(Reading time: 15 - 30 minutes)

04. நேசம் நிறம் மாறுமா - தேவி

காத லொருவனைக் கைப்பிடித்தே அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச்செய்து வாழ்வமடி

                                                                     பாரதியார்

Nesam niram maaruma

வெண்மதி கூறியதை கேட்ட ஆதி திகைத்தான். பிறகு ஒன்றும் சொல்லமால் அவன் தன் லேப்டாப் ஆன் செய்தான்.

அவன் மௌனம் பார்த்து மதி “சாரி , நான் உங்களை ஹர்ட் செய்யுமாறு பேசி விட்டேனா?” என்று கேட்டாள்.

ஆதி “இல்லை. ஆனால்... சரி விடு. இதை பற்றி வீட்டிற்கு சென்ற பிறகு பேசலாம்” என்று சொல்லி விட்டு வேலையைத் தொடர்ந்தான். அப்போது ஆபீசிலிருந்து ப்யூன் ஒருவர் வந்தார். அதனால் இவர்கள் இருவரும் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அவனால் வேலை செய்ய முடியவில்லை. அவன் கவனமும் இங்கில்லை. கையும் ஒத்துழைக்கவில்லை. அதை பார்த்த மதி “நான் ஏதாவது ஹெல்ப் செய்யவா ? “ என, “இல்லை. இப்போ வேண்டாம். அந்த பைல்ஸ் மட்டும் பார்கிறேன். லேப்டாப் வேலை வீட்டிற்கு சென்றே பார்க்கிறேன்” என்று முடித்தான்.

அதிகம் பேசாவிட்டாலும், முந்தைய நாள் போலே அவனுக்கு வேண்டியதை அவளிடம் சகஜமாக கேட்டு கொண்டான். டாக்டர் செக் செய்து விட்டு கை, கால் பிராக்ச்சர் தவிர மற்ற எல்லாம் நார்மலாக இருப்பதால், நாளையே டிச்சார்ஜ் செய்துவிடலாம் என்று கூறினார்.

அன்று சற்று நேரத்திற்கு ஒருமுறை ஆபீசிலிருந்து மேனேஜர் லெவலில் உள்ளவர்கள் எல்லாம் ஒருவர் மாற்றி ஒருவர் வந்தனர். அவர்களே முறை வைத்து ஒருவர் வந்து விட்டு போன பின் ஒருவர் என வந்தது பார்த்து மதிக்கு வியப்பாக இருந்தது. பொதுவாக எல்லாரும் ஒன்றாக வந்துதான் அவள் பார்த்திருக்கிறாள். ப்யுனின் உதவியோடு வந்தவர்களுக்கு தேவையானவற்றை கவனித்தாள்.

அன்று மாலையும் வீட்டில் இருந்து எல்லாரும் வந்து பார்த்து மறுநாள் எப்போ வீட்டிற்கு வரலாம் என்று கேட்டு வேண்டிய ஏற்பாடு செய்தனர். ஆதி அன்றைக்கு அதிதியை கவனித்த போது அவள் பெரும்பாலும் வெண்மதி, வான்மதி இருவரிடமுமே பேசி கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் வெகு நாட்கள் கழித்து மலர்ச்சி தெரிந்தது.

அப்போது வேலை முடிந்து அங்கே வந்த மதியின் அப்பா அவன் டிச்சார்ஜ் பற்றிய விவரங்கள் கேட்டு விட்டு, “மாப்பிள்ளை, எனக்கு மெட்ராஸ்க்கு ட்ரான்ஸ்பர் ஆகி இங்கேயே மைலாப்பூர் அருகே வந்து விட்டோம். ஒரு மாதம் ஆகிறது. ஷிப்டிங், ஆபீசில் சார்ஜ் எடுப்பது போன்ற வேலைகள் இருந்ததால் உங்களிடம் நேரில் சொல்ல முடியவில்லை. நீங்களும் பிசியாக இருப்பதால் அப்பாவை வந்து பார்த்து சொல்லி விட்டு சென்றோம். தவறாக எடுத்துகொள்ளதீர்கள். “ என்றார்.

ஆதிக்கு வியப்பாக இருந்தது. இப்படியும் ஒரு மனிதரா? என்று.. ஆதியின் மனநிலை ஓரளவிற்கு மதி யூகித்திருப்பாள் என்றாலும், அதை அவள் அப்பாவிடம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

மதி, ஆதி இடையேயான உறவு முறை ஓரளவு அவருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை பெரிது படுத்தாமல், பேசிய விதம் அவரிடம் அவனுக்கு மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது. அவனே “அதற்கு என்ன மாமா? இப்போதான் தெரிந்ததே.. மேலும் என்னை மாப்பிள்ளை என்று எல்லாம் கூப்பிட வேண்டாம். நான் முதலில் உங்கள் நண்பர் பிள்ளை. பிறகு தான் உங்கள் மாப்பிள்ளை.  அதனால்  ஆதி என்றே அழையுங்கள்.” என்றான்

இப்படி அவன் சொன்னது அங்கிருந்த எல்லாருக்கும் சந்தோஷமாக இருந்தது. மதியின் மனதில் ஆதியின் அப்பா ஒருமுறை “ மதி, ஆதி இப்போ காண்பிக்கிற குணம் உண்மையானது அல்ல. அவனை மாதிரி ஒரு புரிந்துகொள்ள கூடிய, காரியிங் பெர்சன் அரிது. இதை ஒருநாள் நீயே புரிந்து கொள்வாய். “ என்று கூறியது நினைவு வந்தது. பிறகு சாதரணமாக எல்லோரும் பேசி கொண்டிருந்தனர்.

ஆதி தன் அம்மாவிடம் “அம்மா, கீழே உள்ள அறையே தயார் செய்து விடுங்கள். நாளை காலை நீ வர வேண்டாம் மதி. நீ மேலிருந்து தேவையானவற்றை மட்டும் எடுத்து கீழ் அறையில் வைத்து விடு. சூர்யா காலை சீக்கிரமே பில் தயார் செய்ய சொல்லி விடு. காலை டிச்சார்ஜ் முடித்து விட்டு அலுவலகத்திற்கு மதியம் போகலாம். அதிதி நீ காலையில் எப்போவும் போல் ஆபீஸ் போய் விடு” என்று அவரவர் செய்ய வேண்டியவற்றை சொல்லி முடித்தான்.

எல்லாரும் கிளம்பிய பிறகு சூர்யாவும் ஆதியும் மட்டும் சாப்பிட்டு படுத்தனர். அப்போது சூர்யா அண்ணனிடம் “அண்ணா, அப்பாவும், சுந்தரம் மாமாவும் நல்ல பிரெண்ட்ஸ் என்றார் அப்பா. உங்களுக்கு தெரியுமா? இவள்ளவு நாட்கள் இவர்களை பற்றி எதுவும் தெரியாதே? என்று கேட்டான்.

ஆதி “நல்ல பிரெண்ட்ஸ் என்று தெரியும். அப்பா ஸ்ட்ரோக் வந்து படுத்த போது இவரிடம் பேசியதில் அப்பா முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. இவர் பெண்ணை நான் திருமணம் செய்ய வேண்டும் என அப்பா ஆசை பட்டார். நான் திருமணத்திற்கு சம்மதிக்க முக்கிய காரணம் இதுதான். “ என்று முடிக்க, சூர்யாவிற்கு இதெல்லாம் வியப்பாக இருந்தது.

ஆனால் இதை எல்ல்லாம் ஏன் ஆதி யாரிடமும் சொல்லவில்லை என்று யோசித்தான். ஒன்றும் புரியவில்லை. பிறகு படுத்து விட்டான்.

அங்கே வீட்டில் மதிக்கு தவிப்பாக இருந்தது. தான் ஆதியை புண்படுத்தி விட்டோமோ என்று வருந்தினாள். அவனை பொறுத்தவரை அவன் சொன்ன படிதான் நடந்தான். என்ன செய்வது என்று யோசித்தவள் நாளை அவனிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்கலாம் என்று எண்ணி, பிறகுதான் தூங்கினாள்.

றுநாள் காலை மதியும், அததையுமாக சேர்ந்து அவன் சொன்ன மாதிரி கீழ் அறையை அவனுகேற்ற மாதிரி தயார் செய்தனர். மதியின் அம்மா, அப்பா, வாணி மூவரும் வந்து தேவையான உதவிகளை செய்தனர். மதி மாடியில் இருந்து அவனுக்கு தேவைப்படும் பொருட்களை எடுத்து வைத்தாள்.

10 மணி அளவில் டாக்டர் வந்து அவனை டிச்சார்ஜ் செய்து விட்டு அவன் திருப்பி செக் அப் வருவது பற்றி சொல்லிவிட்டு அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த ஆதியை வசதியாக படுக்க வைத்து விட்டு அவனுக்கு ஜூஸ் எடுத்து வர சென்றாள் மதி. சூர்யா அவன் அறைக்கு சென்று விட, மற்ற எல்லாரும் அவனை ரெஸ்ட் எடுக்க சொல்லி சென்றனர்.

அதற்குள் வேலையாள் ஒவ்வொருவராக வந்து அவனை விசாரித்து செல்லவும், அவன் அந்த ரூமை பார்த்தவன் வியந்தான். ஒரு நோயாளியின் அறை போல் இல்லாமல், ஆபீஸ் கம் பர்சனல் ரூம் போல் இருந்தது.

ஒரு புறம் மூவிங் டேபிள் ஒன்றில் பைல்ஸ் மற்றும் லேப் டாப் வைக்கப்பட்டு இருந்தது. பெட் அருகில் உள்ள டீபாய் மேல் செல்போன் , சார்ஜெர், பர்ஸ் வைக்கப்பட்டு இருந்தது. டீபாய் கீழ் அன்றைய நியூஸ் பேபெர்ஸ் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. சற்று குனிந்தால் எடுக்கும் படியாக இருந்தது. முக்கியமாக இவை எல்ல்லாம் அவனின் இடது புறத்தில் இருந்தது. வலது புறம் விண்டோ ஸ்க்ரீன் திறக்கபட்டு தோட்டம் தெரியும்மாறு இருந்தது.

ஆக்சிடென்ட் போது அவனின் வலது புறம் தான் அடிபட்டதால், அதை அசைக்க முடியாது என்பதால் , அவனின் இடது புறம அச்செஸ் ஏதுவாகவும், வலது புறம் அமைதி தோற்றுவிக்கும் படியாகவும் இருந்ததை பார்த்து அவனுக்கு மனதில் மகிழ்ச்சி தோன்றியது.

சற்று நேரத்தில் மதி ஜூஸ் எடுத்து வரவும், அவளிடம் “நீ ஏன் சிரமபடுகிறாய்? யாராவது வேலைக்காரர்களிடம் கொடுத்து விட்டிருக்கல்மே என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.