(Reading time: 12 - 23 minutes)

ன்மா, உறவுகள் ஒருவருக்கொருவர் உதவுவதற்காகதானே. இந்த நேரம் கூட இல்லாமல் வேறு எதற்கு.” என்று இன்னும் சண்டை போட மதி “அப்பா ப்ளீஸ் சாரி. இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்” என்று கொஞ்சினாள். இதை பார்த்த ஆதியும், அதிதியும் ஒருவரைஒருவர் பார்த்து கொண்டனர்.

அப்போது வாணி “ அப்பா, உங்கள் சண்டை முடிந்ததா? நான் இனிமேல் மதியிடம் பேசுகிறேன்” என்று கூறியவள், “மதி, உன்னை பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது. “ என்று பேச ஆரம்பித்தாள். மதி, அதிதியை அறிமுகபடுத்தி விட வாணியும், அதிதீயும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் சற்று நேரத்திலேயே சகஜமாக பேச ஆரம்பித்தனர். சுந்தரம், ராகவன் ஒரு புறமும், ஜானகி, மீனாக்ஷி ஒரு புறமும் பேசி கொண்டிருக்க, ஆதி இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது அங்கே வந்த சூர்யா வெகு நாட்கள் கழித்து அம்மா, அப்பா, அதிதி எல்லோரின் முகத்திலயும் சிரிப்பை பார்த்தான். ஆதியைக் கூட சிரிக்காவிட்டலும் சற்று இளகிய மன நிலையில் கண்டான்

அவனை முதலில் பார்த்த சுந்தரம் “வாப்பா சூர்யா.” என அவன் தலையாட்டினான். அவன் இதுவரை மதியின் குடும்பத்தினரிடம் பேசியதில்லை. ஆதியின் திருமணம் அவசரமும், ஆடம்பரமின்றியும் நடந்ததால் அன்றைக்கு எல்லோரிடமும் அறிமுகத்திற்கு மேல் எதுவும் இல்லை. பிறகு அவர்களை இன்று தான் பார்க்கிறான். அதனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

அவனின் தடுமாற்றத்தை பார்த்த ஆதி சூர்யாவிடம் வேலை சம்பந்தமான விஷயங்களை பேச ஆரம்பித்தான். ஆனால் அவனோ ஆதியின் உடல் நிலை பற்றி கேட்டதோடு, அண்ணன் கையை மெதுவாக பிடித்து விட்டான். அதை கவனித்த வாணி “அக்கா , பாச மலர் அண்ணன் தங்கை படம். அண்ணா தம்பி பாச மலர் ஒன்று இங்கே ஓடுகிறது பார்.“ என்று வினவ, ஆதியும் சூர்யாவும் திடுக்கிட்டு விழித்தனர்.

அதற்குள் அவளை தோளில் தட்டிய வெண்மதி ‘ஏய் சும்மா இருக்க  மாட்டியா? “ என்றாள்.

இப்போது அதிதி வாணியிடம் ஹைபை கொடுத்து “ அண்ணி, இதுக இரண்டும் இப்படிதான் ஓவரா சீன் ஓட்டிட்டு இருக்கும். அதனால் வாணியை ஒன்னும் சொல்லதீங்க.” என்றாள்.

அதற்குள் சூர்யா “ஏன் அக்கா, தங்கை படம் எதுவும் ஒங்க தியேட்டர்ல ஓடலியா?” அதற்கு ஆதி “இப்போதான் அரை மணி நேரம் முன்னாடி நான் பார்த்தேன்” என்று அவன் கையில் தட்டினான்.

இதை கேட்ட எல்லாரும் சிரித்தனர். சற்று நேரம் ஒருவரை ஒருவர் காலை வரி கொண்டிருந்தனர். பார்த்துகொண்டிருந்த ஆதியின் அப்பாவிற்கு கண்களில் நீர் வழிந்தது.

சற்று நேரத்தில் எல்லாரும் புறப்பட ஆதி “வெண்மதி நம்முடைய அறையில் ப்ளூ கலர் கப்போர்டில் சில பைல்ஸ் இருக்கும். என்னுடைய லேப்டாப் டேபிள் மேல் இருக்கும். இரண்டும் நாளை காலை வரும்போது எடுத்து வந்து விடு.” என்றான். இதை எல்லாரும் பாராதது போல் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

சூர்யா “அண்ணா ஆபீசில் உன்னை பார்க்க வரலாமா என்று கேட்டார்கள்? இங்கே வர சொல்லவா இல்லை வீட்டிற்கு வர சொல்லவா?”

இங்கேயே வரசொல்லிவிடு சூர்யா. வீட்டிற்கு என்றால் அவர்கள் போக்குவரத்துக்கு கஷ்டப்பட நேரிடும். நாளை நம் ஆபீஸ்லிருந்து அட்டெண்டர் யாராவது ஒருவரை இங்கே வரசொல்லிவிடு. ஏதாவது தேவையென்றால் சென்று வாங்கி வர உதவியாக இருக்கும். அதிதி அலைய வேண்டாம். டிரைவரோடு இவரே சென்று சாப்பாடு வங்கி வரட்டும்“ என்று முடித்தான்

பிறகு சூர்யாவை விட்டு எல்லோரும் புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும்போது அதிதி வாணியை பற்றிக் கேட்டு கொண்டு வந்தாள்.

அன்று இரவு வெண்மதி ஆதி கேட்ட பைலஸ் எல்லாம் எடுத்து வைத்தாள். அவன் இன்று  மதியத்திலிருந்து அவளிடம் அவ்வப்போது பேசியதும் , உரிமையாக தன் பொருட்களை எடுத்து வர சொன்னதும் அவளுக்கு அவன் தன்னை  மனைவியாக இல்லாவிட்டாலும் இந்த குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்று கொள்ள ஆரம்பித்து விட்டது புரிந்தது. அந்த மகிழ்ச்சியுடனேயே தூங்க ஆரம்பித்தாள்.

அன்று ராகவனும் ஜானகியும் இதே மாதிரியே யோசித்து வெகு நாட்களுக்கு பிறகு சற்றே நிம்மதியாக கண்ணயர்ந்தனர்.

மறுநாள் காலை மதி ஹாஸ்பிடல் கிளம்புவதற்கு முன்னால் அவள் அப்பா, வாணியையும் அவள் அம்மாவையும் இவர்கள் வீட்டில் கொண்டு விட்டு ஆபீஸ் கிளம்பினார். முந்தைய இரவில் மதியிடம் அவள் அம்மா தான் வீட்டில் பெரியவர்களை பார்த்து கொள்வதாகவும் , இவளை ஆதியை கவனிக்கும் படி சொல்லி விட்டு சென்றிருந்தனர்.

மாமா அத்தை இருவருக்கும் சாப்பாடு சற்று பார்த்து கொடுக்க வேண்டும். ஆதி இல்லாததால் அதிதிக்கும் சூர்யாவிற்கும் ஆபீஸ் வேலை அதிகமாக இருந்தது. எனவே பெரியவர்களை பற்றி கவலை பட்டவள் இந்த ஏற்பாட்டில் சற்று நிம்மதியாக உணர்ந்தாள்.

காலையில் வாணியை பார்த்த அதிதிக்கு ஒரே குஷியாகிவிட்டது. அவள் வாணியை தன்னோடே அழைத்து கொண்டு சென்றாள். கிச்சனில் அவன் அம்மாவும், மதியின் அம்மாவும் வேலை செய்து கொண்டே பேசி கொண்டிருந்தார்கள்.

குளித்து கிளம்ப வந்த சூர்யாவிற்கு எல்லாம் அதிசயமாக இருந்தது. கிளம்புவதற்கு முன் தன் தந்தையை சந்திக்க சென்றான்.

“அப்பா, உங்களிடம் ஒன்று கேட்கலாமா” என்றான்.

என்ன ?

அண்ணி வீட்டில் எல்லாரையும் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? அண்ணா திருமணத்தின் போதுதான் நான் இவர்களை எல்லாம் பார்த்தேன்? ஆனால் உங்களிடம் நெடு நாள் பழக்கம் இருக்கும் போலேவே?

“ஹ்ம்ம். வாசுதேவன், நான், சுந்தரம் மூன்று பெரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். அதிதி பிறக்கும் வரை அவனோடு தொடர்பு இருந்தது. பிறகு விட்டு போனது. அவன் அடிக்கடி மாற்றலில் சென்று கொண்டு இருந்ததால் போக்கு வரத்து இல்லாமல் இருந்தது. 3 வருடங்களுக்கு முன் மீண்டும் இணைந்தோம். அதற்கு பின் தான் ஆதிக்கு மதியை கேட்டேன். அவனும் சரி என்றான்.

அப்போது இடை மறிதத சூர்யா “அண்ணாவின் விஷயமெல்லாம் அவர்களுக்கு தெரியுமா?

“தெரியும். சொல்லி தான் கேட்டேன். “

“ஆனால் கல்யாணத்திற்கு பிறகு கூட அவர்கள் இங்கே வந்ததில்லையே. உங்களோடு நன்றாக பேசி கொண்டிருக்கிறார்கள்”

“ஆமாம். மதி தான் இங்கே நிலைமை சரியாகும் வரை நேரில் வர வேண்டாம் என்று கேட்டாள். அதனால் தான் அவர்கள் வருவதில்லை. ஆனால் என்னோடு அவர்கள் மூன்று பேருமே போனில் பேசுவார்கள். ஆதியின் விபத்து பற்றி நேற்று கூட நாந்தான் அவர்களுக்கு சொன்னேன். உடனே பார்க்க வந்தார்கள்.”

 “அண்ணாவின் திருமணம் நடந்த போது அவர்கள் திருச்சியில் தானே இருந்தார்கள். இப்போ எங்கே இருக்கிறார்கள்?”

“ஒரு மாதத்திற்கு முன் மெட்ராச்கே வந்து விட்டார்கள். இரண்டு மூன்று முறை வந்து என்னை பார்த்து விட்டு போனார்கள். “

அம்மாவும், அண்ணியின் அம்மாவும்  நன்றாக பேசி கொள்கிறார்களே.?

ஆமாம், மீனாட்சியும் இரண்டு தடவை வந்து அம்மாவை பார்த்து சென்றாள்.

எப்போ?

பெரும்பாலும் அவர்கள் பகலில் தான் வருவார்கள். வீடு ஷிபிட் செய்வதற்காக பத்து நாள் லீவில் இருந்ததால் அப்போ இருவருமாக வந்தார்கள்.

 “ஒஹ” என்றவன் “சரிப்பா , நான் கிளம்புகிறேன். ஆதி வீட்டிற்கு வந்த பிறகு இன்னும் சில விவரங்கள் உங்களிடம் பேசுகிறேன். பாய்” சொல்லி விட்டு சென்று விட்டான்.

அதே நேரம் ஆதி ஹாஸ்பிடலில் மதியிடம் “வெண்மதி , உன் வீட்டில் எல்லோரும் ஊருக்கு சென்று விட்டரகாளா” என்று கேட்டான்.

“அப்பாவிற்கு இங்கே மாற்றல்லாகி விட்டது. ஒரு மாதத்திற்கு முன் இங்கே மயிலாப்பூர் அருகே வந்து விட்டார்கள். “

“ஒஹ்ஹ ; என்னிடம் சொல்லவில்லையே”

வெண்மதி மனதினுள் இன்றுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறார். எப்படி சொல்ல என்று எண்ணினாள். ஆனால் அவனை நேராக பார்த்து விட்டு ஒன்றும் சொல்லவில்லை,

அப்போது ஆதியும் அதே மனதினில் நினைத்தவன், ஒன்றும் சொல்லமால், அவன் பைலை பார்க்க ஆரம்பித்தான்.

பார்த்தபடியே “ஆனால் நீயும் அவர்களை பார்க்க போனதாக தெரியவில்லையே.”

வெண்மதி சற்று தயங்கிவிட்டு “அது ... திருமணமாகி முதல் முறை இருவரும் சேர்ந்துதான் வரவேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் ஆசைபட்டார்கள். அதற்கு இதுவரை சந்தரப்பம் இல்லாததால் நான் தனியாக அங்கே போக வேண்டாம் என்று போக வில்லை. அம்மா, அப்பா இருவரும் வந்து பார்த்து விட்டு போனார்கள்.

ஆதி திகைத்து விழித்தான். திருமணம் தன் விருப்பமில்லாமல் நடந்ததும், அவனுடைய மன நிலையும் அவளிடமிருந்து அவனை விலக்கி வைத்தது. ஆனால் இப்படி இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தது இல்லை.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.