(Reading time: 33 - 66 minutes)

ரேயுமா….என்னமா….என்னாச்சுடா…ப்ளீஸ் பேசு  ரேயு…..”

இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க என்ன வழி? எங்க ஓடிப் போகனும்?

“ரேயு இருக்கியா இல்லையா ரேயு….?.”

“உங்களுக்கு இந்த மேரேஜில சம்மதமா ஆதிக் ?” அத்தனை அழுகையையும் அப்போதைக்கு அடக்கி, இழுவிய குரலை இழுத்துப் பிடித்து தெளிவாக கேட்டேவிட்டாள். அதற்குத் தானே இப்பொழுது இவனை அழைத்ததே.

“இதென்ன கேள்வி? “ என் ஆரம்பித்தவன்….”நான் நேர்ல சொல்லனும்னு இருந்தேன் ரேயு….. ஸ்டடீஸ் முடியட்டுமேன்னுதான் இவ்ளவு நாளா வெயிட் பண்ணது….பட் இப்டி” அவன் ஷாலுவிடம் நேரில் சொல்ல நினைப்பதை இவள் அவன் வாயிலிருந்து பிடுங்கி எடுக்க  முயல்கிறாளோ?

“ஒகே அப்ப நீங்க நேர்லயே பேசிக்கோங்க…..பை..”

“ஏய் கேடி எனக்கு இந்த மேரேஜ்ல ரொம்பவும் இஷ்டம்…மிச்சதை நேர்ல பார்த்து சொல்லிக்கிறேன்….இன்னைக்கு ஈவ்னிங் நான் வரக் கூடாதாம்….நேரே எங்கேஜ்மென்டுக்குத்தான் வருவேன்…அப்ப பார்க்கலாம்…அதுவரைக்கும் உனக்கு ஒரு ஹோம்வொர்க்…ஷாலுட்ட என்னபத்தி கொஞ்சம் சொல்லி வை….அப்பயாவது ஷாலு என்ட்ட ஒழுங்கா பேசுறாளான்னு பார்ப்போம்…..”

கொன்று குழியில் இறக்கி மண் அள்ளிப் போட்டு மூடியும் விட்டான் இவள் காதலையும் அதோடு சேர்ந்த எதிர்பார்ப்புகளையும். இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?????

கதவு தட்டப் படும் சத்தம். “அன்றில் என்ன செய்ற நீ…” அப்பாதான். அழுது கதற கூட வாய்ப்பில்லை. “இந்தா வர்றேன்பா…” அவசரமாக முகம் கழுவிவிட்டு எழுந்து ஓடினாள் ரேயா.

“இது சின்ன ஃபங்க்ஷன்தான் வெளியூர்ல இருந்தெல்லாம் யாரையும் கூப்ட வேண்டாம்னு சொல்றாங்க….சோ அதுக்கு ஏத்தமாதிரி என்ன ஜ்வல் வேணும்னு சொல்லு….நான் லாக்கர்ல இருந்து எடுத்துட்டு வர்றேன்…சாப்பாடுக்கு சொல்லிட்டேன்… வீட்ல என்ன செய்யனும்னு  பானுட்ட சொல்லிருக்கேன்…எல்லாத்லயும் நீ ஒரு கண்ணு வச்சுக்கோ….அப்பா இப்ப பேங்க் போய்ட்டு வர்றேன்…அதோட உன் அக்காட்ட அவளுக்கு என்ன வேணும், எப்படி செய்யனும்னு நினைக்கான்னு மேரேஜ் பங்க்ஷன் பத்தி கேட்டு வை…..அவ மனசுல உள்ளத டக்குனு பேசிக்கிட மாட்டா…..ஆனா ஒன்னு ஒன்னா சேத்துவச்சுகிட்டு பிறகு ஒரு நாள்ல பெருசா ஆர்பாட்டம் பண்ணுவா..…சோ பார்த்துக்கோ….”

அப்பா கேட்டதை செய்து கொடுத்து அப்பா விடை பெறவும், தனியாக தரையில் விழுந்து அழ நினைத்த மனதை ஷாலுவுக்கு இந்த நேரத்தில் இவள் செய்யாமல் யார் செய்வதாம் என்ற நினைவினால் கட்டி இழுத்து, அவளிடம் ஓடினாள். அதோடு என்றாவது ஒருநாள் ஆதிக்கிற்கோ அல்லது இவளது அக்காவிற்கோ இவளது கண்ணுக்கு தெரியாத காதல் தெரியவந்தால் எவ்வளவு மோசமாகிப் போகும்? இயல்பாய் இருந்தே ஆக வேண்டும் இவள்.

ஷாலு அறையை உள்ளே பூட்டி இருந்தாள். “நேத்து நைட் ட்ராவல்….பாவம்… தூங்றா போல இன்னும் டைம் இருக்கு, ஈவ்னிங் தான ஃபங்க்ஷன்…” .பானுக்காவைத் தேடி ஓடினாள். ஓய்ந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தால் கொன்று தின்று விடும் குருதி கொட்டும் இதயம்.

சற்று நேரம் இப்படியும் அப்படியுமாய் ஒவ்வொரு வேலைக்காய் ஓடிக் கொண்டிருந்தவள் மீண்டும் ஷாலுவின் அறை வாசலில் போய் நின்றாள். இப்பொழுதும் அது பூட்டியே இருந்தது

ஷாலு உண்மையில் உள்ளே சுருண்டு கிடந்தாள். முந்தியநாள் சரித்ரனை அவள் அறைந்தது ஒரு அனிச்சை செயல். அறைந்த பின்புதான் அவனை அறைந்துவிட்டோம் எனபதே அவளுக்கு உறைத்தது. அவன் முத்தமிட முயன்ற  அந்த நொடி வரை நிச்சயமாக அதை அவனிடமிருந்து அவள் எதிர்பார்த்திருக்கவில்லையெனினும், அந்த நேரத்தில் அவள் மனதில் அவன் பற்றி ஓடிக் கொண்டிருந்த அந்த கோப எண்ணங்கள் இல்லையெனில் இப்படி அறையும் எண்ணமும் அவளுக்கு வந்திருக்காதுதான். இயல்பாய் மறுத்து சற்று அழுத்தமாய் அட்வைஸ் செய்திருப்பாள். அவ்வளவே….அவன் மீது நம்பிக்கையும் காதலும் இவளுக்கும் உண்டுதானே….

ஆனால் அவன் அன்சிவிலைஸ்ட் பதம் அவளை தாக்கியவிதத்தில், கட்டுபாடின்றி வாழ்றது உனக்கும் பிடிக்கும், அதை நான் வரவச்சுடுவேன் என அவன் சொன்ன செயலில் இது நடந்தேறிவிட்டது. அடுத்தும் அவள் அவன் இப்படி மூர்க்கனாய் மாறுவான் என அவள் கற்பனையில் கூட நினைக்கவில்லை. அறைந்ததும் இனி அங்கு இருவருமாய் நிற்பது சரி இல்லை என்ற எண்ணத்தில்,  அவன் மீது ஒரு புறம் கோபமாயும் மறுபுறம் சூழ்நிலையின் கசப்பாலும் அவனை  வார்த்தையால் அழைக்காமல் காரைப் போய் ஸ்டார்ட் செய்தாள். ஹரியப்..அதுதான் அதன் மீனிங்.

ஆனால் அவன் அறை வாங்கியதும் இப்படி ஈகோ ப்ரோவாக்காகி வெறி மிருகமாய்…. வேட்டை நாயாய்….. இவள் மீதே வந்து விழுந்தான். அவள் அப்பொழுதும் முதல் நொடி அதை இப்படியாய் நினைக்க கூட இல்லை. ஆனால் அவன் ஆண் பல வேகத்தில் இவளை இழுக்க தொடங்கியதும்தான்…… இவள் உலகம் உடைந்து விழுந்து நொறுங்கிப் போனது.

ஆண்களால் எப்படி எல்லாம் ஆபத்து வரமுடியும் என சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டவள் அல்லவா, அதனால் ஆண்கள் இருக்கும் சூழலுக்குள் சென்றாலே இவளுக்கு ஒரு அலர்ட் ஃபீலிங்  எப்போதும் இருக்கும்…. முதன் முதலாக ஒரு ஆண் அருகில் இருப்பதாலேயே எந்த அலர்ட் ஃபீலிங்கும் இல்லாமல் ‘அவன் பார்த்துப்பான்’ என்ற ஒரு முழு பாதுகாப்பு உணர்வோடு இவள் வளைய வந்தது சரித்ரனின் பார்வை வட்டத்துக்குள் மட்டுமே….

ஆனால் இன்று அவனிடம் இருந்தே தப்பி ஓட வேண்டிய நிலை……அதுவும் சித்தப்பா வீட்டிற்குள் இவள் நுழையும் வரையும் விடாது துரத்தினானே….உயிரோடு செத்துப் போயிருந்தாள் ஷாலு….. அப்பாவுக்கு தெரியாம இவ செய்த ஒரே விஷயம் இந்த சரித்ரன்தான்….தோத்துட்டாளே… எத்தன சட்டமும் கட்டமுமாய் வளர்த்திருந்தாலும் அப்பா கூட இருக்கும் வரைக்கும் ஒரு துரும்பு கூட இவளை தவறா தொடவிட்டதில்லையே அப்பா…..அப்பா கூட இருந்தா மட்டும்தான் நான்  இனி சேஃபா ஃபீல் பண்ணுவேன்….

சரித்ரனின் செயலால் மிகவும் பயமாக நடுக்கமாக தனிமையாக உணர்ந்த ஷாலுவுக்கு அப்பா மடிதான் பாதுகாப்பு புகலிடமாக கோட்டையாக தோன்றிவிட்டது அந்நேரம். அழுது கெஞ்சி இரவோடு இரவாக வீடு வந்து நின்றாள் அவள். விழுந்துகிடந்தாள் அவள். கதவைத் தட்டும் சத்தம். கூடவே ரேயுவின் அழைப்பு….நகர மறுத்த உடலை இழுத்துச் சென்று போய் கதவைத் திறந்தாள்.

“ என்னாச்சு ஷாலு உனக்கு ஃபீவரா…?” இதுதான் ரேயுவின் கேள்வியாய் இருந்தது. அப்படி கலைந்து காய்ந்து முகம் வீங்கிப் போய் ஷாலு.

“இல்ல ரேயு….என்ன விஷயம்….கொஞ்சம் தூங்கனும்….?” கண கண என்றது குரல்.

நின்று நிதானமாய் விளக்கி விளையாடிச் சொல்லும் நிலையில் ரேயாவும் இல்லை.

“இன்னைக்கு ஈவினிங் உனக்கு எங்கேஜ்மென்ட்….கொஞ்சம் ரெடியாகி இரு ஷாலு…” இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கீழே கார்களின் சத்தம்.

அப்பா வெளியாட்கள் யாரையும் கூப்டலைனு சொன்னாங்களே……பின்ன இப்பவே யார் வந்திருக்கா? ஜெயசிங் மாமா வீட்ல இருந்து வந்துட்டாங்களோ…? இவள் மாடிப்படிகளில் இறங்கி எட்டிப் பார்க்க, ஆதிக்கின் மொபைலில் பார்த்த போட்டோக்களில் கண்ட அவனது அம்மாவும் அப்பாவும்….

ஓ மை காட்….இப்ப இவ என்ன செய்யனும்…? அப்பா கூட வீட்ல இல்லை….. ”ஷாலு அவங்கல்லாம் வந்தாச்சு….இந்தா இந்த சாரிய கட்டிட்டு சீக்ரமா கிளம்பி இரு….நான் அவங்கள ரிசீவ் செய்ய போறேன்…..” அவசர அவசரமாக கையிலிருந்த புடவையை ஷாலுவின் கையில் திணித்துவிட்டு தரை தளத்தை நோக்கி இறங்கி ஓடினாள். சொந்த சோகம் துணைக்கு ஓடியது.

கை அதுவாக தலை உடை என சீர் செய்து கொண்டிருக்கிறது……ஐயோ எனக்கு தாங்க முடியலையே ஏசப்பா….மனம் கதறிக் கொண்டிருக்கிறது.

“வாங்க ஆன்டி…வாங்க அங்கிள்…..உள்ள வாங்க…..அப்பா இப்ப வந்துடுவாங்க…..நீங்க உட்காருங்க…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.