(Reading time: 15 - 30 minutes)

றுநாள் அவனின் திட்டப்படி எல்லாரும் கிளம்ப , சூர்யா “அண்ணா , இன்றைக்கு ஜூனியர் என்ஜினீயர் போஸ்ட்க்கு இன்டர்வியூ இருக்கு. நான் இன்டர்வியூ செய்யவா. இல்லை போஸ்ட் போன் செய்யட்டுமா” என்று கேட்க,

ஆத “போஸ்ட் போன் செய்ய வேண்டாம். நீயே இன்டர்வியூ செய். ஈவனிங் வரும்போது கேண்டிடட் பயோடேட்டா மட்டும் எடுத்து வா. “ என்று கூறி அனுப்பினான்.

ஒரு வாரமாக ஆபீஸ் வரததால், கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு, பதினொரு மணிக்கு மேல் இன்டர்வியூ நடக்க ஏற்பாடு செய்தான்.

சைட்டில் இன்று வேலை இல்லை. அதனால் சற்று நிதானமாக வேலைகளை பார்த்தவன், அப்பாவையும் அடிக்கடி பார்த்து கொண்டான். அவர் சில வருடங்கள் கழித்து வருவதால், புது எம்ப்ளாயீஸ் எல்லாம் அறிமுகபடுத்தினான். பிறகு ஜெனரல் மேனேஜரோடு அவரை விட்டு, கம்பனி நிலவரங்களை தெரிந்து கொள்ள சொன்னான்.

நேர்முகத்தேர்வு கான்பாரன்ஸ் ஹாலில் நடைபெற ஆரம்பித்தது. அவனோடு பர்சனல் மானேஜர் இருந்தார். மொத்தம் பத்து பேர் வந்திருந்தனர். அல்பபெட் வரிசைப்ப்படி இன்டர்வியூ நடந்தது. கடைசியாக வான்மதி என்ற பெயரை பார்த்தவன் வியந்தான்.

உள்ளே வர சொன்னவன், வான்மதியும் அவனை பார்த்து அதிசயபட்டவள், ஒன்றும் தெரியாத பாவனையோடு வந்தாள்.

அவளை அமர சொல்லி விட்டு அவள் படிப்பு, வேலை பார்த்த அனுபவம் போன்றவற்றை கேட்டவன், அவளில் பதில் த்ருப்தியனான். அப்போது அவனோடு இருந்தவர் போன் வர எழுந்து போனார். அவனும் அவளும் மட்டுமே அந்த அறையில்.

“ஹே வாணி, சர்ப்ரைஸ். உன்னை இங்கு எதிர்பார்க்கவில்லை” என்று சூர்யா அவளிடம் பேச ஆரம்பித்தான்.

“எனக்கும் இது உங்கள் கம்பெனி என்று தெரியாது.” என்றாள்.

சற்று நேரம் அவளிடம் அவளை பற்றி கேட்டு கொண்டான். பிறகு “நீ நல்ல வாயடிப்பியோ” என்றான்

சற்று முகம் சிவக்க “எல்லோரிடமும் அப்படியெல்லாம் இல்லை. அக்காவும் நானும் பேசும் போது நன்றாக வாயடிப்போம். அன்று அக்காவை ரொம்ப நாட்கள் கழித்து பார்த்தால் இடம் பொருள் அறியாமல் பேசி விட்டேன். “

“அதற்காக கேட்க வில்லை. சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.” என்றவன் “பிறகு நீ இங்கே மட்டும் தான் அப்ளிகேசன் போட்டாய? என்று வினவினான்.

“மெட்ராஸ் வந்த பிறகு மூன்று இடங்களில் போட்டு இருந்தேன். இதுதான் முதல் இன்டர்வியூ. “ என்றாள்.

“இப்போதைக்கு வேறு  எங்கும் இன்டர்வியூ அட்டென்ட் செய்யாதே. இங்கே இல்லாவிட்டாலும் வேறு இடத்தில உன்னை சேர்த்து விடுகிறேன்”

“சரி. தேங்க்ஸ்” என்றாள்.

“நீ போகும் போது அப்பாவை பார்த்து விட்டு போ. என்றான்.

அப்போது மேனேஜர் வந்தவர், அவரிடம் வேறு எதுவும் கேட்க வேண்டுமா என்று கேட்க, அவர் இல்லை எனவும்,

“மிஸ்.வான்மதி நீங்கள் செல்லலாம். இன்னும் இரண்டு நாட்களில் உங்களுக்கு முடிவு தெரிய படுத்துகிறோம்.” என்று அவளை அனுப்பினான்.

“தேங்க்ஸ் சார்” என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

போகும் போது அவள் ரிசெப்ஷனில் சேர்மன் பார்க்க வேண்டும் என்று கேட்டாள்.தன் பெயரை சொல்லி கேட்டு பார்க்க சொன்னாள். அடுத்த 1 0 நிமிடத்தில் பயுன் வந்து அவளை அழைத்து சென்றான்.

சேர்மன் ரூமில் “வா வாணி, எங்கே இந்த பக்கம்” என்றார்.

“நீங்கள் ஒழுங்காக வேலை பார்கிறீர்களா என்று பார்க்க வந்தேன். “ என்று கலாட்டா செய்தாள்.

சிரித்து கொண்டே “நீ வேறம்மா. வீட்டில் இருந்து இருந்து எல்லாம் மறந்து விட்டது. ஏதோ வேற்று கிரஹத்தில் நுழைந்தார் போல் இருக்கிறது”

“கவலைபடாதீர்கள் மாமா. நான் கற்று தருகிறேன். “ என்று பேசிகொண்டிருக்கும் போதே யாரோ கதவை தள்ளி உள்ளே வரவும், திரும்பி பார்த்தவள் “மாமா, வேற்று கிரக வாசி வந்தாச்சு. நீங்கள் அவரிடமே இந்த பாஷை கற்றுக் கொள்ளுங்கள். என்று சிரித்தாள்.

அவள் சிரிப்பதை பார்த்து அவள் தலையில் பைலால் தட்டியவன், “என்னப்பா , உங்க பிரெண்டு பொண்ணு என்ன சொல்ற?” என்றான்

“எல்லாம் உங்களை பத்தி தான் சார், இன்டர்வியூ என்ற பேரில் வர பொண்ணுகளை சைட் அடித்து கிட்டு இருக்கீங்க என்று சொன்னேன்”

“அடி. ..  யாரு நானா ? “ என்றவன் “அப்பா வாணியும் இன்டர்வியூ வந்திருக்கிறாள்.” எனவும்,

அப்பா “செலக்ட் செய்து விட்டாயா? அந்த தப்ப செஞ்சுராதே மகனே” என்றார்

“மாமா.. நீங்க கூடவா” என்று முகத்தை சுருக்கவும் இருவரும் சிரித்தனர்.

கொஞ்ச நேரம் பேசி விட்டு வாணி கிளம்பிய பின், சூர்யா “ அப்பா.. வாணி நல்லதான் இன்டர்வியூவில் பதில் சொல்லிருக்கிறாள். நான் ஷார்ட் லிஸ்ட் பண்ணிட்டு அண்ணாவிடம் எடுத்து கொண்டு போகிறேன்” என்றான். மேலும் கொஞ்ச நேரம் அலுவலக விஷயங்களில் அப்பா கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு தன வேலையை பார்க்க சென்றான்.

இங்கே அலுவலகத்தில் இப்படி இருக்க, அங்கே வீட்டில் ஆதி காலையில் பைனன்ஸ் மேனேஜர் வருவதற்கு முன்  சில வேலைகளை முடிக்க எண்ணியவன் தன லேப்டாப் எடுத்து பார்க்க ஆரம்பித்தான். ஆனால் அவனால் தனியாக செய்ய முடியவில்லை. ஆதி திணறுவதை பார்த்த மதி,

“நீங்கள் சொல்லுங்கள் நான் செய்கிறேன். “ என்றாள். சரி என்றவன், அவளிடம் ஒரு டைரியில் எழுத சொன்னான். அவள் அவன் சொல்ல சொல்ல செய்து கொண்டு வந்தவள், ஒரு இடத்தில் அவன் சொன்னதற்கு பதிலாக, “வேண்டாம். அதற்கு பதில் இங்கு அதை மாற்றுங்கள்” என்றாள்.

அவள் சொன்னது முற்றிலும் சரியான முடிவு. அவனுக்கு அவள் எப்படி சரியாக கணித்தாள் என்ற வியப்பு.

அவளிடம் “நீ என்ன படித்திருக்கிறாய்” என்றான்.

M.Com.. M.B.A Finance…  என எழுதுவதில் கவனமாக மதி கூற, ஆதி திகைத்தான்.

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.