(Reading time: 12 - 23 minutes)

03. நேசம் நிறம் மாறுமா - தேவி

நேர முழுதிலுமப் பாவி தன்னையே -- உள்ளம் 

நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்; 

தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் -- பின்பு 

தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்.

- பாரதியார்

Nesam niram maaruma

ஹாஸ்பிடலில் ஆதியுடன் படுத்திருந்த சூர்யாவிற்கும் தன் அண்ணன் பற்றிய சிந்தனையே.  அப்பா சொன்னது போல் ஆதி தன் அண்ணியிடம் சற்று பழகினால் அவன் வாழ்க்கை சீராகுமோ என்று தோன்ற ஆரம்பித்தது. அதற்கு அப்பா சொன்ன ஐடியாவே சரி என்று எண்ணினான்.

மறுநாள் காலையில் எழுந்த மதி சூர்யாவிடம் பேசி, தான் எல்லா வேலைகைளையும் முடித்து விட்டு  எட்டரை மணி அளவில் வருவதாக் கூறினாள். வேகமாக கிளம்பி ஹாஸ்பிடலுக்கு  சென்றவள் ஆதிக்கும் கஞ்சி எதுத்து சென்றாள்.

இவள் சென்றவுடன் கிளம்பிய சூர்யா, ஏதோ யோசித்தவனாக “அண்ணி, உங்கள் மொபைல் நம்பர் சொல்லுங்கள் “

அவள் சொன்னவுடன், “அண்ணி நான் மதியம் போன் செய்கிறேன். தேவைபட்டால் நீங்கள் வீட்டிற்கு ஒரு மணி நேரம் சென்று வாருங்கள். “ என்றான்.

மதி “சரி” என்றாள்

ஆதி முழித்து தான் இருந்தான். அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்தவன் எந்த உணரவும் காட்டவில்லை. ஆதி சூர்யாவிடம் சைட்டில் நடக்க வேண்டிய வேலைகளை சொல்லி விட்டு மாலை என்ன அப்டேட் என்று கொடுக்க சொன்னான்.

சூர்யா சென்றவுடன் ஆதியை பார்த்து மதி  “வலி கொஞ்சம் குறைந்து இருக்கா? என, ஆதி வெறுமனே ஊம்ம் மட்டும் சொன்னான்.

பிறகு அவனுக்கு கஞ்சி டம்ளரில் கொடுத்தாள். அவன் “எனக்கு கஞ்சி பிடிக்காது” என,

“இல்லை டாக்டர் வர எப்படியும்  10 மணி ஆகிவிடும். அவர் வந்த பின் தான் என்ன சாப்பிடலாம் என்று கேட்க முடியும். அதுவரை பசி தாங்க வேண்டும். நர்சிடம் கஞ்சி கொடுக்கலாமா என்று கேட்டேன். அவர்கள் சரி என்றார்கள். அதனால் இப்போ கஞ்சி சாப்பிடுங்கள் . மதியம் அனேகமாக சாதம் சாப்பிடலாம்” என்றாள்.

அவனும் வேறு ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். அதற்கு பின் எதுவும் இருவரும் பேசவில்லை.

கொஞ்ச நேரத்தில் அதிதி வந்தாள். தன் அண்ணனிடம் உடல்நிலை விசாரித்து விட்டு, “அண்ணி , நான் சூர்யா அண்ணாவை மதியம் வீட்டிற்கு சென்று ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டேன். உங்களுக்கு நான் லஞ்ச் முடித்து வரும்போது எடுத்து வருகிறேன். அண்ணாவுக்கு என்ன கொடுக்கலாம் என்று கேட்டு சொல்லுங்கள். அதுவும் கொண்டு வருகிறேன்.” என்றாள்.

மதியும் “சரி அதிதி” என்றாள்.

இதை ஆதி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு சூர்யா, அதிதி இருவரும் மதியிடம் சகஜமாக பேசுவது வியப்பாக இருந்தது. ஆனால் எதுவும் கேட்கவில்லை.

அதிதியிடம் ஆபீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளை சொன்னவன், அவனுடைய நிதி நிறுவன மேலாளரை ஆதியை பார்க்க வர சொன்னான்.

சற்று நேரத்தில் டாக்டர் வரவும் ஆதியை செக் செய்து விட்டு எல்லாம் நார்மல் ஆக இருப்பதாக கூறிவிட்டு இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்றும், ஆனால் இரண்டு மாதம் நடக்க கூடாது என்றும் கூறினார். மற்றபடி சாப்பாடு சற்று எண்ணை குறைவாக எல்லாம் சாப்பிடலாம் என்றார்.

உடனே மதி அதிதியை அழைத்து கூறிவிட்டு உடனே வீட்டிற்கும் அழைத்து பேசினாள். காயங்களில் கொஞ்சம் வலி இருந்ததால் ஆதி உறங்கினான்.

அங்கே வீட்டில் ராகவன் தன் நண்பனும் சம்பந்தியுமான மதியின் அப்பா சுந்தரத்திடம் போனில் பேசினார், ஆதியின் ஆக்சிடென்ட் பற்றி சொல்லி விட்டு தற்போது பயமில்லை என்பதையும் சொல்ல, அவர் உடனே கிளம்பி வருவதாக கூறினார். அதை மறுத்து விட்டு மாலையில் விசிடிங் ஹவரில் வர சொன்னார்.

மதியம் அதிதி மதிக்கும் ஆதிக்கும் சாப்பாடு எடுத்து வந்து கொடுத்து விட்டு மீண்டும் மாலையில் வருவதாக சொல்லி விட்டு சென்றாள். “அண்ணா மேனேஜர் ஒரு மூன்று மணி அளவில் வருவதாக சொல்லி இருக்கிறார். “ என்றாள்

அவள் சென்றதும் ஆதிக்கு வலது கையில் அடி பட்டிருப்பதால் எப்படி சாப்பிடுவான் என்று யோசிக்க அவன் ஸ்பூன் தர சொல்லி இடது கையால் சாப்பிட ஆரம்பித்தான். ஆனால் இடது கையில் பெரிய அடி இல்லையென்றாலும் அங்குதான் ட்ரிப்ஸ் போடப்பட்டதால் அவனால் கையை அதிகமாக இயக்க முடியவில்லை.

பார்த்துக் கொண்டிருந்த மதி அவனிடமிருந்து தட்டை வாங்கி தானே ஊட்ட ஆரம்பித்தாள். அவன் மறுக்கவும் “ப்ளீஸ் , கையை ஸ்ட்ரைன் செய்ய வேண்டாம். நான் ஹெல்ப் செய்கிறேன்” என்று வற்புறத்தி ஊட்டி விட்டாள். அதற்கு மேல் மறுக்க முடியம்மால் சாப்பிட்டான்.

அவன் முடிக்கவும், அவனுக்கு தண்ணீர் மற்றும் மாத்திரை கொடுத்தாள்.

அப்போது ஆதி “நீயும் சாப்பிடு வெண்மதி” என்றான்.

காலை வந்ததிலிருந்து கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி கொண்டிருந்தவன், இப்போது அவனாகவே பேசியது கண்டு மதிக்கு சந்தோஷமாக இருந்தது. அவனிடம் தலையாட்டியவள் சாப்பிட்டாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கவும் மேனேஜர் வரவும் சரியாக இருந்தது. அவரிடம் அன்றைய வேலைகளை பற்றி கேட்டான். மேலும் செய்ய வேண்டியவற்றை இருவருமாக டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்தான். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் பேசி கொண்டிருந்தார்கள். அவர் கிளம்பவும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி மேனேஜர் வந்தனர்.

அவர்கள் வேலையை சூர்யாவிடம் சொல்லி விட்டாலும், அவர்கள் ஆதியை பார்ப்பதற்காக வந்திருந்தனர். வரிசையாக ஒவ்வொருக்கும் காண்டீனில் காப்பி, கூல் ட்ரிங்க்ஸ் என வாங்க சென்றாள்.

இவர்கள் எல்லோரும் கிளம்பவும் வீட்டிலிருந்து மறுபடியும் எல்லாரும் வந்தனர். எல்லாரும் சற்று நேரம் அவன் உடல் நிலை, டாக்டர் என்ன சொன்னார் என்பதை கேட்டனர்.

அப்போது ஆதியின் அப்பா “மதி, நீ சுந்தரத்திடம் பேச வில்லையா?’ என்றார்.

“இல்லை மாமா. இன்று இரவு போன் செய்யலாம் என்று நினைத்தேன்”

“நான் பேசி விட்டேன். அனேகமாக இப்போ வருவான் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே வாசலில் நிழல் ஆட, சுந்தரம்தான் வந்திருந்தார்.

ராகவன் “வா சுந்தரம். வாம்மா மீனாக்ஷி “ என ‘பின்னாடியே நின்றிருந்த வான்மதி “என்ன மாமா என்னை யெல்லாம் கூப்பிட மாட்டிர்களா? ‘ என்று வினவினாள்.

“அட நீயும் வந்திருக்கியா  வாணி.  உன் குரல் கேட்கவில்லை என்றவுடன் நீ வரவில்லை என்று நினைத்தேன் மா“

ஜானகியும் வாருங்கள் என்று கூற, இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்க சுந்தரம் ஆதியிடம் சென்று “என்ன ஆச்சு மாப்பிள்ளை? என்றார். திருமணத்திற்கு பிறகு நேரடியாக இப்போதுதான் இருவரும் பேசினார்.

எல்லாரும் மற்ற எல்லாருடனும் பேசி கொண்டிருக்க மதியிடம்  யாரும் எதுவும் கேட்கவில்லை.

“அப்பா, அம்மா, என்ன வந்ததிலிருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. ஏய் வாணி நீ கூட ஒன்றும் கேட்கவில்லை. “ என்று சண்டை போட, சுந்தரமோ “நாங்கள் யாரு உனக்கு? விபத்து நடந்து இரண்டு நாட்களாகி விட்டது. நீ எங்களிடம் சொல்ல கூட இல்லை. “ என்று சத்தம் போட்டார்.

“சாரி பா, இன்றைக்கு இரவு வீட்டிற்கு போய் விட்டு பேசலாம் என்றிருந்தேன். அதற்குள் மாமா உங்களிடம் பேசி விட்டார். “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.