(Reading time: 11 - 21 minutes)

"ன்னடி திமிரா?"

"...."

"போனை கொடு"

"..."

"கேட்டுகிட்டே இருக்கேன் அழுத்தமா உட்காந்துட்டு இருக்கு, கொடு டி..  இல்லேன்னா பேசி தொலை"

"...."

"ஹே என்னை மிருகம் ஆக்காத ஒழுங்கா வாய திறந்து பேசிறு"

"...."

'பளார்' என அவன் அறைந்ததில் கண்களை இருட்டி கொண்டு வர, தன்னை நிதான படுத்தி கொண்டு. அவள் போனிலிருந்து ஷங்கருக்கு அழைத்தவள் போனை அவன் கைகளில் திணித்து விட்டு அமைதியாக இருக்கைக்கு சென்று விட்டாள்.

அதன் பின் அவர்கள் தனியாக பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் அமையவில்லை.

ன்று அந்த ப்ராஜெக்ட் முடித்து கொடுக்கும் கடைசி நாள் என்பதால் முக்கியமான பார்மாலிடீஸ் மீட்டிங் என வேலையே சரியாக இருக்க, அனன்யாவாலும் எதையும் பேச முடியவில்லை.

எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி விட்டு வேலைக்குள் மூழ்கி விட்டாள். இது அவளுடைய பழக்கம் தான். சிறு வயதிலிருந்தே உணர்வுகளின் பிடியில் சிக்கி தவிக்கும் சமயங்களில் வேலையில் தன்னை மூழ்கடித்து கொள்வது.

காலை ஏழு மணி வரை வேலை சரியாக இருக்க,ஒரு வழியாக அனைத்தையும் சரியாக முடித்து கொடுத்து விட்டு மேனஜர் பாராட்டியதிற்கு பேருக்காய் புன்னகைத்து விடை பெரும் நேரம், பாரத்தை மேனேஜர் அழைத்து விட அவன் சென்று விட்டான்.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவள் காத்திருப்பாள் என்று அவன் சென்று விட, தன் பையை எடுத்து கொண்டு அனன்யா கிளம்பி விட்டாள்.

பேருந்து நிறுத்தத்தை அடைந்து பேருந்தை பிடித்து அவர்கள் ஏரியாவில் இறங்கி அருகில் இருந்த பார்கை அடையும் வரையில் சாதரணமாக இருந்தவள்.

அந்த அழகிய பூங்காவில் தேவ்வுடன் அவள் அமர்ந்து களித்த அதே பெஞ்சில் அமர்ந்தவுடன் அனைத்து துக்கமும் தொண்டையை அடைக்க கதறி அழ ஆரம்பித்தாள்.

தன் மனதின் வேதனை எல்லாவற்றையும் அழுகையாய் வெளிப்படுதியவள் சற்றே நிதானத்திற்கு வந்து முகத்தை அழுந்த துடைத்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

ளைப்புடன் அவர்கள் வீடிருக்கும் தெருவில் நுழைந்த போதே வீட்டின் முன் அவள் ஸ்கூட்டியும் அதன் மேல் நேற்று அதை எடுத்து கொண்டு போனவன் அமர்ந்திருப்பதும் தெரிந்தது.

மேலும் அதிர்ந்த மனதை அடக்கி கொண்டு பலம் திரட்டி வேகமாக நடந்தாள். அழுக்கான உடை, இல்லை நல்ல உடை தான் வேலை செய்ததாலோ என்னவோ அழுக்காக இருந்தது.

கம்பீரம் சற்றும் குறையாத தோற்றம். கலைந்த தலை முடி.. நெற்றியில் புரளும் முடியை கைகளால் கோதி கொண்டிருந்தான்.

அவளை ஊடுருவும் பார்வை அதில் அளவுக்கு அதிகமாய் அமைதியும் பிடிவாதமும்.

அவனுக்கும் அவளுக்குமாக இரண்டு அடி தொலைவில் செல்லும் போது கண்களை எதுவோ மறைக்க கறுப்பு நிறத்தில் ஏதோ ஒரு திரை விழுவதை போல கால்கள் அந்தரத்தில் பறப்பதை போல உணர்ந்தாள் அனன்யா.

தன்னையே பார்த்தவாறு அவள் அருகில் வந்து கொண்டிருக்க அவளையே பார்த்து கொண்டிருந்தவன் சட்டென அவள் மயங்கி விழவும் இரண்டு அடி தூரத்தை ஒரே எட்டில் தாவி அவள் கீழே விழாமல் அப்படியே மடியில் தாங்கி கொண்டான்!!

கொஞ்சமாய் இருந்த நினைவில் அருகில் அவளை தாங்கி கொண்டிருந்தவனின் தோற்றத்தை முழுதாய் பார்க்காமல் கண்களை மூடி அவன் சட்டையை பற்றி கொண்டாள் அனன்யா.

உதடுகள் உளறலாய் உச்சரித்தன..!!!

'தேவ்'... அவன் முகம் பிடிவாதத்தில் இருந்து கோப அவதாரம் கொண்டது..!!

Episode 01

Episode 03

ஊஞ்சல் ஆடும்..!!!!

{kunena_discuss:884}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.