(Reading time: 15 - 30 minutes)

சில நொடிகளின் மௌனத்திற்கு பின்பு ,

" என் அம்மா , முடிவே பண்ணிட்டாங்க , இந்த ஜாதகத்தினால் தான் இப்படி ஆச்சுன்னு .. நானும் அதை நம்ப துவங்கினேன் .. அப்படி அது இல்லைன்னாலும் , நான் தானே என் தரூவின் நிலைக்கு காரணம் ? அவர் உயிரோடு இருந்தாலே போதும்  கடவுளே , இனி தரூவின் வாழ்க்கையில நான் இருக்கவே மாட்டேன்னு கடவுள் கிட்ட மன்றாடினேன் .. "

" .."

" சில நேரம் கடவுளுக்கு கூட லஞ்சம் கொடுக்கணுமோ ? எனக்கு புரியலை வானதி .. நான் எங்கள் பிரிவை கொடுக்கிறேன்னு சொன்ன பிறகுதான் தரூவை அவர் திருப்பி தந்தார் .. நியாயப்படி நான் என் தரூவுக்கு துணையாய் நின்னு அவர் குணமாக உதவி இருக்கணும் .. ஆனா நான் புற முதுகிட்டு ஓடிட்டேன் .. இந்த உறவே வேணாம்னு  விலகிட்டேன் .. ஏற்கனவே ஜாதக விஷயத்தில் குழம்பி இருந்த அம்மாவும் என் விலகலை ஆட்சேபிக்கவில்லை .. "

"அண்ணி ??"

" ஆமா வானதி , அதன்பிறகு நானே தேடி பிடித்து ஏதேதோ காரணங்கள் சொல்லி அவரை விலகி நின்றேன் .. அனல் மாதிரி வார்த்தையை கொட்டிடேன்  .. அதைவிட நான் செய்த முட்டாள்தனத்தின் உச்சகட்டம்,  அவரை சந்திக்க வந்த தோழியை  அவரோடு சந்தேகிப்பது போல பேசி அவருடைய தற்காலிக வெறுப்பை பெற்றுகொண்டேன் .. அப்போதான் எனக்கே தெரிஞ்சது நான் எவ்வளவு பெரிய கோழைன்னு .. இன்னொரு பெண்ணை பற்றி அவதூரா  பேசி , என் உயிரினும் மேலானவரை சந்தேகிப்பது போல பேசி விலகி , எனக்காக உயிர் பிழைச்சு வந்த சந்தோஷிடம் கூட பாராமுகம் காட்டினேன் .. அதனால்தான் அன்றைக்கு சந்தோஷ் என்னிடம் சரியாய் பேசல .. ஆனா அவன் மீது தப்பில்லையே  ! எனக்கிந்த தண்டனை போதுமானதுதான் " என்று கூறியவள்  தனக்குள்ளேயே புலம்ப தொடங்கினாள்  ..

" சரி தான் .. சரிதான் .. நான் செய்த பாவங்களுக்கு இந்த வாழ்க்கை எனக்கு நல்ல தண்டனை தான் " என்று கூறி கொண்டே இருந்தாள்  .. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஜீவாவை அருகில் உறங்குவதற்கு வாகாய்  ஏற்பாடு செய்துவிட்டு மெல்லிய குரலில் அதட்டி கவிமதுராவை இயல்பாக்கி இருந்தாள்  வானதி ..

" அவ்வளவு சீக்கிரம் தரூ என்னை பிரிஞ்சிடல வானதி .. நிறைய போராட்டங்களுக்கு பிறகு , தனக்கும் ஒரு மாற்றம் வேணும்னு   அவர் தேனீயில்  இருந்து சென்னை போயிட்டார் .. என் நிலையை பார்த்த என் அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சுடுச்சு இனி என் வாழ்க்கையில் வசந்தமே வரப்போவது இல்லைன்னு " என்றவள் அதற்குல்மேல் பேச முடியாமல் அழுதாள் ...

" போதும் அண்ணி .. நீங்க சொன்னவரை போதும் .. தயவு செய்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ..எனக்கு ஓய்வு வேண்டும் " என்று போலியாய் முகத்தை சுளித்தபடி விழிகளை மூடி கொண்டாள்  வானதி .. காரணம் அவளுக்கு தெரியும் ..அடுத்து அவள் அண்ணி தனது அண்ணனை பற்றித்தான் பேச போகிறாள்  என்று .. ! அரவிந்த்தின் மூலமாகவே ஓரளவு நடந்ததை தெரிந்து கொண்டவளுக்கு அதைப்பற்றி பேச விருப்பம் இல்லை .. மேலும் அனைத்தையும் நினைத்து பார்க்கும்  நிலையில் மதுராவும் இல்லை என்று வானதிக்கு புரிந்தது .. அடுத்த சில நிமிடங்கள் அங்கு மௌனமே குடி கொண்டது ..

கிட்டதட்ட 12 மணி நேர பயணத்தின் பிறகு லண்டன் மாநகரத்தை அடைந்தே விட்டனர் சந்தோஷும் சாஹித்யாவும் .. அந்த 12 மணி நேரங்கள் அவர்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத தருணங்கள் .. தரையில் காலடி எடுத்து வைத்ததுமே  சாஹித்யா கூறிய முதல் வசனம் அதுதான் ..

" சந்து , தேங்க்ஸ் .. நான் தனியா வந்திருந்தா இத்தனை மணி நேரமாய் புலம்பி இருப்பேன் .. ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி பாதியில் குதிக்கலாமான்னு யோசித்து இருப்பேன் .. ஏன்னா மைண்ட் முழுக்க அருள் தான் இருந்தான் .. ஆனா என்னுடைய நேரத்தை அழகாக்கி என்னையும் இயல்பா ஆக்கிட்டிங்க " என்றாள் .. அவளையே வாஞ்சையுடன்  சந்தோஷ் பார்க்கவும் , எதையோ நினைவு கூர்ந்தவள்

" ஹே அதுக்காக , என் கவலையை மறக்க நீங்க பேசினதுக்காகத்தான்  தேங்க்ஸ் சொல்றேன்னு நினைக்க வேணாம் .,. அதையும் தாண்டி நான் ரோமப் நிம்மதியா , நிறைவா , சந்தோஷமா " என்று அவள் ஒவ்வொரு வார்த்ததயாய்  உணர்ந்து கூறவும் , அவள் இதழ்கள் மீது விரல் வைத்தான்  சந்தோஷ் ..

" ஷ்ஷ்ஷ்ஷ் "

" என்ன ?"

" கம்மியாவே பேச மாட்டியா நீ ? ரெண்டு மார்க் கொடுக்குற கேள்விக்கு கூட ,பத்து மார்க் பதில் சொல்ற பொண்டாட்டி நீ " என்று சிரித்தான் .. பிறகு மெல்லிய குரலில்

" நீயும் நானும் சேர்ந்திருந்த இந்த தருணத்தை ஒரே பாட்டில் எடுத்து உரைக்கவா தேவி ?" என்று நாடக பாணியில் அவன் கேட்டு கண்சிமிட்ட

" அப்படியே ஆகட்டும் சுவாமி " என்றாள்  சாஹித்யா ..

" சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை

பொருள் என்றும் இல்லை

சொல்லாத சொல்லு விலை ஏதும் இல்லை , விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே , உயிர் சேர்ந்த பின்னே " என்று பாடி அவன் அவளை தொடரும்படி பார்வையாலேயே கட்டளையிட

" உலகங்கள் நம்மை அன்றி வேறேதும் இல்லை ..

வேறேதும் இல்லை " என்று பாடி சிரித்தாள் சாஹித்யா ..

" அதே தான் ! சரி வா போகலாம் .. "

" வேணாம் சந்து "

" ஏன் டா ?"

" நீங்க பைலட் கிட்ட பேசறிங்களா ? நாம அபப்டியே இந்தியாவுக்கு இப்போவே ரிட்டர்ன் போகலாம் " என்று சிணுங்கினாள் சாஹித்யா .. அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவனே பயந்து தான் போனான் ..

" இது என்ன டேக்சியா ? வந்த இடத்துக்கே திரும்ப போ ன்னு சொல்றதுக்கு ? "என்று மனதிற்குள் வெகுண்டவன் ,

" உனக்கு திரும்பி போகணும் அவ்வளவு தானே ? கீழே போகுறோம் , காபி குடிக்கிறோம் , அடுத்த டிக்கெட் எதுன்னு பார்த்து கெளம்பறோம் " என்று கூறி அவளை கையேடு வெளியில் அழைத்து கொண்டு வந்தான் ..

கடவு சான்றிதழை சரி பார்க்கும்போதும் சரி , கொண்டு வந்த பைகளை எடுக்கும்போது சரி இடைவிடாது அருளை பற்றி பேசிக்கொண்டே நடந்தாள்  சாஹித்யா .. அங்கு வாசலில் அவளுக்காக காத்திருந்த சித்தார்த்தை கூட கவனிக்காமல் 

" உடனே  அருளுக்கு கால் பண்ணனும் சந்து " என்று அவள்  கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட

" பண்ணு , பண்ணு கண்டிப்பா கால் பண்ணு .. ஆனா எனக்கு லண்டன் சிம் இல்லையே மக்கு " என்று குரல் கொடுத்தபடி கை கட்டிக்கொண்டு அவள்  முன்பு வந்து நின்றான் அருள்மொழிவர்மன் ..

கண்களால் அவனை காணுமுன்னே , அவன் குரல் அவளது உயிரை எழுப்பிவிட , கண்களில் கண்ணீர் மல்குவதை கூட பொருட்படுத்தாமல் ஓடி வந்து அவனை இறுக அணைத்து  கொண்டாள்   சாஹித்யா ..

கட்டி அணைப்பது காதலுக்கு காமத்திற்கு மட்டும் எழுதிவைக்கபட்ட உரிமையா என்ன ? இதோ இங்கு சலனம் என்பது  சிறிதும் இல்லாமல் தாயை தேடி ஓடும் கன்று போல அவன் பரந்த மார்பில் சரணைடைந்து அழுதாள்   சாஹித்யா ..  அவளுக்கு இணையாய் அவனது கண்களிலும் கண்ணீர் துளிகள் .. வார்த்தைகளே தந்தியடிக்கும் அந்த நேரத்திலும் கூட

" அறிவு கெட்டவனே , இப்படியாடா தவிக்க விடுவ ? " என்று கூறி அவன் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு மீண்டும் தோளில்  சாய்ந்தபடி நின்றாள்  சாஹித்யா .. இருவரும்  சந்தோஷத்தில் திளைத்து புன்னகைத்த நேரம்

" ஹலோ , இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா ? " என்று எரிச்சல் நிரம்பிய குரலில் கேட்டது ..

தவம் தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.