(Reading time: 19 - 38 minutes)

" டிப்பாவி , நான் என்னென்ன கற்பனையில் வந்தேன் .. நீ என்னன்னா இப்படி ஜகா வாங்குறியே " என்றான் அவன் சோகமாய்

" ஏன் ?"

" இல்ல எப்படியும் கல்யாணத்துக்கு பிறகு ஹனிமூன் வருவோமே , இப்போவே லொகேஷன் எல்லாம் சுத்தி பார்த்துகிட்டா வருங்காலத்தில் சுலபமா  இருக்குமே பார்த்தேன் " என்று கூறி கண்ணடித்தான் அவன் ..

" அடடே , நீங்க ஒரு அம்பின்னு நினைச்சேன் , பட் ரெமோ மாதிரி நிமிஷத்துக்கு ஒரு ரொமண்டிக் லுக்கும் டைலாக்கும்  சொல்றிங்களே , தாங்க முடியலை சந்து .. "என்று சிரித்தாள் அவள் ..

சரி இவங்க இப்படி காதல் வசனங்களை பறக்க விட்டு வானத்தை வெட்கப்பட வைக்கட்டும் .. நாம கவிமதுரா - வானதியை பார்த்துட்டு வருவோம் ..

" சொல்லுங்க அண்ணி , அப்பறம் என்னாச்சு ? கிரி அண்ணா உங்களை எங்க கூட்டிட்டு போனாரு ?" ஆர்வமாய் கேட்டாள்  வானதி .. மீண்டும் அன்றைய நினைவுகள் கோர்வையாய் பார்வையில் நின்றன ..

" நாம எங்க போறோம் தரூ ?"

" ஷாப்பிங் "

" அய்யோ " என்று அலறினாள் கவிமதுரா ..

" ஹே என்னச்சு ?"

" முன்னாடியே நீங்க சொல்லி இருந்தா , நான் உங்களோடு வந்திருக்கவே மாட்டேன் தரூ .. எனக்கும் ஷாப்பிங்கும் ரொம்ப நீண்ட இடைவெளி .. எனக்கு ஷாப்பிங் பண்ணவே பிடிக்காது "

" நிஜம்மாவா சொல்லுற ? "

" ம்ம்ம்ம் எஸ்.. அந்த கூட்டம் , எதை வாங்குறதுன்னு குழப்பம் , வரவை மிஞ்சின செலவு , இதெல்லாம் எனக்கு பிடிக்காது .. பொதுவா ஏதாவது வாங்கனும்னு நினைச்சா , என்ன வாங்கணுமோ அதை லிஸ்ட் போட்டு ப்ளான்  பண்ணி ஒரு மணி நேரத்தில் போயிட்டு வந்திடுவேன் " என்றாள்  அவள் படபடவென ..

" ஹா ஹா , எங்கள் கஜானாவை கட்டி காக்க , நல்ல ராஜகுமாரியை தான் தேர்ந்தெடுத்து இருக்காங்க அம்மாவும் அப்பாவும் " என்றான் கிரி பெருமையாய் .. பிறகு

" அடுத்த வாரம் அக்ஷய திருதி  வருது .. உனக்கு இந்த கூட்டத்தில் போயி ஷாப்பிங் பண்ணுறது பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் ,அதே நேரம் உனக்கு ஏதாவது வாங்கி தரணும்னு நினச்சேன் .. அதான் நகைக்கடைக்கு போறோம் " என்றான் அவன் .. தன்னை பற்றி இவனுக்கு எப்படி தெரியும் ? என்று ஆச்சர்யபட்டாள்  கவிமதுரா ..

அதை அவனிடமே கேட்டாள் ..

" ஹே அதெல்லாம் தொழில் ரகசியம் .. நீதான் எதற்கும் சீக்கிரமா இம்ப்ரஸ் ஆகமாட்டன்னு சொல்லிட்டியே , சோ ராஜகுமாரியின் மனம் மயக்க நாங்க பெரும்பாடு படனும் இல்லையா ? சோ இதெல்லாம் எப்படி சாத்தியம்னு சொல்ல மாட்டேனே ! சும்மா உன் சி ஐ டி மூளையை பயன்படுத்தாமல், நிகழ்காலத்தை நன்றாக என்ஜாய் பண்ணுவியாம் " என்றான் கிரி ..

மேலும் ,

" அதுமட்டுமில்ல .. இந்த இடத்துல நீ என்னை பற்றி இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கணும் .. நான் நல்ல நாள் பார்த்து எல்லாம் கிப்ட்  கொடுக்குற ரகம்  இல்லை.. எனக்காய் ஏதாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா கிப்ட்  பண்ணுவேன் .. சோ வருங்காலத்தில் நம்ம கல்யாண நாள் , உன் பிறந்தநாள் , வெலண்டைன்ச்  டே  இந்த மாதிரி நாளில் கிப்ட்  தரலைன்னா ,  நீதான் பெரியமனசு பண்ணி என்னை புரிஞ்சுக்கணும் . அதை விட்டுட்டு தாம் தூம்னு குதிச்சிறாதே  தாயே " என்றான் பவ்யமாய் ..

அவனது பேச்சிலும்  போலி பவ்யத்திலும் மலர்ந்து சிரித்தாள் கவிமதுரா ..

" ஹா ஹா .. பயப்படாதிங்க .நானும் அதே ரகம்  தான் .. எனக்கும் பரிசு கொடுக்குறது லஞ்சம் மாதிரி .. கொடுக்குறதும் தப்பு வாங்குறதும் தப்பு .. என்றாவது ஒரு நாள்ன்னா  ஓகே .. மத்தபடி என்னைபொருத்தவரை இந்த மாதிரி விஷயம் எல்லாம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் .. அதிக எதிர்பார்ப்பு அதிக வலியை தரும் "

" ஹ்ம்ம் நீ ரொம்ப தெளிவான பொண்ணுதான் .. பட் உன் வேகம் தான் அத்தையை பயப்பட வைக்கிறதுன்னு நினைக்கிறேன் .. எப்பவும் எந்த முடிவு எடுக்குறதா இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தன்மையாய்  இருக்க முயற்சி பண்ணலாமே கவி .. நான் அட்வைஸ் பன்னல .. ஜஸ்ட் ஒரு நண்பனாய் உனக்கு எடுத்து சொல்லுறேன்னு வெச்சுக்க " என்றான் கிரிதரன் ..

அவனது எண்ணத்தை  தன் மீது திணிக்காமல் அவன் பேசிய விதம் அவளை கவர்ந்தது .. சிறுபிள்ளை போல மேலும் கீழும் தலையாட்டி " ஓகே தரூ " என்றாள்  ..

அதன்பிறகு வந்த நாட்கள் இருவருக்குமே வசந்தகாலமாகத்தான் இருந்தது ...

இலை  வருடும் பனித்துளிக்கும்

தாமரையை அணைக்கும் பகலவனிற்கும்

நாணலை தீண்டும் தென்றலுக்கும்

மட்டுமே தெரியும்

நம்மை அறியாமல் நமக்குள் பூத்து நிற்கும் காதலின் சுகம் 

- கவிமதுரா ..

தனது டைரியில் இதை எழுதி முடிக்கவும் அவளை போனில் அழைத்தான் கிரி ..

" ஹை தரூ "

" ஹே மதுரா .. என்ன பண்ணிட்டு இருக்கீங்க மேடம் ?"

" சும்மா கிறுக்கல்கள் "

" அடடே , உன் கிறுக்கல்களுக்கு பின்னால் இருக்கும் கிறுக்கன் யார் ?"

" அது வேறு யாரு கண்ணாடி பாரு !"

" இன்னும் ரெண்டு நாளில் நிச்சயதார்த்தம் மதுரா"

" ம்ம்ம் ஆமா "

" ஆர் யூ ரெடி டா ?"

" ம்ம்ம் , இல்லைன்னு சொன்னா விட்ருவிங்களா  தரூ ?"

" கண்டிப்பா மாட்டேன் .. கட்டாய கல்யாணம் பண்ணியாச்சும் உன்னை கடத்திற மாட்டேன் "

" அடபாவி ... ஆரம்பத்தில் என்கிட்ட தன்மையை பேசுனா ஆளா நீங்க ?"

" ஹா ஹா ஆரம்பத்தில் தள்ளி நின்ன கள்ளியா நீ ? நீதானே கொஞ்சம் கொஞ்சமா என்னை மயக்கின ?"

" ஹே தரூ எங்க நின்னு இப்படி வசனம் பேசிட்டு இருக்கீங்க நீங்க ? ஏற்கனவே உங்க சித்தப்பா பசங்க ரெண்டு பெரும் ஆளாளுக்கு போன் பண்ணி என்னை கலாய்ச்சிட்டு  இருக்காங்க .. நீங்க பாட்டுக்கு அவங்க முன்னாடி நின்னு இப்படி பேசி வைக்காதிங்க "

" ச்ச ச்ச.. இங்க உன் அத்தை மாமா தவிர யாருமே இல்லை ஏஞ்சல் ..நான் ரொம்ப கூச்ச சுபாவம் டா " என்றான் அவன் ..

" அடப்பாவி .. இதுக்கு பேருதான் கூச்ச சுபாவமா ? ஆளை விடுங்க " என்று சிரித்தபடி போனை வைத்தவள் மாடிப்படி இறங்கி கீழே வரவும்  வித்யா விமலின் முகத்தை போலியான புன்னகை படர்ந்தது .. எதுவோ சரி இல்லை என்று தோன்றியது அவளுக்கு .. இருவரும் காரசாரமாய் ஏதோ பேசும்போது அவள் இடைவந்துவிட்டால் போலும் .. ஒரு சமாளிக்கும் புன்னகையை சிந்தி

" வா டா " என்றார் வித்யா ..

" என்னம்மா ஆச்சு ?"

" ஒ .. ஒண்ணுமில்லயே...  "

" நிஜம்மாவா ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.