(Reading time: 34 - 68 minutes)

தில் அவளுக்கு அங்கு இருந்த சரனை தனியாக கவனத்தில் பதிக்கக் கூட தெரியவில்லை. அதோடு ஷாலுவுக்கும் அந்த நாட்களில் கடும் ஜுரம் கண்டிடுருந்தது. அந்நிலையில் அவள் அப்பாவை சந்திக்க மருத்துவமனை வர முடியாததால் சரித்ரனை ஷாலு வழியாக கூட அடையாளம் காணும் வாய்ப்பு ரேயாவுக்கு கிடைக்கவில்லை. அவன் ஓரிருமுறை இவளிடம் ‘ஷாலு இப்போ எப்டி இருக்கா’ ன்னு கேட்ட பொழுது கூட உறவினர்கள் பலரும் அதே போல் இவளிடம் விசாரித்ததால் அதே போல் ஒரு விசாரிப்பு என சாதாரணமாக எடுத்துக்கொண்டு தலையாட்டி வைத்ததோடு சரி. அவள் கவனம்  சரன் புறம் துரும்பளவு கூட திரும்பவில்லை..

ரண்டு நாளுக்குப் பின் ராஜ்குமார் உணர்ச்சி வசப்படமாட்டார் என உறுதியாய் தெரிந்த பின் தன் பெற்றோரை மும்பையில் இருந்து தன் வருங்கால மாமனாரைப் பார்க்க வர அனுமதித்திருந்தான் சரித்ரன். வந்தவர்கள் ஷாலுவையும் சந்திப்பதில் உறுதியாக இருக்க, முதன்முறையாக தங்களுக்குள் என்ன நடந்தது என சரித்ரன் வெளியிட வேண்டியதாயிற்று. அவர்கள் ஷாலுவை சந்திப்பதை தடுக்கவே அவன் அதைச் சொன்னான். அதுவும் தன் தாயிடம் மட்டும்.

இவாஞ்சலினுக்கு மகன் மீது கடும் கோபம்தான்…..ஆனால் அவன் ஏற்கனவே மிகவும் தவித்துப் போய் இருக்கிறான் என உணர முடிகிறதே. அதனால் அவனை காய்த்தெடுப்பதைவிட ஷாலுவை தேற்றுவதில் அவர் கவனம் செலுத்த விரும்பினார். அவளிடம் அதிக நெருக்கமாய் பேசிப் பழகியவர் ஆயிற்றே…அவளைப் பற்றி ஓரளவு அவருக்குத் தெரியுமே….ஷாலுவின் மனநிலை இப்பொழுது எப்படி இருக்கும் என்பது அவருக்கு புரியமுடிகிறதே….அதனால் விஷயம் தெரிந்தபின் ஷாலுவை சந்திக்கும் அவர் தீர்மானம் இன்னும் அதிகமாக தீவிரப் பட்டுப் போனது. இவாஞ்சலினும் ஜெயராஜும் மருத்துவமனையை அடைந்த போது ரேயா வீட்டிலிருந்தாள். ஆல்வின் சித்தப்பாவுடன் அவர்கள் இருவரும் தென் கோட்டை அடைந்த போது ரேயா தூத்துக்குடி அலுவலகம் சென்றிருந்தாள். ஆக அவளுக்கு அவர்கள் வந்து சென்றதே ரேயாவுக்கு தெரியாமல் போய்விட்டது.

இவாஞ்சலின்தான் ஷாலுவிடம் நடந்த விஷயத்தை சரன் கோணத்தில் முதலில் விளக்கியவர். நிச்சயம் அது ஒரு டெலிகேட் கான்வெர்ஷேஷன்….. சரித்ரன் நேரில் வந்து தனியாக இவளை சந்தித்து இவளிடம் இதைச் சொல்ல அனுமதித்திருப்பாளா இப்போதைய சூழலில் என தெரியவில்லை ஷாலுவுக்கு ஆனால் இப்பொழுது நம்பத்தான் தோன்றியது. அதோடு அவன் இவளுடனான உறவைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவு  தீவிரமாக இருந்தால் இந்த விஷயத்தைப் பேச அவன் அம்மாவை இவளிடம் அனுப்புவான்.

ஆனால் ஏனோ ஓடிப் போய் சரனிடம் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றவில்லை. இவாஞ்சலினிடம் பேசிய பின்பு சரன் இதோ இங்குதான் ஒரு மணி நேர தொலைவில் தான் இருக்கிறான் என புரிகிறதுதான். ஆனால் அவனைப் பார்க்கும் ஆவல் வர மறுக்கிறது. அன்றைய நிகழ்வுக்கு இது சரியான விளக்கமாக இருக்கலாம்….ஆனால் அந்த நிகழ்வைச் சுற்றி  இவள் மனதிற்குள் அவனைப் பற்றி எழுந்த பல கேள்விகளுக்கு விடை என்ன? எப்படியும் சரனுக்கு அவன், அவன் சார்ந்த உணர்வுகள், உறவுகள் அவைதான் முக்கியமே தவிர…இவள் உறவுக்கும் உணர்வுக்கும் அவன் வரையில் என்ன இடம் இருக்கிறது? மரத்திருந்தாள் ஷாலு.

“இவ்ளவு தூரம் தேடி வந்து , இதெல்லாம் என் மன நிம்மதிக்காக சொன்னதுக்காக ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி…”  இதோடு பேச்சை முடித்துவிட்டாள் அவள்.

இப்படி ஒரு பதிலை இவாஞ்சலின் ஷாலுவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஆனால் சின்னவளின் குரலை வைத்தே சரன் நினைப்பது போல் அதுமட்டும் விஷயம் இல்லை என்பதையும் அவரால் உணராமலும் இருக்க முடியவில்லை. ஆனால் இப்போதைய சூழலில் ஷாலுவிடம் எதையும் தோண்டி துருவவும் வழி இல்லை.  அதே நேரம் அப்படி ஒரு விரக்தியில் அவளை விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை. ஆனால் வேறு என்னதான் அவர் செய்துவிட முடியும்? மகனை சந்தித்து அனைத்தையும் சொல்லி சீக்கிரமே ஷாலுவை நேரில் சந்தித்துப் பேசும்படி கூறிவிட்டே சென்றார் அவர். சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் பேசாமல் தீராது என்பது அவர் எண்ணம். ஆனால் அதற்கான தருணம் ராஜ்குமாரின் உடல் நலம்தேறும் வரை கிடையாது என எண்ணினான் சரன். ஏனெனில் இன்னொரு தவறை இவன் காதல் தாங்காது.

க ராஜ்குமார் மருத்துவமனையில் இருந்த வரையுமே சரன் தான் ஷாலுவின் நாயகன் என ரேயாவுக்கு தெரியாமலே போயிற்று. ராஜ்குமார் டிஃஸ்ஜார்ஜ் ஆன அன்று அவரை வீட்டில் சென்றுவிட அவருடன் வரலாமா வேண்டாமா என சரனுக்கு ஒரு தெளிவில்லாமலிருந்தது. ஆனால் அவரே அவனை வீட்டிற்கு அழைத்தார். மாமா வீட்டினர் சிலரும் வீட்டிற்கு வரும் அப்பாவுடன் அப்படி வந்ததால் அப்பொழுதும் அவன் வரவை ரேயா கண்டு கொள்ளவில்லை. ஆனால் அப்பாவிற்காக காத்திருந்த ஷாலு, கம்பீர நடை போடும் அப்பா வீல் சேரில் வரப் பார்த்ததும் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அவரை அணைத்தாளே தவிர, அந்நேரம் கண்ணில் பட்ட சரனை ஒரு சாமானைப் பார்ப்பது போல் இயல்பாய் பார்த்துவிட்டு கடந்து போனாள். அதன் பிறகு அவளை சந்திக்க அவன் அங்கு எடுத்த அத்தனை முயற்சிக்கும் ஆப்பு. அவள் தன் அப்பாவை விட்டு அரை இஞ்சுக் கூட அகலவில்லை. அதை குறையாக எண்ண அவனுக்கும் தோணவில்லை. அவன் அப்பாவுக்கு இப்படி என்றால் அவன் மனதில் மட்டும் வேறு என்ன இருக்கும்?

அன்று மாலைக்கு மேல் அவன் அங்கு இருக்க முடியாதே கிளம்பிவிட்டான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையுடன் தான். அவன் கிள்ம்பிச் செல்லும்வரை அப்பாவைவிட்டு அசையாமல் இருந்த ஷாலு, “அப்ப கிளம்புறேன் ஷாலு” என அவன் விடை பெற்ற போது லேசாக தலையாட்டலுடன் நிறுத்திக் கொண்ட ஷாலுவுக்கு, அவள் பார்வையை விட்டு மறையும் நொடி அவன் முகத்தில் கண்ட அந்த பிரிவாற்றமையை காண தாங்கவில்லை.

அவன் கிளம்பிச் சென்றதும் இயல்பு போல் சென்று தன் அறைக்குள் நுழைந்து கதவை உட் தாட்பாளிட்டவள் கட்டிலில் விழுந்து கதறினாள். ஏதோ வேலையாக உள்ளே நின்றிருந்த தங்கையை அவள் கவனித்திருக்கவில்லை. ஷாலு ஏன் இப்படி திடீரென அழுகிறாள் என ரேயா விழித்தது இரு நொடி தான். காரணம் அதே நேரம் மாடியை திரும்பி திரும்பிப் பார்த்தபடி காரில் ஏறிக் கொண்டிருந்த சரன் பால்கனி வியூவில் பார்வையில் பட்டான். ஆக இவன்தான் மிஃஸ்டர். ஷாலு வா? இத்தனை நாள் அவ்வப்பொழுது ஹாஸ்பிட்டலில் அவன் பார்வையில் தட்டுப்பட்டதே இப்பொழுதுதான் உறைக்கிறது ரேயாவுக்கு. சோ அவன் ஏமாத்திட்டான்னு இந்த ஷாலு கத்துனது கரெக்ட் இல்ல போல…மனதிற்குள் நிம்மதி மழை. சரித்ரன் முன்னிலையில் அவனைக் கண்டு கொள்ளாமல் ஷாலு இருந்தாலும், அவன் கிளம்பிச் சென்றதும் மகள் முகம் சென்ற கோணத்திலேயே மகளின் மனம் புரிந்து போனது ராஜ்குமாருக்கு. அவர் சரனிடம் அவசரப் பட்டு எதுவும் வெளிப்படையாக சொல்லாமல் இருக்க ஒரே காரணம் ஷாலுவிற்கு இதில் விருப்பமா என அவருக்கு தெரிந்தாக வேண்டும்.

இப்பொழுது ரேயாவை அழைத்தார். “அன்றில் அந்த பையன் சரன் பத்தி  அக்கா என்ன நினைக்கிறான்னு கேட்டு சொல்லுமா….சீக்கிரம் கல்யாணம் பேசி முடிக்கனும்…”

அப்பாவுக்கும் சம்மதம் இருக்கிறது என தெரிந்தவுடன் தன் அக்காவிடம் துள்ளிக் கொண்டு ஓடினாள் ரேயா. ரேயாவை ரொம்பவெல்லாம் கெஞ்ச விடவில்லை ஷாலு. மனதில் இருந்த அனைத்தையும் தன் தங்கையுடன் கொட்டித் தீர்த்துவிட்டாள் அவள். தன் அப்பாவிடம் இந்த காரியங்கள் எதைக் குறித்தும் ரேயா பேசவில்லை. இதைப் பேச வேண்டிய இடமே வேறு. “ அவங்களுக்குள்ள ஒரு சின்ன மிஸண்டர்ஸ்டாண்டிங் பா….மத்தபடி ஒன்னுமில்லை,….”

மற்ற விஷயங்களை மறைத்தாலும் அந்த பாம்பே பயணத்தைப் பற்றி அப்பாவிடம் தெளிவு படுத்தினாள் ரேயா. ஏனெனில் அப்பா ஏன் வேறு மாப்பிள்ளைப் பார்த்தார் என காரணத்தை அவளிடம் சொல்லி இருந்தாரே. அவ்வளவுதான் அவர் இருந்த உடல்நிலையில் அடுத்த நாள் சென்னை ஃப்ளைட் ஏறிவிட்டார் அப்பா தன் மகள்களுடன். ஷாலுவை தன் தம்பி வீட்டில் விட்டுவிட்டு ரேயாவை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு சரித்ரன் வீட்டிற்கு சென்றார் ராஜ்குமார். அது காலை நேரம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.