(Reading time: 33 - 66 minutes)

துத்துப் பேசுவான்னு கூட நினைப்பு இல்ல….வான்னா வந்து நிப்பா பயந்தா கொள்ளின்னு என்ன ஒரு நம்பிக்கை…திமிர்…. இதுல இப்ப வந்து சொல்றா ரேயு… வந்திருக்கிறவன் இவளை வருஷ கணக்கா லவ் பண்றானாம்….அவனுக்கு பிடிச்சா போதும்னு நினைப்பு….அதான் நேர எங்கேஜ்மென்டுக்குன்னு வந்து நிக்கான்…இவளுக்கு பிடிக்குதா பிடிக்கலையான்னு எந்த நினைப்பும் கிடையாது…. அப்பாவோ சரித்ரனோ இந்தா வந்திருக்கும் இவனோ….எல்லோரும் ஒரே குட்டையில் ஊறுன மட்டைங்க….

ஒரு ஆண் விரும்பிட்டா….அவங்க விரும்புனதெல்லாம் சுத்தி இருக்க பொண்ணுங்க செஞ்சுரனும்….அதுக்குத்தான் பொண்ணுங்க இருக்றதேன்னு எல்லோருக்குமே நினைப்பு…..பொண்ணுங்களுக்குன்னு சுயமா மனசு ஆசை வலி விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாதா?….உயிருள்ள ரோபோவா பொண்ணுங்க….?

இதுவரைக்கும் அப்பா சொன்னபடியெல்லாம் ஆடி இருக்கா….அடுத்து சரித்ரனோட இழுப்புக்கெல்லாம் ஓடிருக்கா…..இப்போ இந்த இவனா….? அவங்க மகனுக்கு இஷ்டம்னா இப்டி தட்ட தூக்கிட்டு வந்துடுவாங்களாமா…? இவ விருப்பத்த பத்தி யாரும் யோசிக்க மாட்டாங்களாமா? இதுதான் அடுத்த அவளது சிந்தனை. எவ்வளவு நாள் தான் அத்தனை பேருக்குப் பொறுத்துப் பொறுத்து போக….?

 இவள் மாடிப் படி இறங்கும் போதே பின்னால் ஓடுகிறாள் ரேயா…..தாய் மாமா மூனு பேரோட குடும்பமும் வந்திருக்காங்க இதுக்குள்ள, அதோட உள்ளூர்ல இருக்ற ரிலடிவ்ஸ் அப்பா  ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோரும் வந்தாச்சு……..ஐயோ இதுல இவ ஏன் இப்டி இறங்கிப் போறா…?

ரேயா!!!! உறுமினார் அப்பா….

ஷாலுவுக்கு எது அந்த சோ கால்ட் மாப்பிள்ளை என புரியவில்லை….அவன் வரவில்லை என இவளிடம் யாரும் சொல்லவில்லையே….. நேராக ஆதிக்கின் அம்மா முன் போய் நின்றாள் ஷாலு….. ஏனோ பார்த்ததும் புரிகிறது நடுநாயகமாக உட்கார்ந்திருந்த அந்த தம்பதிகள்தான் பையனைப் பெற்றவராக இருக்க வேண்டும்…

“உங்க பையன் ஆசப்பட்டா தட்ட தூக்கிட்டு வந்துடுவீங்க என்ன? எனக்கு விருப்பமா இல்லையான்னுலாம் கேட்க மாட்டீங்க?” இவள் வந்து நின்ற கோலத்திலும் பேசிய தொனியுலும் விரைத்து எழுகிறார் ஜெயா….

டேவிட்டோ “அப்டில்லாம் இல்லமா…..உன் விருப்பமும் எங்களுக்கு முக்கியம்தான்மா….” அவளை இயல்பாக்க முயல்கிறார்.

சுத்தி இருந்த கூட்டத்தில் கடும் சலசலப்பு…

“மூத்த பொண்ணு லூசோ? அதான் வெளியூர்லயோ வச்சு வளத்தாரோ ராஜ்குமார்…. “இறங்கிச் செல்லும் மாடி படிகளுக்கு பக்கத்திலிருந்த சோஃபாவில் இருந்த யாரோ தங்களுக்குள் பேசிக் கொள்வது ரேயாவின் காதுகளில் விழுகிறது….ஒடி கொண்டிருந்தாள் ரேயா ஷாலுவை நோக்கி….

“என் விருப்பமா…? உங்க பையன் அவனுக்கு ஒரு பொண்ணு மேல ஆசைன்னு சொன்னதும் கிளம்பி வந்துருக்கீங்க…..அதே மாதிரி  நான் சொல்லிருந்தா எங்க வீட்ல என்னை வெட்டி புதச்சிடுவாங்க…..பையனுக்குன்னா ஒரு சட்டம்…பொண்ணுக்குன்னா வேற என்ன…?.”

“ரேயா….” அப்பா உச்சஸ்தாதியில் கத்துகிறார்.

“அப்டில்லாம் இல்லமா…..உன் விருப்பம் இல்லாத எதுவும் இங்க நடக்காது….” ஆதிக்கின் அப்பா சாந்தப் படுத்த முயல்கிறார் ஷாலுவை…

இதற்குள் தங்கை அக்காவை அடைந்திருந்தாள்.

“ப்ளீஸ்….உள்ள வா நீ….” கண்ணில் கண்ணீரும் மனமெல்லாம் கொதிநீருமாய் இழுக்கிறாள் ரேயா ஷாலுவை. ஷாலுவுக்குள் இத்தனை பலமா? இல்லை மனதிலிருந்த பிடிவாதமா? அசைக்க கூட முடியவில்லை இவளால்…..

“நான் ஒருத்தனை லவ் பண்ணேன்…..அவன் கூட கல்யாணம் செய்து வைக்றேன்னு என் அப்பா கூட சொன்னாங்க…..அத நம்பி அவன்ட்ட தைரியமா பழகினேன்…..ஆனா அவன் என்னை ஏமாத்திட்டான்….இங்க எங்கப்பாவோ உங்கள வரச் சொல்லிருக்காங்க….….ஏன்னா அவங்க ரெண்டுபேருமே ஜென்ட்ஸ்…அவங்க இஷ்டபடி மட்டும்தான் நடந்துப்பாங்க….இப்ப இதுல உங்க பையன் மூணாவது….அவருக்கு இஷ்டம் வந்துட்டா போதும்…..நான் பின்னாடியே ஓடி வந்துடனும்னு….”

டேவிட் இப்பொழுது ராஜ்குமாரை திரும்பிப் பார்க்கிறார்…..அவர் முகத்திலுமே சூழலை கையாள முடியாத தவிப்பு…. அப்பா எழும்பி வரத்தான் இவ்வளவு நேரமும் நினைக்கிறார் போலும்..….ஆனால் எழும்பி நிற்கவே தடுமாறுகிறது அவருக்கு……

“நீங்க ஆம்பிளைங்க சொல்றதெல்லாம் நாங்க கேட்கனும்….உங்க இஷ்டத்துக்கு நாங்க ஆடனும்….நீங்க இருனா இருக்கனும்…சாவுன்னா செத்ரனும்….” அழுத்தமாக அசையாமல் நின்று இபடியெல்லாம் பெசுவது ஷாலுதானா?

“ரே…” அதுக்கு மேல் அப்பாவால் பேச முடியவில்லை. கோணிய வாய் காரணம்….இடது கையும் காலும் எங்கோ இழுக்க வலது கையால் இட மார்பை பிடித்தபடி சரிகிறார் அவர்.

எத்தனை பார்த்து பார்த்து பேணி காத்து வளர்த்து என்ன? அவர் தோற்றுவிட்டார்…..தோற்றேவிட்டார்….அவர் மகள் வாழ்வு சீரழிந்து போயிற்றே….……இனி அவர் பிள்ளைகளை எப்படி கரையேத்த போகிறார்? உள் இருக்கும் நோய் அதற்கு வாய்ப்பு கொடுக்குமா? இப்படியாக கொதித்த அவர் மனமும், ஈடு இணையற்ற இழப்பின் வேதனையும் ராஜ்குமாரின் நோயுற்றிருந்த இதயத்தை தாக்கியது மட்டுமல்லாமல், பரலிடிக் அட்டாக்கையும் கொண்டு வந்திருந்தது….

ஷாலுவை தள்ளிவிட்டு ரேயா அப்பாவை அடையும் முன் டேவிட் தன் நண்பரை தாங்கி இருந்தார். “அப்பா……அவ சொல்றதுல்லாம் இல்லப்பா…..நீங்க ரொம்ப நல்லவங்கப்பா….எனக்கு நீங்க வேணும்பா….அப்பா எனக்கு நீங்க கண்டிப்பா வேணும்பா….” ரேயாவின் சத்தம் அவருக்கு கேட்கிறதா?

“அன்….அன்….” அப்பா இவளைத்தான் கூப்பிடுகிறார்…. ஆனால் அப்பாவைத் நெருங்கக் கூட முடியவில்லை, அதற்குள் சுற்றி இருந்தவர்கள் கூட்டமாய் அவரை தூக்கி இருந்தனர்.

ஷாலுவுக்கு ஏற்கனவே எல்லாம் உச்சத்தை தாண்டி இருந்தது… ஃபார் அவே ஃப்ரெம் த த்ரெஷோல்ட்….இது எதையும் அவள் உணர்கிறாளா இல்லையா எனக் கூடத் தெரியவில்லை….திரும்பி தன் அறையப் பார்த்து ஓடினாள் அவள்…. அப்பா அந்த நேரத்திலும் இயக்கத்தில் இருக்கும் தன் வலக்கையால் எதையோ காட்டுகிறார்….திரும்பிப் பார்க்கிறாள் ரேயா….அங்கே ஷாலு.. எதோ புரிய அவளை நோக்கி ஓடுகிறாள் ரேயா…. அதற்குள் தன் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டி இருந்தாள் ஷாலு….

கீழே பார்த்தால் கூட்டம் அத்தனையும் அப்பாவுடன் போய்விட்டிருந்தது……ஒரு நொடி என்ன யோசிக்க வேண்டும் கூட தெரியவில்லை ரேயாவுக்கு…..தோட்டத்தில் கடப்பரை கிடக்கும் இடம் மனதில் வருகிறது….ஓடினாள்….. கடப்பாரையால் கதவின் பூட்டுப் பகுதியை….போடு…..ஓங்கிப் போடு…மூன்றாவது அடியில் திறந்து கொடுத்தது கதவு….

பெட்ல சேரை போட்டு….அதிலேறி ஃபேனில் துப்பட்டாவை வைத்து ஏதோ செய்து கொண்டிருந்த ஷாலுவை சேருடன் இழுத்து மெத்தையில் தள்ளினாள் தங்கை…. மொத்தையில் விழுந்தவளை மொத்த பலத்தையும் முழுதாக திரட்டி இறுக்கி அசையவிடாது அணைத்துக் கொண்டாள்….” எல்லாம் சரியாயிடும் ஷாலு…..எல்லாம் சரியாகிடும்….”

அக்கா மேல் கோபம் இருக்கிறதுதான் ரேயாவுக்கு….ஆனால் அவளது அக்காவைப் பற்றி அவளுக்குத் தெரியும்…..மிக மென்மையானவள்…. சாது…. அவளுக்குள் எத்தனை வலி இருந்தால் அவளால் இத்தனையாய் நடந்து கொள்ள முடியும் எனபது இவளுக்குப் புரிகிறது…. காதலன் பொய்த்துப் போவதன் வலி எத்தனை என்பது இவளுக்கும் தெரியும் தானே….இந்த நொடி கூட அதை சுமந்து கொண்டிருக்கிறாள் தானே….இன்நிலையில் ரேயுவுக்கு வேறு திருமணம் என்று யாராவது பேசினால் கூட தாங்க முடியுமா? ஷாலுவிடம் நிச்சயதார்த்தம் என்றல்லவா சொல்லி இருக்கிறது…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.