(Reading time: 33 - 66 minutes)

ழுத ஷாலுவை அதை இதை சொல்லி….ஒரு வழியாய் தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்துவிட்டு பானுக்காவைக் கூப்பிட்டு காவல் வைத்துவிட்டு…..அப்பாவைத் தேடி மருத்துவமனைக்குப் பறந்தாள். இதற்குள் இவளது எண்ணில் பலமுறை ஆதிக்கின் மிஸ் கால்… முதன் முறையாக அவன் மேல் கோபம் வருகிறது ரேயாவுக்கு…..

ஷாலு சொன்னது உண்மைதானே…..அவனுக்குப் பிடிச்சா போதுமா….ஷாலுட்ட கேட்றுக்க வேண்டாமா? இத்தனைக்கும் இவ அப்பா பத்தி நல்லாவே அவனுக்கு தெரியும்….பொண்ணுங்க சம்மதத்தையெல்லாம் அப்பா கண்டிப்பா கேட்க போறது இல்லைனு அவனுக்கு தெரியாதா என்ன? நேர எங்கேஜ்மென்டுனு ஆள் அனுப்பி வச்சா என்ன அர்த்தம்?

இப்பொழுதும் இவளை அழைத்துக் கொண்டிருக்கிறான்….இவ அப்பாவப் பத்தி அழுவாளா…? இல்ல ஷாலுவப் பார்ப்பாளா….இதுல இவனுக்கு எக்ஸ்‌ப்ளனேஷன் கேட்க வேற ஆள் கிடைக்கலையா…? அவன் அம்மா அப்பால்லாம் எல்லாத்தையும் சொல்லி இருப்பாங்க தான… அவன் இணைப்பை ஏற்கவில்லை இவள்.

மருத்துவமனையில் மாமாக்கள் குடும்பத்தோடு  ஆதிக்கின் பெற்றோரும் நின்று அப்பாவைக் கவனித்துக் கொண்டார்கள்தான். ஆனால் இருட்டவும் அவர்கள் விடை பெற்றனர். அப்பாவும் ஆபத்தை தாண்டி இருந்தார்.

“அப்பாவையும் அக்காவையும் பார்த்துக்கோமா…இன்னும் நாங்க இங்க இருந்தா திரும்ப திரும்ப நடந்ததையேதான் எல்லோரையும் நினைக்கச் சொல்லும்….அதான் கிளம்புறோம்…பட் எப்ப எந்த ஹெல்ப் வேணும்னாலும் கூப்டு அடுத்த நிமிஷம் இங்க இருப்போம்….” ஜெயா இவளை அணைத்து ஆறுதலாய் முத்தமிட்டு விடை பெற்றார்.

அதுதான் அவர்கள் வீட்டோடு கடைசி சங்கார்த்தம். இப்போ ஆதிக்கை அதிரூபன் ஐபிஎஸ்ஸா பார்க்கும் வரைக்குமே…. ஏன்னா அப்பா பெட்ல இருந்து ரெக்கவராகி வீல் சேர்ல வீட்டுக்கு வரவும் செய்த முதல் வேலையே பிஸினஸை தூத்துக்குடியில இருந்து சென்னை ஹார்பர் பேஸ்டா மாத்தினதுதான். அதுவும் வீல் சேரில் இருக்கும் அவரின் உதவியுடன் தொழில் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரேயாவின் பெயருக்கே அனைத்தையும் மாற்றினார்.

ஷாலுவுக்குத்தான் இதற்குள் கல்யாணம் முடிவாகி இருந்ததே சரித்ரனோடு…. ஷாலோம் ஷிப்பிங்க்ஸ் இப்பொழுது அந்திரேயா டனேஜ் ஆகியது. வேர் முதலாய் பிடுங்கிக் கொண்டு சென்னைக்கு இடமாற்றம்… நடந்து போன நிகழ்ச்சி மகள்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடாதென்ற  அப்பாவின் நினைவு காரணம்.....

இனி அந்த ஊரில் இருக்கின்ற வரைக்கும் மகள்களை வாயில் வந்ததையெல்லாம் பேசும் ஊர்…ரேயாவுக்கு நல்ல வரன் பார்ப்பது கஷ்டமாகிவிடும்…….அதோடு தினமும் அந்த மக்களை இவர் குடும்பம் எதிர்க் கொண்டாக வேண்டும்… எப்படியும் ரேயா இஞ்சினியரிங்கை டிஸ்கன்டின்யூ செய்துவிட்டு பிசினஸைக் கவனிக்க வேண்டிய நிலை….சர்வைவல் நீட்…

ஆக இன்னும் தென்கோட்டையில்  எதற்காக இருக்க வேண்டும்…? தேவையில்லை…அவர் முடிவு அது. ஆனாலும் ரேயாவிடம் அவள் கருத்தை கேட்கவும் அவர் மறக்கவில்லை…. சென்னை அப்பா ட்ரீட்மென்டுக்கு பெட்டர் ப்ளேஸ்…அதோட ஷாலுவும் பக்கத்துல இருப்பா….இது ரேயாவின் வியூ. சென்னையில் பிஸினஸில் இவள் 18 வயதில்…… ஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாதெனினும் அப்பா சொல்ல சொல்ல அவரது கையும் வாயுமாகத்தான் இவள் வேலை பார்த்தாள். பின்பு ஒவ்வொன்றாய் பழகிப் போனது.

அதோடு இவ்னிங் காலேஜில் பி.பி.ஏ சேர்ந்தாள். அப்பாவும் 90 % உடல் தகுதியுடன் மீண்டிருந்தார் இடைப் பட்ட காலத்தில். அப்பா உடல்நிலை தேறியதால் எம் பி ஏ டே காலேஜில் ஜாய்ன் செய்தாள் ரேயா…. ஆனாலும் காலேஜிலிருந்து நேரே ஆஃபீஸ்தான் போவாள்…. அப்பாவிற்கு அவளிடமிருந்து பிஃஸினஸை திரும்பி வாங்க விருப்பம் இல்லை…

இப்பொழுதும் நடக்கும் போது சற்று வித்யாசம் தெரியும் நடைதான் என்றாலும் நார்மலாகவே இருக்கிறார் கம்பீரம் குறையாத அப்பா. குணம்தான் மொத்தமாய் மாறிப் போயிருந்தது. ஷாலு சரித்ரன் திருமணத்தை அவர் நடத்திய விதம் சாட்சி. சரித்ரனை தேடிச் சென்றது அப்பாவே தான். அதுவும் இவளை துணைக்கு அழைத்துக் கொண்டு….ஒவ்வொன்றிலும் ஷாலுவின் விருப்பம் கேட்டு… அவளோடு ஆலோசித்து என….தங்க அப்பா…..இன்றும் மகளோடும் மருமகனோடும் அன்பு உறவு நிலை அதோடு ஷாலுவின் மகன் வின்யத் செல்லமா விஞ்சுகுட்டிக்கு தாத்தா தி கிரேட்….

தில் இப்பொழுது வந்து நிற்கிறான் இந்த ஆதிக் ஷாலுவைத் தேடி திரும்பவும்…. முன் சென்று கொண்டிருக்கும் அவனது ஜீப்பின் மீது மீண்டுமாக படிகிறது ரேயாவின் பார்வை…. எது எப்படியோ இவனிடம் இப்பொழுது என்ன பேச….? அவள் மொபைல் சிணுங்கி கவனம் ஈர்த்தது.

அத்தான்….காலிங்……

இணைப்பை ஏற்றாள்.

“கார் ட்ரைவ் செய்துட்டு இருக்கியா அன்றில்?” சரனத்தான் இவ்ளவு ஃபார்மலாக இவளிடம் எப்போதாவது பேசியது உண்டா? எடுத்தவுடன்

“ஹேய்…இடி மின்னல் மோகினி எந்த பக்கம் உலாவிட்டு இருக்க?” என்று கேட்டிருந்தால் அது இயல்பு…இது என்ன திடீர்னு அன்றில்?

“ஆமா….என்னாச்சுத்தான்…?”

“இல்ல…ஒரு விஷயம் பேசனும்….பட் இப்ப வேண்டாம்…காரை விட்டு இறங்குன உடனே கால் மீ அப்…”

“எதைப் பத்தி பேசனும்…?”

“டிரைவ் பண்றப்ப வேண்டாம்னு சொன்னேன்..….பட் கால் மீ அசப்…” இணைப்பை துண்டித்திருந்தான்.

சண்டையோ சமாதனமோ சரன்ட்ட எப்பவும் டைரக்ட் டீலிங்தான் ரேயாவுக்கு….நோ ஃபார்மலிடீஸ்…அதுதான் இந்த இடி மின்னல் மோகினி பெயர்க் காரணம். அவங்க ஃபர்ஸ்ட் மீட்டிங் நடந்த விதம் அப்படி.….அப்பன்னு இல்ல அப்ப இருந்து இப்ப வரைக்குமே அப்டித்தான்…. அவள் அகராதியில் அண்ணன் மீன்ஸ் சரன் தான்…அண்ணனுக்கான டெஃப்னிஷனும் இவன்தான்…

இவ எமோஷனாகிற மாதிரி அப்டி என்ன விஷயமா இருக்கும்…? ட்ரைவ் செய்றப்ப கேட்க கூடாத விஷயம்????

1990 ஆம் ஆண்டு

லை வால் புரியவில்லை மலர்விழிக்கு….”என்ன சொல்றீங்க வசி….ஜெயாண்ணி ஹஸ்பண்டா…? இல்லப்பா நீங்க எதையோ தப்பா புரிஞ்சிருக்கீங்கன்னு எனக்கு தோணுது…அவங்க உங்கட்ட நல்லா இருப்பாங்களேப்பா…?”

“அதான் ஊர் உலகத்தை ஏமாத்த….எத்தன வருஷமா திட்டம் போட்றுக்கார்…சீ போட்றுக்கான் அந்த ஆள்….இப்ப கூட திட்ட வரமாட்டேங்குது எனக்கு என்னைப் போய் இப்டி செய்துட்டாரே மைய்யூ….”

“வசிப்பா…எதுனாலும் கொஞ்சம் டீடெய்லா சொன்னீங்கன்னாத்தான் அடுத்து என்னனு யோசிக்கலாம்….”

“எஸ்…..யு ஆர் கரெக்ட்….உனக்கு அதியோட ஃபோட்டோவை மாத்தி அனுப்புனது எங்க அத்தான்னாம் மைய்யூ….”

“என்னது….?”

“ஆமா….அப்டி செய்தா நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருக்காது….ஒன்னு வெட்டிங் அப்பவே நீ மேரேஜை நிறுத்திடுவ….இல்லனா அடுத்தும் என் கூட சேர்ந்து வாழ மாட்ட….இப்டி எது நடந்தாலும் எனக்கு குடும்பம் குழந்தைனு எதுவும் அமையாம போய்டும்னு அவர் நினச்சுருக்கார்…..ஏன்னா உனக்கு முன்னமே எனக்குன்னு பார்த்த  மூனு அலயன்சும் நான் கறுப்பா இருக்கேன் பார்க்க நல்லா இல்லைனு ஒரே ரீசன்காக வேண்டாம்னு சொல்லிட்டுப் போய்ருந்தாங்க….”

“உங்களையா…?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.