Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10 - 5.0 out of 5 based on 2 votes
Pin It

10. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

10. தூக்கம் இங்கு ஏது...

ஸ் மெல்ல கண்களை திறந்து பார்த்தான். வெளிச்சத்திற்கு கூசிய கண்களை மெல்ல வெளிச்சத்திற்கு பழக்கிக் கொண்டு அருகே இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி மதியம் இரண்டு ஆகி இருந்தது.

அப்போதும் எழுந்திருக்க மனமில்லாமல் புரண்டு படுத்தான்.

நந்தினி எங்கே போயிருப்பாள்???

Kanavugal mattum enathe enathu

அப்போது மட்டுமில்லாமல் வீட்டினுள் நுழைந்த நொடி முதலே அவன் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி அது...

நண்பர்களிடம் நேரம் செலவிட்டாலும், குடித்தாலும் கூட அவனின் நினைவை விட்டு சிறிதும் அகலாமல் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி...

மெல்ல எழுந்து அமர்ந்தான். தலை விண்ணென்று வலித்தது.

வலியையும் மீறி முன் தினம் பார்த்த நந்தினியின் கலங்கி இருந்த முகமும், சிவந்திருந்த விழிகளும் அவன் கண் முன் தோன்றின!

முதலில் நினைத்ததை போலவே அவனும் அங்கேயே இருந்து அவளுடன் பேசி வழி அனுப்பி வைத்திருக்க வேண்டுமோ?

ஆனால் அவளை அனுப்பி வைக்க அவனால் முடியுமா?

எஸ் தன்னுடைய வழக்கமாக தலையை சிலுப்பிக் கொண்டான். இதெல்லாம் தேவையில்லாத எண்ணம்!

இப்போது நந்தினி எங்கே இருக்கிறாள் என்பதை தெரிந்துக் கொள்ளா விட்டால் அவனுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது.

அதற்கு மேல் மனதை கட்டப் படுத்த இயலாமல் செல்போனை எடுத்து நந்தினியின் எண்ணை தேடி அழைத்தான். அந்த பக்கம் ரிங் போகவில்லை மாறாக,

‘Please leave your message for ’ என்ற அறிவிப்பும் தொடர்ந்து ‘நந்தினி’ என்ற அவளின் குரலும் கேட்டது

அவளின் அந்த மெல்லிய இனிமையான குரலை கேட்டு அவனுக்கு மெய் சிலிர்த்தது!

இது என்ன மாதிரியான உறவு?

மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டவன்,

“நான்ட்ஸ் நான் எஸ் பேசுறேன். ப்ளீஸ் கால் மீ பேக்!” என்று வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்து விட்டு இணைப்பை துண்டித்து வைத்தான்.

ரி நந்தினி விஷயத்தை விடு, நம்ம விஷயத்துக்கு வருவோம்....”

போனில் ஒலித்த சாந்தியின் பேச்சை கவனத்துடன் கேட்ட சக்திவேலின் முகம் சுருங்கியது. ஆனாலும் முயன்று வரவழைத்த அமைதியான குரலில்

“சாந்தி எதுக்கு இத்தனை பொய்? எனக்கு என்னவோ இது பிடிக்கலை” என்றான்.

மறு பக்கம் இருந்த சாந்தி கோபத்தில் வெடித்தாள்.

“நீ என்ன ஐடியால இருக்க? என்னை கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்குறீயா இல்லை இப்படியே அப்ஸ்கான்ட் ஆகலாம்னு எதாவது ப்ளான் வச்சிருக்கீயா?”

“என்ன இப்படி கேட்குற சாந்தி?”

“அப்புறம் வேற எப்படி கேட்குறது? நீயா நம்ம கல்யாண பேச்சை எடுக்குற மாதிரியும் தெரியலை.... ஒரு வேலை வாங்குற மாதிரியும் தெரியலை.....”

“கொஞ்சம் பொறுமையா இரு, எம்.பி.ஏ முடிச்ச உடனே எனக்கு நல்ல வேலை கிடைச்சிடும்”

“கிடைக்கலாம் ஷக்தி! ஆனால் கட்டாயம் உடனே கிடைக்கும்னு கேரன்ட்டி இருக்கா? உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, உன் திறமை மேலேயும் நம்பிக்கை இருக்கு ஆனால் அதுக்காக நாம காத்திருக்கனுமா? என்னுடைய வேலையே நம்ம இரண்டு பேருக்கும் இப்போதைக்கு போதும்... நீ கல்யாணத்துக்கு அப்புறம் பொறுமையா வேலை தேடிக்கோ....”

“அதெல்லாம் சரியா வராது சாந்தி.... நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளேன்....”

“என்ன வராது??? நீ என்ன 1900லயா இருக்க? கம் ஆன் ஷக்தி”

“சரி நீ சொல்றதை நான் ஏத்துக்கிட்டாலும் கூட உங்க அம்மா கிட்டேயும் அதே உண்மையை சொல்ல வேண்டியது தானே? எதுக்கு இந்த பொய் எல்லாம்?”

“ஏன் நீ என்ன ஹரிச்சந்திரனா மாறிட்டீயா???? உண்மையை சொல்லி வைஃபையும் மகனையும் கஷ்டப் படுத்தின ஹரிச்சந்திரனா இல்லாமல் பொய் பேசுறவனா இருக்கிறதுல தப்பில்லை”

அவன் இருந்த மனநிலையிலும் கூட அவள் சொன்ன ‘வியாக்கியானத்தை” கேட்டு அவனுக்கு சிரிப்பு வந்தது.

“இங்கே பாருடா, அம்மாக்கு உன் பேர்ல நல்ல அபிப்ராயம் வந்திருக்க மாதிரி தோணுது! இது தான் நல்ல டைம்! நீயே பேசனும்னு கூட இல்லை, வள்ளி கிட்ட சொன்னால் அவளே லீட் கொடுப்பா...”

சக்தி அமைதியாக இருந்தான்.

“என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?”

“.....”

“என் மேல கோபமா?”

“ஆமாம்ன்னு சொன்னால் என்ன செய்வ?”

“நல்லா கோபப்பட்டுக்கோன்னு விட்ருவேன்”

“அதானே பார்த்தேன்! உன் கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்?”

“அது மட்டுமே தான்டா உனக்கு குறைச்சல்! முதல்ல அம்மா அப்பாவை இம்ப்ரஸ் செய்து கல்யாணம் செய்துக்குற வேலையை பாரு அதுக்கப்புறம் நான் உன்னை எப்படி கவனிக்குறேன்னு பார்த்துக்கோ!”

“அப்படி எப்படி கவனிப்ப?”

“நிஜமாவே உனக்கு தெரியனுமா??”

“இதுல என்ன சந்தேகம்???”

“தெரியனுமா வேண்டாமா, ஆமாம், இல்லைன்னு சொல்லு”

“ஆமாம் மேடம் ஆமாம்”

“அப்போ சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோ, நான் சொல்றேன்”

அவள் இப்படி ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்தவன்,

“ஹேய்!” என்றான் காதலுடன்

“ஐய தோடா, சின்சியர் சிகாமணி காதல் ரசம் பொழியுறார்!”

“ம்ம்ம்.....”

“என்ன ஹ்ம்ம்ம்???”

‘கல்யாணம் முடியட்டும் என்னன்னு சொல்றேன்!”

“இந்த டையலாக்கை கேட்டு கேட்டு எனக்கு போர் அடிச்சு போச்சுடா!”

“இங்கே பார் இதெல்லாம் ரொம்ப அநியாயம்...” என பேச தொடங்கியவன், மானிட்டரில் ஒலிபரப்பாகி கொண்டிருந்த செக்யுரிட்டி கேமரா விடியோவில் தெரிந்த மங்காவை பார்த்துவிட்டு பேச்சை பாதியில் நிறுத்தினான்.

அது மங்கா என தெளிவாக தெரிந்த போதும் சந்தேகத்தை போக்கி கொள்ள,

“சாந்தி, ஆன்ட்டி வீட்டிலேயா இருக்காங்க?” எனக் கேட்டான்.

‘அம்மாவா? ஏன் கேட்குற?”

“என் கிட்ட இவ்வளவு நேரம் பேசுறீயே அதான் கேட்டேன்”

“எல்லாம என் நேரம்டா! அம்மா கடைக்கு போனாங்க! இதோ பார் இந்த வீகென்ட் வீட்டுக்கு வா, அதுக்கு முன்னாடி நான் வள்ளி கிட்ட சொல்லி அம்மா கிட்ட பேச சொல்றேன்”

“சாந்தி ஒரு முக்கிய வேலை வந்திருச்சு, நாம அப்புறமா பேசி ஒரு முடிவுக்கு வருவோம்... பை...”

“ஷக்தி!”

சக்தி போனை வைத்து விட்டதற்கான அறிகுறியாக அந்த பக்கம் கீங் கீங் என்ற சத்தம் தான் கேட்டது!!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10mona 2015-08-29 22:01
Nice story pls update ASAP
Reply | Reply with quote | Quote
# KalKalyan 2015-08-28 07:39
Hi, Very nice update.

Friends, I am not able to access the 4th page. It gives error. Does anyone else face the same issue ?
Reply | Reply with quote | Quote
# RE: KalChillzee Team 2015-08-28 09:30
Dear Kalyan,
Most of the time this is due to cache issue and hence refreshing the page should fix it for you. Just in case if you continue to face the problem, please take a screenshot of the error and send it to .

And we will try to fix it for you.

Thanks.
Reply | Reply with quote | Quote
# RE: KalKalyan 2015-08-29 03:40
Thank you. Let me try .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Divyaa 2015-08-27 23:00
Nice update Bindhu ma'am...Adath Nandthini-oda vishwaroobam parkaporomo :Q: Ana pavam nandthini. S-k oru chinna punishment avdhu kudungale. 3:) Perusa vendam please. ;-) Shakthi sir ninga harishchandra-oda thambhi tha. :hatsoff: Waiting to read next update... As usual kalkitinga writer ma'am.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Jansi 2015-08-27 22:41
Very nice epi Vinodha

Innum konjam S- i alaya vidunga, seekirama Nantini-i avar kannula kaadaateenga.... Sariya. :yes: :yes:

Enakennamo Nantini paarka virumbara velai kaaranamaave S....avalai meet seyya porataa tonutu...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Thenmozhi 2015-08-27 19:34
Episode nalla iruku anal I was a bit disappointed :)

Was expecting more Mr. S & Nanthini scenes. he he he sari sari thittathinga ;-)

Mr.S and Nanthini next time meet seiyum pothu damal dumil aaguma ilai busunu poyiduma :Q:

epadi irunthalum I am sure it will be an enjoyable read :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Anusha Chillzee 2015-08-27 19:05
Binds, first of all thanks for the update. You are soooo sweet :D

super super epi (y)

Inimel naama parka povathu SK vudaiya another [ cute ] face correct thane?
Nands reaction epadi irukum enbathu than ipothaiya question.

Sakthi sir Shanthi yai pottu thakuringa [ ethanai naal aasai Binds ;-) ]

Eagerly waiting for the next episode :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10ranjitham 2015-08-27 18:54
இப்போவாவது மனைவியின் அருமை இவருக்கு புரிகிறதே.
ஆனால் நந்தினியின் மனம்?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Sharon 2015-08-27 17:44
Nice update Bindu mam (y) (y) ..
Enaku hero va paarthaal lit ah paavama dan irukku.. But Nands oda thelivu romba pidichu irukku :clap: ..
Waiting for next update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Admin 2015-08-27 14:49
Nice epi Binds mdamji :-)

Pavamla Sk sikiram Nands kuda serthu vachirunga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Keerthana Selvadurai 2015-08-27 09:53
Super epi binds :clap:

Sakthi nee super pa (y) Shanthi madam unnai purinchukittu unkooda seekiram sernthiduvanga (y) Shanthi madam ammave ippadi oru marumagan than enaku thevai nu ungalai serthu vaichuduvanga..So don't worry :D

Mr.S nalla anupavinga..Ungalukku ithuvum thevai innumum thevai :yes: Enga nands a azha vaichingala ;-)

Anams ippovavathu manasu mari nands a accept panni sorry kepangala :Q:
Reply | Reply with quote | Quote
# bindukurinji 2015-08-27 08:46
  • இப்போ குத்துதே குடையுதேனா sss ...........சக்தி பொய்யில் ஆரம்பிக்கும் மணம் நிலைக்காது .......நந்து இப்போதாவது நல்ல முடிவெடுத்தே .......சந்தோச நேரத்தில் ஸ்வப்னாவிற்கு கலக்கமா ?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Devi 2015-08-27 07:54
Nice update :clap:
SK characterisation superb..
Shakti is also good !! (y)
Waiting to read more (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Sandiya 2015-08-27 07:34
Nice update (y)
sk feel pandrathu nalla erunthathu bt avaruku ethu pathathu nadhini ennum avara kachi edukanum ;-)
eagerly waiting for nadhini returns 8)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10MAGI SITHRAI 2015-08-27 06:47
Nandhini innum strong person a aguna nalla irukum nu thonutu...mukiyama inta alugai..matavangaluku parinchudu pesuratu..ipadi ellataium vidanum ;-)
Reply | Reply with quote | Quote
# ~Sham~Shamala 2015-08-27 06:43
Very nice storyline....

Romba pudichirukku....
SK character nalla irukku...aana, konjam slow ...
But, we will wait till he fall for Nands....
Keep up with the interesting storyline... :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10Vindhya 2015-08-27 04:02
nice update sis

Eppo SK - Nands meet seivanga???? Eagerly waiting for their meeting :D
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top