(Reading time: 18 - 36 minutes)

பாட்டோடு இலயித்திருந்தான்  கவீன் .. ஜெனியோ அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களின் மீது பார்வையை பதித்தார் .. அவர்களை நீண்ட நேரம் சோதிக்காமல் வந்து சேர்ந்தார் ஜெனியின் அப்பா .

" ஜெனி  வாம்மா " என்றவர்

" தனியாவா நின்னுட்டு இருந்த?" என்றார் . அவரை பார்த்தவுடன் , அவரருகில் வந்து நின்றான் கவீன்  ..

" வீட்டுல இருந்து கால் பண்ணாங்க சார் , அதான் தள்ளி நின்னு பேசிட்டு இருந்தேன் " என்றான் காவின்  ..

" சரி நீயும் வா நான் டிராப் பண்ணுறேன் "

" இல்ல வேணாம் சார் , ஹாஸ்பிட்டல் இங்க பக்கம் தான் .. நானே போயிக்குறேன் "

" என் பொண்ணுக்காக தானே நீ வைட் பண்ண ?"

" என்னது ???"

" ஐ மீன் , ஜெனி பாதுகாப்பா இருக்கணும்னு தானே நீ அவங்களை விட்டுட்டு இங்க நின்ன ? அப்பறம் நான் எப்படி உன்னை இப்படியே விட்டுட்டு போக முடியும் ?"இதற்கு மேலும் மறுத்தால் சரியாய் இருக்காது என்று எண்ணியவனாய்   சரி சார் என்றான் ..

ஜெனி முன் சீட்டில் அமர்ந்து கொள்ள , அவளது தந்தையும் கவீனும்  பின் சீட்டில் அமர்ந்தனர் . ஏனோ கொஞ்சம் படபடப்பாய் உணர்ந்தான் கவீன் .. " நல்லவேளை மச்சி , இந்த அருணும் செல்வாவும் ஊருக்கு போயிட்டானுங்க .. இல்லன்னா தல நீயே இப்படி நடுங்கலாமா ?ன்னு டைலாக் பேசியே ஏத்தி விட்டு இருப்பானுங்க " என்று தனக்குள்ளேயே பேசி கொண்டான் .. மிகவும் பவ்யமாய் அமர்ந்திருந்தான்  கவீன்  .. ஏனோ ஜெனியின் அப்பாவிற்கு அன்றுதான் அவனிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று தோன்ற , அவனது குடும்ப பின்னணிகளை பற்றி விசாரித்து கொண்டிருந்தார் .. தந்தையின் செயலை ஜெனியும் கவனித்து கொண்டுதான் இருந்தாள்  .. கவீனும்  தேவைக்கு அதிகமாய் பேசாமல் இறுக்கமாகவே இருப்பது போல காட்டி கொண்டான் ..

ஹாஸ்பிட்டல் வந்தது

" தேங்க்ஸ் சார் " என்றவன் , விடுவிடுவென இறங்கி நடந்தான் கவீன் ..

" உன்கிட்ட அவன் பேசறது இல்லையா ?" என்றார் ஜெனியின் அப்பா .. ஏற்கனவே கவீன்  முன்பொரு சொன்னதை நினைவு கூர்ந்தவலாய் அதே போல

" நான் அவன் கிட்ட பேசறதில்ல அப்பா " என்றாள் 

" ஏன் ?"

" அவன்கிட்ட பேசணும்னு எனக்கு அவசியம் வரல " என்றாள்  ஜெனி ஈடுபாடு இல்லாதவள் போல .. மகளை ஆராயும்  பார்வையுடன் பார்த்த தந்தையும் அடுத்து எந்த கேள்வியும் கேட்கவில்லை .. சுபத்ராவை பார்பதற்கு முன்பாக  தன்னை முதலில் ஆசுவாசபடுத்தி கொண்டான் கவீன் ..

" முருகா ... வளவளன்னு பேசிட்டு கூட இருந்திடலாம் .. ஆனா வாயை மூடிகிட்டு இருக்கவே முடியாதுப்பா .. டேய் கவீன் , எப்படியாச்சும் உன் முசுடு மாமனாரை ஹை 5 மாமாவா மாத்திடு மச்சான் ..இல்லன்னா கடைசிவரை நீ மொழிப்படம் ஜோதிகா மாதிரி தான் வாழ்க்கையை ஓட்டனும் " என்று தனக்கு தானே சொல்லி கொண்டான் ..

ருவழியாய் சுபத்ரா கண் விழித்து இருந்தாள்  .. அனு , ஆரு , நந்துவுடன் சேர்ந்து நளினியும் நின்றிருக்க  கதிரும் சந்துருவும்  வெளியில் இருந்தனர் .. கண்களை திறந்தவளின் பார்வை நளினியின் மீதே படிந்தது .. அந்த பார்வையில் அத்தனை வேதனை நிறைந்து இருந்தது .. மன்னிப்பு கேட்கிறாளா ? அல்லது தனக்கான நியாயத்தை கேட்கிறாளா ? என்று நளினிக்கே  புரியவில்லை .. ஆனால் ஒன்று மட்டும் நிஜம் .. குணாவின் மரணம் மற்ற அனைவரையும் விட இவளது வாழ்வை தான் முற்றிலுமாய் திருப்பி போட்டு இருந்தது ..

ஒரு காலத்தில் கலகலப்பாய் பொலிவுடன் வளம் வந்தவள்தான் இந்த சுபத்ரா .. தற்கொலை செய்யும் அளவிற்கு உடைந்து போய்விட்டாலே ! அதுவும் இது முதல் முயற்சி அல்லவே ? ஒருவகையில் பார்த்தால் இவள் மீதும் தப்பு இல்லை என்றதானே கூற வேண்டும் ? உண்மையில் நடந்த அத்தனைக்கும் காரணமாய் அமைந்தவன் பிரேம் .. அவனது விளையாட்டுத்தனமும்  பொறாமையும் தானே இதற்கு காரணம் .. சொல்லி வைத்தது போல அவனை  நினைக்கும்போதே அவன் அந்த அறைக்குள் நுழைந்தான் ..

" சுபி .. ஏனடி  இப்படி பண்ணுற ? ஏன் இப்படி நீயும் என்னை சாகடிக்கிற ? ஏற்கனவே ஒருத்தன் செத்து போன பழியையே என்னால் தாங்க முடியல .. இதில் நீயும் சாகனுமா ? இதற்கு பதிலாய் என்னை கொன்னு இருக்கலாம் " என்றபோது தன்னையும் மீறி அவனை அதட்டி இருந்தார் நளினி ..

" என்னை வார்த்தை பேசுற பிரேம் நீ ?"

" ..."

" உங்க ரெண்டு பேருக்குமே சொல்லுறேன் .. நடந்தது எல்லாம் நடந்து முடிஞ்சது .. உங்களில் யாரு போயிட்டாலும் , அல்லது ரெண்டு பேருமே ஏதும் பண்ணிகிட்டாலும் குணா திரும்பி வரப்போறது இல்லை .. உங்களுக்குன்னு அம்மா , அப்பா இருக்காங்க நல்ல குடும்பம் இருக்கு .. அதை பற்றி நினைச்சு பாருங்க .. அதை விட்டுட்டு சாகுறேன்னு பேசாதிங்க " என்றார் கடுமையாய் .. அனுவும் கூட

" ஆன்டி  சொல்றதுதான் சரி .. தற்கொலை எதுக்குமே முடிவாகாது " என்றாள் .. ஆரு  அமைதியாகத்தான் இருந்தாள்  .. அவளுக்கு எங்கே , மீண்டும் சண்டை வந்துவிடுமோ என்று பயமாய் இருந்தது ...நந்துவிற்கோ இதற்கெலாம் முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற தீவிரம் இருந்தது .. பிரேமின் முகத்தை பார்க்கவே பிடிக்காவிடினும் ஓரிரண்டு வார்த்தைகள் பேசினார் நளினி .. இறுதியாய்

" இன்னும் ஒரு நாள் அவ ஹாஸ்பிட்டலில் இருக்கணும்னு டாக்டர் சொன்னாங்க .. பார்த்துக்க .. அவங்க வீட்டில் சொல்லிடு .. நாங்க வரோம் " என்று கிளம்பினார .. சரியென தலை அசைத்தவன் அனைவரையும் போக விட்டு நந்துவை மட்டும் நிறுத்தினான் .. அறைவாசலிலே நின்றிருந்தான் சந்துரு .. நந்து மட்டும் வெளிவராமல் போகவும் அவனுக்கு கோபம் தலைகேறியது .. அவன் கோபமாய் அறைக்குள் நுழைந்த நேரம் நந்துவின் வலது கை  பிரேமின் கைகளுக்குள் இருக்க

" நந்திதா " என்று கத்தியே விட்டிருந்தான் சந்துரு ..அவன் போட்ட சத்தத்தில் சுபியின் உடல் தூக்கி வாரி போட அதை கவனித்தவளாய் , சந்துருவை முறைத்தாள்  நந்து ..அவன் ஏதோ அவதூறாய்  பேசப்போவதாய்  அவளது  உள்ளுணர்வு உணர்த்தவும் உடனே அவள்

" அத்தான் ஸ்டாப் .. " என்ற அதட்டலுடன்,

" நீங்க பார்த்துகோங்க  சுபி .. வரேன் பிரேம் அண்ணா " என்றாள்  .. " அண்ணா " என்ற வார்த்தையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்ததை மூவருமே உணர்ந்தனர் .. ஏதோ தற்காலிகமாய் சந்துருவின் கோவம் மட்டுப்பட , அவன் அங்கிருந்து விடுவிடுவென நடந்து சென்றான் ..

நளினியிடம் பேசி கதிருடன் , அவர்களை அனுப்பி வைத்தாள்  நந்து ..

" நீயும் வா நந்து .. டைம் ஆச்சு " என்றாள்  அனு ..

" இல்ல அனு  , அவர் கோபத்தை அப்படியே விட்டா இன்னும் பிரச்சனை  ஆகிடும் .. எனக்கு கொஞ்சம் பேசணும் .. நீங்க முதலில் போங்க " என்று மறுத்து விட்டாள்  ..

மகனின் கோபத்தை உணர்ந்த  நளினியும்

" பத்திரம் நந்தும்மா " என்றார் ..அவர்களை வழியனுப்பிவிட்டு , மருத்துவமனை அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்தவனை தேடி போனாள்  நந்து .. கைகளை இருக்க கட்டி கொண்டு கண்களை மூடி, மரபெஞ்சில் அமர்ந்திருந்தான் சந்துரு .. அன்று போல இன்று கைகளில் ஒரு பூவை எடுத்து கொண்டு அவன்முன் நின்றாள்  நந்திதா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.