(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - என் காதல் பொன்னூஞ்சல் நீ - 02 - ப்ரியா

பாடலை ரசித்தவாறு அலுவலகத்தை நெருங்கியவள் வண்டியில் பெட்ரோல் கமியாக இருப்பதை எதார்த்தமாக கவனித்தாள். நேரம் இன்னும் இருந்த படியால் அலுவலகத்திற்கு இரண்டு தெருக்கள் தாண்டி  இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு வண்டியை செலுத்தினாள் அனன்யா.

அடுத்த பாடல் முனுமுனுத்தவாறு பெட்ரோல் பங்கை அடைந்தவள் பெட்ரோல் போட்டு விட்டு வெளியே வரும் போது கைபேசி சிணுங்கியது.

இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று அவள் அறிந்தது தானே. முகத்தில் ஒரு ஒளி கீற்று ஆனால் மனதில் இல்லை..!!

En kathal ponnunjal nee

அலைபேசியை உயிர்ப்பித்து காதுக்கு கொடுத்தாள்.

"ஆபீஸ் கிளம்பியாச்சா?"

"ஆமாம் ம்மா, பக்கத்துல வந்துட்டேன்"

"சாப்ட்டுட்டு தானே வந்த?"

"ம்ம்ம் ஆதிரா கூட கொஞ்சம் சாப்ட்டேன்மா, பரத் இன்னும் சாப்பிடலன்னு மெச்செஜ் பண்ணான் பிரேக் ல நல்ல சாப்டுபேன்"

"ம்ம் சரி, நாங்க எல்லாரும் சாப்டுடோம், தூங்க போறோம்"

"சரி"

"பாத்து போ"

"ம்ம்ம்"

"காலையில பேசறேன்"

"சரி வெச்சுடறேன்"

"ம்ம்ம்"

தொடர்பு துண்டிக்க பட்டது. மெல்லிய பெருமூச்சை வெளியிட்டு விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள். மீண்டும் அலைபேசி அழைக்க

"எதாவது சொல்ல மறந்துடங்களா?" என வாய்விட்டு சொல்லியவாறே போனை எடுத்தவள் அதில் ஒளிர்ந்து பெயரில் மனமும் முகமும் சேர்ந்து மலர்ந்தாள். அமெரிக்காவிலிருந்து அதுவும் அன்பனிடம் இருந்து வந்த கால் ஆயிற்றே..!!!

"ஹலோ அம்மு, என்ன இது சீக்கிரமே எழுந்துடின்களா?"

"....."

"என்ன சார் தூக்க கலக்கமா, பேசுங்க தங்கம்"

"....."

"ஒய் என்ன அமைதியா இருக்கவா கால் பண்ணிங்க?"

"நான் ஷங்கர் பேசறேன் மா"

"ஒ அண்ணா, சாரி சாரி அவருன்னு நினைச்சுட்டு..." அசடு வழிந்தவாறு உதட்டை கடித்து கொண்டவள் சட்டென துணுக்குற்றாள்.

"அவன் போன் யார்கிட்டயும் கொடுக்க மாட்டனே அண்ணா? அவனுக்கு எதாவது? நல்ல தானே இருக்கான்?"

"இல்ல மா"

"சொல்லுங்க அண்ணா, சரி விடுங்க நீங்க சொல்ல மாட்டிங்க போனை அவன் கிட்ட கொடுங்க"

"அவன் இங்க பக்கதுல இல்ல"

"எங்க போயிருக்கான்?" கேட்டு கொண்டே சாலையை அடைந்து ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு பேச்சை தொடர்ந்தாள்.

"நிச்சயதார்த்தம்... அது"

"ஒ.. ப்ரெண்டுக்கா? நீங்க போகலையா? அவன் சொல்லலையே?"

"இல்ல மா அவனுக்கு நிச்சயதார்த்தம் "

"என்னது?"

"ஆமாம் அவனுக்கு தான்"

"....."

"அனு.. அனு.."

"சொல்லுங்க அண்ணா இன்னும் சாகல நான்.."

"ஐயோ என்னம்மா பெரிய வார்த்தை எல்லாம் பேசற?"

"விடுங்க அண்ணா, வெச்சுடவா?"

"என்னம்மா ஒண்ணுமே கேட்கலையே?"

"என்ன கேட்கனும்னு சொல்றிங்க? முடிஞ்சுது அவ்ளோ தான்"

"சாரி டா"

"நீங்க ஏன் அண்ணா சொல்லணும்?"

"...."

"அண்ணா?!"

"சொல்லும்மா"

"இதுல அவனுக்கு விருப்பமா? என்கிட்ட சொல்லவே இல்லையே?"

"ஹ்ம்ம் ரொம்ப சந்தோசமா இருக்கான்மா வயிறு எரியுது, உங்கிட்ட பேச சொன்னா போன கொடுத்து நீயே பேசிக்கொன்னு சொல்லிடு போய்ட்டான் மா"

"ம்ம்ம்.. பை"

வள் வாழ்வின் ஆதாரமென நான்கு ஆண்டுகள் இருந்த வேர் அழிந்ததில் ஆரவாரம் எல்லாம் அடங்கி போயிற்று. அடுத்து என்ன செய்யவென மூளை யோசிக்க அடம் செய்தது. மறுபடியும் செல்போனே சிணுங்க அவன் தானோ இவை யாவும் பொய்யோ என்ற பேராசையில் அழைப்பை ஏற்றாள் பேதை.

"ஹலோ அம்மு, பொய் தானே அதெல்லாம் விளயாடுனியா?"

"ஹே லூசு எங்கடி இருக்க? ஆபீஸ்க்கு டைம் ஆகுது டீ, என்ன உளறிட்டு இருக்க? வா சீக்கிரம் மீட்டிங் இருக்கு"

"ஹான் பரத்.. ம்ம்ம் ம்ம் இதோ வரேன்.." திணறிய வார்த்தைகளை முழுங்கிய வண்ணம் விடை கொடுத்து போனை அணைத்த நேரத்தில் அவளை உரசி கொண்டு ஒரு டாடா சுமோ வேகமாக செல்ல அனன்யா சுதாரிக்கும் முன்,

"ஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்"  என்று காற்றையும் அவள் எண்ண வலைகளையும் கிழித்து கொண்டு கேட்டது அவன் குரல்.

சுமோவின் பக்கவாட்டு கண்ணாடி அவள் கையை பதம் பார்த்திருந்தது. ஸ்கூட்டியை பிடிக்க முடியாமல் அவள் சாய, கத்திக்கொண்டு ஓடி வந்தான் அவன்.

"சீக்கிரம வண்டியை கொடு"

".........." , இவள் நடப்பதை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும் போது,

" ப்ச் சை" என்று அவள் கையை பற்றியவன் அவள் வலியில் கத்த,

அவள் இடைக்கு கை கொடுத்து அவளை சற்றே தூக்கி ஓரமாக நிற்க வைத்து விட்டு, அவனின் செய்கையில் அவள் மிரண்டு விழிக்கும் போதே, வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு கர்ந்தான். போகும் போது அவள் கைபையை மட்டுமாய் எடுத்து அவளை நோக்கி வீசி விட்டு.

காற்றைவிட வேகமாய் பறந்து விட்டான்!!

டுத்தடுத்த அதிர்சிகளின் தாக்கத்தில் உழன்றவளுக்கு தலையை வலித்தது.

‘என்ன ஆயிற்று?’

‘தேவ்? அவனுக்கு நிச்சயம்? ‘

‘இவன் யாரு? வண்டியை ஏன் திருடிட்டு போனான்? ‘

‘திருடனா இருந்தா ஹேண்ட்பேக்கை ஏன் வீசிட்டு போகணும்? ‘

அடுக்கு அடுக்காய் கேள்விகள் அவள் முன் தோன்ற அனைத்தையும் பின்னுக்கு தள்ளி கையின் வலி முன்னுக்கு வந்தது. குனிந்து பையை எடுத்தவள் கைகளில் அடி பட்டதை மறந்து அதே கைகளில் பேக்கை எடுத்ததன் விளைவு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.