(Reading time: 33 - 66 minutes)

ம்…அப்ப நான் அத நம்புனேன்….இப்ப அதுவுமே அத்தான் ப்ளனா இருக்கும்னு தோணுது…சோ உன் ப்ரபோசல் வர்றப்பவே நான் படு டவ்ண் ஃபீல்லதான் இருந்தேன்…. அதோட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கவும் செய்துது….இதுவும் செட் ஆகலைன்னா எனக்கு மேரேஜே வேண்டாம்னு ஒரு எண்ணம்…”

“……”

“சோ அந்த டைம்ல உங்க வீட்ல உங்கப்பா ஓகே செய்தாங்க….உங்கப்பாட்ட என் ஃபோட்டோ கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு…இப்டி அதி போட்டோவ மாத்தி உனக்கு அனுப்பி… கல்யாணத்தை குழப்பிட்டா பிறகு நான் தனியாளாவே நின்னு போவேன்றது அத்தான் எதிர்பார்ப்பு போல…..எப்டியும் பின்னால என் சொத்து சம்பாத்யமெல்லாம் அவர் வாரிசுக்குத்தான போகும்….”

“……..”

“ஆதிக்குக்கு குடுன்னு கேட்டுறுந்தாங்கன்னா கூட கொடுத்றுப்பேன் மைய்யூ…..உனக்கே தெரியும் எனக்கு அவனை எவ்ளவு பிடிக்கும்னு…”

“ம்”

“ஆனா அவர் எதிர் பார்த்த ரெண்டும் நடக்கலைன உடனே அடுத்த ஸ்டேஜ் மூவ் செய்துறுக்கார்….அதியைக் கொன்னுட்டு ….அந்த பழியை என் மேல போட்டுடுவேன்னு என்னை மிரட்டி சொத்த எழுதி வாங்றதா ப்ளான்… அதனால அதியைக் கொல்ல ட்ரை செய்துறுகாங்க….அதுவும் நான் சொல்லி செய்ற மாதிரி எவிடென்ஸோட அதிக்கு வாட்டர்ல பாய்சன் ஆட் செய்துறுக்காங்க….அதுல அவர் தப்பிச்சா அடுத்த அட்டெம்ட் செய்யலாம்னு ப்ளான் போல….”

“ஓ மை காட்”

“அதுல போய் நீ மாட்டிறுக்க……சூசைட் அட்டெம்ட்னு உனக்கு ஹாஸ்பிட்டல் அட்மிஷன் வேற….இது அவங்க ப்ளாட்டுக்கு இன்னும் ஸ்ட்ரென்த் சேர்த்துட்டு…..”

“அதெப்டி…இது அவங்க ப்ளனா குழப்பதானே செய்துறுக்கு…?.”

“இல்ல உனக்கு என் மேல இஷ்டம் இல்ல, பட் அதி மேல இஷ்டம்……நீ போய் அவர்ட்ட உன்னை ஏத்துக்க சொல்லி கெஞ்சுற….அவர் நோ சொல்லிர்றார்….சோ நீ அவர் வீட்லயே பாய்சன் சாப்டு சூசைட் அட்டெம்ட் டு புட் ப்ரெஷர் ஆன் ஹிம்……இந்த விஷயம் தெரிஞ்சு நான் அதி இருக்ற வரைக்கும் நீ மனசு மாறி என் கூட சேரவே மாட்டேன்னு நினைச்சு , அஸ் அ பொசசிவ் ஹஸ்பண்ட் அதிய மர்டர் செய்துர்றேன்…”

மிரண்டு போய் பார்த்தாள் மலர்…. ”அப்ப அதி….?”

“ஹி இஸ் நோ மோர்….அ…அவர கொன்னுட்டாங்க… அதுவும் அதுவும்….என்ன வச்சே அவர கூப்பிட்டு வசி’ஸ் க்கு வர வைச்சு….”

“என்ன வசிப்பா சொல்றீங்க….?”

“ஆமா மைய்யூ நான் ஏமாந்துட்டேன் மைய்யூ….. நானே கூட நீ செய்தது சூசைட் அட்டெம்ட்னுதான் நினச்சேன்…. எனக்கு என்ன செய்யன்னே தெரியலை மைய்யூமா…. எப்டியாவது உனக்கு ஹெல்ப் செய்யனும்…நீ அந்த மென்டல் டார்ச்சர்ல இருந்து வெளிய வந்து சந்தோஷமா இருக்கனும்னு நினேச்சேன்…..பட் வழி தெரியலை….. எப்பவும்  என்னால ஹேண்டில் செய்ய முடியாத அளவு பெருசான ப்ரச்சனைனா நான் டேவிட் அத்தான்ட்டதான் ஹெல்ப் கேட்ப்பேன்… மனசளவுல அவர் என் ஹீரோ….அப்டித்தான் என்னை நம்ப வச்சுருந்தார் இப்போ வரை…..அதே மாதிரி இதையும் அவர்ட்ட சொன்னேன்…..”

“அவர்தான் அதியே தான் பியூலாவ விரும்புற விஷயத்தை உன்ட்ட சொல்ல வேண்டிய வகையில சொன்னா நீ அதிய விட்டு மனசளவுல விலகிடுவன்னு சொன்னார்….எனக்கு அவர் சொல்றத எப்பவுமே நம்பிப் பழக்கம்…சோ இதுவும் சரியாத்தான் பட்டுது….

ஆனா இதை நானே எப்டி நேரடியா அதிட்ட சொல்றது….? என்ன இருந்தாலும் உன்  ஹஸ்பண்டா நான் போய் அதிட்ட நீ பேசிதான் என் வைஃப் உன்ன மறப்பான்னு எப்டி சொல்ல…? எனக்கு ஹெசிடேஷனா இருந்துது…என் குணம் தெரிஞ்ச அவர் இதை எதிர் பார்த்திருக்கனும்…

அவர் நீ போய் அதிய ஆஃபீஸ் கூட்டிட்டு வா…நான் அதிட்ட பேசிக்கிறேன்னு சொன்னார்….சோ அத நம்பி நான் அதிட்ட எனக்கு ஒரு ஹெல்ப் வேணும், ஆஃபீஸ் வாங்களேன்னு சொல்லி கூட்டிட்டுப் போய், அத்தான்ட்ட இன்ட்ரோ கொடுத்து விட்டுட்டு வீட்டுக்கு வந்தப்ப தான் நீ உன் லவ் ஐ சொல்லி எனக்கு உன்னை புரிய வச்ச…..அதோட நீ செய்தது சூசைட் அட்டெம்ப்ட் இல்லைனும் சொன்ன….அதோட அதிய ஏற்கனவே கொலை செய்ய சதி நடந்துருக்கும்னும் சொன்ன…..அப்பதான் எனக்கு கொஞ்சம் உறுத்த ஆரம்பிச்சுது….

“ஸ்டில் இவ்ளவு மோசமா ப்ளான் செய்துருப்பாங்கன்னு நான் யோசிக்கலை…நான் ஆஃபீஸ் போனா அதியோட ….அதிய….அப்பதான்….தே ஹவ்….ஃபினிஷ்ட்….என்னால தாங்க முடியலை மைய்யூ….”

“ வசிப்பா…” மலரும் வசீகரனும் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்திருந்தனர். நடுங்கிக் கொண்டிருந்தது இருவர் தேகமும்…

“இப்ப என்னை காப்பாத்றது உன் கைல தான் இருக்குது மைய்யூ…”

“நான் எ..என்ன  செய்யனும் வசி….?”

“ போலீஸ் உள்ள வந்தா முழுக்க முழுக்க மாட்டப் போறது நான்தான்….என் ஆஃபீஸ்ல வச்சு…..நான் கூட்டிட்டு வந்து….என் பிஸ்டலால அதிய ஷூட் செய்த மாதிரி எல்லா எவிடென்ஸும் இருக்குது….என் பிஸ்டலை எனக்கு தெரியாம எடுத்துறுக்காங்க….”

“ஐயோ அப்ப நாம எப்டிப்பா தப்பிக்கிறது..?”

“அதுக்கு அவரே ஒரு வழி சொல்றார்….அதி அப்பா ஒரு வித்யாசமான ஆளாம்…..ரொம்ப ஒழுக்கம் பார்க்ற டைப்பாம்….….அவர் ஊர்ல எல்லாம் அவர் சொல்றதுதான் சட்டமாம்….அது எனக்கும் கொஞ்சம் தெரியும்…அதி பாடியை அவர்ட்ட போய் நாம ஹேண்ட் ஓவர் செய்யனுமாம்….அதுவும் அதி உன்ட்ட தப்பா நடந்துக்க பார்த்தார் அதுல நடந்த சண்டைல, உன்னை காப்பாத்த நான் ஷூட் செய்துட்டேன்னு சொல்லி….”

“ஐயோஓஓ”

“அவர்ட்ட நீ அழுது என் மானத்தையும் என் குடும்ப மானத்தையும் காப்பாத்துங்க… இனிமேலாவது எங்களை நிம்மதியா வாழவிடுங்க….இதை சூசைட்னு சொல்லி டெட் பாடிய இப்பவே டிஸ்போஸ் செய்துடுங்கன்னு கேட்டுகனுமாம்……அவர் அதுக்கு ஒத்துட்டு நீங்க சொன்ன மாதிரி செய்துடுவார்….அவர் ஊர்ல சூசைட் கேஸ் கூட ரிஜெஸ்டர் ஆகாது….நீங்க வசி’ஸ் ஐ எனக்கு ட்ரான்ஸ்ஃபெர் செய்துட்டு எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போடுங்கன்னு சொல்றார்….”

“அதெப்டி அதி…இவ்ளவு செஞ்சவங்க இதுக்கு மேல நம்மள எப்டி சும்மாவிடுவாங்க…இதை கேஸ் இல்லாம ஆக்கினதும் நம்மையும் கொன்னுட்டாங்கன்னா…? இது கேஸாகி போலீஸ் வந்து குடஞ்சா அவங்க மாட்டிக்கிடுவாங்கன்னு கேஸே ஃபைலாகாம இருக்க இப்டி ப்ளான் செய்யலாமில்லையா அவங்க…?”

க்‌ஸாக்ட்லி….அதுதான் ஒரிஜினல் ப்ளான்…” சொல்லியபடி உள்ளே வந்தான் ஒருவன் முகம் எங்கும் தாடியுடன் தலையிலிருந்து தோள்வரை வடியும் நீள பாப் கட் ஹேருடன்…கையில் பிஸ்டல்….

“டைரக்டா உங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டு வசி’ஸ் ஐ எடுக்க பாஸுக்கு எவ்ளவு நேரமாகிருக்கும்….? பட் நீங்க ரெண்டு பேரும் செத்துப் போய், வசிஸும் திடீர்னு பாஸ் நேமுக்கு மாறிச்சுன்னா அடுத்தும் அவருக்கு ப்ரச்சனைதானே…. வசீகரன் சார் ஃப்ரென்ட் சர்கிளே தெருவுல போற ப்ரச்சனைக்குல்லாம் போர் கொடி தூக்ற கூட்டம்….இதுல இந்த விஷயத்துல சந்தேகம் வந்தா அவங்களே கோர்ட் கேஸ்னு இழுத்துட மாட்டாங்களா? அதனாலயே நீங்க உயிரோட இருக்றது அவசியமாகிடுது…. கடனுக்காக கம்பெனிய வித்துட்டு அவமானத்தால ஊரவிட்டு போய்ட்டீங்க அப்டின்னுதான் உங்களுக்கு சீன் ரெடி செய்து வச்சுறுக்கு…. அந்த ஆன்ட்ரூவ  கொல்லாம, மிரட்டி சொத்த  பிடிங்கிட்டு கடன் ட்ராமா போட்டு துரத்திவிட்டா, எப்ப எப்டி திரும்பி வந்து ப்ரச்சனை செய்வீங்களோன்னு இருக்கும்….இப்பன்னா எப்ப நீங்க உங்க சொத்து கேட்டோ இல்ல நியாயம் கேட்டோ போர் கொடி தூக்கினீங்கனாலும் இந்த ஆன்ட்ரூ மர்டர் சார்ஜ் உங்க மேலதான்….

இதெல்லாம் எதுக்கு சொல்லிட்டு இருக்கேன்னா மலர்விழி மேடம் நீங்க பயப்படாம நம்பி போய் அந்த ஆன்ட்ரூவோட  அப்பா கால்ல கைலவிழுந்து கேஸாகாம பார்த்துக்கோங்க…. மத்தபடி நீங்க திரும்பி வந்து ப்ரச்சனை செய்யாத வரைக்கும் உங்களுக்கு எங்க பாஸ்ட்ட இருந்து நோ ப்ராப்ளம்…பாஸுக்கும் நிம்மதியா வாழனும்னு ஆசை இருக்குதுல்ல….

ன்ட்ரூ உடல் எடுத்துச் செல்லப்பட்ட அதே வேனில் வசீகரனின் கைகளுக்குள் சுருண்டு கிடந்தாள் மலர். அந்த பிஸ்டல்காரனும் இவர்களுடன் பயணம் செய்தான்…. ஆன்ட்ரூவின் சொந்த ஊரைப் பார்த்து விரைந்து கொண்டிருந்தது வேன்…  

Friends எனக்கு இது கொஞ்சம் ட்ரிக்கியான எபிசோடா ஃபீல் ஆச்சுது. இதை வாசித்தவுடன் புரியும் படியாக நான் கொடுத்திருக்கிறேனா,  இல்லை இன்னும் எளிமை படுத்தியிருக்க வேண்டுமா என ஒரு கேள்வி எனக்குள். ப்ளீஸ், உங்கள் கருத்தை தெரிவியுங்களேன்…நன்றிகள். 

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:876}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.