(Reading time: 19 - 38 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 14 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" போதும் சஹி, நீ இதுக்கு மேல பொறுமையா இருந்தா இந்த குரங்கு காதில் பூ செருகிடுவான் .. அவன் பேசலைன்னா என்ன ? பேசாம நீயே பேசி வெள்ளை கொடி  காட்டிடு .. இல்லனா குரங்கு இதான் சமயம்னு அமைதியாவே இருப்பான் .. சரியான கல்லுளி மங்கன் ..வரேண்டா வரேன் " என்று மனதில் திட்டி கொண்டே சாஹித்யா போனை எடுத்த வேளை  அவள் கைகளில் இருந்து போனை பறித்தான் சந்தோஷ் ..

" யாருடா இது ?" என்று கோபத்துடன் வெடுக்கென திரும்பியவள் அவனை பார்த்ததும் சட்டென விழிகளை உருட்டினாள் ...

" சந்தேகமே இல்லை சத்யூ , நீ அத்தை வயிற்றில் இருந்தப்போ கண்டிப்பா , அவங்க ரெண்டு முட்டையை அப்படியே விழுங்கிருப்பாங்க !" என்று அவள் கண்களை விமர்சித்தான் அவன் .. அவரவர் இருக்கையில் அமரும்படி விமானத்தினுள் அறிவிப்பு ஒலிபரப்பாகவும் அவளது செல்போனை லாவகமாய் பாக்கெட்டில் போட்டு கொண்டு அவளை அவளது இருக்கையில் அமர வைத்து தானும் அருகில் உட்கார்ந்து கொண்டான் ..

Enna thavam seithu vitten

" இரு நான் சீட் பெல்ட் போட்டு விடுறேன் " என்று கண்ணடித்தபடி சந்தோஷ் நெருங்கவும் அதுவரை உறைந்திருந்தவள்

" இல்லை நானே போட்டுக்குறேன் " என்றாள் ..

" உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா ?

உதவிக்கு வரலாமா ?

சம்மதம் வருமா ஹோய்

சந்தேகம் தானா ?"  என்று தன் இனிய குரலால் அவளுக்கு பிடித்த பழைய பாடலை பாடி வைத்தான் அவன் ..

" எப்படி சந்து ?" என்று கேட்டாள்  அவள் ஆச்சர்யமாய் ..

" காதலிக்க நேரமில்லை படம் செல்லம் இது ! ரொம்ப பிரபலமான பாடல் ஆச்சே , எனக்கு இதெப்படி தெரியாமல் போகும் ?" என்று குறும்பாய் அவன் கூறவும் அவனை சுருக்கென கிள்ளினாள்  அவள் ..

" அடிப்பாவி , திடீர்னு என்ட்ரி  கொடுத்தா , அன்னைக்கு மாதிரி ஹக் பண்ணுவன்னு பார்த்தேன் .. நீ என்னடான்னா  அம்மன் படம் ரம்யா கிருஷ்ணன் மாதிரி முறைக்கிறியே  "

" ப்ச்ச்ச் .. போங்க சந்து , நான் அருள்கிட்ட பேசணும்னு நினைச்சேன் ..அதுக்குள்ள இப்படி போனை பிடுங்கி வெச்சுகிட்டிங்க  !  இதுக்கு மேல நான் எப்படி பேசுறது ? இதோடு லேண்ட்  ஆகிட்டுத்தான் பேச முடியும் " என்று குறை பட்டு கொண்டாள்  அவள் .. அவன் அதற்காக அவளை சமாதனம் படுத்தும் முன்பே , அடுத்த கேள்வி வந்தது

" ஆமா , நீங்க எப்படி இதே ப்ளைட் ல அதுவும் என் பக்கத்துல ? நீங்களும் என் கூட வர்றதா சொல்லவே இல்லையே  ? அத்தை மாமாவுக்கு தெர்யுமா ? அவங்க என்ன நினைப்பாங்க ? "  என்றாள் ..

அவள் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லுமுன்னே

" எனக்காகத்தான் வந்திங்களா சந்து ? தனியா கெளம்பறோம்ன்னு பீல் பண்ணேன் .. அட்லீஸ்ட் நீங்களாச்சும் வந்திங்களே ! இப்போதான் நிம்மதியா இருக்கு சந்து " என்றாள்  அவள்  .. மீண்டும் அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க

" நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் .. நீ பேசி முடிச்சதும் எழுப்பிவிடுமா " என்று கூறி கண்களை மூடிக்கொண்டு சிரித்தான் அவன் .

" சரி சரி ... போதும் நடிச்சது .. நான் எதுவும் பேசலை .. இப்போ நீங்க உங்க திருவாயால் எனக்கு பதில் சொல்லலாம்" என்றாள்  அவள் சமாதானமாய் ..

" அம்மாடி , அமுல் பேபி மாதிரி இருந்துகிட்டு எவ்வளவு நீளமா பேசிகிட்டு போகிற நீ ? கல்யாணத்துக்கு அப்பறம் முதல் வேலையா நீ உன் வாயையும் நான் என் காதையும் இன்சுரன்ஸ்  பண்ணிடலாம் டா " என்றான் சந்தோஷ் குறும்பாய் ..

" கேள்வியும் நானே  பதிலும் நானேன்னு நீயே எல்லாத்தையும் சொல்லிட்டியே செல்லம் .. இப்போ நான் என்ன சொல்றதாம் ... ஒன்னே ஒன்னு சொல்றேன் .. நான் உன்கூட வரணும்னு மேலிடத்து உத்தரவு .. நீ அருளை மிஸ் பண்றேன்னு ஜன்னல் வழியா குதிச்சிற கூடாதுன்னு என்னை அனுப்பி வைச்சாங்க "

" யாரது ? அவன்தானே அனுப்பினான்  ? இல்ல அப்பாவா ? ரவியப்பாவா ? அம்மாவா ?"

" அதெல்லாம் நாம ரீச் ஆனதுமே தெரிஞ்சிடும் கண்ணா !"

"ஓஹோ அப்போ அவங்க சொன்னதுக்காக தான் வந்திங்களா சந்து ?" என்று சிணுங்கினாள் சத்யா ..

" ஹா ஹா .. அவங்க எல்லாம் லேட் பிக் அப் டார்லிங் ... நான்தான் ஏற்கனவே டிக்கெட் புக் பண்ணிட்டேனே .. உன்கூட நான் வர்றதுக்கு அவங்க ஒரு சாக்கு தான் ..இல்லைன்னா நானே எதாச்சும் சொல்லிட்டு உன்னோடு வந்திருப்பேனே  ! இத்தனை வருஷம் என் சத்யூவை நான் பிரிஞ்சது பத்தாதா ? இனிமே எல்லாம் உன்னை தனியா விடுறதா இல்லை !" என்றான் அவன் காதலுடன் ...

என்னவிதமான உறவிது ? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, வெவ்வேறு சிந்தனைகளோடு வளர்ந்திருந்தாலும் காதல் என்றொரு உணர்வே ஜென்ம ஜென்மமாய் இதயத்தை வென்று இணைத்து விடுகிறதே ! சிலிர்த்து தான் போனாள்  அவள் ..

" என்ன லுக்கு ?"

" ஹான் ... ஒன்னுமில்லை " என்று விழிகளை தாழ்த்தி கொண்டாள்  சாஹித்யா ..

" உன்னை நான் பார்க்கும்போது மண்ணை  நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன ? நிலவென்ன  தேய்ந்தா போகும் ?

புன்னகை புரிந்தால் என்ன பூ முகம் சிவந்தா போகும்அவன் கண்களை ஊடுருவி பாடிய விதத்தில் சிவந்துதான் போயிருந்தாள்  அவள் ..

" நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ ?

இன்று முதல் நீ வேறோ ? நான் வேறோ ? " இருவரும் இணைந்தே பாடி , சிரித்தனர் ..

" அருள்கிட்ட மன்னிப்பு கேட்கணும் சந்தோஷ் " என்றாள்  சத்யா திடீரென

" என்னாச்சு டா ?"

" இல்லை எனக்கே தோணுது , அவனை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்னு .. நான் என்ன தப்பு பண்ணினாலுமே அவன் என்கிட்ட பேசிடுவான் .. இந்த தடவை அவன் அமைதியா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்து சந்து .. அவனை கஷ்டபடுத்தி நானும் கோபப்பட்டு கடைசியில் எங்களுக்கு என்னதான் கிடைச்சது இதனால் ? அவன் என்ன பண்ணுறான்  ? சரியா சாப்பிட்டானா  ? இல்லை டென்ஷனா இருக்கானா தெரில ! ஒரே வீட்டில் இருந்துகிட்டு ரெண்டு பெரும் பார்த்துக்கவே இல்லை தெரியுமா ? கோபம் வந்துட்டா மட்டும் நான்  ஏன் இப்படி ஆகிடுறேன் தெரில சந்தோஷ் .. எனக்கு உடனே அவன்கிட்ட பேசணும் போல இருக்கு " என்றாள்  சாஹித்யா சிறுபிள்ளை போல ..

" அது எப்படி, ரெண்டு பேருமே  சொல்லிவெச்சு  என்கிட்ட ஒரே வசனம் பேசுவிங்களா சத்யூ ?" என்று சிரித்தான் சந்தோஷ்

" என்ன சொல்றிங்க ?"

" ரெண்டு நாள் முன்னாடி தான் போனில் பேசினான் உன் நண்பன் .. கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் அவனும் அதே டைலாக்கை அவன் ஸ்டைல்ல சொன்னான் .. தப்பு பண்ணிட்டேன் மச்சி .. அவ கோபபடுறான்னு நானும் வீம்புக்கு கோபமாய் இருந்தேன்டா .. பட் இப்போதான் எனக்கே தோணுது , என் மேல தப்பு இருக்குன்னு ..இப்படிதான் சொன்னான் அருள் "

" கழுதை கழுதை .. அப்பறம் ஏன் அவன் என்கிட்ட பேசல"

" ஹா ஹா ஹா "

" லண்டனும் வேணாம் ஒன்னும் வேணாம் சந்து .. எனக்கு நம்ம குடும்பத்தை விட்டுட்டு அங்க இருக்குற ஐடியாவே இல்ல.. அடுத்த ப்ளைட்லயே  திரும்பிடலாமா சந்து ? அருளை பார்க்கணும் " என்றாள்  அவள் ஆவலாய் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.