(Reading time: 18 - 36 minutes)

" பிரேம்கு நீங்க கூட கொடுக்க முடியாத தண்டனையை நான் கொடுத்திட்டேன் அத்தான் .. மன்னிப்பு ! அவர் தன்னை நியாயபடுத்திக்க நினைக்கவும் நான் அவரை பேச விடாமல்  மன்னிச்சுட்டேன்னு சொன்னேன் .. அதுவே அவரை கூனி குறுக வெச்சது .. முதல் முறையாய்  போலித்தனம் மறைந்து அவர் அழுததை பார்த்தேன் .. அவரால்தான் உங்க வாழ்க்கை மாறிடுச்சு .. நீங்க இப்போதான் கொஞ்ச நாளாய் சந்தோஷமா இருக்கீங்க ..அதற்கு காரணம் நாந்தான்னு என் கையை பிடிச்சு நன்றியும் மன்னிப்பும் சொன்னார் .. நீ என் தங்கை மாதிரின்னு சொன்னார் .. அவரை மன்னிகிறதும் ஏற்று கொள்வதும் என்னால் முடியாத ஒண்ணுதான் .. ஆனா சுபியின்பார்வை எங்க மேல தான் இருந்தது ..தேவை இல்லாம குழப்பத்தை உண்டுபண்ண விரும்பாமல் நான் பேச தொடங்கிய நேரம்தான் நீங்க உள்ள வந்திங்க " என்றாள்  நந்து ..

கண்களை இறுக மூடி கொண்டான் சந்துரு .. அவன் பார்த்த காட்சிக்கும் , அவனுக்கு வந்த கோபத்திற்கும் , அவள் மட்டும் பேச விட்டிருந்தால் இந்நேரம் அவள் மனம்புண்படும்படி பேசி இருந்திருப்பான் .

" சாரி டா " என்றான் குற்ற உணர்வில் ..

" இட்ஸ் ஓகே அத்தான் .. லேட் ஆச்சு " என்றாள்  பாவமாய் .. அவனோ குறும்பாய்

" நம்ம வீட்டுக்கு போலாமா ?" என்றான்

" அடடே .. ரொம்ப ஆசைதான் .. சின்ன பொண்ணு கிட்ட இப்படியே பேசுவிங்க ?" என்றாள் 

" சின்ன பொண்ணுதான் .. ஆனா எவ்வளவு தெளிவா பேசுற தெரியுமா .. நான் கூட உன்னை என்னவோ நினைச்சேன் " என்றான்

" என்னவோன்னா  ?"  என்று அவள் விழி விரிய கேட்கவும்

" என்னென்னவோ " என்று உல்லாசமாய் சிரித்தான் .. பிறகு அவள் கேட்காமலேயே

" சுபி விஷயத்தில் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அம்மு " என்றான்

" உங்க இஸ்டம் அத்தான் " என்று அவளும் புன்னகைத்தாள்  , அவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ..

தே இரவில் ,

அனு , ஆரு  இருவருமே தங்களது அறையில் இருந்தனர் .. மிகவும் யோசனையுடன இருந்தாள் ஆரு  .. அதற்கு காரணம் நளினி கடைசியாய் சொன்ன வார்த்தைகள் தான் ..

" ஏன் அம்மா இப்படி எல்லாம் நடக்குது ?" என்று அவள் ஆயாசமாய் கேட்கும்போது

" ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் ஆரு .. நமக்கு சரின்னு படுற விஷயம் எப்பவும் சரியா இருக்கணும்னு அவசியம் இல்ல .அதுக்கு பின்னாடி இன்னொருத்தரின் நியாயம் மறைக்க பட்டு இருக்கலாம் .. நாம எல்லாம் சராசரி மனுஷங்க தானே ? தப்பு பண்ணுறது எவ்வளவு சகஜமோ அந்த அளவுக்கு , மன்னிக்கவும் கத்துக்க வேணும் " என்றார் அவர் .. அவர் ஏதோ பொதுவாகத்தான் சொன்னார் .. ஆனால் அவர் அப்படி சொன்ன நேரம் அவள் மனதில் வின்சியின் ஞாபகம் வந்தது .. அதையே இன்னும் வலுப்படுத்தும் வகையில் இப்போது அனுவும்  பேசினாள்  ..

" ஆரு , பசிக்கிது வா சாப்பிடலாம் .."

" நந்து வரட்டுமே "

" என் வயிறு அதுவரை சைலண்டா இருக்காது "

" ப்ச்ச்ச் எனக்கு பசிக்கல "

" ஏன் ?"

" தெரியல .. " என்று தடுமாறியவள்

" சுபி அக்கா , நியாபகம் " என்றாள் ..

" ஓஹோ நீ அப்படி வர்றியா ?" என்று மனதிற்குள் மகிழ்ந்தாள் அனு .. நளினி  அப்படி அறிவுரை கூறிய போது  இஅவ்லும் அங்குதானே இருந்தாள்  .. அந்த நினைவில் இப்போது

" ஹ்ம்ம் என்ன பண்ணுறது ? நம்ம ஒருத்தவங்க நம்பலைன்னு நினைக்கும்போது அந்த வலி உயிர் போறது விட கொடுமையா தான்  இருக்கும் .. என்ன சுபி , பொண்ணு என்பதால் ரொம்ப எமோஷனல் ஆகி இப்படி சூசைட் பண்ணிக்க பார்த்தாங்க .. வின்ஸ்  பையன் இல்லையா அதான் தைரியமா இருக்கான் .. "

" எதுக்கு வின்ஸ்  பத்தி பேசற ?" என்று அனுவிடம் ஆரூ கேட்கவே இல்லை ...மாறாக அவள் மனம் பதைபதைத்தது .. அனுவோ

" ஆனா , இப்படியே விட்டா நாளைக்கு அவனும் இதே முடிவுதான் எடுப்பான் " என்று சொல்லிவிட்டு போனாள் ..

" ஹே நில்லு டீ " என்று ஆரு  அழைத்ததை காதில் வாங்கமல் சாப்பிடுவதற்கு ஓடினாள் .. " நமக்கு சோறு தானே ஜீ முக்கியம் ?"

அனுவின்  வார்த்தைகள் இன்னும் கலவரமாக்க முதல் முறையாய் தனது ஈகோவை விட்டு கொடுத்து வின்சிக்கு மெசேஜ் அனுப்பினாள் ..

“ I want to meet you tomorrow at church”

ரியாய் அதே நேரம் ஹாஸ்டல் வாசலில் நின்றது அந்த கருப்பு கார் ..

" ரொம்ப வலிக்கிறதா ?" என்று மீண்டும் கேட்டார் அந்த பெரியவர் ..

" ஐயோ இல்லைம்மா " என்ற தீப்தி  அவரது அன்பான வார்த்தையை கேட்டு கண்கலங்க , அதை தவறாக புரிந்து கொண்ட தேவகி

" அப்பறம் ஏன் அழற ?" என்றார் ..

" அது வந்து "  என்று அவள் விளக்கம் அளிக்கும் முன்பே

" எல்லாம் இந்த தடியனை சொல்லணும் " என்று திட்டினார் டிரைவர் சீட்டில் இருந்தவனை பார்த்து ..

" உங்க டிரைவரை திட்ட வேணாம் ஆன்டி .. என் மேலதான் தப்பு .. எனிவே .. ரொம்ப நன்றி .. நான் வரேன் " என்று  இறங்கிய தீப்தியின் கைகளில் லேசாய் காயம் பட்டு இருந்தது .. அந்த கார் போகும்வரை வாசலில் நின்று கை  காட்டினாள்  .. அங்கிருந்து காரை எடுத்தவன் , சிறிது நேரத்தில்

" அந்த பொண்ணுதான் என்னை டிரைவர்ன்னு சொல்லுறா , நீங்களும் சும்மா இருக்கிங்களா அம்மா ?" என்று அம்மாவை பார்த்தன அவன்  ..

" சும்மா இரு தீரஜ் .. நீ பண்ண வேலைக்கு அவ உன்னை சும்மா விட்டதே பெருசு " என்றார் ..

இவங்கலாம் யாரு ? என்ன நடக்குதுன்னு அடுத்த எபிசொட் ல பார்ப்போம்.

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 22

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 24

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.