(Reading time: 7 - 13 minutes)

02. நேசம் நிறம் மாறுமா - தேவி

ண்கள்  உறங்கவொரு  காரணமுண்டோ,

கண்ணனை  இன்றிரவு  காண்பதன் முன்னே?

                                         பாரதியார்

Nesam niram maaruma

வெண்மதி சாப்பிட்டு வந்ததும் அவளை ஆதித்யாவிற்கு ஏற்பாடு செய்த அறையில் படுத்திக்குமாறு சூர்யா கூற அவள் மறுக்கவும் வற்புறுத்தி போக சொன்னான். அவள் இரவு 3 மணி வரை படுத்திருந்து விட்டு வந்தாள். பிறகு வெண்மதி சூர்யாவை படுக்க சொன்னாள். முதலில் மறுத்தவன் பிறகு அவனும் 6 மணி வரை படுத்தான். 6.3௦ மணி அளவில் கான்டீன் சென்று இருவருக்கும் காபி வாங்கி வந்தான்.

டாக்டர் 9 மணிக்குதான் வருவார் என்பதால் இருவரும் காத்திருந்தனர். அந்த நேரத்தில் சூர்யா மெதுவாக வெண்மதியுடன் பேச ஆரம்பித்தான். இதுவரை அவன் வீட்டில் அப்பாவை தவிர வேறு யாரும் அதிகமாக அவளிடம் பேசியதில்லை. அதற்காக அவளை அவமரியாதையும் செய்ததில்லை.

முதல்முறையாக அவளை “அண்ணி. என்றழைத்து சாரி என்றான்.  

வெண்மதி ஆச்சரியமாக பார்த்து “எதற்காக” என்றாள்

“அண்ணி உங்கள் திருமணம் அப்பாவின் பிடிவாதத்தால்தான் நடந்தது. அந்த சமயம் எங்கள் எல்லாருக்குமே அப்பாவின் மேல் கோபமே. ஆனால் அவரின் உடல்நிலை காரணமாக நாங்கள் வேறு எதை பற்றியும் சிந்திக்கவில்லை. அந்த கோபம் எங்கள் மனதில் ஆழமாக படிந்திருந்ததால் இன்று வரை நாங்கள் உங்களிடம் விலகி இருந்தோம். ஆனால் அண்ணாவுக்கு ஆக்சிடென்ட் என்றவுடன் அப்பா ஹாஸ்பிடல் வந்தது பெரிய ஆச்சரியம். கடந்த 2 ½  வருடங்களாக அப்பா வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.

நேற்று பார்த்தபோதுதான் அப்பா உடல்நிலை முன்னேற்றம் தெரிந்தது. வீட்டிற்குள் நடமாடிய போது தெரியவில்லை. அப்பாவை தவிர நாங்கள் யாரும் உங்களிடம் ஒட்டாதபோதும் நீங்கள் உண்மையான முயற்சி எடுத்து அப்பாவை கவனித்து இருக்கிறீர்கள். உங்களின் பொறுமையும் விடாமுயற்சியும் தெரிகிறது. தேங்க்ஸ்.

அப்பா நேற்று சொன்ன பிறகுதான் எங்கள் தவறு புரிந்தது. இனிமேல் நீங்களும் எங்கள் குடும்பமே. அண்ணாவிடமும் சொல்கிறோம் “

“வேண்டாம் சூர்யா. நீங்கள் என்னை புரிந்து கொண்டது போல் அவரும் ஒருநாள் புரிந்து கொள்வார். அதுவரை நான் காத்திருப்பேன். என்னால் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. “

அப்போது அங்கே வந்த அதிதி இருவருக்கும் டிபன் எடுத்து வந்தாள். சூர்யா அதிதியிடம் அப்பாவை பற்றி கேட்க “அண்ணா அப்பாவும் அம்மாவும் 11 மணிக்கு மேல் வர சொல்லிருக்கேன். ஏனென்றால் டாக்டர் வந்து வார்டுக்கு மாற்ற நேரமாகிவிடும். மேலும் அம்மாவும் அப்பாவும் சற்று மெதுவாக கிளம்பி வந்தால் அவர்கள் உடல்நிலைக்கு நல்லது என்று நினைத்தேன்.”

வெண்மதியிடம் திரும்பிய அதிதி “அண்ணி சாரி. நான் உங்களிடம் இத்தனை நாள் பழகிய முறை தவறு. இனிமேல் இப்படி நடக்காது. அண்ணா சொன்னது போல எங்கள் வருத்தத்தையும் உங்களிடம் காண்பித்து விட்டோம். இனி நீங்களும் எங்களில் ஒருவரே. “

“தேங்க்ஸ் அதிதி, சூர்யா.  நானும் உங்களிடம் வந்து பழக முயற்சி எடுத்திருக்கலாம். ஆனால் நம் வீட்டில் எல்லோர் மனநிலையும் என்னால் உணர முடிகின்றது. அதனால்தான் நான் உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. என்னை பொறுத்தவரை என் வேலையயை நான் சரியாக செய்தேன். அவ்வளவுதான்.” என்றாள்

இப்படி பேசிகொண்டிருந்த போது அதிதி சூர்யாவையும் வெண்மதியையும் வீட்டிற்கு சென்று குளித்து ரெப்ரெஷ் செய்து வர சொன்னாள். இருவரும் மறுத்து விட்டனர். ஆதியை ரூமிற்கு மாற்றிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

டாக்டர் 9 மணிக்கு வந்து ஆதியை செக் செய்து விட்டு வார்ட்க்கு மாற்றினார். அன்று முழுவதும் ட்ரிப்ஸ் மட்டும் ஓடட்டும் என்றும் மறுநாள் ஏதாவது  சாப்பிட கொடுக்கலாம் என்றும் கூறினார்.  ட்ரிப்ச்லேயே மருந்து கொடுப்பதால் அப்போதும் தூக்கத்திலிருந்த ஆதியை பார்த்துவிட்டு வெண்மதி முதலில் வீட்டிற்கு சென்றாள்.  சூர்யா அங்கேயே ரெப்ரெஷ் செய்து கொண்டான்.

வீட்டில் அவள் அத்தை கஷ்டபடுவதை பார்த்து வேகமாக குளித்து வந்தாள்.  வந்தவள் மதிய சமையலை வேலைக்காரி உதவியுடன் முடித்தாள். மாமா அத்தை இருவரையும் அழைத்து சாப்பிட செய்தாள். பிறகு ஹாஸ்பிடலில் இருக்கும் அதிதி சூர்யாவிற்கு டிரைவர் மூலம் கொடுத்து அனுப்பினாள்.

அத்தையும் மாமாவும் ஆதியின் உடல் நிலை பற்றி விசாரிக்க டாக்டர் கூறியதை சொன்னாள். அவள் அத்தையும் அவளிடம் “நானும் உன் மேல் அக்கறை காண்பிக்காமல் இருந்து விட்டேன். இனிமேல் இப்படி நடக்காது. உனக்கும் ஆதிக்கும் உண்டான வாழ்க்கை சீக்கிரம் சரியாகி விடும். அதற்கான முயற்சிக்கு எங்கள் ஒத்துழைப்பு உனக்கு உண்டு,” என்றார்.

இருவரிடமும் பேசிகொண்டிருந்த போதும் வெண்மதியின் நினைவுகள் ஆதியிடமே இருந்தது. அவன் மயக்கம் தெளிந்திருக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டு லேன்ட் லைன் போன் அடிக்க எடுத்தவள்  சூர்யா, ஆதி கண் முழித்து விட்டதாகவும் சாதரணமாக பேசிகொண்டிருப்பதகவும் கூறினான்.

மாலையில்  இரவுக்கு உண்டான சமையல் முடித்து விட்டு ஆதியின் அம்மா அப்பாவுடன் வெண்மதியும் ஹாஸ்பிடல் சென்றாள். அங்கே  ஆதி கண் விழித்து சூர்யா அதிதியுடன் பேசிகொண்டிருந்தான்.

அப்போது தன் அப்பாவை பார்த்த ஆதி வியந்து “அப்பா, உங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர மனம் வந்ததா?” என்று வினவ, சிரித்துக் கொண்டே “நேற்று வரை கொஞ்சம் பயத்தினால் வெளியிடங்கள் வருவதைக் குறைத்துக் கொண்டிருந்தேன். உனக்கு ஆக்சிடென்ட் என்றவுடன் என்னால் வீட்டில் இருக்க முடியாமல் வெளியே வந்து விட்டேன்.” என்றார்.

சட்டென்று வெண்மதியிடம் திரும்பி “தேங்க்ஸ் வெண்மதி. அப்பாவின் உடல்நிலை முன்னேற்றத்தில் உன்னுடைய பங்குதான் பெரியது. தேங்க் யு சோ மச். “ எனவும் எல்லாரும் ஆச்சரியப்பட்டனர்.

அவர்கள் யாரும் ஆதி வெண்மதியை இவ்வளவு தூரம் கவனித்திருப்பான் என்று எதிர் பார்க்கவில்லை. ஏன் வெண்மதியே திகைத்தாள். ஆனால் என்ன சொல்வது என்று புரியாமல் “இதுல என்ன இருக்கு ? “ என்று கூறிவிட்டு “உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்றாள்

“ஹ்ம்ம் .. வலி இருக்கு “

சூர்யா “அண்ணா அந்த லாரி டிரைவர் அவனே ஸ்டேஷன்க்கு சென்று சரணடைந்து விட்டான். வேறு ஏதாவது செய்ய வேண்டுமா ? என்று கேட்க

“வேண்டாம் விட்டு விடு. சட்டப்படி என்ன உண்டோ அதை மட்டும் பார்க்கலாம் என்றான் ஆதி.  

மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆதி சோர்வதைப் பார்த்து கிளம்பினர். முதலில் பேசியதை தவிர வெண்மதியிடம் ஆதி வேறு எதுவும் பேசவில்லை. அப்போது ராகவன் ஆதியிடமும் சூர்யாவிடமும் திரும்பி “சூர்யா இரவில் நீ இரு. நாளை காலை முதல் இரவு வரை மதி இருக்கட்டும். நீ பகலில் அலுவலகம் சென்று வேலைகளை பார்.” என்றார்.

ஆதி ஏதோ மறுத்து சொல்ல வர அதை தடுத்து “இதுதான் சரியாக வரும் ஆதி. சூர்யா சைட் வேலைகளையும், அதிதி ஆபீசும் பார்த்துக்கொண்டால் பிரச்சினை இல்லாமல் இருக்கும். “

“ஆனால் உங்கள் உதவிக்கும் வீட்டிலும் அம்மாவிற்கும் வெண்மதி இருந்தால்தான் சரியாக இருக்கும்

அது சரிதான். எனக்கு இப்போ வெளி உதவி எதுவும் தேவையில்லை. வீட்டினுள் நானே பார்த்துக்கொள்வேன். அம்மாவும் சற்று மெதுவாக வேலை செய்துவிடுவாள் . உனக்கு மற்ற வேலைகளை நர்ஸ் பார்துகொண்டலும் அவர்களை கூப்பிடவாது யாராவது வேண்டும். அதனால் வெண்மதியே இருக்கட்டும். வெண்மதி உன்னால் முடியுமில்லையா? “ என்று வினவ

அவள் “கட்டாயம் செய்கிறேன் மாமா. மேலும் அத்தையும் முழு சமயலும் செய்ய வேண்டாம். நான் காலையில் எல்லாம் செய்து வைத்து விட்டு வருகிறேன். நீங்கள் சாப்பிடும் வேளை வேலைக்க்காரியிடம் சூடு செய்து தர சொல்லி சாப்பிடுங்கள். “ என்றாள்.

ஆதிக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் அதை தவிர வேறு வழியில்லாததால் ஒன்றும் பேசவில்லை.  எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு கிளம்பினர்.

அப்போது வெண்மதி ஆதியிடம் “கவனமாக இருங்கள். ” என்று கூறிவிட்டு தலையசைத்து கிளம்பினாள். ஆதி அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பெருமூச்சுடன் மருந்துகளின் விளைவால் கண் மூடி உறங்க ஆரம்பித்தான்.

சூர்யாவை தவிர வீட்டிற்கு வந்த நால்வரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர். வெண்மதி ஆதி இன்று அவளிடம் பேசியதையே எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள். பல நாட்கள் அவளுடைய பெயராவது அவனுக்கு தெரியுமா என்று வருந்திருக்கிறாள். ஆனால் அவன் அவளை கவனித்திருக்கிறான் என்பது அவளுக்கு தன் வாழ்க்கை சீக்கிரம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியது.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.