(Reading time: 11 - 22 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 03 - வத்ஸலா

ரு வாரம் கடந்திருந்தது. வேதாவை தினமும் சந்திக்க ஆரம்பித்திருந்தான் சரவணன். சரியாக அவளது வேலை முடியும் நேரத்தில், காருடன் வந்து அவள் முன்னால் நிற்பது. அவளை பொறுப்பாக அழைத்து சென்று அவள் வீட்டு தெரு முனையில் விட்டு வருவதை அவனது வாடிக்கையாகி போனது.

அன்றும் அப்படித்தான் சரவணன் காரை செலுத்திக்கொண்டிருக்க அவனுருகில் அமர்ந்திருந்தாள் வேதா. நேரம் இரவு ஏழரை. இதுவரை எந்த ஆண் மகனுடன் இப்படி காரில் சென்றதில்லை அவள். அப்பா மனதிற்குள் வந்து வந்து போனார்.

'எதுக்கு இப்படி தினமும் வரீங்க? பெரிய பணக்காரர் நீங்க. உங்களுக்கு வேலையெல்லாம் நிறைய இருக்குமில்லையா? மெது மெதுவாய் கேட்டாள் வேதா.

Katrinile varum geetham

ஆமாம் வேலை நிறையத்தான் இருக்கு. ஆனா தினமும் உன்னை பார்க்கணும்னு தோணுதே ஏன்? ஒரு வேளை நீ ரொம்ப அழகா இருக்கியே அதனாலே இருக்குமோ? என்று அவன், ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்க, அவனது முதல் அஸ்திரம் அவளை தாக்கியது.

ம்? என்னது? அவள் கண்களில் வெட்க கோடுகள்

அவளது முக பாவம் அவனுக்கு சின்னதான தைரியத்தை கொடுக்க 'உண்மையைத்தான் சொல்றேன். உன் கண்ணையும் லிப்சையும் பார்க்கத்தான் தினமும் வரேன்னு வெச்சுக்கோயேன்.' கண் சிமிட்டியவன் அவள் கண்களுக்குள் பார்த்து சொன்னான்  நீ ரொம்ப அழகு வேதா. அதுவும் இந்த சாரீலே சான்சே இல்லை.'

தனக்கு  சொந்தமில்லாத ஒரு ஆண் மகன் தன்னை வர்ணிக்கும் போது, 'என்னை பற்றி எனக்கு தெரியும். நீ யாரடா என்னை வர்ணிக்க??' என்று நேர்க்கொண்ட பார்வையுடன் கேட்டிருக்க வேண்டாமா அவள்??? கேட்கவில்லை. அதற்கு பதிலாய் வெட்கத்தில் தாழ்ந்தன அவள் இமைகள். ஒரு கோடீஸ்வரனுக்கு என்னை பிடிக்கிறதா? சின்னதான பெருமிதம் அவளுக்குள்ளே.

'நிஜமாத்தான் சொல்றேன் குட்டிமா. யு ஆர் பியூட்டிஃபுல்' கண்களை தாழ்த்தி சிரித்தாள் வேதா.

'அந்த வேதாவை மடக்குறது ரொம்ப ஈஸிடா. அவ கிட்டே போய், ஆம்பளைங்க ரொம்ப மோசம், பொண்ணுங்களை அடக்கியே வைக்குறாங்க, பெண்களுக்கு சுதந்திரமே இல்லை அப்படி, இப்படின்னு பேசு போதும். அப்படியே விழுந்திடுவா. உன்னை அப்படியே நம்பிடுவா '. விக்கி சொன்ன வாரத்தைகள் சரவணனின் நினைவிலாடியது.

'சரி. நான் இப்போ ஃப்ரீதான் ஏதாவது ஹோட்டலுக்கு போலாம் எங்கே போலாம் சொல்லு?' மெதுவாக அடுத்த அம்பை கையிலெடுத்தான்.

அய்யோ! அதெல்லாம் வேண்டாம். அப்பாக்கு தெரிஞ்சா கொன்னுடுவார்'

'ஏன்? ஏன்? இவ்வளவு படிச்சிருக்கே, லட்சம், லட்சமா சம்பாதிக்கற நீ நினைச்ச இடத்துக்கு போறதுக்கு கூட உனக்கு சுதந்திரம் கிடையாதா? பொண்ணுங்க என்னதான் சம்பாதிச்சாலும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்து கிட்சனுக்குள்ளே புகுந்துக்கணுமா? அவங்களுக்கு ஒரு ரிலாக்சேஷன் வேண்டாமா?' அம்பு அவளை சரியாக குறி பார்த்தது.

இல்லை. எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை. செலவுக்கு கூட அப்பா கிட்டே கேட்டுதான் பணம் வாங்கிப்பேன்,

.அப்போ நீ ஃபிரண்ட்ஸ் கூட எங்கேயும் போனதே இல்லையா?' என்றான் குரலில் பூசிக்கொண்ட ஆதங்கதுடன்.

ம்ஹூம்....

'ரிடிகுலஸ். திஸ் இஸ் ரிடிகுலஸ். கடைசியிலே உங்க அப்பாவும் பொண்ணுங்களை அடக்கி வைக்கிற சராசரி ஆம்பிளை தானா?

அவளது முகத்தில் கொஞ்சம் மாற்றம் பரவ, அதை படித்து புரிந்துக்கொண்டவனாக 'சாரி' என்றான். 'ஏதோ மனசிலே பட்டதை சட்டுன்னு சொல்லிட்டேன். மத்தபடி உங்க அப்பாவை குறை சொல்லணும்னு இல்லை. இது பொண்ணுங்களை பத்தின என்னோட பல நாள் ஆதங்கம்'. அவள் கண்கள் மெல்ல விரிந்தன.

'நீ மட்டும் என் பொண்டாட்டியா எங்க வீட்டுக்கு வந்தேன்னு வெச்சுக்கோயேன். உன்னை ஒரு வேலை செய்ய விட மாட்டேன். எல்லாதுக்கும் ஆள் இருக்கு'  அந்த அம்பும் தனது வேலையை சரியாக செய்து முடித்திருந்தது.

அவனது வார்த்தை ஜாலத்தில் கட்டுண்டவளாக ஏதேதோ வண்ணக்கனவுகளுடன் கண்களை தாழ்த்திக்கொண்டாள் வேதா.

'சரி வா' இன்னைக்கு ஒரு நாள் ஹோட்டல் போயிட்டு போவோம். என்னதான் சொல்றார் உங்க அப்பான்னு பாப்போம். ஏதாவது பிரச்சனைன்னா என் கிட்டே சொல்லு நான் பேசிக்கறேன்.' கார் பறந்தது.

அந்த பெரிய ஹோடேலில் அமர்ந்திருந்தனர் இருவரும். அந்த அரை குறை இருட்டில் அவளை உரசியபடியே அமர்ந்திருந்தான் சரவணன். கண்களால் அவளை பருகியபடியே காதோரத்தில் கிசுகிசுத்தான் ' யு ஆர் பியூட்டிஃபுல் மை பட்டர்ஃப்ளை'

சிலிர்த்து சிணுங்கினாள் அவள் 'கோகுல்...'. 'எனக்கு ரொம்ப பயமா இருக்கு. சீக்கிரம் போகலாம்'

'இரு இரு போகலாம்' அவள் தொங்கட்டனை ஆட்டி விட்டான். எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் உன்னை பார்க்கணும். எனக்கு ஒரு டவுட். தினமும் பாலிலேயே குளிப்பியோ?'

'அய்யோ... ப்ளீஸ்....'. அவள் கன்னத்தில் செவ்வரிகள்.

கூடிய சீக்கிரமே வேதா யூ. எஸ். போகபோறாடா. விசா ப்ராசெசிங் நடந்திட்டு இருக்கு.' விக்கி சொன்ன வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தன. எப்படியாவது அவளுடன் நானும் கிளம்பி விடவேண்டும். கணக்கு போட்டது அவன் மனம்,

'இரு இரு ஒரே நிமிஷம். இந்த அழகு தேவதைக்கு ஏதாவது பரிசு கொடுக்கணுமே என்ன கொடுக்கலாம்? ம்.... என்று தேடியவனின் கண்ணில் பட்டது தனது கையில் இருந்த அந்த பிரேஸ்லெட். கண்ணன் அவன் கையில் அணிவித்த அந்த பிரேஸ்லெட்.

அவனது கையிலிருந்து அவள் கைக்கு இடம் மாறியது அது. 'போட்டுக்கோ. இதை பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் ஞாபகம் வரணும்.'

'ஜி.கே' என்ற எழுத்துகளுடன் அவள் கையில் பளபளத்தது அந்த பிரேஸ்லெட். 

'ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கே?" கண்கள் மின்ன கேட்டாள் வேதா.

'எஸ். காஸ்ட்லி தான். சோ வாட்'? இனிமே என்கிட்டே இருக்கறது எல்லாம் உனக்கு தான்'!!!!! உலகமே தனது காலடியில் கிடக்கும் ஒரு உணர்வில் மிதந்து திளைத்துக்கொண்டிருந்தாள் வேதா.

அவளை அவளது தெரு முனையில் இறக்கி விட்டு காரை கிளப்பிக்கொண்டு நகர்ந்தான் சரவணன். அவன் மனம் குற்ற உணர்வில் கனத்தது. இப்படி ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றுகிறேனே!!!!. ''என்னை மன்னிச்சிடு வேதா.' என்றான் வாய்விட்டு  'சீக்கிரமே நம்ம கல்யாணம் நடக்கணும். அதுக்குதான் இதெல்லாம்.'

கையிலிருந்த பிரேஸ்லெட்டை கழட்டி தனது கைப்பையில் போட்டுக்கொண்டு தனது வீட்டுக்குள் நுழைந்தாள் வேதா. நமது கோதையின் அக்கா வேதா.!!! அவள் வருகைக்காகவே சாப்பிடாமல் காத்திருந்தனர் கோதையும், அப்பாவும்.

'நான் சாப்பிட்டாச்சு. நீங்க ரெண்டு பெரும் சாப்பிடுங்க.' படுக்கை அறைக்குள் நுழைய போனவளை நிறுத்தியது அப்பாவின் கேள்வி 'இது என்னமா புது பழக்கம்.? யாராத்திலே சாப்பிட்டே?'

'நான் ஹோட்டல்லே சாப்பிட்டேன். போறுமா? எல்லாத்தையும் உங்களண்டை கேட்டுண்ட்டு தான் பண்ணனுமா? நான் நினைச்சதை சாப்பிடறதுக்கு கூட சுதந்திரம் கிடையாது இந்த ஆத்திலே. வேலை முடிஞ்சதும் ஆத்துக்குள்ளே ஓடி வந்து புகுந்துண்டு உங்களுக்கு ஊழியம் பண்ணனும்.'

தன்னை பெற்றவர்களுக்கும், உயிரான சொந்தங்களுக்கும் உண்மையாக இருப்பதுவும், தனது வீட்டு வேலைகளை தான் செய்வதும் அடிமைத்தனமா? யோசிக்க தெரியவில்லை வேதாவுக்கு. அவளது வார்த்தை வீச்சில் அப்பாவினுள்ளே அதிர்வலைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.