(Reading time: 15 - 30 minutes)

தி “ஏன் நான் செய்ய கூடாதா?” வருத்தத்துடன் வினவ, அவளின் வருத்தம் பார்த்த ஆதி ஒன்றும் சொல்லாமல் வாங்கி குடித்தான். குடித்து விட்ட கிளாஸ் நீட்டியவன் “மதி, இந்த அறையை தயார் செய்தது நீயா ? என, அவள் ஆமாம் என்றாள்.

“நன்றாக இருக்கிறது, மனதிற்கு அமைதி தருவதாகவும் இருந்க்கிறது. தேங்க்ஸ்” என்றாnன்.

மதி சிரித்து விட்டு “சற்று நேரம் ரெஸ்ட் எடுங்கள். சாப்பாடு தயார் ஆனதும் எடுத்து வருகிறேன்” என்றாள். அவனும் தலையாட்ட அவனுக்கு வசதியாக தலையணை அடுக்கி வைத்தாள்.

அன்று முழுவதும் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் சற்று படுத்து ரெஸ்ட் எடுத்தான். மாலையில் எல்லோரும் அவன் அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது ராகவன் “ஆதி, நாளிலிருந்து காலையில் நான் ஆபீஸ் போகிறேன். சூர்யா சைட் செல்லட்டும். அதிதி அவள் வேலையே பார்க்கட்டும். சூர்யா சைட் வேலைகளை முடித்துவிட்டு வந்தவுடன் நான் வீட்டிற்கு வருகிறேன்” என்றார்.

ஆதி “உங்களால் முடியுமாப்பா என்றான்

“பார்த்து கொள்ளலாம் ஆதி “ என்றார்.

அப்படியானால் பைனான்ஸ் ஆபீஸ் மேனேஜர் மட்டும் காலையில் வீட்டிற்கு வந்து வேலைகளை கேட்டு கொள்ளட்டும் . சூர்யா நான் பார்க்க வேண்டிய பைல்களை அப்பாவிடம் கொடுத்து அனுப்பி விடு. நான் வீட்டில் வைத்து பார்த்துவிடுக்றேன். நீ மறுநாள் எடுத்துக்கொண்டு போகலாம்

எல்லாரும் இரவு உணவு முடித்து விட்டு கிளம்பினர். ஆதிக்கு மதிதான் உணவு கொடுக்கிறாள். எப்போதும் இரவுகளில் , ஆதி கட்டிலிலும் , மதி கீழே மெத்தை விரித்தும் அவர்கள் அறையில் படுத்து கொள்வார்கள், அன்று இரவும் கீழே ஆதியின் அறையிலே படுக்கை விரித்தாள்.

ஆதி “நீ ஏன் இங்கே படுக்கிறாய். நீ மேலே அறையிலே படுக்கலாமே ?” என்றான்”

“இங்கே உங்களுக்கு உதவி செய்ய யார் இருப்பார்கள்? என்றாள் மதி.

:”ஏன் யாராவது வேலைகரர்களை படுக்க சொல் “

“நான் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

“அப்படியெல்லாம் இல்லை. ஆனால் உனக்கு ஏன் கஷ்டம் என்று எண்ணினேன்.

“இதில் என்ன கஷ்டம் ? ஒன்றுமில்லை” என்றவள் “நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா” என்றாள்.

“என்ன?

“நான் நேற்று பேசியது உங்களை வருத்தபடுதியதா?

“நானே உன்னிடம் கேட்க வேண்டும் என்று எண்ணினேன். நீ ஏன் உன் பெற்றோரை சென்று பார்ப்பதில்லை. நான் உன்னிடம் எங்கும் போக கூடாது என்று சொன்னதாக நினைவில்லேயே?

“அது.. நம் திருமணம் முடிந்த புதிதில் நீங்கள் கூறியது,

 “நம் திருமணம் என் அப்பாவிற்காக நடந்தது. வேறு எந்த விதமான உரிமையும் என்னிடம் எதிர்பார்க்கதே.இந்த வீட்டின் மருமகள் நீ அவ்வளவுதான். என் மனைவியாக முடியாது. அதனால் உனக்கு எங்கு போக வேண்டுமோ, என்ன வேண்டுமோ அதை அம்மாவிடம் சொல்லி விட்டு செய் போதும். என்னிடம் ஒன்றும் சொல்லாவோ , கேட்கவோ வேண்டியதில்லை. “ என்று கூறினீர்கள்.

“எங்கள் வீட்டிற்கு செல்வதனால் நாம் இருவருமாக செல்ல வேண்டும். அட்லீஸ்ட் ஒரு முறையாவது சேர்ந்து சென்றிருந்தால், பிறகு தனியாக போகலாம். ஆனால் நீங்கள் சொன்ன விதத்தில் அதை உங்களிடம் என்னால் கேட்க முடியவில்லை. மேலும் நீங்கள் வெளியாளாக இருந்திருந்தால் உங்களிடம் அப்பா நேராகவே கேட்டிருப்பார். ஆனால் அவர் நண்பரின் மகன். நீங்களும் மாமாவும், எல்லாம் சொல்லித்தான் திருமணத்திற்கும் கேட்டீர்கள். அவர் உங்களிடம் எதுவும் கேட்க முடியாது.

அதனால் இருவரும் சந்தித்தால் தேவையில்லாத சங்கடம் ஏற்படும் என்று நான் உங்களை கேட்கவில்லை. நீங்கள் இல்லாமல் நான் மட்டும் போனாலும் வருத்தமாக இருக்கும். அதனால்தான் நான் அங்கு போவது இல்லை. இங்கே வந்தாலும் அப்பாவிடம் நீங்கள் பேசுவீர்களோ இல்லையோ என்று எனக்கு தெரியவில்லை. அதனால் இங்கேயும் அவர்கள் இதுவரை வருவது இல்லை. மாமாவிடம் என்னிடமும் மட்டும் அவ்வப்போது பேசுவார்கள். அதனால் தான் நான் அப்பா இங்கே மாற்றலாகி வந்ததை சொல்ல வில்லை.

ஆனால் இப்போ உங்கள் விபத்திற்கு பின், நீங்கள் அவர் மாப்பிள்ளை என்பதோடு, மாமாவிற்கும், அத்தைக்கும் தைரியம் சொல்வது அவசியம் என்று வந்தார்கள். நீங்கள் பேசிய விதத்தில் அப்பாவிற்கும் மிகுந்த சந்தோஷம்.

என்று முடித்தாள் மதி.

சற்று நேரம் அமைதியாக இருந்த ஆதி

“அன்று நான் இருந்த மனநிலை அப்படி. மேலும் நான் சொன்னது போல் அப்பாவிற்காகத்தான் நான் திருமணம் செய்ததும் கூட. ஆனால் நான், இப்படி எல்லாரையும் விட்டு விட்டு இங்கே நீ இருக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. எனக்காக நீ உன்னை வருத்தி கொள்வதையோ, எதிர் பார்ப்பதோ வேண்டாம் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். இதனை நீ இவ்வாறு எடுத்து கொள்ள கூடும் என்று எண்ண வில்லை. உன் அப்பாவின் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவர் மகளை விரும்பி திருமணம் செய்யவில்லை என்பது அவருக்கு வருத்தம் ஏற்படுத்தும் என்பதால் நான் அவரை சந்திக்க தயங்கினேன். மற்றபடி உன்னை உன் குடும்பத்தை விட்டு பிரிக்க எண்ணவில்லை. தயவு செய்து இனிமேல் இப்படி செய்யாதே.

மேலும் என் அப்பாவின் இன்றைய உடல்நிலை முன்னேற்றத்தில் உன் பங்கும், உன் அப்பாவின் பங்கும் பெரிது என்று எனக்கு நன்றாக தெரியும்.  என்னுடைய வேலை காரணமாகவும், அப்பாவின் மேல் உள்ள வருத்தினாலும் அவரிடம் நான் என் அக்கறையைக் காண்பிக்கவில்லையே தவிர, அவர் உடல் நலன் பற்றி நான் பார்த்து கொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. நீ அப்பாவை கிட்டத்தட்ட பழைய படி மாற்றி விட்டாய்.

கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் யாரும் சிரிப்ப்பதேயில்லை. ஏதோ இயந்திரம் போல் நடந்து கொள்கிறோம். இது எல்லாம் என்னால்தானோ என்று வருத்தமாக இருந்தது. ஆனால் இந்த நான்கு நாட்களாக உன் வீட்டில் எல்லோரும் வரும்போது இங்கே எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோசம் வருகிறது. அதிதி வாணியுடன் கலகலப்பாக இருக்கிறாள். இதையெல்லாம் பார்க்கும் போது  எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. அப்பாவை பார்த்த பின்பு அம்மா ஓரளவு தேறி விட்டார்கள், அப்பாவைப் போல் நீ அதிதயையும் கொஞ்சம் பழைய படி மாற்ற முயற்சி செய். அவள் நிறைய விஷயங்களை மிஸ் செய்கிறாள்.

நான் உன்னை புண்படுத்தும்படி பேசினால் தவறாக எடுத்து கொள்ளாதே. முடிந்தவரை அவ்வாறு பேசமால் இருக்க முயற்சி செய்கிறேன்.

என்று ஆதி முடித்தான்.

இதை கேட்ட மதிக்கோ மிகவும் சந்தோசம். அவனிடம்

“உங்களுக்கு என்னை மனைவியாக நினைக்க கஷ்டமாகக் இருந்தால், அட்லீஸ்ட் ஒரு பிரெண்டாக எண்ணி கொள்ளுங்கள். உங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள்.” என்றாள்.

அதற்கு ஆதி “இருக்கட்டும் மதி. நான் மாறுவது சுலபம் அல்ல. பார்க்கலாம்.” என்றான்.

அதை கேட்ட மதிக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் , காலம் நிச்சயம் ஆதியை மாற்றும் என நம்பினாள். இதோடு இவர்கள் உரையாடல் முடிந்து, ஏதாவது தேவை என்றால் தன்னை கட்டாயம் எழுப்ப வேண்டும் என்று கேட்டு தூங்க ஆரம்பித்தாள் மதி. அவளின் மனதில் ஏற்பட்ட பாரங்கள் நீங்கி விடும் என்ற நம்பிக்கையில் அவள் விரைவிலேயே உறங்கியும் விட்டாள்.

ஆனால் ஆதிக்கு தூக்கம் வரவில்லை. மதிக்கு தேவையில்லாத நம்பிக்கையை உண்டாக்குகிறோமோ என்று குற்ற உணர்வு கொண்டான். ஆனால் அவன் மனத்திலும் சிறு நிம்மதி ஏற்பட்டு இருந்ததால் கொஞ்ச நேரத்தில் உறங்க ஆரம்பித்து விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.