(Reading time: 17 - 34 minutes)

ருவரின் கண்களிலுமே அவர்களின் முதல் சந்திப்பு நியாபகத்திற்கு வர , அதே பொலிவுடன் சேர்ந்தே புன்னகைத்தனர்.. பெயருக்கு ஏற்றாற்போல கவீன்  எப்போதுமே அழகானவன் தான் என்றாலும் கூட , இப்போது அவன்  அகம் மகிழ்ந்திருந்த காரணத்தினால் இன்னும் அழகாகவே தெரிந்தான் .. இவர்களின் பார்வை பரிமாற்றத்தை அனைவரும் கண்டும் காணாமல் நடந்துகொண்டு இருந்தனர் ..அவர்களது மௌனத்தை தாலாட்டுவது போல தூரத்தில் எங்கோ வானொலியில் இருந்து பாடல் கேட்டது ..

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி

என் சகியே

  நீயில்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ ?

பாடல் கேட்டு நிமிர்ந்த கவீன்  ஜெனியை பார்த்து சட்டென தலையசைத்து மென்மையாய் புன்னகைத்தான் ..

அதுவே அவளுக்கு போதுமானதாய் இருக்க , நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாய் இருந்தாள்  அவள் ..  அடிகடி கதிரின் கைகளை பிடித்து கொண்டாள்  அனு .. என்னதான் அவன் அவளுக்கு ஆயிரம் அறிவுரைகளை இலவசமாய் வாரி இறைத்திருந்தாலும் கூட , அவனை அடிக்கடி பார்க்க முடியாமல் இருப்பது அவளுக்கு கடினமாகத்தான் இருந்தான் ..

" புரிஞ்சுக்கோ அனு .. நீ ஹவுஸ் சர்ஜன் பண்ணும்போது உனக்கே புரியும் பாரு" என்று அவன் அழுத்தமாய் கூறினாள்  மட்டும் சில நொடிகள் வாயை மூடி  கொள்வாள் அனு ...(சில நொடிகள் மட்டுமே !)

இப்போதும் அவள் கை பிடித்து கொள்ளவும் , சட்டென கதிர் நிமிர பாடல் வரிகளை கவனி என சமிக்ஞை காட்டினாள்  அவள் ..

ரோஜாபூவையே

ரோஜா பூவை முள் காயம் செய்தாள்  நியாயமா ?

பேசி பேசி என் ஊடல் என்ன தீருமா ?

" போடி " என்று அவன் உதடசைத்து கூறவும் , அனு  களுக்கென சிரித்தாள் .. அனைவரின் சிரிப்புமே உறைந்துவிடும் காட்சியாய்  அங்கு அமர்ந்திருந்தாள்  அந்த பெண் .. அவள் முகத்தை பார்த்ததுமே  சந்துருவின் முகம் இறுகியது .. முதலில் அந்த பெண்ணை கவனித்த நந்து அனிச்சையாய்  அவன் புறம் திரும்ப , எதிர்பார்த்தது போலவே அவன் முகத்தில் கோபம் கொப்பளித்தது ..

" அ  ... அவ .... அவங்க சுபத்ரா தானே ?" என்று கதிரை பார்த்து கேட்டாள்  அனு .. என்னதான் நம்ம அனு  ரகசிய குரலில் பேச நினைத்தாலும் , அது அனைவரின் செவிகளிலுமே எட்டிவிட அப்படியே நின்றிருந்தனர் அனைவரும் .. மகனின் முகத்தை பார்த்த நளினி ,

" வாங்க நாம திரும்பி போகலாம் " என்றார் ..

" அத்தை , அவங்க அழறாங்க நினைக்கிறேன் " என்று நந்து கூறவும் , சுபத்ரா மீது உள்ள கோபத்தை தனது கைகளுக்குள் இருந்த நந்துவின் கரங்களின் மீது காட்டினான் சந்துரு ..

" ஸ்ஸ்ஸ்ஸ்  வலிக்கிறது அத்தான் " என்று அவள்  அடிக்குரலில் கெஞ்சவும் தான் அவள் கைகளை விடுவித்தான் அவன் .. இங்கு இத்தனர் உணர்வுகள் பேரலையாய் ஓங்கி கொண்டிருந்த நேரம் சுபத்ரா கடலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் .. அவள் முகத்தில் வெறுமை அப்பட்டமாய் படர்ந்து இருந்தது ..

" ஹே அங்க பாருங்க " என்று ஜெனியும் ஆருவும் ஒரே நேரத்தில் சத்தமிட சுபத்ரா கடலுக்குள் இறங்கி கொண்டிருந்தாள் ..

" ஹே சுபி " என்று நளினி தன்னையும் மீறி குரல் கொடுத்தார் ..

" அத்தான் , ப்ளீஸ் அவங்களை காப்பாற்றுங்க ..எனக்கு பயம்மா இருக்கு... எனக்காக அத்தான்  " என்று இறைஞ்சலாய் கூறினாள்  நந்திதா ..  அவன் இன்னும் மௌனமாய் இருக்கவும்

" அத்தான் , என் மேல சத்தியம் நீங்க அவங்களை காப்பாற்றனும் " என்று பிடிவாதமாய் கூறினாள்  நந்து ..

கதிரும் அதிர்ந்துதான் போனான் சுபத்ரா நடந்த வேகத்தை பார்த்து .. அவள் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள் என்று தெளிவாகவே தெரிந்தது  .. எனினும் சந்துருவை மீறி எதுவும் செய்ய முடியாமல் நண்பனை பார்த்தான் .. மாலை  பொழுது என்பதால் , அங்கு கூட்டமும் குறைவாகவே இருந்தது .. அவளை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்று பெண்கள் தவித்து கொண்டிருக்க பெருமூச்செறிந்த சந்துரு ,  " கதிர் " என்று கணீர்  குரலில் அழைத்து சமிக்ஞை காட்டினான்  .. அடுத்த சில நொடிகளில்  கதிர் , சந்துரு இருவரின் இரும்பு பிடியில் பாதி மயக்கத்துடன் கரைக்கு வந்தாள்  சுபத்ரா .. அவளை கரையில் கிட்டதட்ட தள்ளி விட்டவன்

" இப்போ சந்தோசம் தானே டீ ?" என்று நந்துவை பார்த்து கேட்டுவிட்டு அங்கிருந்து விடுவிடுவென நடந்து சென்றான் .. கோபத்தின் மொத்த உருவாய் இருந்தவனை எப்படி சமாளிக்க போகிறோம் ? என்று யோசித்தபடி கண்ணீருடன் அவனை வெறித்தாள் நந்து ..

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 21

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 23

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.