச்சிருந்திருக்கேன்….நெஞ்சடைக்கிறது. இப்பொழுது வாயை திறந்து திறந்து பார்த்தால் கூட மூச்சுக் காற்றுதான் கிடைக்கவே இல்லை….
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
ஆனால் காரணக்கரனை புகழ்கிறேன் , அவன் தன் நாடிய கற்பனையில் நம் வாழ்க்கையை அமைத்துவிட்டான்
இதை படிக்கவும் எனது நினைவுகள் திரும்புகிறது .................
உங்கள் எழுத்து நடை பிரமாதம்.வாழ்த்துக்கள்.
இக்கதையில் 3 வித காதலை அழகாக எழுதி வருகிறீர்கள்.மிகவும் அழகான பாத்திர அமைப்பு.
இந்த வார தொடரில் ஒரு குழப்பம் மட்டும் எஞ்சி இருக்கிறது.முன்கதையில் அதிக் அன்றிலை காதலிப்பது போலவே இவ்வளவு நாள் கதையை நகர்த்தி,திடீரெண்டு ஷாலு வுடன் நிச்சயம் செய்ய அவன் விருப்பம் காட்டுவது மிகப்பெரிய குழப்பம்.அதிக் மற்றும் அன்றில் காதல் கை கூடுவதற்கு அழகான காட்சி அமைப்பு இருக்குமென்று நம்புகிறேன்.
தற்பொழுது நிகழும் கதையில் இவர்கள் காதலை எப்படி காட்டப்போகிறீர்கள் என்பதை எப்படி யோசித்தாலும் புரியவில்லை.
தொடர்ந்து உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
ஆதிக் அன்றில் காதல் குழப்பத்தை இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்களில் முடித்துவிடுவேன். திருமணத்திற்குதான் சில அத்தியாயங்கள் தேவைப் படும். படித்துவிட்டு சொல்லுங்கள். மிக்க நன்றி.
Reyu-ku paavam evlo periya valiyai koduthutinga
Poo ondru pulaga mari varuthe antha mari shalu endra malar than kaadhalukaga thannai petravaraiyum utroraiyum ethirkka thuninthu vittathu
Sarithran-Shalu mrg eppadi nadanthuchu
Sarithran shalu appa va accept pannikitana
Reyu-ku enna shock kaathutrukku
s...shaluvum soozhnilai aluthangal...thevaiyana thairiyathai ondu vanthu koduthu vittathu,,,,aathodu athu avalathu thanthaiyai thaakinaalum kooda kudumbathirku thevaiyaana anaithu maatrangalaiyum pirapithuvittathu
Oru doubt. unga rendaavathu kathaila vantha ammavoda aavi shaalu udambula pugundhuduchaa? Thideernu intha podu podara. Ithukkuthaan over silent pervazhigalai nambave koodathu, yeppo vedipaanganne theriyaathu. Shalu yenmaa yen. Ippadi yaaraiyume purinchukkaama pesara. Ungappa unkitta onnaan class padikkarathu lernthey yethuvum kettathu illaiye. Ippo yeppadi ketpaar. Ithanai naal nee mandai aattinaa maathiriye aattuvennu ninaichirupaar.
Aadhi nee pesara mothamum unakku aappaa pochu.
Thelivaa solli irukkalaam. Paavam ponnu yethanai kashtapattu pochu.
Total familyum kuzhambi irukku, yeppo yellaarum thelivaa purinchukka poraanga????
AAdhi pesi aapu vachukttaar
Kolappam ellam middle and end la varathu madam. first la than varum. thelivaathan puriyuthu.
தவறான புரிதல் என்ற திரை உள்ளத்தை மூடியிருக்கிறது. காதல் துரத்துகிறது தன்னைப்புரியவைத்து காதலை மறைத்துள்ள திரைவிலக்கி மறைந்துள்ள மனதை வெளிக்காட்டிவிட .. நேசத்திற்குரிய பெண்மையோ துரத்துவது ஆண்மையல்ல காதல் என்பதை அறியாது கோபத்தின் உதவியுடன் காதல் கைக்கெட்டாத தூரம்வரை ஓடிவிட்டது. காதல் காலம் வரும்வரை காத்திருந்தது. காத்திருக்கிறது.
சரித்திரன் சாலு காதலோ பிரிக்க நினைக்கிறார் எனக்கூறிய அப்பாவின் துணையுடன் இல்லறத்தில் இணைய ஆதிக் –ரேயு காதலோ கண்ணிலிருந்து மறைந்தாலும் கருத்திலிருந்து மறையாமல் தனித்தே காத்திருக்கிறது கைசேரும் நாளுக்காக...
எல்லா சம்பவங்களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனது தனக்குபிடித்த முடிவை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுகிறது. காட்சிகளும் சம்பவங்களும் மாறும்போது தன் முடிவையும் எண்ணங்களையும் நினைத்து சுய இரக்கத்தில் வேதனை கொள்கிறது. எண்ணங்கள் மாறலாம் முடிவுகள்?
எண்ணங்கள் எல்லாம் முடிவுகள் ஆவதில்லையே..
சாலு –சரித்திரன் பற்றிக் கொண்ணடிருந்த தவறான எண்ணம் அவள் அன்று சிந்திக்காமல் செய்த காரியம் சொந்தஊரைவிட்டு அவர்களை வேறு ஊருக்கு வேரோடு இடம்பெயர்த்துவிட்டது.
ரேயா- ஆதிக் தெளிவற்ற பேச்சு
காதலை நேரடியாக வெளிப்படுத்துவதற்கும் மறைமுகமாய் வெளிப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.
நேரடியாக வெளிப்படுத்தும் போது இருக்கம் தெளிவு பல குழப்பங்களைத்தவிக்கும்.
மறைமுகமாக வெளிப்படுத்தும்போது குழப்பங்கள் இலவச இணைப்பாய் இணைந்துவிடும்.
சாலு- சரித்ரனிடையே காதலில் தெளிவு இருந்தது. காரணம்பிரச்சனைகள் வந்தபோதும் சரித்திரன் தன்னைத்தான் காதலித்தான் தனக்கும் அவன்மீதுமட்டுமே நேசம் என்ற தெளிவு உறுதியாய் இருந்தது.
ரேயு-ஆதிக் பிரச்சனையில் ..பிரச்சனை எழவே ஆதிக் காதல் தன்மீதா சாலு மீதா என்ற குழப்பம்தான்
ரேயு-ஆதிக் குழப்பம் அவர்களை பிரித்துவைத்துவேடிக்கை பார்க்கிறது.
நேரடியாகச் சொல்வது கவனக்கலைப்பாக அமையுமென்றால் மறைமுகமாக காதலைக்காட்டுவது அதிக கவனக்கலைப்பையும் குழப்பங்களையும் வலிகளாய்மாற்றிவிடுகிறதே.
அவன் நேரடியாச் சொல்லாமல் அவள் காதல்
வளர்த்தது தவறு என்றால் அந்த தவறை அவள் செய்யும்படி அவளைத்தூண்டிய அவன் செய்கைகளும் தவறு.
மலர் வசி
தந்தையை ஏற்படுத்திய குழப்பம்(?) காத்திருந்து மகன்வாழ்வில் சுழலை ஏற்படுத்தி தவிக்கவிட்டுவிட்டது.
மலர் வாழ்வில் ஒரு புகைப்படம் மூலம் குழப்பம் அரம்பித்தது ரேயுவாழ்வில் ஏற்பட்ட குழப்பத்தில் ஒருபுகைப்படம்கூட இல்லாமல் போனது அவள் குழப்பத்திற்கு மேலும் தூபம் போட்டது.
Photo comparison.....Excellent Nithi
Appadi evlo emotions :) .. Reyu paavam
Unga Vaarthai jaalam Superb
Scene by scene Reyu oda emotions ah explain panni irukka vidham , I am just loving it.." ulagalaaviya athirchi 2","saethirundha Reyuvai thiruppi ezhupi saaga vaithathu" ipdi neraya :) Adhik paiya.. sodapunadhau ithanai varsham kazhichu dan theriyudha ya unakku
Saran - Anna Azhagu
1990 plot interesting
Waiting for ur next update :) :) :)
Aadhikkkkkkkkkkkkkk unnai ipdi sollitaangale....thulli elu...
Unge heroes epothume nallavangala than irukanum aana inga aadhik sothapitaru
Vasi mela doubt varuthe
Next epi la itha epdi nu solunga :)
என்ன மாதிரியான வார்த்தை பிரயோகம். ஒவ்வொரு வரியிலும் காதல் தெரிகிறது.
ஷாலு தன்னை வெளிப்படுத்துகிறாள்.ரேயா தனக்குள்ளயே மறைந்து கொள்கிறாள். இருவரின் உணர்ச்சிகளின் முரண்பாடு உங்கள் எழுத்துகளில் அழகாய் புரிகிறது.
ipa ena pana porarm waitng angrily to read nxt epi of adhi explatn scens ;>
waiting angrily...
Reyu wat a change over.
Yen ma mama chittpa la arambichu Athan varaikum avalo yosichiye unnai parkkave mudiyala Nu sonatha crct ah miss pannitiye.
Yen ba aadhik un akka ta pesa viduvangala nu ketiye a the Mathiri un thangachi kitta enna pathiya pesa sollunu solli irukalam illa.
Shalu saran samathanam theriyanum 1990 reveal aganum.
Adhik appa va Pathi yosikanum athuku naduvula vitta love ah cnt pannanum.
Anna means saran super
aadhik thankachiyai kettirunthaarna...naan ESV eluthirukave maatene....athaan
Enaku vaseegaran mela doubt iruku?
Waiting for next episode
Enaku vasi mela konjam doubt ah irukku
Intha AAthik vera konjam sothapittaru, reyu pavam
pala kelvigaluku pathilgal kidaichachu.
But Sarithran - shalu epadi samathanam aananganu oru open question innum irukku.
Also waiting to know about Malarvizhi - vasigaran track.
ange unmaiyil villain yaar?