(Reading time: 33 - 66 minutes)

 “பிரவாயில்லமா….நாங்க நினச்சதை விட சீக்ரம் தென்கோட்ட ரீச் ஆகிட்டோம்….இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் வர்றோமில்லையா….அதான் டைமிங் தெரியலை…சரி  வந்து ஏன் வெளிய வெயிட் செய்யனும்….சீக்ரம் இங்க வந்துட்டா இன்னும் கொஞ்ச நேரம் அதிகமா உங்க கூடல்லாம் இருக்கலாம்னு தோணிச்சு சோ வீட்டுக்கே வந்துட்டோம்….நோ ஃபார்மாலிடீஸ்….முதல்ல இது என் ஃப்ரெண்டு வீடு….அப்புறம்தான் அடுத்தது எல்லாம்…” சிரித்தபடி பேசிய டேவிட் சோஃபாவில் போய் அமர்ந்தார். அருகில் அவர் மனைவி ஜெயாவும்.

எதிரிலிருந்த சென்டர் டேபிளில் அவர்கள் கொண்டு வந்த தாம்பளத்தை வைத்தனர். அதில் என்னெதெல்லாம் இருந்ததோ அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அரை குறையாய் தெரிந்தது அந்த ஜுவல் பாக்‌ஸ்….கீழ்பாகம் மெரூன் நிற வெல்வெட்டிலும்…..மேல் பாகத்தின் ஒரு பகுதி கண்ணாடியிலுமாக…..உள்ளே இருந்தது அன்று அவள் தேந்தெடுத்த அந்த நெக்லெஸ் செட்….

நெஞ்சில் சம்மட்டியின் அடி. ஒருவகையில் எதிர்பார்த்தது தான் என்றாலும் எத்தனையாய் வலிக்கிறது? இதுக்கே இப்படினா இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கும்…அதுக்கெல்லாம்…?

“நீ தான் ரெண்டாவது பொண்ணாமா….? “ ஜெயா தான் கேட்டார். இயல்புக்கு வர துடித்தாள் ரேயா. “ஆ..ஆமா ஆன்டி…”

“ஆதிக்க தவிர எல்லோர்ட்டயும் நல்லா பேசுவன்னு அவன் சொன்னான்…”

அவன்ட்ட பேச இவள் தடுமாறிய காரணம் மட்டும் அவனுக்கு தெரிஞ்சுதோ…? குற்றக் குறுகல் குத்துகள் உள்ளே…

“பானுக்கா…” வந்தவர்கள் முழுப் பார்வைக்குள் எத்தனை நேரம் நடிக்க முடியும்…? இவள் சத்தம் கேட்டதும் பானுக்கா உண்ண குடிக்க என எதையோ எடுத்து வருகிறார்.

“நீயும் உட்காரும்மா….”

“அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்துட்டு வந்துடுறேன் ஆன்டி….” தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினாள் அவள்.

முதல் வேலையாக அப்பாவிற்கு தகவல்.

அடுத்து?? ஷாலு அறைக்குள் நுழைந்து கொண்டால் யாரும் இப்போதைக்கு உள்ளே வர மாட்டார்களே….அங்கு ஓடினாள்.

ஷாலு இன்னும் இரவு வீட்டிற்கு வரும் போது இருந்த அதே உடை, கலைந்த தலை, முகம் சுழித்த நிலை

“ஏய்…நீ என்ன இன்னும் கிளம்பாம நிக்க? அவங்க வந்தாச்சு….”

“நான் ஒருத்தன லவ் பண்ணேன் ரேயு…”

எங்கேயோ வெறித்த விழிகளுடன் ஷாலுதான்.

காதில் சரியாகத்தான் விழுகிறதா? ரேயாவிற்கு ஒன்றும் புரியவில்லை….உலகளாவிய அதிர்ச்சி நம்பர் 2

“நிஜமாத்தான்….”

சந்தோஷப் பட வேண்டுமா? அழ வேண்டுமா? இளையவளுக்கு சுத்தமாக புரியவேயில்லை.

“அவன் என்னை ஏமாத்திட்டான்…” செத்திருந்த ரேயாவை திருப்பி எழுப்பி சாக வைத்தது இவ்வரி.

“ஷாலூ….”

‘ஆமா…அவன் ஒரு பொறுக்கி….ஏமாந்துட்டேன்…” ஷாலு எந்த உணர்ச்சி வெளிப்பாடுமின்றி மரம் போல் சொல்ல அவளுக்குள் எத்தனை வலி இருக்கிறது என புரிந்த ரேயுவோ தன் சகோதரியை அணைத்திருந்தாள்.

ஐயோ கடவுளே கடவுளே…...தாங்க முடியலையே!!!!!

‘ஆதிக்கின் எனக்கு இந்த கல்யாணத்துல ரொம்ப இஷ்டம்….’நியாபகம் வருகிறது ரேயாவுக்கு. அவன் ஷாலுவை ஆற்றித் தேற்றிவிடுவான்…. ஆதிக் கூட இருக்றவங்களால சந்தோஷம் இல்லாம இருக்கவே முடியாது.

“அன்றில்…..” அப்பா வந்துவிட்டார்,

வேக வேகமாக கதவைத் திறந்து எட்டிப்பார்த்தாள்.

“இந்தா …..சீக்ரம் கிளப்பி கூட்டிட்டு வந்துடு…அவங்க அவட்ட பேச ஆசைப் படுறாங்க….” நகைப் பெட்டிகளை குடுத்த படியே சொல்லிவிட்டு சென்றார்.

ஷாலு இப்போதைக்கு நீ போய் ஜஸ்ட் இவங்க எல்லார்டடயும் சும்மா பேசிட்டு வா…. அவங்க போன பிறகு நாம அப்பாட்ட பேசிக்கிடலாம்னு சொல்லி இருக்கனுமோ…..இன்னைக்கு வரை ரேயு நினைத்து துடிப்பது இதைத்தான். ஆனால் அன்று அவள் சொன்ன விஷயம் வேறு….

“ஆதிக் ரொம்ப நல்லவங்க ஷாலு….உனக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்….உன் மேல அவங்களுக்கு ரொம்ப இஷ்டம்….உனக்காக வருஷ கணக்கா வெயிட் செய்துட்டு இருக்காங்க….உன்ன நல்லா வச்சுப்பாங்க…அவங்கள உனக்கு எப்டியும் பிடிக்கும்…..நீ கண்டிப்பா சந்தோஷமாயிடுவ…”

ஷாலுவுக்கும் இவளுக்குமாக சொல்லிக் கொண்டாள் ரேயா….ஆதிக் அடுத்தவளின் உரிமை….வலிக்க வலிக்க மனதில் பதிய வைக்கும் முயற்சி …சூட்டுக் கோலால் துடிக்க துடிக்க சுயமாய் சூடிட்டுக் கொள்ளும் அனுபவம்…. ஷாலுவின் அந்த மரத்த பார்வை இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. அப்படியே கதவைத் திறந்து கொண்டு வெளியே போவாள் அவள் எனத்தான் ரேயா எதிர்பார்க்கவில்லை. முந்தைய நாள் பயணத்தில் கசங்கிய ஒரு காட்டன் சல்வார்….நேற்று எப்பொழுதோ வாரிய முடி…அழுது வீங்கிய முகம்….இப்படியாக கல்யாணப் பெண் வருவாள் என யார் எதிர் பார்க்க….

ஷாலுவுக்குள் சரித்ரனைவிட்டு தப்பி வரும் உணர்வுதான் அப்பா வீடு வரும் வரையுமே….அப்பாவின் மடி பாதுகாப்புக் கோட்டை….அவ்வளவே….ஆனால் வந்தபின்….??? கோடி கோடியாய் சரித்ரனை வெறுத்தாலும்….உள்ளுக்குள்…..ஓரத்தில் அவனைத் தேடுகிறதே மனது….அவன் இல்லாமல் எப்படி வாழ்வதாம்….? சூன்யமாய் தெரிகிறதே உலகும் உயிரும்…….அவன் நல்லவனாய் இருந்திருக்க கூடாதா? இவள் எப்படியாய் அவனை நினைத்திருந்தாளோ அப்படியாய் மாறி வந்துவிடமாட்டானா அவன்?

எப்படி வருவான்? அவன்தான் ஆரம்பத்திலிருந்தே அவன் விருப்பத்திற்கெல்லாம் இவளை வளைத்திருக்கிறானே…..அவன் விருப்பத்திற்கு இவள் ஆடிய வரை எல்லாம் சுமுகம்….எப்போதெல்லாம் அதற்கு இவளிடமிருந்து எதிர்ப்பு வந்ததோ அப்பொழுதெல்லாம் கோபம் கொடூரம்…..உன் இஷ்டம் என இவள் அவன் காலில் விழுந்தால்தான் உண்டு….அவன் எங்கு மாற?

அவன் காதல்  என்று சொன்னால், இவள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு அவன் பின்னால் ஓட வேண்டும், பாட்டி வீடோ பாம்பேவோ சொல்லாமல் கூட கூட்டிப் போவான் இவள் பின்னால் போக வேண்டும், கல்யாணம் வரைக்கும் விலகி இருன்னு சொன்னா  இவ அன்சிவிலைஸ்ட், அப்பா பேச்சு கேட்டா இவ பயந்தாகொள்ளி, ஆனா அவன் மட்டும் அவங்க அப்பா பாட்டின்னு அத்தனை பேர் சொல்றதையும் செய்வான்…அதை இவளும் ஏன்னு கேட்காம ஏத்துகிடனும்…. செல்ஃபிஷ்…..இதுல அவன் மாறவா?

அவள் மனது உடைந்து உச்சத்தில் தவித்து ஒருவாறு மரத்திருந்த நிலையில்தான் இந்த கல்யாண கதையை சொல்லிவிட்டுப் போனாள் ரேயா…. ஆக ஏமாற்றியது சரித்ரன் மட்டுமல்ல அப்பாவும் தான்…அவள் பாதுகாப்பு கோட்டை இடிந்து விழுந்து சாம்பலானது மனதில்….

அந்த பக்கம் கல்யாணத்துக்கு சம்மதித்துவிட்டு….இங்கு வேற மாப்ள ரெடி செய்துருக்கார்….. எப்படி ஒரு துரோகம்….இவள ப்ரச்சனை செய்யாம வீட்டுக்கு வரவச்சு வந்ததும் வேற கல்யாணம் செய்து வைக்க திட்டமா….?

அதுகூட சரித்ரனை கழற்றிவிடதான் சம்மதிச்ச மாதிரி ட்ரமால்லாம்….அவன் எதுவும் செய்து இவளை அங்க பிடிச்சு வைக்காம இருக்கதுக்கு அப்படி ஒரு ஆக்ட்… அந்த அளவு கூட இவள கண்டுக்கலை….பொண்ணுதான எத்தன அடிச்சாலும் வாங்கிகிடுவா, இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவான்னு  நினைப்பு….ப்ளான் படி வந்திருந்தா இன்னைக்கு காலைல வந்திருப்பா…இப்ப மூனு மணிக்கு எங்கேஜ்மென்ட்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.