(Reading time: 17 - 34 minutes)

" ங்க யாரோடும் நான் பேச வேணாம்னு சொல்லலியே " என்றார் அவர் .. பேச்சு அனுவிடம் இருந்தாலும் அந்த கேள்வி தனக்குத்தான் என்று புரிந்தது அவளுக்கு ..

" ஒருவேளை, எந்த விதத்திலும் நீங்க அவளை நினைச்சு கவலை பட கூடாதுன்னு அவ இப்படி ஒதுங்கி இருக்கலாம் அங்கிள் .. இன்னும் ரெண்டு வருஷம் தானே அங்கிள் ? அதுக்கு பிறகு நாங்களே நினைச்சாலும் இப்படி சேர்ந்து இருக்க முடியுமா என்பது கேள்விகுறிதான் " என்றாள்  அனு  பவ்யமாய் .. மௌனம் சாதித்தார் ஜெனியின் தந்தை .

" எங்க சீனியர்ஸ்உம் அவங்க அம்மாவும் கூட இருக்காங்க அங்கிள் .. அன்னைக்கு ஹாஸ்ப்பிட்டலில் பார்த்திங்களே " என்று எடுத்து கொடுக்கவும் அன்றைய நாளை நினைவு கூர்ந்தபடி

" ம்ம்ம்"' என்றார் அவர் ..

" ஜெனியும் வந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு அங்கிள் ..அதான் " என்று பேசி முடித்து விட்டதுபோல மௌனம் காத்தாள்  அனு .. அவரது பதிலுக்காக செவிகளை தீட்டி வைத்திருக்க

" சரி நானே கூட்டிட்டு வரேன் " என்று அவர் கூறி முடிக்குமுன்னே,

" அங்கிள் ஒரு நிமிஷம் " என்று இடைபுகுந்தாள்  அவள் ..

" என்ன ?"

" உங்களை சீட் பண்ண விரும்பல அங்கிள் .. எல்லாரும் இருக்கும்போது , அங்கு கவீனும்  இருக்கான்னு உங்களுக்கு நியாபக படுத்த விரும்பறேன் " என்று எடுத்து கொடுத்தாள்  அவள் .. அசந்துதான் போனார் அவர் அனுவின்  தைரியத்தில் .. எத்தனை பேருக்கு இப்படி  தைரியம் வருமோ ? நண்பர்களின் பெற்றோரிடம் இது போன்று பேசிட ...

" சரிம்மா , நான் ஜெனியை அழைச்சிட்டு வரேன் " என்று மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை வைத்தார்  ஜெனியின் தந்தை ..

" அனுவா  அப்பா ?"

" ம்ம்ம் ஆமாம்மா "

" என்ன விஷயமாம் ?"

" அவங்க எல்லாரும் அவுட்டிங் போயிருக்காங்களாமே  "

" ம்ம் தெரியும் அப்பா .."

" ஏன் என்கிட்ட சொல்லல ?"

' புரியல அப்பா ?"

" அவங்க உன்னை கூப்பிடலையா ?"

:" இல்லையே "

" ஏன் ?"

" நான் வரமாட்டேன்னு சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரியுமே " என்றாள்  ஜெனி .. ஏன் என்று அவரும் கேட்கவில்லை .. எதற்கு என்று அவளும் சொல்லவில்லை .. ஆனால் அந்த மௌனத்தில் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறவேண்டும் .. மகளின் அருகில் வந்து , அவள் கேசத்தை பாசமாய் வருடியவர்

" ரெடி ஆகும்மா .. நானே உன்னை டிராப் பண்ணுறேன் " என்றார் ..

மெரினா கடற்கரை .. தங்களுக்கென்று இடம் பார்த்து அமர்ந்து கொண்டனர் அனைவரும் .. நளினி அம்மாவுடன் சேர்ந்துகொண்டு வழக்காடி கொண்டிருந்தான் காவின் .. அனுவும்  கதிரும் அடிக்கடி பார்வையாலேயே பேசிக்கொள்ள சந்துரு சட்டென எழுந்தான் ..

" என்ன சந்துரு ?"

" அம்மா உங்க அண்ணா பொண்ணு ரொம்ப சீன்  போடுறா "என்று முகத்தை திருப்பி கொண்டான் அவன் .. நந்துவின் தந்தை  சிறிது நேரத்தில் கிளம்பி விட்டதால் அந்த தைரியத்தால்  " உங்க அண்ணன் பொண்ணு " என்று ஜாடையாய் பேசிகொண்டிருந்தான்  அவன் ..

"என்ன ஆச்சுன்னு சொல்லுங்க அண்ணா " என்றாள்  ஆரு..

" வேறென்ன , அதோ அங்க இருக்குற கடல் அலையில் நடக்குறதுக்கு உன் ப்ரண்ட்  என்னை நம்பி வர மாட்டாளாம் ... " என்று முறுக்கி கொண்டான் அவன் ..

" நம்பி வர மாட்டேன்னு நான் சொன்னேனா ?" என்று இடைபுகுந்தாள்  நந்து ..

" டேய் கவீன் , உன் அப்பாவி ப்ரண்ட  அமைதியா இருக்க சொல்லு " என்று அவன் மீண்டும் ஜாடை பேச்சு பேசவும் , அவனை முறைத்து கொண்டே கடல் அலைகளில் கால் நனைக்க நடந்து சென்றாள்  நந்திதா ..கோபத்தில் அவள் நடந்த வேகத்திற்கு இணையாய் கிட்ட தட்ட ஓடி, அவளது கரம் பற்றினான் சந்துரு ..

" அம்மு "

".."

"நந்து "

"..."

" ஹே மை டியர் மான் குட்டி ... அத்தான் மேல என்னடா கோபம் " என்று அவன் போலியாய் குழைந்து பேசவும்

பொங்கி சிரித்தாள் நந்து ..

" பிரபு அத்தான் , உங்க வம்புக்கு அளவே இல்லையா ?" என்று கை நீட்டி கேட்டு சலித்து கொள்ளவும் ,

அவளது கைகளை சிறைபிடித்து கொண்டான் அவன்..

" அப்பா என்ன வேகம் உங்களுக்கு ? அன்பா இருந்தாலும் சரி கோபமாய் இருந்தாலும் சரி கொஞ்சம் நிதானமா காட்டணும்னு தோணவே தோணாது .. சரியான விடா கொண்டன்   " என்றாள்  அவள் ..

" ஹா ஹா என்ன பண்ணுறது , அப்பபோ அமைதியின் சிகரம் , அப்பபோ அழகான ராட்சசியா மாறும் அத்தை பெண் இருந்தா இப்படித்தான் " என்றான் அவனும்

" நான் உங்களுக்கு ராட்சசியா ? "

" அதான் அழகுன்னு சொன்னேன்ல ?"

" அப்படி சொன்னா நான் மயங்கிடுவேனா ?"

" ஓஹோ அப்படி ஏதும் சொன்னா மட்டும்தான் நீ என்னிடம் மயங்குவியா ? இல்லைன்னா மேடம் ரொம்ப தெளிவா இருக்குறத நினைப்பா ?" என்று விழி நோக்கி கேட்டான் அவன் .. அவன் விழிகளில் காதலும் கர்வமும் போட்டியிட்டது ..

" போதும் வழிஞ்சது .. வாங்க போகலாம் " என்று மீண்டும் எட்டி நடை போட்டு அவள் அங்கு வந்த நேரம் அவர்களை இணைந்திருந்தாள்  ஜெனி ..

" ஹே ஜெனி வா வா " என்று அனைவரும் வரவேற்க, கவீன்  மட்டும் அவன் தந்தையிடம் " வாங்க சார் " என்றான் .. கவீனின்  முகத்தையே உருத்து பார்த்தார் அவர் .. கொஞ்சமும் கல்மிஷம் இல்லாமல் தெரிந்தான் கவீன் .. அவன் மற்றவர்களை போல அங்கிள் என்று அழைக்காமல் சார் என்று அழைத்ததையும் அவர் மனதில் குறித்து கொண்டார் ..

" ம்ம்ம்ம் ஜெனி பத்திரம் " என்று எல்லாரையும் பார்த்து பொதுவாய் கூறிவிட்டு நடந்தார் அவர் ...

" வா ஜெலோ , உன்னை பார்க்கத்  தானே மாமன் வழி மேல விழி வெச்சு காத்திருந்தேன் " என்று சட்டென கவீனின்  குரலில் அனு  பேசவும் ஜெனியின் பார்வை  கவீனை  உரசிச் சென்றது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.