(Reading time: 34 - 68 minutes)

 

தோட இன்னொன்னையும் ஞாபகம் வச்சுகோங்க எங்க அப்பாவுக்கு பயந்து ஷாலு இப்டி இல்லை…எங்கப்பா வியூ தான் அவளோட வியூவும்…அதான் அவ இப்டி இருக்கா….அவளால கல்யாணத்துக்கு முன்னால கோடு தாண்டி பழக முடியாது அதுக்கு காரணம் அப்பா அடிச்சுறுவாங்கன்ற பயம் இல்ல….அது அவளோட இன்னர் பெர்சன் . உலகம் முழுக்க பரவி ஆயிரக் கணக்கான மனித இனம் ஆயிரம் ஆயிரம் வருஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க… ஒரு கலாச்சாரத்தைப் பார்த்து அடுத்தவங்க காபி அடிக்க, இப்போ மாதிரி முன்ன கம்யூனிகேஷன் கிடையாது ஆனா எல்லா கலாச்சாரத்துலயும் எல்லா காலத்துலயும் கல்யாணம்னு ஒரு செர்மனி  இருந்திருக்குது….செய்ற முறைலதான் வித்யாசம் இருந்திருக்குதே தவிர…கல்யாணம்றது யுனிவர்சல்…அதுக்கு அந்த செர்மனிக்குப் பிறகுதான் ஆணும் பொண்ணும் சேர்ந்து வாழ்ந்திருக்காங்க…ஏன்? அது இன்ட்யூஷன், இன்னர் பெய்த்…இப்போ மாடர்னைசேஷன்னு ஸ்டேயிங்க் டுகெதர்…எக்ஸட்ரானு என்னலாமோ வந்துருக்கலாம்….அதுல இன்வால்வாகி இருக்கவங்கல்லாம் தான் தப்பு செய்யலைனு ஆணித்தரமா நம்ப கூட செய்யலாம்….பட் கண்டிப்பா அன்னோன் இன்னர் க்ரீவிங், டிப்ரெஷன்…இப்டி எதுலயாவது இழுபட்டுட்டுதான்  இருக்காங்கா…..ஏன்னா அவங்க  ஸ்பிரிட்…அவங்களோட இன்னர் மேன்…அதுக்கு அகெய்ன்ஸ்ட்டா இருக்குது அவங்க லைஃப்ஸ் ஸ்டைல்…… எங்கப்பா ஷாலு எனக்கெல்லாம் தன்னைதானே ஹர்ட் செய்துக்றதுல நம்பிக்கை இல்ல, அதான் நாங்க இப்படி இருக்கோம்… மை பாய்ண்ட் இஸ் என் அப்பா ஒரு பாறைனா அந்த பாறைல வடிச்ச சிலைதான் ஷாலு…என் அப்பா குவாலிட்டி எதுவும் அவட்ட இருக்க கூடாதுன்னு நீங்க நினச்சா அவளே இல்லாம போனாதான் உண்டு….எங்கப்பாவ மதிக்கலைனா உங்களால ஷாலுவ கண்டிப்பா லவ் பண்ணவே முடியாது…”

ஒரு ஜூசை எடுத்து நீட்டினான் சரன். “குடிச்சுட்டு கன்டின்யூ பண்ணு….” கேஷுவலாக சொன்னான்.

அடப் பாவி என்பது போல் ஒரு லுக் விட்டாள் ரேயா. “இவ்ளவு நேரம் நான் என்ன பேச்சு போட்டிக்கு ரிகர்சல் பார்த்தேன்னு நினச்சீங்களா?”

“இல்லையே…ஹானஸ்ட்லி ஸ்பீக்கிங் ஒரு லேடி லாயர் தான் எனக்கு  ஞாபகம் வந்தாங்க…”

முறைத்தாள் பெண் “இது திருந்தாத கேஸ்….அப்பா நீங்க சொன்னீங்கல்ல அந்த விழுப்புரம் மாப்ளைய நாளைக்கு வீட்டுக்கு வரச் சொல்லிடலாம்…” போலியாக விரைப்பாக சொல்லிவிட்டு  அவள் திரும்ப

“அம்மா தாயே அப்டில்லாம் எதையும் சொல்லிடாதம்மா….நான் கிண்டலுக்குத்தான் சொன்னேன்….” சரனும் விளையாட்டாய் சரண்டர்

“அது… அந்த பயம் இருக்கட்டும்…..நானும் விழுப்புரம் மாப்ளன்னு உங்களத்தான் சொன்னேன்…உங்க பூர்வீகம் அங்கதான்னு சித்தப்பா சொன்னாங்க…”

சிரித்தான் சரன்…

“ நீ என்னத்தான் சொல்றன்னு எனக்கும் தெரியும் ரௌடி….பைதவே உங்கப்பா ஒரு விஷயத்துல கண்டிப்பா ஒரு பெரிய தப்பு செய்திருக்காங்க, அத நான் சொல்லியே ஆகனும்…”

இப்பொழுது நிஜமாகவே உடல் விரைத்தாள் ரேயா.

“உனக்கு அன்றில்னு பேர் வச்சது தப்பு….இடி மின்னல் நு பேர் வச்சுருக்கனும்…”

“ஹி”

“அம்மாடியோவ் பயமா இருக்கே….இந்த சிரிப்பையும் சேர்த்துப் பார்த்தா பெர்ஃபெக்ட் நேம் இடி மின்னல் மோகினி தான்….”

“அப்டியே இந்த பயத்தை நீங்க மெயின்டெய்ன் செய்வீங்கன்னா, உங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் ஃப்ரெம் மை சட்…நாளைக்கே உங்க எங்கேஜ்மென்டுக்கு அரேஞ்ச் செய்றேன்….வசதி எப்டி…?”

“ம்…நாளைக்குத்தானா….ரொம்ப லேட்டா இருக்குதே இடி மின்னல்….இன்னைக்கு ஈவ்னிங்க்னு இல்லனாலும் இன்னைக்கு ஆஃப்டர்னூன்னாவது செஞ்சு தாயேன்….”

“ஏன் நேர்ல வந்து ஷாலுட்ட டைரக்டா ஹால்ல வச்சு அடி வாங்கிகிடலாம்னு பார்துடீங்களோ?...ஒழுங்கா அவட்ட இன்னைக்குள்ள பேசப் பாருங்க….அதுக்குத்தான் டைம் கொடுத்துறுக்குது….சித்தப்பா வீட்ல தான் அவ இருக்கா…..”

“அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்…பைதவே கேள்வி மட்டும் கேட்டுட்டு பதில கேட்காமலே கிளம்பிட்ட….”

“இந்த கேள்வியெல்லாம் கேட்க சொன்னது உங்க வருங்காலம்…..உங்கள பார்த்தா பேச வருமோ வராதோன்னு அவளுக்கு சந்தேகம் வந்துட்டோ என்னமோ என்னை தூது அனிப்பிருக்கா…சோ நீங்க ஆன்ஸ்வரை அவட்ட சொன்னா கூட போதும்….”

“தேங்க்ஃஸ் “ அவன் உணர்ந்து சொல்வது இவளுக்கு புரிகின்றது.

“மை அசட்டு அத்தான்…யூ ஆர் நாட் வெல்கம்…இன்னொரு டைம் இப்டி எந்த ஹெல்பும் என் சைட்ல இருந்து கிடைக்காது…செல்ஃப் மவுத் செல்ஃப் ஹெல்ப்….நீங்களே அவட்ட பேசி சமாளிச்சுகோங்க”

“ஷ்யூர் இடி…பட் உன்ட்ட ஒன்னு சொல்லனும்…நீ பேசுன எந்த விஷயத்திலும் எனக்கு எந்த டிஸ் அக்ரிமென்டும் கிடையாது…உன் அப்பா விஷயம் எனக்கு இவ்ளவு டீடெய்லா தெரியாது…அதால வந்த சில மிஸண்டர்ஸாண்டிங்க்….ஆனா ஒரு நாளும் நன் அவங்கள அன்சிவிலைஸ்டுனு சொன்னது இல்லை…கிண்டலா உன் ரிலேடிவ்ஸ் கேங்க் ஒன்னை அப்டி சொல்லிருக்கேன் அவ்ளவுதான்…. மேரேஜ் செர்மனி பத்தி நீ சொன்னது….அதுல என் வியூவும் 100% உங்கள மாதிரியேதான்….இல்லனா நான் ஏன்  இவ்ளவு நாள் வெயிட் செய்றனாம்…? மத்தபடி நீ சொன்னியே நானே யோசிச்சு நானே முடிவெடுத்துன்னு….அது ஷாலுவ டாமினேட் செய்யனும்னுலாம் இல்லை…சின்ன வயசில இருந்து தனியா வளர்ந்திருக்கேன்…என்னோட டெசிஷன்ஸை நானே எடுத்து பழக்கம் உன்னை மாதிரி எனக்கு சிப்ளின்ங்ஸ் யாரும் இல்லையா…சோ அடுத்தவங்க இடத்துல இருந்து யோசிக்றது ஸ்பான்டேனியஸா வரலைனு தெரியுது…அதை இனி கரெக்ட் செய்துக்க ட்ரை பண்றேன்….எப்ப நான் மார்க்கை மிஸ் செய்தாலும் யு கேன் ஆல்வேஸ் கம் அன்ட் ஹோல்ட் மை காலர் அஸ் மை சிஸ்…”

“ஏன் ஷாலு என்னை உதைக்கவா….? நீங்களாச்சு உங்க சண்டையாச்சு…ஆளவிடுங்கப்பா….”

ன்று சரித்ரனும் இவர்களுடன் சித்தப்பா வீட்டிற்கு வந்தான். இவர்கள் சித்தப்பா வீட்டை அடையும் போதே சரனின் கண்கள் ஷாலுவைத் தான் தேடின. அவள் மாடியில் அவளுக்கான அறையில் இருந்தாள். இவன் அறைக்குள் நுழைகிறான் என நிச்சயம் அவளுக்குத் தெரியும் ஆனால் இவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை அவள். பால்கனி வழியே எங்கோ பார்த்திருந்தாள்

“சாரி ஸ்ரீ….அது” இவன் ஆரம்பிக்கவும் சொன்னாள்.

“எனக்கு எந்த எக்ஸ்‌ப்ளனேஷனும் வேண்டாம்….”

புரியாமல் அவள் முகம் பார்த்தான்.

“நீங்களும் ரேயுவும் பேசுன எல்லாம் இங்க கேட்டுச்சு…” மொபைலை தூக்கி காண்பித்தாள் ஷாலு. ரேயா மொபைலில் ஷாலுவை ஆன் லைனில் வைத்துக் கொண்டுதான் சரனிடம் பேசியதே

“ கவுத்துட்டீங்களா….சரியான ரௌடி கோஷ்டிப்பா இது…ஆனாலும் நான் ஒரே பையனா போனத நினைச்சு இன்னைக்கு அளவுக்கு நான் என்னைக்குமே ஃபீல் செய்தது இல்லைப்பா…”

அங்கு இன்னும் ஆன் லைனில் இருந்த ரேயா ஸ்பீக்கர் வழியாக கத்தினாள் “ அத்தான் திரும்பவும் ஷாலுட்ட வந்து நீங்க அதேகதைய சொன்னா டைம் வேஸ்ட் ஆகுமேன்னு உங்களுக்கு டைம் சேவ் செய்து கொடுத்தா இப்டிதான் திட்டுவீங்களா…இருங்க இருங்க கல்யாண் டேட் இன்னும் நாலு மாசம் கழிச்சுதான்….”

“ஏய்…ரேயு…ஃப்ரிட்ஜ்ல கஸ்டர்ட் செய்து வச்சுருக்கேன்,,” ஷாலுதான்…

“ஹோய்…வேல முடிஞ்சதும் என்னை கட் பண்ணப் பாக்குறியா….நத்திங் டூயிங்…காலைல யார் கஸ்டர்ட் சாப்டுவா எனக்கு வேண்டாம்….நான் இப்படிதான் ஆன் லைன் மானிடரிங் டில் வெட்டிங்”

“சாரி ஸ்ரீ…ஐ’வ் ஹர்டட் யூ….ஐ டின்’ட் மீன் இட். ஐ லவ் யூ” சரன் சொல்ல அவசரமாக மொபலைப் பார்த்தாள் ஷாலு, ரேயா ஏற்கனவே இணைப்பை துண்டித்துவிட்டிருந்தாள்.

அப்புறமென்ன அடுத்து சில தினங்களில் எங்கேஜ்மென்ட்,  ஒரு மாதத்தில் கோலாகல திருமணம் சென்னையில். திருமணத்திற்குப் பின் ஷாலு சரித்ரனுடன் அவனது அலுவகம் செல்ல தொடங்கி இருந்த போது ரேயா தன் தந்தையுடன் சென்னையில் தன் அலுவலகத்தை தொடங்கி இருந்தாள். காலம் பறந்தோட இரண்டாம் வருடம் வின்யத் உதயம்.

ஷாலு சரித்ரன் வாழ்க்கை சர்க்கரைப் பந்தலில் சிந்திய தேன் மழைக் காலம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.