(Reading time: 34 - 68 minutes)

காலிங் பெல்லிற்கு கதவைத் திறந்தவன் நிச்சயம் இப்படி ஒரு விருந்தாளிகளை எதிர் பார்க்கவில்லை.

“வாங்க அங்கிள் வா அன்றில்,” அவசரமாக வரவேற்றான்….ஆனால் அதில் ஒரு வித உரிமை தெரிந்தது. அவர்கள் இவனைத் தேடி இங்கு வந்துவிட்டதன் பொருள் புரிகிறதுதானே அவனுக்கு. உயிரைக் கட்டி இறுக்கிய வேதனைச் சங்கிலிகள் உடைந்து விழுந்தன கண்ட நொடியே.

“என்ன அங்கிள் இவ்ளவு தூரம் ட்ரவெல்….சொல்லிருந்தா நானே வந்திருப்பனே…”

“ம்…உங்களை வரச் சொல்றதுக்கு முன்னால சில டேர்ம்ஸ் பேச வேண்டி இருக்குது…” ரேயா தான். வீட்டை சுற்றி முற்றும் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அப்பாவின் வீல்சேரைத் தாள்ளிக் கொண்டே.

“ஷாலுவுக்கு அப்பார்ட்மென்ட் லைஃப் பிடிக்காதுன்னா, இன்டிவிஜுவல் ஹவுஸ்க்கு மாறிடுவோம்” ரேயாவின் பார்வைக்கும் அவள் வார்த்தைகளில் தெரிந்த ஒருவித கோபம் கலந்த குத்தலுக்குமாக பதில் சொன்னான் சரன். ஷாலு நிச்சயமாக நடந்தவைகளை ரேயாவிடம் சொல்லி இருக்கிறாள் எனத் தெரிகிறது. ஷாலு விருப்பத்தை நான் முழுசா மதிக்றேன்ங்க்ற பதிலைத்தான் அவன் இப்படிச் சொன்னதே….

“இதுலெல்லாம் அவ தனக்கு இது தான் வேணும், இப்டித்தான் இருக்கனும்னு எதிர்பார்க்க மாட்டா….எது இருக்குதோ அதுல சந்தோஷமா அடாப்ட் ஆகிடுவா…..சில நியாயமான விஷயத்தை தவிர எல்லாத்துலயும் அவ விட்டு கொடுத்துப் போற டைப்..….அதுல அவள மதிச்சா போதும்…” இப்பவும் ரேயா குத்ததான் செய்தாள். இதற்குள் வரவேற்பறைக்கு வந்திருந்தனர் அவர்கள். காலை நேரம், இன்னும் சர்வென்ட்ஸ் யாரும் வந்திருக்கவில்லை…

“ஃப்யூ மினிட்ஸ் அங்கிள்” என்றபடி சரன் வந்தவர்களுக்கு எதாவது கொடுக்க என கிட்சன் புறம் நோக்கிச் செல்ல, தன் தந்தையை வரவேற்பறையில் வசதியாக உட்கார வைத்துவிட்டு, தானும் கிட்சனை நோக்கிப் போனாள் ரேயா.

அவன் ஃப்ரிட்ஜை திறந்து உள்ளிருப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

ரேயாவோ மொட்டையாக “ஷாலுவ மும்பை கூட்டிட்டுப் போனீங்களா?” என வெட்டினாள்.

சோ ப்ரச்சனையோட புள்ளி அதுதானா? கேள்வியாக நிமிர்ந்து அவளைப் பார்த்தான் சரன்.

“இப்போ ஷாலு செத்துட்டான்னு வைங்களேன்….அவ டெட் பாடிய யார்ட்ட கொடுப்பாங்க…?”

“ஏய்….என்ன பேச்சு இது…?” படு காரமாக அதட்டினான் சரன். இப்படி ஒரு விபரீதமான கேள்வியை நிச்சயமாக அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. மனதிற்குள் நினைத்துப் பார்க்க முடிகின்ற விஷயமா என்ன?

“ஹலோ….முதல்ல கேள்விக்கு பதில் சொல்லுங்க…அது எனக்கும் அக்கானு ஞாபகம் இருக்கட்டும்”

அவளை ஆழ்ந்து பார்த்தான். இவள் என்ன சொல்ல வருகிறாள்.

“உயிரோட இருக்றப்ப ஒருத்தங்க நம்ம பக்கம் விரும்பியே வந்து இருந்தாங்கன்னா கூட  அவங்கமேல நமக்கு உரிமை இருக்குன்னு அர்த்தம் இல்ல சார்…அந்த உயிர் போனாலும் அவங்க உடம்பை நம்ம கைல குடுத்தாங்கன்னா அப்பதான் உரிமை இருக்குதுன்னு அர்த்தம்…..நீங்க மும்பை போனப்ப அவளுக்கு எதாவது ஆகி இருந்தா அவள எங்கப்பாட்ட தான் குடுத்றுப்பாங்க…ஏன் அவ கல்யாணத்துக்கு முந்துன நொடி வரைக்கும் அப்டித்தான்…இப்ப வரைக்கும் அவ மேல உரிமையுள்ள ஒரே ஆள் என் அப்பா மட்டும்தான்….அவங்கட்ட கேட்காம எதுக்கு கூட்டிட்டுப் போனீங்க…?”

“ உங்க அப்பாவுக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருந்தேன் அன்றில்…பட் அங்கிள் ரீச் ல இல்ல…”

“ஓ….அப்டின்னா குறஞ்ச பட்சம் ஷாலுட்டயாவது கேட்டிருக்கனுமே…..அவட்ட என்ன கேட்கிறது அவ அப்பா ஒரு அன்சிவிலைஸ்ட் விருமாண்டி, அவருக்கு பயந்துட்டு இவ எதாவது  சொல்லுவா ஆனா மத்தபடி நான் இழுத்த இழுப்புக்கு வருவா, அப்டின்னு ஒரு பரந்த எண்ணமா?”

“ஹேய்…” என தொடங்கினாந்தான் சரன் ஆனால் நிச்சயமாய் அன்று நடந்ததிற்கு ரேயாவின் கோணத்தை தவிர வேறு விளக்கம் அவனிடமே இல்லை என்பதை அப்பொழுதுதான் அதிர்ச்சியோடு உணர்ந்தான் அவன்.

“நீங்க மட்டும் உங்க அம்மம்மா சொன்னா ஷாலுவ கூப்டுட்டு போய்டனும், உங்கப்பா திரும்பி அனுப்ப சொன்னா அவளை திருப்பி அனுப்பிடனும்…..அது தப்பில்ல ஏன்னா அவங்கெல்லாம் சரன் தி கிரேட் டோட ஃபாமிலி. பட் ஷாலு மட்டும் அவ அப்பா சொல்றதை கேட்க கூடாது அவளா சுயமா எதையும் முடிவும் செய்யக் கூடாது சரன் நினைக்கிறதை மட்டும்தான் அவ செய்யனும். ஏன்னா அவ ராஜ்குமார் தி அன்சிவிலைஸ்டோட டாட்டர். எந்த விஷயத்திலயாவது அவட்ட கேட்டு, அவளுக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து ஏதாவது செய்திருக்கீங்களா நீங்க….உங்களுக்கு என்னது சரி…இல்லனா உங்க பார்வையில ஷாலுவுக்கு என்னது சரி…அவ்ளவுதான் அடுத்து முடிவு எடுத்து அதை அவ மேல இம்ப்ளிமென்ட் செய்துறது…ஏன்னா அவ அப்பா ஒரு அன்சிவிலைஃஸ்ட் கன்ற்றி டாக்..” ரேயாவால் சரன் தன் தந்தையைப் பார்க்கும் கோணத்தை சற்றும் தாங்க முடியவில்லை. அந்த கோபம் வார்த்தையில் வடிவெடுத்தது அப்படியே..

“அன்றில்…” அவன் எதையோ பேச ஆரம்பிக்க அவனைப் பேச விடவில்லை ரேயா.

“இந்த அன்சிவிலைஸ்ட் அப்பா கூடதான் இத்தன 20 + வருஷமா ஷாலு இருந்திருக்கா…ஒரு நாளும் அவர்ட்ட இருந்து தப்பிச்சு போகனும்னு அவளுக்கு தோணுனது இல்ல…. மிஸ்டர்.சிவிலைஸ்ட் உங்களத்தான் தாக்குப் பிடிக்காம ஒன் இயர்க்குள்ள பொண்னு தப்பிச்சு வீடு வரைக்கும் ஓடி வந்துருக்கா”

அமைதியாய் ரேயாவைப் பார்த்தான் சரன்.

“என் அன்சிவிலைஸ்ட் அப்பாவுக்கு என் அம்மா இறக்குறப்ப கிட்டதட்ட உங்க வயசு தான்…கைல மூனு மாச குழந்தையா நான் வேற……மொத்த சொந்தமும் அடுத்த கல்யாணத்துக்கு கட்டாய படுத்திருக்கும்….பட் எந்த பொண்ணையும் அவர் திரும்பி கூடப் பார்க்கலை சார்……” இப்பொழுது ரேயாவுக்கு உணர்ச்சி வேகத்தில் கண்ணில் நீர் கட்டுகிறது.

“அன்னைல இருந்து இப்ப வரை அவர் வாழ்றது எங்க ரெண்டு பேருக்காக மட்டும் தான்….எத்தனை வீட்ல சார் எங்களுக்கு கொடுத்த இம்பார்டன்ஸை பொண்ணுங்களுக்கு கொடுத்து வளக்காங்க….ஃஸ்போர்ட்ஸ்,டேஸ்ட், ட்ரெஸ்….. ஸ்டடீஸ் நேமிட்…எல்லாத்லயும் எங்கப்பா நாங்க ஸேஃபா சந்தோஷமா இருக்க என்ன செய்யனுமோ அதைத்தான் செய்திறுக்காங்க…. ஷாலு படிப்பு முடிய முன்னமே கல்யாணத்துக்கு கேட்டீங்களாமே….அவ ஆசப்பட்டு ஹாட்வொர்க் செய்து மெரிட்ல வாங்ன சீட் அது….அத அவ கஷ்டபடாம முடிக்கனும்நுதான் அப்பா மேரேஜை லேட் செய்ய சொன்னது…என் அம்மா மேரேஜுக்குப் பிறகு மெடிசின் படிச்சவங்க….அதோட கஷ்டம் அப்பாவுக்கு நல்லா தெரியும்….அந்த வகையில நீங்க அப்பவே கல்யாணம்னு கேட்டதுதான் எனக்கு செல்ஃபிஷா தோணுது…. எங்கப்பா காலத்துல கல்யாணத்துக்குப் பிறகு வைஃபை படிக்க வைக்றவங்க எவ்ளவு ரேர் தெரியுமா? ஆனா எங்கப்பா செய்தாங்க….அவங்க உங்களுக்கு அன்சிவிலைஸ்ட்…பார்டில கட்டி பிடிச்சு டான்ஸ் ஆடிட்டா அது வெல் சிவிலைஸ்ட் என்ன…? உண்மையிலே நீங்கதான் நேரோ மைன்டட் உங்க வீடு , உங்க சொந்தம், என் ஆசை, என் தாட்னு ரொம்ப குறுகலான சிந்தனை உங்களுக்கு, ஆனா எங்கப்பாதான் ப்ராட் மைன்டட். எங்க கல்யாண விஷயம் தவிர மத்த எதுலயும் அப்பா எந்த வகையிலும் எங்களை ஃபோர்ஸ் செய்றது கிடையாது தெரியுமா….அதுக்கு கூட அவங்க இழப்புதான் காரணம்.” கட கடவென அதியையும் தன் மனைவியையும் அப்பா இழந்த வகையை சொல்லி முடித்தாள் பெண். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.