(Reading time: 19 - 38 minutes)

" மா "

" சரி , நான் கொஞ்சம் வெளில போயிட்டு வந்திடுறேன் " என்று கூறிவிட்டு குழப்ப ரேகையுடனே அங்கிருந்து சென்றாள்  கவிமதுரா ..

" கண்டிப்பா என்னவோ சரி இல்லை .. என்ன பண்ணலாம் ?" என்று யோசித்தவள் தன்னுடைய செல்போனை பார்த்தாள் ..இரண்டு செல்போன்களை வைத்திருந்தாள் கவிமதுரா ... ஒன்று அவளுக்காகவும் இன்னொரு அவளது வேலைக்காகவும் .. அதில் ஒரு செல்போனை சத்தத்தை நிறுத்திவிட்டு , இன்னொரு எண்ணிற்கு அழைத்துவிட்டு அதை வரவேற்பு அறையிலேயே அவர்களுக்கு தெரியாமல் வைத்துவிட்டு வெளியில் வந்துவிட்டாள்  அவள் ..

அப்படி என்னதான் பிரச்சனை என்று தெரியவேண்டும் என்று எண்ணியவள் அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து அங்கு என்ன பேச்சு கேட்கிறது என்று  கவனித்தாள் ..

" இப்போ என்ன பண்ண சொல்லுற வித்யா ? சம்பந்தி கிட்ட நாம இதை சொல்லாமல் இருக்க முடியாதே "

" உண்மைதானுங்க ... ஆனா இதில் நம்ம பொண்ணு வாழ்க்கையும் சம்பந்த பட்டிருக்கு .. நான் அப்போதே சொன்னேன் , இந்த பொண்ணு பார்க்கிற வேலை எல்லாம் ஜாதகம் பார்த்த பிறகு வெச்சிடலாம்ன்னு நீங்கதான் கேட்கல .. "

" இப்போ இதபத்தி பேசி என்ன பிரோஜனம் ? இப்படி நடக்கும்ன்னு நான் கனவா கண்டேன் ? இப்போ மட்டும் ஒன்னும் குறைஞ்சு போயிடல .. இந்த கல்யாணம் நடந்தா, நம்ம பொண்ணுக்கு இருக்கிற தோஷம்படி மாப்பிளை உயிருக்கு ஆபத்துன்னு சொன்னது ஜோசியர் தானே ? கடவுள் இல்லையே ? நாம கும்பிடுற கடவுள் நம்மை கை விட மாட்டார் .. இந்த காலத்திலும் ஜாதகம் அது இதுன்னு பேசி  நம்ம பொண்ணுக்கு அமைய வேண்டிய நல்ல வாழ்கையை கெடுக்க வேண்டாம் "

" என்ன பேச்சு பேசுறிங்க நீங்க ? இதுவே நம்ம பொண்ணு விஷயத்துல அவங்க எதையாவது மறைச்சிருந்தா நீங்க சும்மா இருப்பிங்களா ?"

" மாட்டேன் தான் .. ஆனா நிலைமை கை மீறி போச்சு வித்யா .. அவங்க ஒருத்தர் ஒருத்தர் விரும்புறாங்க .. கல்யாணமே வேணாம்னு இருந்த ரெண்டு பெரும் ஒருத்தர் மீது ஒருத்தர் அன்பாய் இருக்காங்க .. அவங்களை எப்படி பிரிக்க முடியும் ?"

" ங்களுக்கு இந்த ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை ஜாஸ்தியா அண்ணி ? அவங்க பெரியவங்க அந்த காலத்து நம்பிக்கைய கடைபிடிக்க விரும்பலாம் .. நீங்களும் இந்த காரணத்தை வெச்சு தான் கிரி அண்ணாவை வேணாம்னு சொல்லிட்டிங்களா ? என்னால நம்பவே முடியலை " என்றாள்  வானதி ..

" நம்பிக்கை இருக்கலாம் இல்லாமல் கூட இருக்கலாம் வானதி .. என் ஜாதகத்தில் சொன்னது பொய்யாய் இருந்திருந்தா , எனக்கு இந்த விதவை கோலம் வந்திருக்குமா ?" என்று கேட்டாள்  கவிமதுரா ..

" அண்ணி , என் அண்ணா மரணத்தை சட்டைப்பையில் வைத்து கொண்டு போராடும் போர் வீரன் ..அவருடைய மரணமும் வாழ்வும் ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் இருக்குற விசயம் இல்லை .. உங்களை கல்யாணம் பண்ணிக்காமல்  அவர் சண்டைக்கு போயிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் "

"வாதங்களுக்கும் பிரதிவாதங்களுக்கும் கட்டுபடாத  விஷயங்கள் உலகத்தில் நிறைய இருக்கு வானதி .. கடவுள் ,  விஞ்ஞானம், தோல்வி , அந்தமாதிரி தான் ஜாதகமும் .. இன்னைக்கு நீ பேசுற அதே வேகத்தில் தான் நானும் இருந்தேன் .. என் அம்மா , அப்பாவுக்கு இருந்த கலவர மனநிலைக்கு எதிர்மாறாய் ரொம்ப தெளிவாகத்தான் இருந்தேன்  நான் .. எவ்வளவோ பேரு அவசர திருமணம் செய்து கூட ஒன்று சேர்ந்து பல வருஷம் சேர்ந்து வாழவில்லையா ? அப்படி நானும் தரூவும் சந்தோஷமா வாழ்வோம்னு நம்பினேன் .. "

" அப்படின்னா , அப்போ என்னதான் நடந்தது ? " 

" நிச்சயதார்த்தம் !!!"

மிகவும் கோலாகலமாய் புலர்ந்தது அன்றைய தினம் .. காலையிலேயே செல்போனின் சிணுங்களில் கண்விழித்தாள்  கவிமதுரா ..

" ஹெலோ "

" ஹெலோ மது அண்ணி "

" ம்ம்ம்ம் " என்று தூக்கத்தில் முனகினாள் அவள் 

" அடடே நீங்க இன்னும் எழவே இல்லை .. ஆனா இங்க ஒருத்தர் எங்களை விடிய விடிய தூங்க விடலை அண்ணி " என்றான் சுபாஷ் சோகமாய் .. சந்தோஷும் இணைந்து கொண்டு ,

"நிச்ச்யத்துக்கே இப்படின்னா , கல்யாணத்திற்கு அண்ணா என்ன பண்ணுவார்ன்னு  தெரியலை அண்ணி , பேசாமல் இன்னைக்கே கல்யாணம் பண்ணிகோங்க  " என்றான் ..

" டேய் போனை இங்க கொடுங்க டா" என்று போனை பிடுங்கினான் கிரிதரன் ..

" ஹெலோ தரூ "

" மதுரா என்ன பண்ணுற ?"

" தூங்கிட்டு இருக்குற குழந்தைய எழுப்பி கேட்குற கேள்வியா இதெல்லாம் ? என் கையில மட்டும் துப்பாக்கி இருந்தது அண்ணன், தம்பி மூணு பேரையும்  சுட்டு பொசுக்கிடுவேன் " என்று சிரித்தாள் அவள் ..

" அடிப்பாவி ..:"

" ம்ம்ம் என்னை தூங்க விடுங்க தரூ .. அப்போதான் இவினிங் பார்கறதுக்கு நான் ப்ரெஷ் ஆ இருப்பேன் " என்றாள்  அவள் ...

" ஹா ஹா , உன் காட்டுல மழை இப்போ ! நீ நடத்து தாயே .. நான் அப்பறமா பேசுறேன் " என்றபடி போனை வைத்தான் கிரிதரன் .. அடுத்த சில நிமிடங்களிலே  வித்யா வந்து அவளை எழுப்ப , அன்றைய நாளின் கதாநாயகியை தயாராகி கொண்டிருந்தாள் கவிமதுரா ..

கண்ணாடி முன் நின்று தன்னழகை ரசித்து கொண்டிருந்தாள் கவிமதுரா . மனம் முழுதும் சந்தோசம் குடியிருப்பத்தின் சாயலில் அவள் இதழில் தவழ்ந்தது அழகான புன்னகை ..

" சிரிக்கிறியா ? இதுக்கு நீ கண்டிப்பா வருத்தப்படுவ  டீ " என்று அவளுக்கு மீண்டும் அந்த அசரீரி கேட்டது ..நேற்று நள்ளிரவு அவளுக்கு வந்த மிரட்டல் அது ! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளிடம் நேரம் காலம் தெரியாமல் யாரோ மிரட்டல் விட , இவள் அதையும் பொருட்படுத்தாமல் உறங்கிவிட்டாள் .. இப்போதுதான் அது மீண்டும் நினைவிற்கு வரவும் தனது நண்பனுக்கு போன் செய்தாள் ..

" வாசு "

" ஹே கல்யாண பொண்ணு , என்னடி இந்த நேரத்துல போன் ? நிச்சயம் வேணாம்னு ஓட போறியா ? வண்டி ஏதாவது ரெடி பண்ணவா ? "

" கொன்னுடுவேன் உன்னை .. உனக்கு நான் ஒரு போன் நம்பர் அனுப்புறேன் ..இது யாருன்னு கண்டுபிடிக்கணும் "

" ஹே ஏதும் பிரச்சனையா ?"

" தெரியலையே ..அதுக்குதான் உன்னை விசாரிக்க சொல்லுறேன் "

" ம்ம்ம் சரி "

" முக்கியமான விஷயம் , இது பத்தி அம்மா அப்பாகிட்ட சொல்ல வேணாம் "

" ம்ம்ம்ம் ஓகே "

" சரி நான் அப்பறமா பேசறேன் "

" ஹே ஆல் தி பெஸ்ட் .,.. கிரிதரன் சார் கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் "

" உதைப்பேன் உன்னைய ... ! நீ பங்க்ஷன்க்கு வர்ற தானே டா ?"

" யா யா .. ப்ரீயா பிரியாணி , சைட் அடிக்க அழகான பெண்கள் இருந்தா , உன் நண்பன் அழைக்காமலே வருவான்னு தெரியாதா உனக்கு ?"

" த்து .. இதெல்லாம் ஒரு பொழப்பு .. போனை வை " என்று சிரித்தாள் கவிமதுரா

" ஓகே பை "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.