(Reading time: 17 - 34 minutes)

தன்பிறகு அனைவரும் , ஒன்றாக மதிய உணவு உண்டுவிட்டு கடற்கரைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தனர் ..

ஒருவழியாய் அனைவரும் கலகலப்பாய் பேசி கொண்டே காரில் சென்று கொண்டிருந்தனர். நந்திதாவிற்கு மட்டும் அழவேண்டும் போல இருந்தது .. அவளை பார்பதற்காக வந்திருந்தார் அவள் அப்பா .. இந்நேரம் எங்கிருக்கிறாரோ ? நளினி அத்தை வற்புறுத்தியதால் தான் அவர்களுடன் இணைந்தே ஹோட்டலுக்கு வந்திருந்தாள் அவள் .. ஆனால் மனம் முழுக்க தந்தையே நாடி வந்தது ..

காதல் என்றால் என்ன ? வார்த்தைகளால் பகிர்ந்து , கை கோர்த்து கட்டி அணைத்து  கதை பேசுவது மட்டும்தானா காதல் ?

ஒரு விழி கலங்கும்போது , மறு விழியும் கலங்கிடும் கோலம் காதல் இல்லையா ? தன்னில் சரிபாதி சோகத்தில் இருக்கும்போது இங்கு தன்னால் எப்படி அமைதியாய் இருக்க முடியும் ? என்று துடிப்பதும் தானே காதல் ?

லாவகமாக காரை ஓட்டி  கொண்டே வந்தாலும் , சந்துருவின் பார்வை அடிக்கடி நந்துவை உரசி சென்றது .. மாட்டாள் , மாமாவை பார்க்கும்வரை நிச்சயம் இவள் புன்னகைக்க மாட்டாள் ..தனது தந்தை அருகிலே இருக்கும்போது, மாமாவிடம் பேச முயல்வது கொஞ்சம் கடினம்தான் .. அதேநேரம் அவளது புன்னகைக்காக எதையும் செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு ..

சந்துருவிற்கே தனது மாற்றாம் புதிதாய் இருந்தது .. முதன் முதலில் அவளை பார்த்தபோது அவளிடம் காட்டிய கோபம் , அந்த கோபத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் , அதன் பிறகு அவள் ரோஜாவுடன் நிற்கும்போது அவளது கரங்களில் முகம் புதைத்தது , அதன் பின் அவளை கொஞ்சம் கொஞ்சமாய் தன் வசம் மாற்றியது ..தானும்அவளுடன்  இணைந்தது அனைத்துமே அவன் கண்முன் தோன்றி ஒரு வசீகர புன்னகையை உருவாக்கியது ..

" சந்துரு "

" சொல்லுங்க அப்பா "

" என்னை ஹாஸ்பிட்டலில் டிராப் பண்ணிட்டு , நீங்க ஹோட்டல் போக முடியுமா ?" என்று கேட்டார் ஞானப்ரகாஷ் ..

" ஹையா " என்று மனதிற்குள் துள்ளினாலும் , பொறுப்பான மனைவி என்ற முறையில் பவ்யமாய்

" என்னங்க ஆச்சு ?" என்றார் நளினி..

" ஒண்ணுமில்லம்மா .. கொஞ்சம் அர்ஜண்ட் வேலை இருக்குன்னு மெசேஜ் வந்திருக்கு .. சோ நான் கெளம்பனும் " என்றார் அவர் கனிவாய் .. அதன் பிறகும் பொறுமையாய் இருக்கு சந்துரு என்ன சளைத்தவனா ? மானசீகமாய் சந்தர்பத்திற்கு நன்றி கூறி அவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றவன் ..அடுத்த அரைமணி நேரத்தில் தனது மாமாவை சந்தித்து விட்டான் ..

தந்தையை பார்த்ததுமே உரிமையுடன் மகிழ்ச்சியாய் அவர் தோளில்  சாய்ந்து கொண்டாள்  நந்திதா ..

" சாரி அப்பா "

" எதுக்கு டா ?"

" எனக்காக தானே நீங்க வந்திங்க ? ஆனா நான் உங்களை பார்க்க முடியாமல் போய்  விட்டதே " என்று குறை பட்டு கொண்டாள்  அவள் .

" அப்படி இல்லம்மா .. உன்மேல இதில் எந்த தப்புமே இல்லை .. அப்படி பார்த்தா , இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கிய பெரியவங்க நாங்கதானே ?" என்றார் அவரும் கனிவாய் ..

" அனு . கர்சிப் வெச்சு இருக்கியா ?" என்று அனுவை  பார்த்து கேட்டான் கவீன்.. அவனை முறைத்து கொண்டே

" டேய் என் ஆளு கர்சிப் உனக்கு எதுக்கு ?" என்று மிரட்டினான் கதிர் .. அவன் " என் ஆளு " என்று உரிமையாய்  உரைத்தது அனுவிற்கு பிடிக்க , அவளோ காதலாய் அவனை பார்க்க இப்போது தடுமாறுவது கதிரின் முறையானது ..

" அட போங்க அண்ணா , நம்ம நந்து காட்டுற சீன்ல ஆனந்த கண்ணீரை துடைக்க்கலாம்னு பார்த்தா , இப்போ அனு  விடுற ஜொல்லுக்கு  கர்சிப் பத்தாது போல இருக்கே " என்று கூறி அனு , ஆரூ, நந்து ,கதிர், சந்துரு ஐவரிடமும் சரமாரியாய் அடிவாங்கி கொண்டான்  கவீன் ..

" சரி சரி போதும் விடுங்கபா " என்று நளினி பெரிய மனதாய்  கூறவும்தான் அனைவரும் அடங்கினர் .. ஆனால் அவ்வளவு நேரம் இருந்த அமைந்து முற்றிலும் மறைந்து கலகலப்பான சூழ்நிலை நிலவியதை அனைவருமே உணர்ந்தனர் .. இதுதான் கவீன் ..இவனால் மட்டும்தான் சுனாமி வர்ற நேரத்தில் கூட சுராங்கனி பாட முடியும்  என்று மனதிற்குள்  பெருமைபட்டபடி  அனு  கவீனை  பார்க்க அதை கவனித்தவன்

" நான் உனக்கு காலேஜில் சேர்ந்த முதல் நாளே சான்ஸ் கொடுத்தேன் .. அப்போ சரிதான் போன்னு  சொல்லிட்டு .. இப்போ சைட் அடிக்கிறியா ? சாரி அனு என்னால ஜெலோவுக்கு துரோகம் பண்ண முடியாது " என்று கண்ணடிக்கவும்  கதிர் கொலைவெறியில் அவனை துரத்தினான் ..

" சரி , சரி .. ரொம்ப பசிக்கிறது பா ... முதல்ல சாப்பிடலாம் ..அதுக்கு பிறகு இவனை தெம்பா அடிப்போம் " என்று சந்துரு கூறியபடி உரிமையாய்  நந்துவின் கைகளை பற்றிக்கொண்டு ஹோட்டலில் நுழைந்தான் .. அவர்களது ஜோடி பொருத்தத்தை ரசித்து கொண்டே மற்றவர்களும் பின் தொடர்ந்தனர் ..

ஜெனி வீடு ..

தொலைக்காட்சி சத்தம் கூட இல்லாமல் அமைதியாய் இருந்தது எப்போதும் போலவே.. சமையல் வேளையில் மூழ்கி இருந்தார் அவளது தாயார் .. அவளது தந்தையோ அன்றைய செய்தி தாளை புரட்டி கொண்டிருந்தார் .. அவருக்கு இணையாய் ஜெனியும் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தாலும் மனம் மட்டும் ஒரு நிலையில் இல்லை .. சற்றுமுன் அனுவும் மற்ற அனைவரும் ஒன்றாய் எடுத்திருந்த புகைப்படத்தை அவளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தாள்  அனு .. அவளுக்கும் அவர்களோடு சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது .. குறிப்பாக தீப்தியின் தொல்லை இல்லாத சூழ்நிலையில் கொஞ்சமாவது கவீனிடம்  நேரம் ஒதுக்க முடியும் அவளால் .. நேரடியாய் இல்லாவிடினும் , அவள் மனம் நிம்மதி கொள்ளும்படி ஜாடைமாடையாக பேசி இருந்திருப்பான் அவன் ..

" என்ன செய்வது ? " சட்டென மூண்ட பெருமூச்சை ஒதுக்கி விட்டு புத்தகத்தில் கவனம் செலுத்த முயன்றாள் .. மகளை கவனித்து கொண்டே அருகில் சிணுங்கி கொண்டிருந்த கைப்பேசியை உயிர்பித்தார் அவர் ..

" ஹெலோ "

" ஹெலோ அங்கிள் "

" யாரு பேசறிங்க ?"

" அங்கிள் நான் அனு.. ஜெனியோட ப்ரண்ட்  !"

" ஜெனி இங்கதான் இருக்கா .. அவகிட்ட பேசணுமா ? அவ போனுக்கே கூப்பிடலாமே ?" என்று மகளை கேள்வியை பார்த்தபடி அனுவிடம் கேள்வி எழுப்பினார் அவர் .. என்ன நடக்கிறது என்று புரியாததால் எந்தவொரு சலனமும் இல்லாமல் இருந்தாள்  ஜெனி .. அதுவே அவளது தந்தைக்கு போதுமானதாய் இருந்தது ..

" இல்ல அங்கிள் , நான் உங்ககிட்ட தான் பேசணும் " என்றாள்  அனு  தெளிவாய் ..

" சொல்லும்மா "

" அங்கிள் , இன்னைக்கு காலேஜ் லீவ்ன்னு நானும் ப்ரண்ட்சும் பீச் கு வந்திருக்கோம் .. ஜெனியும் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு தோணிச்சு .. நாங்க எல்லாரும் சேர்ந்து வெளி வந்ததே ரொம்ப கம்மி .. அதுவும் ஜெனி இப்போ எல்லாம் பழைய மாதிரி யாரோடும் பேசறது இல்லை .. " என்று கொஞ்சம் இடைவெளி விடவும் இந்த முறை மகளது முகத்தை ஆராயும் பார்வையை பார்த்தார் அவர் .. அனு  கூறுவதில் உண்மை இருப்பதை அவராலும் உணர முடிந்தது .. முன்பை விட இப்போது கொஞ்சம் அமைதியாகவே காணப்பட்டாள்  ஜெனி .. அவளை பார்த்து கொண்டே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.