(Reading time: 17 - 34 minutes)

22. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி

முகம் வியர்க்க , பார்வைகள் தடுமாற " அப்பா " என்று உரக்க அழைத்து அனைவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பி இருந்தாள்  நந்திதா.. முதலில் அவளை  நிமிர்ந்து பார்த்தது ஞானபிரகாஷும் , அவளது தந்தையும் தான் ..

எங்கே தனது தந்தையின் பக்கம் பார்வையை செலுத்தினால் மாமாவும் பார்வை செல்லும் திசையில் திரும்பிவிடுவாளோ  என்று தவித்தவள் நளினி , ஞானபிரகாஷ் , கதிர் , சந்துரு, கவீன்  ஐவரையுமே இமைக்காமல் பார்த்தாள் .. மகள் தன்னை கண்ட இன்ப அதர்ச்சியில் தான் உரக்க அழைத்தாலோ ? என்ற கேள்வியுடன்  அவள் பார்வை சென்ற திசையை நோக்கினார் அவளது தந்தை .. பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பதினால் சந்துருவின் தந்தையை முதலில் அவரால் அடையாளம் காண முடியவில்லை .. அருகில் தனது தங்கையை கண்டதும்தான் நிலைமையை புரிந்து கொண்டார் அவர் .. சட்டென வேகத்தை குறைத்து பாதையிலேயே நின்று விட்டார் அவர் ..

தனது தோழியின் அலறலில் மானசீகமாய் தலையில் அடித்து கொண்டாள்  அனு ..

ninaithale Inikkum

" ஹே அமுல் பேபி, இப்படியா நீ சிக்கலில் மாட்டி விடுவ ?"

" அது .. அது " என்று விழித்தவள் அவர்கள் அருகில் வருவதை உணர்ந்து ,

" காலில் ஏதோ குத்தியதும் வலி தாங்காமல் கத்திட்டேன் " என்று சமாளித்தாள் .. ஏற்கனவே அவள் பதற்றத்தில் இருந்ததினால் , அவள் கூறிய விதமும் முக பாவனையும் அவளை நம்பும் விதத்தில் தான் இருந்தது .

" பலே , நீயும் தேறிட்ட" என்று பார்வையாலேயே அவளை மெச்சினர் அனைவரும் .. அதற்குள் அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தார் ஞானப்ரகாஷ் தனது கணீர்  குரலில் ..

" ஆக, இதுதான் நீங்க எல்லாரும் கோவிலுக்கு வந்த திட்டமா ?" என்று தீர்க்கமாய் பார்த்தார் அவர்களை .. நந்திதாவின் பதிலில் கொஞ்சம் சமாதானம் அடைந்த அனைவருமே அவரது கர்ஜனையில் மீண்டும் கலவரமாகினர் .  அவரது  பார்வையில் வெடவெடத்து போய்  நின்றாள்  நந்திதா ..

" அப்பா அது வந்து " என்று நிலைமையை சமாளிக்க முன்வந்தான் சந்துரு .

" நீ பேசாதே சந்துரு " என்று கர்ஜித்தார் அவர் ..

" போச்சுடா .. வேதாளம் வெங்காயம் லாரி ஏறுதே " என்று மானசீகமாய் கணவனை வேதாளமாய் பாவித்தார் நளினி ..

" டேய் கதிர் "

" சொல்லுங்க அப்பா "

" நீ சொல்லு , இதெல்லாம் உன் திட்டம் தானே ?"  என்றார் அவர் உண்மையை கண்டுபிடித்து விட்ட தேஜசுடன் ..

" என்ன திட்டம் ?"என்று புரியாமல் பார்த்தனர் அனைவரும் ..

" அப்பா அது வந்து " என என்ன சொல்வதென்றே புரியாமல் நின்றான் அவன் ..

" உனக்கு கூட இந்த மாதிரி திருட்டுத்தனமா யோசிக்க தெரியுமா கதிர் ? நீயும் அனுவும்  ஒருத்தரை ஒருத்தர் விரும்புறிங்கன்னு உங்க ரெண்டு பேரு வீட்டாரின் உட்பட எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் .. அப்படி இருக்கும்போது ஏன் இந்த திருட்டுத்தனம் ?" என்று அவர் கேட்டு வைக்கவும் அனுவின் முகம் அஷ்டகோணல் ஆனது .. நளினி , கவீன்  மற்றும் சந்துரு மூவரும் மௌனமாய் சிரிக்க , நந்துவிற்குமே லேசாய் சிரிப்பு வந்தது ...

" துரோகி !" என்று நண்பனை பார்வையாலையே சாடினான் கதிர் ..சந்துருவோ

" விடு மச்சி , நட்புக்காக நாளைக்கே உனக்கொரு சிலை வைக்கிறேன் " என்று கிசுகிசுத்தான் .. அனுவோ ,

" இல்லை அங்கிள் .. ஒரு கெட்ட  கனவு வந்தது , அதான் கதிரொடு சேர்ந்து கோவிலுக்கு வரணும்னு தோணிச்சு .. ஐ எம் சாரி " என்று முகத்தை பவ்யமாய் வைத்து கொண்டாள் .. அவளது பாவனையில் அவரே உருகிவிட

" இட்ஸ் ஓகே மை கேர்ள் , சும்மாதான் உங்ககிட்ட கோபமாய் பேசி பார்த்தேன் .. வாங்க போகலாம் " என்று   அனைவருடனும் இணைந்து நடந்தார் .. தாமதமாய் நடப்பது போல நந்துவிற்கு ஈடு கொடுத்து நடந்தப்படி வந்தான் சந்துரு .. கிடைத்த சந்தர்பத்தில் அவள் கைகளை ஆதரவாய் பிடித்து கொண்டான் ..

" பிரபு அத்தான் " என்றாள்  நந்து அக்கம் பக்கம் பார்த்து கொண்டே

" ஹா ஹா , பயப்படாதே ..அம்மா அப்பாவை பார்த்துப்பாங்க ..நீ ஏன் இரு மாதிரி இருக்க ? "

" அப்பா இங்க வந்திருக்கார் ! "

 "என்ன சொல்லுற ? மாமாவா ? எப்போ ? எங்க அவர் இப்போ ?"

" எனக்கே கொஞ்ச நேரம் முன்னாடிதான் தெரியும் அத்தான் .. உங்களுக்கு பின்னாடிதான் வந்திட்டு இருந்தார் .. மாமா மட்டும் அவரை  பார்த்திருந்தா " என்று விழிகளை விரித்தாள்  நந்து .. பிடித்திருந்த கைகளை லேசாய் அழுத்தினான் அவன் ..

" ப்ச்ச்ச் , அசடு இதுக்கு ஏன் பயப்படுற ? என்னைக்கு இருந்தாலும் அவங்க ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு தானே ஆகணும்  ! "

" அது என்னவோ சரிதான் அத்தான் .. ஆனா மாமா கோபப்பட்டுட்டா என்ன பண்ணுறது ?"

" நான் அவர் மகன்  நந்து .. ஏன் எனக்கு கோபம் வராதா  ?"

" ப்ச்ச்ச் ... இது என்ன பேச்சு அத்தான் ? நான் நாம எல்லாருமே சந்தோஷமா இருக்கணும்னு மட்டும்தான் நினைக்கிறேன் .. அதை விட்டுட்டு இந்த கோபம் பிரிவு அதை பத்தி என்னால யோசிக்க முடில " என்று மறுப்பாய் தலையசைத்தாள்  அவள் . செவிகளை அலங்கரித்த கம்மல்கள் நர்த்தனம் ஆட , அதை பார்வையால் ரசித்தபடி இருந்தான் சந்துரு ..

" அ...த் ... தா ... ன் ... "

" ம்ம்ம்ம்?"

" என்ன இப்படி பார்கறிங்க  ?"

" சொல்லவா ?"

" ம்ம்ம் "

" இங்க வேணாம் .. தனியா இருக்கும்போது சொல்றேன் " என்று கண் சிமிட்டியவன் , இதற்கு மேல் அவள் அருகில் இருந்தால் ஆபத்து என்று உணர்ந்து கவீனுடன் இணைந்து கொண்டான் ..

" உன் முகம் ஏன்டா  இப்படி சோகமா இருக்கு " என்றான் கவீன்  முகத்தில் பரவிய சோகத்தை கண்டுபிடித்தவனாய் ..!

" ஒன்னும் இல்லை அண்ணா "

" அட சும்மா சொல்லு டா .. அண்ணான்னு சொல்லி நெஞ்சை நனைச்சிட்ட.. அப்பறம் இப்படி மறைச்சு வைச்சா எப்படி ?"

" இதில் மறைக்க என்ன அண்ணா  இருக்கு ?  எனக்கு என் ஜெலோ ஞாபகம் வந்துருச்சு " என்றான் அவன் சோகமாய் ..

" இது பாரு தம்பி, காதல்ன்னாலே பிரச்சனை  வரத்தான் செய்யும்..அதை சரி படுத்த முயற்சி பண்ணனுமே ஒழிய ஓடி போக கூடாது புரிஞ்சதா ?" என்றான் சந்துரு அவனது காதலில் புயல் வீச போவது அறியாமல் .. அதே நேரம் நளினியுடன் நடந்த நந்திதா , தனது தந்தை அங்கு வந்ததை பற்றி கூறி இருந்தாள் .. ஞானபிரகாஸ்  கதிர், ஆரு  அனு  மூவரிடமும் பேசி கொண்டிருப்பதை கவனித்தவாறே அண்ணனின் மகளுக்கு ஆறுதல் கூறினார் நளினி ..

" இது பாரு நந்தும்மா , பயப்படாதே .. கடவுள் நம்ம பக்கம் தான் இருக்கார் .. பிரச்சனை  வரணும்னு விதி இருந்தா அதை யாராலும் நிறுத்தவே முடியாது .. ஆனா கடவுளே  நமக்கு நல்லது நடக்கனும்னு தான் நினைக்கிறார் .. அதான் உன் மாமாவும் என் அண்ணாவும் சந்திக்கல .. புரிஞ்சதா ? மனசை போட்டு குழப்பிக்காம , வந்துரு நம்ம முருகருக்கு நன்றி சொல்லு " என்று தேற்றினார் அவர் ..

" ம்ம்ம்கும்ம் .. ஒரு மனைவியை கல்யாணம் பண்ணி இருந்தா , அவ என் கூட சண்டை போட்டிருப்பா .. எனக்கும் பொழுது போயிருக்கும் .. இங்க என்னடானா , என் வள்ளியும் தேவானையும் எனக்காக ஒருத்தருக்கொருத்தர்  சண்டை போட்டுட்டு இருக்காங்க .. அதனால எனக்கு பயங்கர போர் அடிக்கிது பக்தையே ! அதனால் கூடிய விரைவில் எனது திருவிளையாடலை ஆரம்பிக்கிறேன் " என்று மௌனமாய் சிரித்தான் சண்முகவேலன் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.