(Reading time: 15 - 30 minutes)

" ல்லை"

" பொய் "

" நிச்சயமாய் இல்லை தரூ .. நான் இது வேணாம்னு முடிவு பண்ணிட்டா , அதை பற்றி அதிகம் யோசிக்க மாட்டேன் .. ஒரு முடிவிலேயே தங்கி நின்னுட்டா நம்மால் முன்னேற முடியாது ..சரியோ தப்போ அடுத்த அடி வைத்துக்கொண்டே இருக்கணும் " என்றாள்  அவள் திடமாய் .. சிறுமுறுவலுடன் அவள் தலையில் ஆதாரமாய் வருடி கொண்டுத்தான் கிரிதரன் ..

அதன்பிறகு வந்த நாட்களில் மிகவும் தீவிரமாய் செயல்பட்டான் கிரிதரன் ..

" துக்கு அப்பறம் என்ன ஆச்சு அண்ணி ?" அது வரை கேட்டு கொண்டிருந்த வானதியின் முகத்திலும் தீவிரம் படர்ந்தது .. அமைதியாய் சாலையை வெறித்தாள் கவிதா .. இன்னும் சில மணி நேரங்களில் அவள் தனது அன்னை தந்தையை சந்திக்க போகிறாள் .. அவளது மௌனத்தை தவறாக புரிந்து கொண்டவளாய்

" சிரமமாய் இருந்தா இத பத்தி பேச வேணாம் அண்ணி .. இட்ஸ் ஓகே " என்றாள்  வானதி .

" அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை வானதி .. இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா , அப்பாவை பார்க்க போறோம்ல ? அதை நினைச்சேன் .. " என்றாள்  அவள் ..

" நீங்களும் ரொம்ப சோர்வா தெரியரிங்க அண்ணி .. வேணும்னா இன்னொரு நாள் பேசலாம் ..இல்லைன்னா சுருக்கமா என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லுங்க போதும் " என்றாள்  அவள் .. வானதியை பார்த்து மிருதுவாய் புன்னகைத்தவளுக்கும்  மீண்டும் அன்றைய தினங்களின் முழு தாக்கத்தில் உறைந்துவிடும்  ஷக்தி இருப்பதாக தோன்றவில்லை .. அதனால் நடந்ததை சுருக்கமாகவே கூறினாள் ..

" அதுக்கு பிறகு , நாட்கள் ரொம்ப அமைதியாத்தான் போனிச்சு .. தரூ என்கிட்ட இதபத்தி அதிகம் பேசாமல் இருந்தாரு .. அதுவே எனக்கு எல்லாம் சரி ஆகி இருந்ததா தோன்றியது .. அதே நேரம் சில நாட்களுக்கு பிறகு டிவியில  ஒரு நியுஸ் "

" என்ன அண்ணி ?"

" என் செய்திக்கு காரணமாய் இருந்த அந்த அரசியல் வாதியை ஊழலுக்காக அரஸ்ட்  பண்ணிருந்தாங்க .. அதற்கு காரணம் அவரது எதிர்கட்சியாம் " என்று இலகுவாய் கூறினாள்  அவள் ..

" நீங்க சொல்லுற விதத்தில் பார்த்தா , இது எப்படி எதிர்க்கட்சி வேலையா இருக்க முடியும் ? கிரிதரன் அண்ணாதான் ....எதோ ப்ளான்  போட்டு "

" உன் அனுமானம் ரொம்ப சரி .. கண்ணன் மாமாவுக்கு நல்ல  அரசியல்வாதிகளின் பழக்கமும் இருந்ததுனால் எந்த பிரச்சனையும் வராதவாறு இதை  நிவர்த்தி பண்ணினாங்க ..தரூ என்கிட்ட சொன்ன மாதிரி நான் ஆசைப்பட்டதை அவர் நிறைவேற்றி இருந்தார்ன்னு சந்தோசத்தில் இருந்த நேரம் ....." என்று மௌனமாய் இடைவெளி விட்டாள்  அவள் ..

" என்ன ஆச்சு அண்ணி அப்போது ? "

" அப்பத்தான் எனக்கு மறுபடியும் மிரட்டல் கால் வந்திச்சு "

" உங்களுக்கா ?"

" ஆமா, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருந்து தானே ஆகணும் வானதி ?"

" என்ன மிரட்டல் "

" ஒண்ணா ரெண்டா ?"

" அதன் பிறகு நானும் தரூவும் வீட்டில் நிம்மதியை தக்க வைக்க ரொம்ப போராடினோம் .. அப்பாவின் காரை விபத்தில் சிக்க வைக்க பார்த்தாங்க, அர்த்த ராத்திரி ஆள் மிரட்டல் , கிரியை பத்தி என்கிட்டயும் , என்னைப்பற்றி அவரிடமும் அவதூறாய்  பேசி இப்படி பல .. இதற்கெல்லாம் உச்சகட்டமாய் தாக்கபட்டது யார் தெரியுமா ? "

" யார் ?"

" சந்தோஷ் !!"

தீவிரமாய் அண்ணியை பார்த்தாள்  வானதி .. அவள் முகமே ஆயிரம் கேள்விகளை கேட்டன .. அதைபுரிந்து கொண்டே தொடர்ந்து  பேசினாள்  மதுரா ..

" அன்னைக்கு உண்மையிலேயே நாங்க ரொம்ப சந்தோஷமாய் இருந்த நாள் வானதி .. நான், தரூ , சந்தோஷ் , சுபாஷ் நாலு பேரு  கடற்கரைக்கு போனோம் .. அந்த நேரத்தில் சுபாஷிற்கும் சைந்தவியை பேசி முடிப்பதாய்   முடிவெடுத்து இருந்தாங்க .. நல்ல சாப்பாடு , பாட்டு கேலின்னு நேரம் போக , எங்களுக்கு தனிமையை கொடுக்கறதா நினைச்சு சுபாஷும் சந்தோஷும் தனியா  கெளம்பிட்டாங்க .. "

" .."

" சுபாஷ் அப்போதான் சைந்தவியிடம் போனில் பேசலாம்னு கொஞ்சம் தூரமாய் ஒதுங்கிய நேரம் , சில பேரு  சந்தோஷை  தாக்கிட்டு போயிட்டாங்க "

" ஐயோ என்ன ஆச்சு அண்ணி ?"

" சத்தம் கேட்டு   சுபாஷ் வர்றதுக்குள்ள  ஓடிட்டாங்க .. அதுக்கு பிறகு சந்தோஷை காப்பாற்றுவது மட்டுமே எங்க குறிக்கோளாய் இருக்க , நாங்க  அவனுங்களை கவனிக்கல .. ஆனா எனக்கு மெசேஜ் வந்தது .. இனிமேல் இப்படிதான் நடக்கும்ன்னு "

" அதனால் நீங்க விலகி ???" என்று கேள்வியுடன் நிறுத்தினாள்  வானதி ..

" அதுவும் ஒரு காரணம் ..."

" அதுவும்ன்ன ?"

" சந்தோஷ் குனமாகிட்டு இருந்தபோது தான் என் வீட்டில் அடுத்த பிரச்சனை  வந்தது .. அதே ஜாதகம் பிரச்சனை தான் .. அதுவும் என் அம்மாவே பேசாமல் இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் .. அவங்க ரொம்ப சந்தோஷமா வாழுற குடும்பம் .. அவங்க சந்தோசம் நம்மால் களைய வேணாம் .. நாம தெரியாமல் அமைதியாய் இருந்தால் தப்பேதும் இல்லை .. ஆனா தெரிஞ்சே அமைதியாய் இருந்தா தப்புங்கன்னு என் அப்பாகிட்ட பேசினதை நான் கேட்டேன் "

" ...."

" அம்மாவே அப்படி சொன்ன பிறகு , என்னால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும் வானதி ? ஒருவேளை இதை ஆரம்பத்திலேயே நிறுத்தி இருக்கணுமோன்னு  தோன்றியது .. எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லைன்னாலும் கூட, அம்மா சொன்ன ஒரு விஷயம் நிஜம் .. நடப்பது எல்லாத்துக்கு நான்தானே காரணம் .? தரூ என்னை கட்டிக்கப்போறவர்  என்பதால் தானே அவருக்கு இத்தனை பிரச்சனைகள்  ? ஒருவேளை நான் தனி ஆளாய் இருந்திருந்தா என்னை மட்டும்தான் தாக்கி இருப்பாங்க .. இப்போ என் தரூவின் சந்தோசம் கொஞ்சம் கொஞ்சமாய் போயிகிட்டு இருக்குன்னு எனக்கு தோன்றியது !"

" அதற்காக உடனே வேணாம்னு சொல்லியாச்சா ?" என்றாள்  வானதி ஆயாசமாய் ..

" இல்லை , இது சரியான முடிவுதானான்னு எனக்கு யோசிக்கவே ரெண்டு மூணு நாள் ஆனது .. ஆனா , என் எதிர்களுக்கு நாள் கணக்கு இல்லையே ?" என்றவள் விசும்பி அழுதாள் ..

" என்னாச்சு அண்ணி ? ...அண்ணி .... ப்ளீஸ் அழாதிங்க !" ..எத்தனை நாட்காளாக மறைத்து வைத்திருந்தாலோ அந்த கண்ணீர் துளிகளை .. அத்தனையும் இன்று அணைதிறந்த  வெள்ளமாய் வெளிவந்தது ..

" என் தரூவை நான் கடைசியாய் ஹாஸ்பிடல் பெட்ல தான் பார்த்தேன்  வானதி .. அதுவும் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் " என்றவள் முகத்தை மூடி அழுதாள்  ..

" ரொம்ப பக்காவா , ப்ளான்  போட்டு என் தரூவுக்கு எக்சிடன் பண்ணி " என்றவள் கேவினாள் ..

" என்னால அவர் முகத்தை அப்படி பார்க்கவே முடியல .. அவர் எப்போடா கண் திறப்பார்ன்னு வாசலிலேயேஉயிரை பிடிச்சுகிட்டு நின்ற நாட்களை என்னால் மறக்கவே முடியாது .. உலகத்துல இருந்த அத்தனை கடவுளிடம் நான் என் தரூக்காக உயிர் பிட்சை கேட்டேன் .. "

" அண்ணி , ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க .. அவர் இப்போ நலமாய்  இருக்கார் .. ஒன்னும் ஆகல .. ப்ளீஸ் இயல்புக்கு வாங்க " என்றவளின் குரலும் கவிமதுராவின் நிலையை பார்த்து நடுங்கியதை பறைசாற்றியது .. கையில் குழந்தை இருப்பது கூட  தெரியாமல்  அவள் தன்னை மறந்து  கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.